Thursday, July 26, 2007

கிரெடிட் கார்டு வைத்திருக்கீங்களா ?

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துபவரா ? அப்போ நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது...மூன்று நான்கு வருடம் முன்பு ஒருமுறை நான் அவுஸ்திரேலியா போகும் முன் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் குருவி ரொட்டியோ குச்சு முட்டாயோ வாங்கினேன்....

பல கார்டுகள் இருப்பதால் அந்த கார்டை மறந்தும் போனேன்...ஆறுமாதம் கழித்து திரும்பி வந்தபோது ஐந்தாயிரம் குட்டி போட்டு பதினைந்தாயிரமாக இருந்தது...கட்ட மாட்டேன் என்று சொன்னதற்கு இரண்டே நாளில் வக்கீல் நோட்டீஸை எனக்கும் என்னுடைய அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டார்கள்...ஹெச்.ஆர் மேனேஜர் தமிழர், மேலும் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் நேரடியாக விஷயம் என்னுடைய பார்வைக்கே வந்தது...மேலும் என்னுடைய பிஸினஸ் யூன்ட் ஹெட்டுக்கு நான் செல்லப்பிள்ளை என்பதால் இது குறித்து நடந்த ஹை-லெவல் மீட்டிங் நீர்த்துப்போனது...

அந்த நாளில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயிருக்கவில்லை...அதிலும் இப்போது மக்கள்-சட்டம் என்ற பெயரில் சட்டங்களையும் சட்டம் சம்பந்தமான விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கும் வலைப்பதிவுகளும் எனக்கு தெரிந்திருக்கவில்லை...!!!

இந்த லிங்க் கிளிக்கி மக்கள் சட்டம் வலைப்பதிவு க்ரெடிட் கார்டுகள் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்களேஎன்.....!!!!!

தமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்

சமீபத்தில் வலையுலகில் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது...ஹைய்யா ஜாலி ஜாலி...பிரச்சினை இல்லை என்றாலோ, பின்னவீனத்துவ கவிதை படிக்கவில்லை என்றாலோ பயங்கர போரடிக்குது...பல பதிவர்கள் இதை சொல்லி ஆதங்கப்பட்டார்கள்...அதனால் பின்னவீனத்துவமாக எழுதத்தெரிந்தவர்கள், அடிக்கடி ஒரு கவிதை போடவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்...பொட்டீக்கடை, வரவணை, மிதக்கும் வெளி, அய்யனார், பாவெல் கவனிக்க...

கம்மிங் பேக் டு த பாயிண்ட்...

தமிழச்சியின் ஆதங்க பதிவொன்று ( கும்மி பதிவுகளுக்கே அதிக கவனம் கிடைக்கிறது) இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது...அதனை கடுமையாக எதிர்த்த செல்லா, வாருங்கள், நீங்களும் வந்து கும்மி அடிக்கும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள் என்று அழைப்பு விடுத்து பதிவிட்டார்..இதே கருத்தை சொன்ன மாலனை கூட இப்படித்தான்(!!) கும்மியதாக தெரிவித்தார்..( நான் கூடத்தான் எம்.ஜி.ஆருக்கு டாட்டா காட்டுனேன்...அதை விடுங்க)...

ஆனால் தமிழச்சி இன்றைய பதிவில் செல்லாவை குமுறி இருக்கிறார்...அதை படித்ததும் இப்படி ஒரு பதிவிட்டு தமிழச்சியின் உக்கிர பார்வையில் இருந்து தப்ப செல்லாவுக்கு ஐடியா கொடுக்கலாமே என்று தோன்றியது...

இதோ ஐடியாஸ்...

1. பாண்டிபஜாரோ, வா.வூ.சி. பார்க்கோ சென்று உடனே ஒரு கருப்பு பெல்ட் வாங்கவும்...(தமிழச்சி கராத்தேயில் ப்ளாக் பெல்ட்டாம்)

2. பிரெஞ்சு பிரை, உருளை வருவல் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்...(தமிழச்சி இருப்பது ப்ரான்ஸ்)

3. பெரியவர்களையோ, பெரியார்களையோ பார்த்தால் இடதோ, வலதோ ஒதுங்கவும்...

4. சொந்தமாக துணி துவைப்பவராக இருந்தால், துணிகளை வாஷிங் மெஷினிலேயே போடவும்...கும்மி துவைக்க வேண்டாம்..

5. ஒரு நோட்டை எடுத்து பெரியார் பெரியார் பெரியார் என்று 100 தடவை இம்போசிஷன் எழுதவும்...

6. ஒரு குவளை சிறுவாணி தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடிக்கவும்...

7. குடிக்கும் ரெட் வைனில் "இம்போட்டர் ப்ரம் ப்ரான்ஸ்" என்று இருந்தால் தொடவேண்டாம்..
அம்புட்டுத்தேன்...!!!!!!!!!!

Wednesday, July 25, 2007

ஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும் கிளைகள் இல்லை)

சமீபத்தில் நன்பர் ஒருவர் சாம்சங் பென் ட்ரவ் (Pen Drive) ஒன்றை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வாங்கி இருக்கிறார்...வீட்டுக்கு வந்து பிரித்து உபயோகப்படுத்த முயன்றதில் ஓட்டை...ஒன்றும் சரியாக வேலை செய்யவில்லை...

சாம்சங் கஸ்டமர் கேர் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை இணையத்தில் இருந்து எடுத்து, பிரச்சினையை பற்றி விளக்கியபோது, சாம்ஸங் நிறுவனத்தார், அப்படி ஒரு பென் ட்ரைவை தாங்கள் தயாரிப்பதே இல்லை என்று கூறிவிட்டனர்....

அதிர்ந்து போன நன்பர், மீண்டும் சரவணா ஸ்டோர் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, இந்த கஸ்டமர் கேர் நம்பருக்கு போடுங்க என்று ஒரு எண்ணை கொடுத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தார்...

இந்த எண்ணை தொடர்புகொண்ட போது ( இது எலக்ட்ரானிக் பொருட்கள், கடத்தல் பொருட்கள், போலி பொருட்கள் கிடைக்கும் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு எண்) வழ வழா கொழ கொழா என்று பதில் கொடுத்துள்ளார்கள்...

அரைகுறையாக வேலை செய்த பென் ட்ரைவ் இன்னும் இரண்டு முறை உபயோகித்த பிறகு சுத்தமாக படுத்துவிட்டது...

சரவணா ஸ்டோர் நிறுவனத்தை மீண்டும் தொடர்புகொண்ட போது, வாங்கினது வாங்கினது தான், உன்னால ஆனதை பார்த்துக்கோ என்று பதில் வருகிறதாம்...

சமீபத்தில் ஈழத்து தொழிலதிபரை பந்து திருடினார் என்று தாக்கிய பிரச்சினையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு குற்றச்சாட்டு வெளிவருகிறது...

மலிவு விலை என்று கண்ட கருமத்தையும் இது போன்ற கடைகளில் வாங்குபவர்கள் இனிமேலாவது உஷாராக இருக்கவேண்டும்...!!!!

Tuesday, July 24, 2007

யார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு

கண்மணி அக்காவோட இந்த பதிவோட தலைப்பை (மட்டும்) பார்த்ததும், தமிழ்மண பதிவர்களை கண்டுபிடிக்கும் ஆட்டம் விளையாடலாம் என்று ஒரு எண்ணம்...

