Wednesday, December 29, 2010

தமிழ்நதியின் புத்தக வெளியீடு

Tamilnathy Rajarajan


அன்பு நண்பர்களுக்கு,

எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை 6 மணிக்கு, “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“  என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.  அதனோடு சேர்த்து மேலும் 8 புத்தகங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இடம்- அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கம்.

மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை இணைத்துள்ளேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி






வாழ்த்துக்கள் தமிழ்நதி அவர்களே !!

Tuesday, December 28, 2010

கோங்கூரா சட்னி !

.
.
கொஞ்சம் ஆந்திர அரசியலை ஸ்னாப்ஷாட் வடிவில் கொடுக்கிறேன்.



* தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு (முன்னாள் ஸ்பீக்கர்) ஒழுங்காக தெலுங்கு பேசவே தெரியாது.

* தெலுங்கானாவுக்கான கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 31 ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முடிவு சாதகமாக இருந்தால் 2011 இல் தெலுங்கானா பிறக்கும்.



* சிரஞ்சீவிக்கு மக்கள் ஆதரவில்லை. அவர் நமது கேப்டன் விஜயகாந்தை போல ஓட்டை பிரிக்கும் வேலையை மட்டும் செய்துவருகிறார்.



* ஜகன்மோகன் ரெட்டி காங்கிரஸை பெரிய அளவில் கூறுபோடவில்லையென்றாலும், சிரஞ்சீவி போல (20 ~ 30) எம்.எல்.ஏக்களை பெறும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இது காங்கிரசுக்கு ஆப்பு.

* கடந்த தேர்தலில் சிரஞ்சீவி தெலுங்கு தேசத்தின் ஓட்டுக்களை பிரித்ததில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ( சுமார் 1 ~ 2 சதம்). நம்மூர் கேப்டன் கதை அங்கேயும்.



* தெலுங்கு தேசத்தின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது. அதனால் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு உண்டு.



* தல்லி தெலுங்கானா என்று ஆரம்பித்து கல்லா கட்ட நினைத்த விஜயசாந்தி, விஜய பூந்தியாகிவிட்டார்.



* தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா அமைந்தால் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்து காங்கிரசுக்கு மேலும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

* ஜனவரியில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் ஐதராபாத்தில் நடக்கலாம் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.

பதிவில் தகவல் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்...!!!

!!!

Saturday, December 25, 2010

தண்டவாளம் - குட்டிக்கதை



சிவப்பு கொடியுடன் ஓடிவரும் இரண்டு இளைஞர்களை பார்த்து அதிர்ந்த நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

தண்டவாளம் உடைஞ்சு கெடக்குதுங்க !!!

அடுத்த நாள் நாளிதழ் செய்தி. நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரெயிலை சாதுர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த வாலிபர்கள். ரயில்வேயில் வேலை வாய்ப்பு. அமைச்சர் அறிவிப்பு.

அடுத்த நாள் இரவு டீக்கடையில்.

தப்பில்ல. எதுவும் தப்பில்ல என்றான் சுகுமார்.

என்ன தோழா சினிமா டயலாக் பேசுற ?

இது சரவணன். இப்போதைய அரசு ஊழியர். ரயிலை நிறுத்திய இளைஞர்களில் ஒருவன்..

புன்னகைத்தான் தோழன் சுகுமார்.

ஆமாம், நாற்பது ஆண்டுகள் லைன் மேனாக இருந்த உன்னோட அப்பாவை தொழில்நுட்ப காரணங்களுக்காக நடந்த விபத்துக்காக பணியை விட்டு டிஸ்மிஸ் செய்தாங்க இல்லையா ? அதனால் உன்னுடைய வாரிசுரிமை பணியும் கிடைக்காம போச்சு. தண்டவாளத்தை தண்டவாளத்தால தானே அடிக்கனும் ?

இருவரும் சேர்ந்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்...!!

Monday, December 13, 2010

வருத்தம் தெரிவித்தவர்களுக்கு நன்றி !!!

நடந்துவிட்ட ஒரு துக்க நிகழ்வுக்காக தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், நேரிலும் வந்து என்னுடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து பதிவுலக நன்பர்கள் / தோழிகள் அனைவருக்கும் நன்றி !

ஆற்றுப்படுத்த இயலாத ஒன்றாயினும், என் பின்னே இத்தனைபேர் இருப்பது தெரிந்து ஆறுதல் !

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....