Showing posts with label மஸோக்கிஸ்டு. Show all posts
Showing posts with label மஸோக்கிஸ்டு. Show all posts
Thursday, October 28, 2010
போண்டா மாதவன் கலக்கும் நாராயண ! நாராயண !!
குறிப்பிட்ட படத்தினை இணையத்தில் இருந்து எடுத்து அதில் ஒரு சின்ன போண்டாவை இணைத்துள்ளேன் ! பொருந்தி வருதா என்று பாருங்கள் !!!
இவ்வளவு நாளாக காத்திருந்த வாய்களுக்கு (அரிசி) அவல் போடத்தான் போண்டா சார் இந்த கல்யாணத்துக்கு போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் தளத்தில் பகுத்தறிவை பேசுகிறார்கள் என்று கையை பிசைந்துகொண்டிருந்த கும்பல் போண்டா சார் பதிவில் புகுந்து விளையாடுகிறது.
குழலி ஒருமுறை போண்டா சாரை மஸோக்கிஸ்ட் என்றார். அதாவது தன்னை வருத்தி, அதிலே சுகம் காணுதல். அடித்து பிடித்தாவது எதாவது ஹிட்ஸ் தேத்துதல். அப்பத்தானே நன்பர்களுக்கு நன்றி என்று பதிவிடலாம் ? மேலும் போண்டா சாரின் பதிவில் வரும் பல அனானீஸ் அவரின் புரளி மனோஹர் கோஸ்டியில் இருந்தே வருகிறார்கள். நாட்டாமை, கிருஸ்னன், செங்கோட்டையன், பனங்காட்டையன் என்று வாய்க்கு வந்தபடி தனித்தனியாக உருவாக்கிய ஐடிகள் எல்லாம் இப்போது உபயோகப்படுவதில்லை. அனானியை திறந்துவிட்டாச்சு !!!
என்னைய அடிச்ச ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டே ஓடிட்டானுங்க என்ற வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு செய்த நாரதர் வேலையை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் ?
ஒரு சம்பவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது போண்டா சாரை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள உதவியது என்றால் மிகையில்லை. போலி பிரச்சினை கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம். தினமும் போலி டோண்டுவிடம் இருந்து ஆபாச கமெண்டுகள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்பும். நான் ஒரு வேலையாக பெங்களுர் பிக் பஸாரின் உள்ளே இருந்தேன். என்னுடைய மனைவி ஜெர்மன் மொழி படிக்க விரும்புவதாகவும் அது சம்பந்தமான தகவல்கள் தேவை என்றும் போண்டா சாரை தொலைபேசியில் அழைத்தேன். சந்தடி சாக்கில் உன் மனைவி என்ன ஜாதி என்று கேட்டு, அவர் பார்ப்பணர் என்பதை அறிந்துகொண்டார் போண்டா. கான்வர்சேஷன் முடிந்தது. அடுத்த நாள் காலையில், என்னுடைய மனைவியின் ஜாதியை சொல்லி திட்டி பின்னூட்டங்கள் வந்தன. இணையத்தில் பல இடங்களிலும் என்னுடைய மனைவியின் சாதியை போஸ்டர் அடித்து ஒட்டினார் திருவாளர் போலி. இதை போண்டா மாதவனால் மறுக்க முடியுமா ?