இப்போ ஆரம்பிக்கலாமா...போட்டி நடுவர்களாக மூனு தலையாட்டி பொம்மை இங்க வேனாமே...( லூசுப்பயலுக... எதுக்கெடுத்தாலும் எஸ் எஸ் எஸ் னு மூனுபேரும் சொல்லுவானுங்க)

இப்போ போட்டி என்ன அ(ஆ)ப்படின்னா, நான் உங்க எதுர்த்தாப்புல இருக்கேன்...நீங்க தமிழ்மண புதிய பதிவர்...(புதுசா வந்திருக்கிற பிரமிட் சாய்மீரான்னு வெச்சுக்கலாம்) நீங்க தமிழ்மணத்தை வெறுமனே ஒரு லுக்கு விட்டு, ஏதாவது ஒரு பதிவரை மனசுல நெனைச்சுக்கறீங்க...நான் அதை இருபத்தோரு கேள்வியில கண்டுபிடிக்கப்போறேன்...

ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...தொண்டைய கனைத்துக்கொண்டு, ஒரு பில்டப்புக்காக மலையாளம் கலந்த தமிழில் "ஆர் மனசுல ஆரு பிரமிட் சாய்மீரா உங்கள் மனஷில ஆரு" என்று ஆரம்பிக்கிறேன்...

செந்தழல் : உங்கள் மனதில் இருக்கும் நபர் ஆணா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் அதர் அனானி ஆப்சன் ஓப்பன் செய்திருக்கிறாரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் ஆசிய கண்டத்து பதிவரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:அவருடைய எந்த பதிவுக்காவது நூறுக்கு மேற்பட்ட பின்னூட்டம் வந்திருக்கா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:அவருக்கு போலிப்பதிவு இருக்கா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:அவருக்கு போண்டா பிடிக்குமா?
பிரமிட் சாய்மீரா: இல்லை...

செந்தழல்:24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான பதிவுகளை பிரித்து மேய்பவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மேலே பிஸ்ஸடிக்கும் இந்த குழந்தைகள் இன்னும் வளரவில்லை என்பது தெரியாத பிரபல எழுத்தாளரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க இது போன்ற கட்சிகளின் அடிமட்ட தொண்டரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:அடிக்கடி சூடான இடுகைகளில் வரும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:ஈழப்பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: காற்றடித்தால் பறந்துபோகும் அளவில் இருப்பவரா ?
பிரமிட் சாய்மீரா : இல்லை

செந்தழல்: மொக்கைகளில் சிறந்துவிளங்கும் துபாய் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: வகுப்பறை வைத்து பாடம் நடத்துபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:போலி பின்னூட்டம், போலிப்பதிவு என்று போட்டு மாட்டிக்கொண்டவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பா.க.ச, பொ.க.ச என்பது போன்ற கலாய்க்கும் சங்கம் தனியாக இருக்கும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: கோவையில் இருந்து எழுதும் 'நச்', 'இச்' பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிய பதிவரா?
பிரமிட் சாய்மீரா:இல்லை

செந்தழல்: தனக்கு தானே நூற்றுக்கனக்கில் பின்னூட்டம் போட்டு போலீஸ்காரரால் பிடிபட்டவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: காமிக்ஸ் ரசிகரா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: சற்றுமுன்னால, கொஞ்ச நேரத்து மிந்தி போன்ற செய்தி தளங்களில் உறுப்பினரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மூஞ்சு மூடி எழுதும் பதிவரா?(கொஞ்சம் ஓரத்தில் யாரென்று தெரியும்)
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: வழவழா கொழகொழாவென சினிமா விமர்சனம் எழுதும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பெண்ணீய விரோதி என்று அறியப்பட்ட பிரபல பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: இந்தியாவில் இருந்துகொண்டு இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கும் வக்காலத்து வாங்குபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: புரச்சி, மலர்ச்சி என்று பிறாண்டுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பின்னவீனத்துவமாக கவிதை (ஆயி, மூச்சா என்று) எழுதும் கவிஞரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: யாரையாவது போனை போட்டு மிரட்டுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மேக்ரோமீடியா பிளாஷ் வைத்து மொக்கை போடக்கூடிய ஓரே ஒரு பதிவரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மொக்கையான சமையல் குறிப்புகள் வெளியிடுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பரிசே இல்லாத போட்டி வைப்பவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அவருக்கு சர்க்கரை வியாதியா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அவருக்கு உள்மூலம் வெளிமூலம் என்று ஏதாவது ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அப்புறம் எந்த வெண்ணைடா அவன் ?
பிரமிட் சாய்மீரா: இருவத்தோரு கேள்வி கேக்கிறேன் என்று இருவத்தொம்போது கேள்வி கேட்கும் நீ தாண்டா அது...!!!!!!!

செந்தழல் : ங்ஏஏஏஏஏஏஏ !!!!!!

Thursday, July 19, 2007

எச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல்லக்கட்டி...



இனிமே நம்ம சில்பா செட்டி (செட்டியார் ஆண்ட சாதியா ஆடின சாதியா தெரியலை - ஆங் இவுங்க செட்டியார்தானே) டாக்டர்.சில்பா செட்டி என்று அழைக்கப்படுவார்...

அதான் செல்லமா செல்லம் ஊசி எல்லாம் போடுமான்னு கேட்டு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பதிவு...பேசாம நாமக்கல் சிபி இனிமே நயந்தாராவை உட்டுட்டு சில்பா பின்னால சுத்தலாம்..ஆமா பின்ன எங்காளு டாக்டர் இல்ல...

Tuesday, July 17, 2007

கடகடகடகடகடகடகடகட !!!!

முந்தா நாள் ஜப்பானில் நில நடுக்கம் வந்தப்போ என்னுடைய அறை ஒரு மூன்று நிமிடம் கடகடவென ஆடுச்சு...நான் இருப்பதோ எட்டாவது மாடி...எங்கே நமக்கு ஆப்பு வெச்சுட்டதோ இயற்கை என்று நினைத்த்துக்கொண்டிருந்தபோதே ஆட்டம் நின்றுவிட்டது...

காலையில் நியூஸ் பார்க்க்கும்போதுதான் தெரிந்தது ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது..வாயை பிளந்துட்டேன்...ஹுவேசாவுல (ஆபீஸ்) போய் சொன்னதுக்கு நாளைக்கு நைட்டு இந்த மாதிரி ஆனா ரூமுக்கு வெளிய ஓடியாந்திரு என்று என்னுடைய புஜாங் நிம் ( மேனேஜர்) சொன்னாரு...

இன்றைக்கு மாலையில் இருந்தே விட்டுவிட்டு அறைக்கட்டில் நன்றாகவே ஆடுகிறது...நில நடுக்கம் வந்த இடம் என்னுடைய ஊரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தான்...அதனால் ஒரு வேளை இங்க ஹிப்ட் ஆகிட்டதோன்னு நினைக்கத்தோனுது...

சரி இதைப்பத்தி ஒரு பதிவை போட்டுடலாம் என்று அமர்ந்தால் ஜுராசிக் பார்க்ல க்ளாஸ் தண்ணி ஆடுமே அந்த மாதிரி லட்டா ஆட்டம் ஆரம்பிக்குது...

பாருங்க கட்டில் கூட லைட்டா ஆடுது...அது எப்படி தெரியுமா ஆடுது...கடகடகடகட....(எக்ஸ்கியூஸ் மீ...வெளிய ஓடுறதுக்கு முன்னால கொஞ்சம் திரட்டியில பிங் பண்ணிட்டு போயிடறனே...) கடகடகட !!!

அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??


கே : ப்ளஸ் டூ படித்து முடித்தபின், என்ஜினியரிங் படிப் பது நல்லதா? மருத்துவம் படிப் பது சிறந்ததா?

ப: இரண்டாலுமே பயன் இல்லை... பணம் வேஸ்ட்... டைம் வேஸ்ட்... கடைசியில் வாழ்க்கை வேஸ்ட்! +2 முடித்த கையோடு ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்று, சொந்தக் காலில் நிற்க முயலுவது இனி புத்திசாலித்தனம்!
-- தினமலர் அந்துமணி

இந்த பதிலில் உள்ள அபத்தம் என்ன என்பது வலைப்பதிவு நன்பர்களுக்கே புரியும்...

இதுபோல பிற்போக்காக எழுதி உள்ள அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??

இந்த பதிவு நான் 2006 மே அன்று எழுதியது...இப்போது இன்னொரு கேவல செயலில் ஈடுபட்டு செருப்படி படுவதால் இதனை மீண்டும் வெளியிடுகிறேன்...

Monday, July 16, 2007

திரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்

மகாலட்சுமி என்ற மாணவிக்கு உதவிகேட்டு எல்லோரிடமும் கைஏந்தியபோது பொன்ஸ் தன்னுடைய பதிவில் பாரதியின் வரிகளை இப்படி எழுதி இருந்தாங்க...

ஆலயம் பல்லாயிரம் செய்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

அப்படீன்னு...

சமயத்துக்கு தக்கமாதிரி அந்த வரிகள் பலரோட இதயத்தை தொட்டு, இன்றைக்கு ஒரு மாணவி தன்னுடைய கல்வியை முடிக்கவும் நிச்சயமான வேலைவாய்ப்புக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் தோள் கொடுத்தாங்க...

உதவி செய்ததோட இல்லாம உஷா அக்கா எழுதி இருந்த வரி என்னவென்றால்...

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள் என்று...!!!!

இப்போது இன்னொரு வாய்ப்பு...தமிழன் பசியோடிருந்தால் தான் துடிப்பான் சக தமிழன்...தமிழன் கல்விகற்க வாய்ப்பில்லாமல் இருந்தால் நெஞ்சுருகுவான் சக தமிழன்...இல்லையா...தன் கண்ணெதிரே எதிர்ப்படும் எந்தவொரு உதவி செய்யும் வாய்ப்பையும் மறுக்க மாட்டான் இந்த தமிழன்...அதனால் தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொன்னாங்க...

இலங்கை திரிகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து உதவிகேட்டு வந்துள்ள இந்த செய்தி, பாடசாலை பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் அளிக்கக்கூடியதொரு வாய்ப்பு...

பத்தாம் வகுப்பை சேர்ந்த நாற்பது பிள்ளைகள் அங்கே தங்கி படித்து வருகிறார்கள்...டிசம்பர் வரையிலான அவர்களது கல்விக்கும் உணவுக்குமான உதவியை கேட்டுத்தான் இந்த ரெக்வஸ்ட் வந்திருக்கு...

ஐந்து மாதத்துக்கு நாற்பது பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் தான் தேவை...ஒரு பிள்ளைக்கு உணவு மற்றும் கல்விக்கு 1 டாலர் தேவை என்று மதிப்பிட்டிருக்காங்க...ஆக மொத்தம் 6000 டாலர் தேவையாக இருக்கும்...

வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யும்படி வேண்டுகிறேன்...

தொடர்புக்கு

பிரவீண் (guy.praveenkumar@gmail.com)

முகவரி:

Trincomalee Children Foundation
Mailing address:
283 John Deisman Blvd
Maple,
ON L6A 3H4
Canada

மேல்விவரம் ரிச்மாண்ட் தமிழ்ச்சங்க முகவரியிலும் பார்க்கலாம்...

நன்றிகளை முன்பே தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

Sunday, July 15, 2007

இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம்

அட ஆமாங்க...இது புது மேட்டர்...நம்ம லக்கி லூக்கே சொல்லி இருக்கார் பாருங்க...இதை கொலைவெறியோடு அமுக்கி பார்த்து தெரிஞ்சுக்கங்க..

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்...

வெள்ளிக்கிழமை நைட்டு ஸ்டார் மூவிஸ் பலான படம் கண்ணுமுழிச்சு பார்த்த எபெக்டோ அல்லது மிட்நைட் மசாலா பார்த்த எபெக்ட்டோ சரியாக நியாபகம் இல்லை....படுக்கையில் பக்கத்தில் கிடந்த அலைபேசி டண்டடக்கு டண்ண்டக்கு டண்டக்கு டண்ண்ட்டாக்கு என்று சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன ஸ்டார்ட் மீயூசிக் ரிங்டோனில் அலறியது...

பதறி துடித்து எழுந்து மணி பார்த்தால் காலை மணி ஆறு முப்பது...எவண்டா இவன் இந்த மிட்நைட்ல நமக்கு போன் பன்றவன் என்று கொலைவெறியோடு ப்ளிப் டைப் மொபைலை பிரித்து காதுக்கு கொடுத்தால் எதிர் முனையில் வலையுலக பெண் ஈய விரோதி (எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் நேரம் வரும் லாலலலா லாலல்லா) மோகன்தாஸ் லைனில்...

யோவ்....ஆசிப் அண்ணாச்சி எங்க வீட்ல இருக்காரு...எப்போ வரீங்க என்று எதிர்முனையில் அலறுகிறார்....நீங்க பேசிக்கிட்டிருங்க, இந்தா வந்துடுறேன் என்று சமாளித்து போனை வைத்துவிட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்து தூக்கத்தை கண்டினூ செய்யலாமுன்னு பார்த்தா...ம்ஹும்...பொட்டுத்தூக்கம் வரமாட்டேங்குது....போகன்தாஸை மனதுக்குள் சபித்துக்கொண்டே இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்துக்கொண்டிருந்தபோது மணி ஏழரை...

சமீபகாலமாக என்னுடைய ஆக்டிவிட்டீஸை பார்த்துவிட்டு தினமும் காலையில் எலுமிச்சம் பழத்தை தலையில் நச்சநச்சவென்று தேய்த்து குளிக்கவேண்டும் என்று பக்கத்து புற்றுமாரியம்மன் கோயில் (எங்க வீட்டுக்கு பக்கத்து பில்டிங் இந்த கோயில்) பூசாரி சொன்னதாக எதிரிவீட்டு ஆண்ட்டி சொல்லி, அந்த எலுமிச்சம்பழத்தை நானே தான் வாங்கிவரவேண்டும் என்று அம்மா சொல்லி, எழுந்து ஒரு ட்டீ ஷர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியே வருகிறேன்...(உண்மையில் எலுமிச்சம்பழம் ஜூஸ் புழியத்தான் ஓக்கே...சந்தேகப்படாதீங்க)

அப்படியே கடையில் இருந்து மோகனா நம்ப்பருக்கு ஒரு காலை போட்டேன்...ஆசிப் அண்ணாச்சி என்னை வள் புடுங்கியத்தை பற்றி விசாரித்தார்...(மக்கா...என்னைய வெச்சி காமெடி கீமடி பண்ணல்லியே...நல்லா இருங்கடே)...வள் ??...ஆமாங்க அது தான்...அதை எப்படி என் வாயால சொல்லுவேன்...வெந்த புண்ணுல வெரலை பாய்ச்சுறமாதிரி, இந்த அண்ணாச்சி வேற "அது நல்லா இருக்கா...அதுக்கு ஒன்னும் இல்லையே...அது இப்ப எப்படி இருக்கு...அது இப்ப எங்க இருக்கு.." என்று என்னை விட்டுவிட்டு அதையே விசாரித்துக்கொண்டிருந்தார்...நற நற....

