Showing posts with label குணங்குடியார். Show all posts
Showing posts with label குணங்குடியார். Show all posts

Friday, May 21, 2010

குணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி !!



தமுமுக குணங்குடி ஹனீபா, குண்டுவெடிப்பு பொய் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். ஒன்றா இரண்டா பதிமூன்று ஆண்டுகள். தாமதித்துத்தான் இந்த நீதி கிடைத்துள்ளது.

இப்படி பதிமூன்று ஆண்டுகள் அவர் சிறையில் வாடிய காலம் திரும்ப கிடைக்குமா ? தனது தந்தையார் இறந்த நிகழ்வுக்கு கூட இவரை பரோலில் விடாமல் செய்தது எப்பேர்ப்பட்ட அநீதி ?

சமீப காலத்தில் ஜூவி இவரை பேட்டி கண்டு வெளியிட்டபோது, தமிழக முதல்வர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் வரும் தேர்தலில் இஸ்லாமியர்களின் ஆதரவு தேவை என்பதாலும், மமக ஒரு ஒருங்கமைந்த சக்தியாக உருவெடுத்து வருவதாலும், இவர் விடுதலை செய்யப்பட்டிருக்கக்கூடும்...

முதலில் இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட அநீதிகளை வரும் காலத்தில் நடாத்த அதிகார வட்டம் கொஞ்சமாவது தயங்கும்..!!

தாமதிக்கப்பட்ட நீதி என்பது அநீதியாகும். ஆகவே அதனை இழைத்தவர்கள் குற்றவாளிகள். ஆகவே அந்த அநீதியை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் !!! தந்தையின் முகத்தை இறுதியாக காண விடாத இந்த பாவிகள் உப்பை தின்றவர்கள். தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!! அது கோவை குண்டுவெடிப்பு வழக்கானாலும் சரி. குணங்குடி ஹனீபா வழக்கானாலும் சரி !!

...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....