தன்னுடைய சுகத்துக்காக எந்த கேவலத்தையும் செய்ய துணிபவர் போண்டா சார். இதை வெகு தாமதமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் ஒரு சம்பவம். இதில் ஒரு முருகனடிமை பதிவரை இழுக்கவேண்டிய தேவை. எனக்கு வேறு வழியில்லை. அப்போதையை பணமுடை காரணமாக திருச்சியில் கையில் இருந்த ரெண்டு ரூபாய்க்கு ஏதோ ஒரு வேலையாக முருகனடிமை போண்டா மாதவனுக்கு போன் செய்ய, வள வளவென்று தொலைபேசியில் கழுத்தறுக்கும் போண்டாவிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று முருகனடிமை நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய் இருந்த நேரத்தில், இப்ப ஒரு பதிவு போட்டிருக்கேன், அதுல ஒரு பின்னூட்டம் கொடுத்திருங்க என்று கோரிக்கை வைத்த போண்டா மாதவனை எண்ணி அந்த வேகாத வெய்யிலில் முருகா !! என்று அலறியவர் முருகனடிமை. அந்த முருகனடிமை நமது அண்ணன் உண்மைத்தமிழன். வேண்டுமானால் இந்த கேவலத்தை அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
போண்டாவிடம் சுயமரியாதை என்பது எள் அளவும் இல்லை என்பதை இன்னொரு உதாரணம் மூலமும் சொல்லலாம். சென்னையில் தி நகர் குடிகார மூத்திர சந்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில், வரவனையான், சுகுணா திவாகர், நான் மூவரும் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, தனக்கு சிக்கன் ஆர்டர் செய்து கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வரவணையான் செந்தில் கொடுத்த 4 ரூபாய் கிங்ஸ் சிகிரெட்டை புகைத்துவிட்டு, அதற்கு காசு கொடுக்காமல் ஏமாற்றியர். மொத்த பில்லில் போண்டவின் பங்கு 114 ரூபாய். ஆனால் 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு தன்னுடைய (வாடகை) காரில் ஏறி போய்விட்ட போண்டாவிடம், இதை சும்மா கிண்டலுக்காக வரவணையான் சுட்டிக்காட்ட, அந்த பதினாலு ரூபாயை மணியார்டர் செய்கிறேன் என்று தொலைபேசியில் எகிறியவர், இன்று வரை அந்த பதினாலு ரூபாயை செட்டில் செய்யவில்லை. 1956 ல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் வேட்டியில் ஒன்னுக்கு போனது நியாபகம் இருக்கிறது, ஆனால் மூன்று வருடம் முன்னால் நடந்த பதினாலு ரூபாய் அவமான மேட்டர் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டதா ?
ஆமை புகுந்தவீடு போல திருமணத்துக்கு வந்ததே தனக்கு அதில் ஏதாவது மேட்டர் கிடைக்குமா என்று பார்ப்பது என்று ஆனபிறகு, வலிய ராஜனிடம் சென்று மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்டது ஏன் ? உண்மையில் ராஜனுக்கு மண்டப வாடகை தெரியாமலா இருந்திருக்கும் ? இந்த டொங்கனிடம் எதற்கு சொல்லவேண்டும் என்று பெண் வீட்டார் பார்த்துக்கொள்கிறார்கள் என்று தட்டி கழித்திருப்பார். அதை வைத்து போண்டா கும்மியடிக்கும் என்று தெரிந்திருந்தால், வாட்ச்மேனை வைத்து வாசலிலேயே விரட்டியிருக்கலாமே ?
இதில் இஸ்லாமிய அடிப்படைவாத முண்டம் ஒன்றும் திட்டி பதிவெழுதி உள்ளது. விளையாட்டு போக்கில் தலாக் தலாக் தலாக் என்றவன் பொண்டாட்டியை புடுங்கிக்கொள்ளும் அறிவுகெட்ட மூடப்பயல்களின் முட்டாள்தனமான கொள்கைகளை விமர்சித்தால், அதுக்கு பதில் சொல்லாமல் என்றைக்கு சிக்குவான் என்று நாக்கை தரைவரைக்கும் தொங்கவிட்டுக்கொண்டு திரிபவர்களுக்கு குற்றம் சொல்ல பிள்ளையார் படம் தேவையில்லை. கல்யாண மண்டபத்தில் ஒரு கிழவி தும்மியது என்றால் அது கூட ஒரு காரணம் தான்.
உணமையில் போண்டாவின் பதிவில் பின்னூட்டம் எழுதும் எந்த அனானிக்காவது சொந்த பெயர் இருக்கிறதா ? இல்லை தன்னுடைய அப்பன் ஆத்தா வைத்த பெயரை மறந்துவிட்டார்களா ? அருளிடம் கேட்ட கேள்விக்கு செருப்பால் அடித்த மாதிரி பதிலை சொல்லிவிட்டாரே ? அந்த அனானி வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளுமா ?
தனக்கும் போலி டோண்டுவுக்கும் இடையேயான பிரச்சினையில் அனைவரையும் இழுத்துவிட்டு, எனக்கு கமெண்ட் போடுங்க என்று சந்தடி சாக்கில் கேட்டு, அவர்கள் கமெண்ட் போட்டவுடன் கிடைக்கும் ஆபாச அர்ச்சனையால் அவர்களும் தன் பக்கம் சேர்வார்கள் என்று பல அப்பாவிகளுக்கு ஆபாச அர்ச்சனை கிடைக்கவைத்தவர் இந்த மஸோக்கிஸ்டு.
இந்த அல்லக்கை முண்டங்களை லூஸ்ல விட்டுவிட்டு, ராஜனும் சிஸ்டரும் தங்களது விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும் !! என் வாழ்த்துக்கள்...
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