பிறகு ஒரு ஒன்பதரைக்கு ஒரு முறை அழைத்தபோது, இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...ஹரி ஹரி என்றேன்..( அதாவது வேகமா...நம்ம ஹரிஹரனை நான் சொல்லுகிறேன் என்று இல்லை...அதனால் நீ அடிவருடி நுனிவருடி என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல)...பிறகு ஜல்தியாக (நீ கெட்ட கேட்டுக்கு ஹிந்தி வேற...) கிளம்பி கார்சாவியை பொறுக்கிக்கொண்டு இரண்டு அனானிகளை நேராக லால்பாக்குக்கு வரச்சொல்லிவிட்டு, சரியாக பத்தரைக்கு லால்பார்க் கண்ணாடி மாளிகையை அடைந்தேன்...மோகனாவுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்தேன்...யாராவது போனை எடுக்கிறார்களா என்று பார்த்ததில் கண்ணாடி மாளிகைக்கு அந்தப்பக்கம் இருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது..அதில் ஒருவர் போனை எடுத்து காதுக்கு கொடுத்தது தெரிந்ததும் போனை நான் இந்த முனையில் கட் செய்தேன்...அதைத்தான் மிஸ் கால் என்றேன்...

தரவாத்தா ( தெலுங்குல அதுக்கப்புறம்னு அர்த்தம்)...நேரே ஆசிப் அண்ணாச்சியும் மோகனாவும் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றேன்...ஆசிப் அண்ணாச்சி கருப்பு நிற ரே பாண் பீடா கூலிங் கிளாஸ் போட்டு அமர்ந்திருந்தார்...ஆள் நல்ல இளமையாக தெரிகிறார்...இளவட்டங்களிடம் மிகவும் ஜாலியாக பேசுகிறார்...என்னதான் வயசானாலும் அதை காட்டிக்கொள்ளாமல் (!!!!!) இளவட்டங்களிடம் (போதும்டே) சாலியாக பேசுவதிலும் பழகுவதிலும் தனக்கு நிகர் தான் தான் - சாத்தாங் குளத் தான் தான் என்று நிரூபித்தார்...ஆனால் பேச்சில் அவ்வப்போது சாத்தாங்குளத்தை இழுத்து, அதுல என்னமோ சாண்டாக்குரூஸ் ஏர்போட் அமைந்திருப்பதுபோல் ஒரு பில்டப் சீன் கொடுத்தார்...தானும் ஒரு பொட்டி தட்டி தான் என்பதையும் விளக்கினார்...

அதுக்கப்புறமாக அண்ணாச்சி உற்று நோக்கிய இடம், இளம்பெண்கள் ஹேண்ட் பால் ஆடும் இடம் ( வாலிபால் மாதிரியான பந்துடம் ஆடும் ஆட்டம்)...அங்கே சென்று அருகே உள்ள பெஞ்சில் அமர்ந்தால் நல்ல இயற்கை காட்சி கண்களுக்கு கிட்டும் என்று உறுதியான குரலில் தெரிவித்தார் (அண்ணி கவனிக்க)...அவருக்கே அப்படின்னா எங்களை போன்ற (?!) இளவட்டங்களுக்கு எப்படி...அதனால் அங்கேயே சென்று அருகேயே அமர்ந்து (இதற்க்டையே - பந்து பொறுக்கி போடலாம் என்ற என்னுடைய யோசனையை நிராகரித்து, ஒரு வ்ரலாற்று பிழை செய்தார் அண்ணாச்சி) அழகாக ரசிக்க ஆரம்பித்தோம்....வெட்டியாக வளையவந்த ஒரு ஒட்டு மாங்காய் கடைகாரனை அருகில் அழைத்து ஒரு முழு மாங்காய் உப்பு காரத்துடம் ஸ்பான்ஸர் செய்து மாநாடு சிறக்க உதவி செய்தார்...( அத்து ரூபாய் - அதான் பத்து ரூபாய் கன்னடத்துல)

ஆட்டம் அப்படியே சூடு பிடிக்க, ஏன் மோகன்தாஸ் பெண் ஈயத்துக்கு எதிராக முழங்குகிறார் என்று நான் கேட்டுவைத்தேன்...ஆனால் அப்படி எல்லாம் இல்லையாம்...மேலும் அவருக்கு எதிரானதாக வலையுலகில் இருக்கும் அக்காக்கள் எல்லாரிடமும் அவர் மடல்தொடர்பு வைத்துள்ளதோடு, தோழமை உணர்வுடன் பழகி வருகிறாராம்...(பத்த வெச்சுட்டயே பரட்டை)...இதை அவரே சொன்னார்...(அப்ப உண்மையாத்தான் இருக்கும்...)

அடுத்ததாக இராம் ஓசை செல்லாவுடன் வந்துவிட்டதாக அலைபேசி தகவல் வர, மிண்டும் க்ளாஸ் ஹவுஸ் பக்கம் நடையை கட்டினோம்...அங்கே ஓசை செல்லா (அம்மைக்கு பிறகு - உடல்நிலை இப்போ தான் தேறி வருகிறது என்று அவரை பார்த்தாலே தெரியுது ) மற்றும் இராம் ( புள்ள முன்னைக்கு இப்ப கொஞ்சம் கலரா தெரியுதே...எல்லாம் பெங்களூரு கிளைமேட்டு செய்யுற மாயம்...மதுரையில நாலு நால் காய வெச்சா திரும்ப பார்முக்கு வந்துருவாருன்னு நினைக்கிறேன்)....அப்படியே அந்த ஏரியாவில் காணக்கிடைத்தவர்கள் கோவிந்த், கவிதை கலக்கல்ஸ் பத்மப்ரியா, வலையுலக டெக்னிக்கல் சூறாவளி தீபா ( பட்டம் போதுமாத்தா), பிறகு அனானிகள் (தங்கராஜ் மற்றும் அர்ச்), அப்புறம் இன்னோரு நன்பர்...

பிறகு அமர வசதியான இடம் தேடி செல்கையில் காண்ப்ரன்ஸ் ரூம் அமைப்போடு எதிர்ப்புறம் இரண்டு நீள கருங்கல் பலகைகள், முன்னும் பின்னும் இரண்டு குட்டி கருங்கல் பலகைகள், மற்றும் டேபிள் அமைப்பில் பெரியதொரு கருங்கல் பலகை என அருமையானதொரு இடம் கிடைத்து, ரவுண்டு கட்டி அமர்ந்தோம்...ஸ்பேராக ஒரு பலகை பெஞ்ச்...அதில் அனானிகள் அமர்ந்தனர்...

