அட இப்படி வெச்சுக்கோங்க...ஒரு பழைய ஓலைச்சுவடியோ இல்லை கல்வெட்டோ உங்க கைல கிடைக்குது...அதுல என்ன மேட்டர் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும் இல்லையா உங்களுக்கு...அப்படி ஆர்வம் இருந்தா மட்டும் போதும்...இந்த பதிவை அப்படியே யூஸ் பண்ணி படிக்கலாம் நீங்க...நாங்கல்லாம் அப்படித்தான் எங்கூரு கோவில்ல நேரத்தை செலவிடுவோம்...(சைட் அடிக்கிற விஷயத்தை இதுல இழுக்காதீங்க..)
நாங்க உபயோகப்படுத்தின விவரம் அப்படியே ஒரு இணைய தளத்தில் இருந்தது..அப்படியே கடிச்சு இங்கே பதிவிடுறேன்...பழந்தமிழ் எழுத்துக்களை பார்த்தா இனிமே கொலைவெறியோட படிங்க...விக்கி பசங்க, எதாவது தப்பிருந்தா சொல்லுங்க...
எண்கள் / உயிர் / மெய் எழுத்துக்கள் நூற்றாண்டுகளில் எப்படி மருவி வந்ததுன்னு இங்கே படமா கொடுத்திருக்கேன், பாருங்க...



எங்க ஊர் திருக்கோவிலூர்ல உலகலந்த பெருமாள் கோவில்ல கடையெழு வள்ளல்களில் ஒருத்தர் 'காரி'யை பற்றி பல விஷயங்கள் கல்வெட்டுல இருக்கும்...( யாருக்காவது எல்லா ஏழு வள்ளல்கள் பெயரையும் சொல்லத்தெரியுமா ? சேலஞ்ச் !!! ) படிக்க அவ்வளவு அருமையா இருக்கும்...சும்மாவா, கபிலர் உறைந்த இடமாச்சே...அதை விட குட்டி குட்டி கோவில்களில் இன்னும் அழகான கல்வெட்டுகள் இருக்கும்....பல கல்வெட்டுகள் முன்னூறு நானூறு வருஷத்துக்கு முந்தையதா இருக்கும், கொஞ்சம் எரிச்சல் ஊட்டும், ஆனா மிகச்சிலது + மிக பழையது ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்காரன் கண்ணில் படாமல் அழகாக உட்கார்ந்திருக்கும்...படிக்க அவ்வளவு சுவாரசியமா இருக்கும்..
ஏதாவது புதையல் ரகசியம் ஓலைச்சுவடியில கெடச்சுதுன்னா, எனக்கு மட்டும் சொல்லுங்க...பதிவு பத்தி இப்போதைக்கு கருத்து மட்டும் சொல்லுங்க.