1.குளிர்..
2.அதிக குளிர்ர்ர்..
3.ரொம்ப ரொம்ப குளிர்ர்ர்ர்..
உர்ரென்று ஆகாதீர்கள்...

2003 ல் முதல் முறையாக கோவை சென்றபோது எடுத்த படம்...அப்போ எனக்கு மீசை என்று ஒன்று இருந்தது...
இது ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாம போன கதை...
ரெண்டு நாளா ஒரே சளி இருமல்...சரி இன்னும் ரெண்டு நாள்ல சரியா போயிடும்னு நெனைச்சா...நோ...போய்த்தொலையவே இல்லை...இதுவே இந்தியாவா இருந்தா ரெண்டு மூனு நாள்ல சரியாகிடும்...அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா...இங்கேயும் சரியா போயிரும்னு நினைச்சு உட்கார்ந்திருந்தது எவ்ளோ வேஸ்ட்..(பழமொழிக்கெல்லாம் விளக்கம் கேட்டுறாதீங்க)...
முக்கு சிந்தி சிந்தி ஸ்வெட்டரையே வாஷிங் மெஷின் ட்ரையர்ல போட்டு காயவைக்க வேண்டியதாயிருச்சு...
இங்கே எல்லாம் டாக்டரை அப்படியே நேரா போயி பாக்க முடியாதாமே ? அப்பாயிண்மெண்டு வாங்கிக்கிட்டு தான் போகோனுமாம்...
இதுக்கும் மேல பொறுக்க முடியாது..டாக்டருக்கு போனைப்போட வேண்டியது தான்...அப்பாயிண்மெண்ட் கேட்டுற வேண்டியது தான்..
டாக்டர் குட் மார்னிங்...
டெல்மீ சன்...என்ன பிரச்சினை ?
டாக்டர் ரன்னிங் நோஸ்...சளி....
வேற என்ன பிரச்சினை ?
ஒரே இருமல் இருமலா வருது டாக்டர்..
அடப்பாவமே...சரி வேற என்ன இருக்கு ? சுரம் ?
சுரம் எல்லாம் இல்லை டாக்டர்...
வேற எதுவும் இல்லையா ?
எங்காத்தா முப்பாத்தா சத்தியமா இல்லை டாக்டர்...சளி இருமல் மட்டும்தான்...
ஓ அப்படியா...
டாக்டர் ? எப்ப வந்து உங்களை பார்க்கலாம் ? அப்பாயிண்மென்ட் வேணும்....
தம்பி நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா ?
சொல்லுங்க டாக்டர்...
இந்த சளி இருமல் எனக்கும் இருக்கு...
லொக் லொக் லொக்...
உனக்கு மட்டும் இல்ல...சுவீடன்ல நூத்துக்கு தொன்னூறு பேருக்கு இருக்கு...
நீ என்ன செய்யுற, வீட்டுலே உக்காந்து இருக்காம, ஸ்வெட்டர் எதாவது மாட்டிக்கிட்டு அப்படியே வெளிய போய் நல்ல காத்து வாங்கு...தன்னால சரியா போயிரும்...
லொக் லொக் லொக்...
வேற எதாவது பெரிசா...இதயம் அடைச்சுருச்சு, கல்லீரல் காணாமே போயிருச்சு, மண்ணீரல் மண்டைய போட்டிருச்சு, நுரையீரல் உறைஞ்சு போச்சு, இந்த மாதிரி இருந்தா மட்டும் போன் பண்ணு...
ஓக்கே ? லொக் லொக்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...போனை வைத்துவிட்டார்...
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...வெளியே மைனஸ் 2 டிகிரி...நான் வெளியே போறேன்...