அப்படியே ஐயப்பன் வருகிறார் என்று தகவல் கிடைத்து அவருக்காக ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்பு...மனைவி குழந்தையோடு பழனி முருகன் கோயிலுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதத்தோடு டூர் போகும் அமைப்பில் வந்து சேர்ந்தார்...பதிவர்கள் கையோடு கொண்டுவந்திருந்த பல வகை காமிராக்களை எடுத்து டேபிள் மீது விரிக்கப்பட்டு, ஓசை செல்லாவின் தமிழ் வலைப்பதிவில் முதல் முறையாக "காமிராவை கையாள்வது எப்படி, புகைப்படம் எடுப்பது எப்படி ?" என்ற - புகைப்படக்கலை பற்றியதானதொரு செஷன் ஆரம்பமானது....இந்த முயற்சி ஒரு அருமையானதொரு முயற்சி என்பதில் ஐயப்பனுக்கு கூட ஐயமில்லை...ச்ச்சும்மா ஒரு எதுகை மோனை...ஐயப்பனுக்கும் இதில் அதிக ஆர்வம் என்பதில்லாமல், செல்லாவுடன் அவரும் ப்ல டெக்னிக்கல் தகவல்களை வழங்கினார்...

புகைப்படக்கலை பற்றியதான கருத்தரங்கு என்பதால் அவ்வப்போது புகைப்படங்களை சுட்டு அது எப்படி, இது எப்படி என்று உடனுக்குடன் காட்டியது எக்ஸலண்ட் மாஸ்டர்பீஸ் என்றால் அது மிகையல்ல...பல டெக்னிக்கல் விஷயங்களில் உடனடியாக மண்டையில் ஏறியது... அப்பார்ச்சர் என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது....நாம் போட்டோ எடுக்கும் சப்ஜெக்ட் ( நாங்க இனிமே அப்படித்தான் சொல்லுவோம்...நீங்களே எங்க எதிர்ல நின்னாலும் நீங்க சப்ஜெக்ட் தான்...)...ஆங் சப்ஜெக்ட் எங்கே இருந்தால் படம் நன்றாக இருக்கும், ப்ளாஷ் எப்படி வைப்பது, ஏன் ப்ளாஷ் வைக்கவேண்டும், எஸ்.எல்.ஆர் என்றால் என்ன,டெப்த், போக்கஸ், அவுட் ஆப் போக்கஸ் என்ற பலவிஷயங்கள் விளக்கப்பட்டன...

ஆட்டத்தில் உபயோகப்பட்ட லேப்டாப்பை இராம் அறிமுகப்படுத்திய விதம் இன்னோரு கூத்து...இது (சோனி வைஸோ)என்னுடைய பொண்டாட்டி என்று அறிமுகப்படுத்தினார் இராம்...இதென்னா கூத்து என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...வாயிலதான் நம்ம புள்ளைங்களுக்கு வாஸ்து சரியில்லாம போவுது போங்கோ...அப்போ லேப்டாப்பை ஷட்டவுண் பண்ணா, எம் பொண்டாட்டி ஷட்டவுன் ஆகிட்டா...லேப்டாப்புல பேட்டரி தீர்ந்திருச்சின்னா, எம் பொண்டாட்டிக்கு பவர் போயிருச்சி...ஆப்பரேட்டிங் சிஸ்டம் போயிருச்சின்னா, எம் பொண்டாட்டி க்ராஷ் ஆகிட்டா...என்று சொல்லலாமா என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்...வழக்கம் போல இந்த லேப்பியை ஓப்பனும்போதும் இ-கலப்பை லோடாகி முகுந்த் மின்னல் போல வந்து சென்றார்...தமிழ் இருக்கும்வரை கூட வருவாருன்னு நினைக்கிறேன் இந்த முகுந்த்...சங்கத்துல கைப்புள்ளையோட ஆப்ஸென்ஸ்ல ஒரு கைப்புள்ளையா இருந்து சங்கத்தை காக்கும் இராயல் இராம் வாழ்க என்று ஐஸ் வைத்து அடுத்த பாராவுக்கு தாவிவிடுகிறேன்..வேணாம் விட்ருங்க என்று இராம் அலறுவது கேட்கிறது...

ஜி, மற்றும் இம்சை அரசி வந்து இணைந்தார்கள்...ஆர்ப்பனேஜ் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய பிஸ்கட், சாக்லேட்டுகள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்...இம்சை அரசி பற்றி சொல்லவேண்டும் என்றால், நான் படித்த திருச்சி ஆ.ஈ.சி (ரீஜினல் எஞ்சினீயரிங் காலேஜ்) கல்லூரியில் எனக்கு ஜூனியராக படித்தவர்...(என்ன கொடுமை சரவணன்...உண்மை உறங்காது..பிரிய வேண்டியவங்களுக்கு பிரிஞ்சா சரி)...கல்லூரி காலத்திலேயே இவரது நாவல் மாலைமதியிலோ, இல்லை ஏதோவொரு நாவல் புத்தகத்திலோ வந்திருக்கிறது...அருமையான எழுத்தாளராக வரவேண்டியவர்...இம்சித்துக்கொண்டிருக்கிறார்...அட எதுவும் எழுதவில்லை என்று சொல்லுகிறேன்...நேரமின்மையை சாக்காக சொல்லாமல் ஏதாவது முயன்றால் ஒருவேளை அடுத்த நாவல் பிரசுரமாகலாம்...

ஜீ...என்னவோ அதிகமாக என்னிடம் பேசவில்லை...ஒருவேளை செலக்டிவ் அம்னீஷியாவாக இருக்கலாம்...(அவருக்கு)...பால்பாண்டி போன்றதொரு அருமையான க்ரியேட்டிவ்(!?) கதாபாத்திரத்தை உருவாக்கி நகைச்சுவை விருந்து படைக்கத்தெரிந்த ஜி, மேலும் நிறைய எழுதவேண்டும்...நகைச்சுவையை மட்டுமே டாபிக்காக எடுத்துக்கொண்டு...ம்ம்ம்...

இரண்டரை மணி நேரம் புகைப்படக்கலை பற்றிய செல்லாவின் நிகழ்ச்சி அரை மணி நேரம் போல இருந்தது...அவ்வளவு அருமையான செயல் விளக்கங்களோடு பட்டாசாக சென்றது இந்த நிகச்சி....நடுவில் வந்து இணைந்தவர் சுபமூகா...இவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாததனால் ( நான் மரத்தடி குண்டாந்தடி போன்ற குழுமங்களில் எழுதாததனால் மட்டுமே இவரை பற்றிய அதிக அறிமுகமில்லாமல் போனது)..அடுத்ததாக வந்து இணைந்தவர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா...மொக்கையாக "நீ உருப்புடமாட்டே", "அப்போ நீ மட்டும் உருப்புடுவியா" "நான் உருப்புடலைன்னாலும் பரவாயில்ல, நீ உருப்புடகூடாது" என்பது போன்ற பின்னூட்டங்களை போட்டுக்கொண்டிருக்கும் (ஆமா, யாருங்க இந்த மாதிரி பின்னூட்டம் போடுறது...ச்சே...) பலருக்கு மத்தியில் ஒரு சிறிய பின்னூட்டம் எழுதினாலும், அதில் சமூக அக்கறையும், சமகால சிந்தனையும், தெளிவான கருத்தாக்கமும் வைத்து எழுதக்கூடிய கல்வெட்டு அவர்கள் தன்னுடைய சூட்கேஸுடன் வந்து இணைந்தார்...

செஷனுக்கு நடுவில் ஐயப்பன் ஸ்பான்ஸர் செய்த சமோஸா அருமை...(பின்ன...காசு அவரு இல்ல கொடுத்தாரு)...வாட்டர் பாட்டில் கூட ஆட்டத்தில் இருந்தது...பிறகு இம்சை அரசி சில்லறை கொடுக்க, வெள்ளரிப்பிஞ்சு வேறு ஆட்டத்தில் இணைந்துகொண்டது...அருமை...பின்ன, தின்னது நானில்லையா...

புகைப்படக்கலை செஷன் முடிந்தது...ஆஸ்ரமத்துக்கு போக இரண்டு கார்கள் ஏற்பாடு செய்திருந்தார் இராம்...அவற்றை நோக்கி அனைவரும் நடையை கட்ட, நான் என்னுடைய காரை நிறுத்தியிருந்த இடம் எதிர்ப்பக்கம்...அதனால் நான் ஆப்போஸிட் டைரக்ஷனில் ஓட....இரவு கொரிய பயனத்துக்கான ஏற்பாடுகள் ஒன்றையும் செய்யாமல் இருந்ததால் ஆஸ்ரமத்துக்கு நான் போகமுடியவில்லை...அதுபற்றி மற்றவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால் இராம் சொன்னது, குழந்தைகள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வரும்போது, மனதெல்லாம் நிறைந்துபோயிருந்தது என்றார்...

இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு கோவையில் இருந்து பாமரன் அவர்கள் வாழ்த்து செய்தி அனுபியிருந்தார்...விஜய் டி.வி படப்பிடிப்புக்கு சென்னை சென்றதால் அவர் வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்...ஆனால் அதை எல்லோரிடமும் சொல்ல மறந்தது நான் தான்...மேட்டர் என்னன்னா...நல்லவேளை அவர் வரவில்லை...வந்திருந்தால் அட்டகாசமான அவரது பேச்சால் நேரத்தை மறக்கடித்துவிட்டிருப்பார்...இன்னும் இரண்டு மணி நேரம் பூங்காவில் அவர் சொல்வது கேட்டு அமந்திருந்திருப்போம்...நான் என்னுடைய விமானத்தை தவறவிட்டிருப்பேன்...பதிவர்கள் ஆஸ்ரமத்துக்கு சென்று மனநிறைவு அடைந்திருக்க முடியாது.....பலூன் மாமாவின் அட்டகாசமான பலூன் விளையாட்டால் துள்ளி குதித்து உற்சாகம் அடைந்த சின்ன குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் அதனை தவறவிட்டிருக்கும்கள்...

இந்த மொக்கை பதிவை விமானத்தில் அமர்ந்தபடி லேப்பியை ஓப்பின் செய்து போடுகிறேன்...பக்கத்தில் அருமையானதொரு பிகர் என்னையே நோட்டமிடுகிறது...வேறுவழியில்லை இன்னும் சிலமணி நேரம் என்னுடன் தானே அமர்ந்துவரவேண்டும்...நானும் லேப்பியை மூடிவிட்டு பிகர் எந்த நிறுவனத்தில் வேலைசெய்யுது, தாய் ஏர்வேர் பர்பெக்ட் டைமுக்கு எடுக்கிறான் என்பன போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையோ, அல்லது அவரது லேப்டாப் பேட்டரி நீண்ட ஆயுள் தருகிறதா என்பது போன்றதொரு மொக்கை கேள்வியை கேட்டுத்தான் கான்வர்ஸேஷனை ஆரம்பிக்கவேண்டும்...

நீங்க பொழப்ப பாருங்க...நானும்....ஆங்...திரும்ப...வரமாட்டேன்னு சொல்லவந்தேன்.....வர்ட்ட்ட்ட்ட்டா...

Thursday, July 12, 2007

செந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...

வணக்கம் மக்கள்ஸ்....ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கிறேன்...

"எல்லோர் கையிலும் ஏன் ஆணி வைத்தாய் இறைவா"

இப்போ என் கையில் இருக்குற ஆணி கொஞ்சம் பெருசா, ஆணின்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு (கிட்டத்தட்ட ஆப்பு சைஸ்ல) இருக்கு...என்ன செய்ய புலி வாலை புடிச்சுட்டமே...

சேலம் சிவராஜ் சித்த வைத்தியரோட சுற்றுப்பயண அறிவிப்பு மாதிரி இல்லைன்னாலும் ( ஓசூர் பாகாலூர் ரோடு ஈஸ்வரி லாட்ஜ்ல அவரை மீட் பண்ணி சிட்டுக்குருவி லேகியம் வாங்கிய வலைத்தமிழர் ஒருவர் இருக்கிறார் என்கிறது காதோரம் சிறகடிக்கும் ஒரு பறவை) ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சுற்றுப்பயணத்தை செய்யலாமுன்னு இருக்கேன்...

நாம போற வழியில சுத்தியலோடு ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் வலைத்தமிழர்கள் இருந்தால் அவர்களை சந்தித்து மொக்கை போட ஆவல்...

பெங்களூரில் இருந்து 15 ஆம் தேதி காலை கிளம்பி தாய்லாந்து...(ஈஸ்வரி லாட்ஜ் (அல்ல), பாங்காங்...)...இரண்டு நாள் டேரா...பிறகு அங்கிருந்து தாய்வான்...(தைபே)...அங்கேயும் இரண்டு நாள்...பிறகு அங்கிருந்து கொரியா...(கஸாந் தாங், சியோல்)....அங்கன ஒரு வாரம் ஆணி புடுங்கிய பிறகு, சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ ( என்னோட சாய்ஸ் இங்க உள்ள பாலித்தீவு தான்) கண்டினூ பண்ணலாம் என்று உள்ளேன்...

சந்திக்க விரும்புபவர்கள் ஆப்பை கையோடு கொண்டுவருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

என்னுடைய மொபைல் எண் : 98863 97051 ( வித் இண்டர்நேஷனல் ரோமிங் ஆணி)

வர்ர்ர்ர்ட்ட்டா !!!!!!!!!!!

ஆங் சொல்ல மறந்துட்டேனே...பெங்களூர் ப்லாகர் மீட்டுக்கு வரீங்க தானே ?

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

பா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்சி..

பாலாவே அல்லது பா.க.ச உறுப்பினர்களோ தகவல் தெரிவிக்காத நிலையில், ஜெயா டி.வியில் இருந்து வந்த ஒரு செய்தி வயிற்றில் புளியை கரைத்தது...

அது என்னவென்றால் பா.க.ச தலைமைப்பொறுப்பில் இருக்கும் பாலபாரதி, நேர்முகம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போகிறார் என்பது தான்...

அலுவலகத்திலோ தலைக்கு மேலே ஆணி..ச்சே..வேலை...இருந்தாலும் பா.க.ச பெங்களூர் கிளை ஒக்கே ஒக்க தலைவரான நான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழையாகிவிடுமே என்று கிலி கிளம்ப, அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாதி நாள் கட்டடித்தேன்...

12:00 மணிக்கு சரியாக எழுந்து பார்க்கவேண்டும் என்று அலாரம் வைத்துவிட்டு (பகல் பண்ணிரண்டு மணிக்குத்தான்)...படக் என விழித்து பார்த்த போது மணி பண்ணிரண்டு நாற்பத்தைந்து...

அய்யோடா என்று டி.வீயை உசுப்பினால் திடுக்கென தூக்கி வாரிப்போட்டது...எதிர்த்தாமாதிரி பாலா லைட்டாக முடிவளர்ந்த மொட்டைத்தலையோடு அட்டகாசமாக சிரித்தபடி கோவையிலிருந்து கேள்வி கேட்ட பிரதீபாவுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார்...

அடக்கொடுமையே என்று பார்த்துக்கொண்டிருந்தால்...டி.வி காம்பியரர், சார் இன்னொரு நேயர் லைன்ல காத்துக்கிட்டிருக்கார்...என்றார்...

கவிஞர் முத்துலிங்கம் மும்பைல இருந்து பேசுகிறேன் என்று ஒருவர் ஆரம்பித்தார்...

வணக்கம் சொல்லுங்க என்றார் பாலா...(எனக்கு தோன்றினது, அட நானும் மும்பைல தான் பத்திரிக்கையாளரா குப்பை கொட்டினேன் தல...என்று ஆரம்பித்துவிடுவாரோ என்று பயந்தேன்...)

பேக் டு கவிஞர் முத்துலிங்கம்..அவர் தமிழ் போரம் என்ற இணைய தளத்தில் 400க்கு மேற்ப்பட்ட கவிதைகளை மற்றும் கதைகளை அடிச்சு தூள் கிளப்பிய பிறகு அந்த போரத்தை இழுத்து மூடிட்டானுங்களாம்...இப்போ இன்னா செய்யது என்றார்...

ஆர்ச்சீவ்ஸ் டாட் காம் என்று ஒரு தளத்தில் இது போன்ற பழைய பக்கங்கள் எல்லாம் இருக்கும் என்று ஒரு முறை பாலாவே என்னிடம் சொல்லி இருக்கார்...ஆனாலும் அதை மறந்துட்டார் போல...முத்துலிங்கத்திடம் கூகிள்ல போய் டைப் பண்ணுங்க, அதில் வரும் கேச்சுடு பேஜஸ் கிளிக் செய்யுங்க என்று ஏதோ உழப்பி அமுக்கினார்...

அப்புறம் மதுரையில இருந்து ஒரு அக்கா அழைத்து, ப்லாக் செய்து பணம் செய்வது எப்படி என்று கேட்க, அதுக்கு பாலா விளக்கம் கொடுத்தார்...

பொறவு, இ-கலப்பை பற்றி காம்பியர் செய்த அக்கா ( இது நியாயமா, அடுக்குமா) கேட்க, அதுக்கு ஏ எம் எம் ஏ அப்படீன்னு அடிச்சா அம்மா வரும் என்று குழந்தைக்கு விளக்குவது போல பாலா விளக்க...

எனக்கு என்னமோ அடி வயித்துல தீய வெச்ச மாதிரி இருந்தது...

பிறகு வேற எதாவது விசயம் தெரியனும்னா ஜெயா டிவி. அலுவலகத்துக்கு போன் போடுங்க என்று சொல்லி, பாலாவின் பெரிய வணக்கத்துடன் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது...

பிறகு செயா டி.டி செய்திகள் ஆரம்பமானது...கூட்டுறவு தேர்தலை மைனாரிட்டி தி.மு.க அரசு ரத்து செய்தது பற்றியதான அம்மாவின் அறிக்கையை விரிவாக படிக்க ஆரம்பிக்க, நான் சன்னுக்கு மாறி, இளையராஜா - கங்கை அமரன் இனைந்து தயாரித்து, உப்பிலியப்பன் விஜயகாந்த் கொழுகொழுவென்று கழுத்தில் சதையோடு நடித்த, கோயில் காளை (படத்துல கனகா ஹீரோயினி..உப்பிலியப்பன் நம்ம கேப்டனோட பேரு)...படத்தை வெறிக்க ஆரம்பித்தேன்....

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, July 11, 2007

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்கு ?

http://raamcm.blogspot.com/2007/06/blog-post_8052.html



சமீப காலங்களாக வலைபதிவர் சந்திப்பு பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று கொண்டு இருப்பது வரவேற்கதக்கதே.

அந்த வகையில் பெங்களூரூலும் வலைபதிவர் சந்திப்பை வரும் ஜீலை மாதம் 14ம் தேதி சனிக்கிழமை லால்பார்க்'லில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் சற்றே
மாறுப்பட்ட முறையில் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாகவும் போட்டோகிராபி பற்றிய சிறிய அறிமுகங்களுடன் நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்று தினம் காலையில் சந்திப்பு'க்கு பிறகு பெங்களூரூலில் இருக்கும் ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று நம்மால் இயன்ற உதவிகளை செய்து வரலாம். வாய்ப்புக்கள் சரியாக அமையும் பட்சத்தில் அவ்வில்லத்திலே நமது
மதிய உணவு வேளையை அவர்களுடன் சேர்த்து கழிக்கலாம். இதற்கு உங்களின் மேலான கருத்துக்களும் மற்றும் ஆலோசனைகள உங்களுக்கு தெரிந்த இல்லத்தை பற்றிய விபரங்கள் இருந்தாலும் அளிக்கலாம்.

மேலும் புகைப்பட கலை பற்றிய சிறிய அறிமுகத்தை நண்பர் நச்.செல்லா, மற்றும் வெண்பா வாத்தி ஜீவ்ஸ் அளிக்க உள்ளனர்.


இடம்:- பெங்களூரூ லால்பார்க் நாள்:- 14 - 07 -2007 நேரம்:- காலை 10.00

http://raamcm.blogspot.com/2007/06/blog-post_8052.html


Advertisement !!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, July 10, 2007

தமிழ்மணம் உறங்குகிறதா ?

அதிகமாக எழுதப்போவதில்லை நான் இந்த இடுகையில்....சில அநாகரீக பதிவுகள் பற்றி தொடந்து மடல் அனுப்பியும் தமிழ்மணம் நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறதே ? தமிழ்மண அட்மின் மடல் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை படிக்கப்படுகிறது என்று தெரியவில்லை...மடல் அனுப்பியும் பதில் இல்லாததால் இந்த பதிவு...

 

நிர்வாகிகள் மன்னிக்கவும்...

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Monday, July 09, 2007

கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுதல் ஆதாரம்

தனது மனைவி கிரகலட்சுமிக்கும், வேணுகோபால் பிரசாத்துக்கும் இடையே நடந்த முதல் திருமணம் தொடர்பான மேலும் பல ஆதாரங்களை காவல் துறையிடம் நடிகர் பிரஷாந்த் ஒப்படைத்துள்ளார்.

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargeClick to Enlarge

நடிகர் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் நாளுக்கு நாள், கிரகலட்சுமிக்குப் பாதகமாகிக் கொண்டே போகிறது.

கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த முதல் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அனைவரும் அதிர்ந்தனர். அத்தோடு நில்லாமல் கிரகலட்சுமியின் முதல் கணவர் பெயர் வேணுபிரசாத், அவர் கேரளாவைச் சேர்ந்தவர், இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்று பிரஷாந்த் புகார்களை அடுக்கினார்.

ஆனால் இது பொய்யான தகவல், எனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பிரசாத்தின் சகோதரி எனக்குத் தோழி. அவரிடம் எனது பட்டப் படிப்புச் சான்றிதழை அளித்திருந்தேன். அதில் உள்ள கையெழுத்தைத் திருடி, தனக்கு கல்யாணமானதாக போலியான வாக்குமூலம் கொடுத்துள்ளார் பிரசாத் என்று கிரகலட்சுமி போலீஸில் தெரிவித்தார்.

ஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் இடையே கல்யாணம் நடந்ததற்கு பல சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக பிரஷாந்த் தரப்பு கூறியது.

இந்த நிலையில் பிரஷாந்த் புதிய மனு ஒன்றை மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் கிரகலட்சுமி-வேணு பிரசாத் கல்யாணம் தொடர்பான புதிய ஆதாரத்தைக் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், கிரகலட்சுமியின் கிரெடிட் கார்டில் தனது கணவராக வேணுபிரசாத் பெயரை கிரகலட்சுமி தெரிவித்துள்ளார். இது அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக இருந்ததற்கான முக்கிய ஆதாரம் என்று பிரஷாந்த் கூறியுள்ளார்.

பிரஷாந்த் அடுக்கடுக்காக ஆதாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வருவதால் கிரகலட்சுமி பக்கம் பலவீனமாகிக் கொண்டு வருகிறது.

 

Thanks, That's Thamizதனது மனைவி கிரகலட்சுமிக்கும், வேணுகோபால் பிரசாத்துக்கும் இடையே நடந்த முதல் திருமணம் தொடர்பான மேலும் பல ஆதாரங்களை காவல் துறையிடம் நடிகர் பிரஷாந்த் ஒப்படைத்துள்ளார்.

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargeClick to Enlarge

நடிகர் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் நாளுக்கு நாள், கிரகலட்சுமிக்குப் பாதகமாகிக் கொண்டே போகிறது.

கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த முதல் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அனைவரும் அதிர்ந்தனர். அத்தோடு நில்லாமல் கிரகலட்சுமியின் முதல் கணவர் பெயர் வேணுபிரசாத், அவர் கேரளாவைச் சேர்ந்தவர், இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்று பிரஷாந்த் புகார்களை அடுக்கினார்.

ஆனால் இது பொய்யான தகவல், எனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பிரசாத்தின் சகோதரி எனக்குத் தோழி. அவரிடம் எனது பட்டப் படிப்புச் சான்றிதழை அளித்திருந்தேன். அதில் உள்ள கையெழுத்தைத் திருடி, தனக்கு கல்யாணமானதாக போலியான வாக்குமூலம் கொடுத்துள்ளார் பிரசாத் என்று கிரகலட்சுமி போலீஸில் தெரிவித்தார்.

ஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் இடையே கல்யாணம் நடந்ததற்கு பல சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக பிரஷாந்த் தரப்பு கூறியது.

இந்த நிலையில் பிரஷாந்த் புதிய மனு ஒன்றை மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் கிரகலட்சுமி-வேணு பிரசாத் கல்யாணம் தொடர்பான புதிய ஆதாரத்தைக் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், கிரகலட்சுமியின் கிரெடிட் கார்டில் தனது கணவராக வேணுபிரசாத் பெயரை கிரகலட்சுமி தெரிவித்துள்ளார். இது அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக இருந்ததற்கான முக்கிய ஆதாரம் என்று பிரஷாந்த் கூறியுள்ளார்.

பிரஷாந்த் அடுக்கடுக்காக ஆதாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வருவதால் கிரகலட்சுமி பக்கம் பலவீனமாகிக் கொண்டு வருகிறது.

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

யாரையாவது நாய் கடிச்சிருச்சி அப்படீன்னு கேள்விப்பட்டா...உடனே என்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை..."ஹெ !!...என்னைய இதுவரைக்கும் நாய் கடிச்சதே இல்ல தெரியுமா"...!! என்பதுவேயாகும்...அதில் ஒருவகையான பெருமிதமும் கொப்பளிக்கும்...

வந்துருச்சில்ல அதுக்கு ஒரு ஆப்பு...

கருநாடக எப்பிடமிக் டிஸீஸ் மருத்துவமனை ஊசியில கொண்டுபோய் முடிச்சிருச்சில்ல இந்த முறை...

கேளுங்க என் கதையை....

வழக்கமா வெளிய சுத்தனும்னா அலுவலகம் முடிந்தவுடன் காரை கொண்டுபோய் வீட்ல பார்க் செய்துட்டு யமஹாவை ஒரு குத்து குத்துவது வழக்கம்...பெங்களூரு ட்ராபிக் பயம் தான் காரணம்...உங்களுக்கு தெரியாதா பெங்களூருவில் நடக்குறவங்களுக்கு கூட ட்ராபிக் ஜாம் ஆகும் என்று...

அன்னைக்கும் அதே மாதிரி தான்...ஆப்பு தெருவில காத்திருக்குன்னு தெரியாம வண்டியை எடுத்துட்டேன்...

சல்லுபுல்லுன்னு டொம்ளூர் ( ஒரு ஏரியா) பக்கமா போயிக்கிட்டிருந்தப்ப பின்னால உட்கார்ந்திருந்த ஆளு வெச்சது தான் இந்த ஆப்பு....இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று சொல்ல, நான் வண்டியை வளைக்க ரோட்டில் நின்றிருந்த இந்த "வள்" எங்க இருந்து தான் வந்ததோ தெரியல, லபக்குன்னு பாய்ஞ்சு காலைப்பிடிச்சு கடிச்சு வெச்சிருச்சு...

வீட்டுக்கு போய் காலைப்பார்த்தால், போட்டிருந்த ஜீன்ஸ் பேன்ட்டை தாண்டி ஒரு துக்ளியூண்டு காயம்...

பக்கத்து தெருவில் ஈஸ்வரி கிளீனிக்கில் இருக்கும் பேமிலி பிஸிஷியனிடம் போனேன்...

அவர் காலைக்காட்டு என்றார்..காட்டினேன்...வெள்ளையான ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து பரபரவென காயத்தில் வைத்தார்...

ஸ்ஸ்ஸ்ஸ் என்று எரிந்தது...

அப்போ ஊசி போட்டுத்தான் ஆகனும் என்றார்...ஒரு டி.டி இஞ்செக்ஷனை தலையை தட்டிக்கொண்டே ஒரு மேட்டரை சொல்ல, எனக்கு ஜில்ல்ல்ல் என்று ஆனது...

போன மாதம் இந்த மாதிரி தான் ஒருத்தர் நாய் கடிச்சு மேலோகம் போனாராம்...அவரை ஒன்னரை வருஷத்துக்கு முன்னால கடிச்சது பொறந்து மூனே நாள் ஆன குட்டியாம்...காயம் ஒன்னும் பெருசா இல்லையாம், வெறும் நக கீறல் தானாம்...

ஹய்யோ என்று கூட வந்த நன்பர் மெர்சலானார்...

அப்புறம் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எண்ணிக்கொண்டே இன்னோரு விஷயம் கூட சொன்னார்...இந்த மாதிரி வெறி நாய் எல்லாம் ரோட்ல ஒரு இடத்துல நிக்காதாம்...அப்படியே தலையை தொங்கப்போட்டுக்கிட்டு ( யாராவது அவமானப்படுத்தியிருப்பாங்களோ), சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குமாம்...

உடனே ரேபிப்புர் இஞ்செக்ஷன் எடுக்கனும் என்றார்...

நீங்க நேரா ஐசொலேஷன் ஹாஸ்பிட்டல் போயிருங்க...இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷன் ஆப்போஸிட்ல பெரிய பில்டிங்...ஒல்டு மெட்ராஸ் ரோட்ல...மொத்தம் அஞ்சு இஞ்செக்ஷன் போடனும்...என்றார்...

கிறுகிறுவென்று இருந்தது...

நன்பர் காரை ஒட்ட, பக்கத்தில் நான்...

ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் ஹாஸ்பிட்டல் பார் எபிடமிக் டிஸீஸ் என்று எழுதி இருந்த பழைய கட்டிடத்தை நாங்கள் அடைந்தபோது மணி பத்து...ட்யூட்டி
சார்...டாக் பைட்...ஊசி போடனும்...

அவுதா...எல்லி ?

கால்ல தான் என்றான் பக்கத்தில் இருந்த நன்பன்...அவனை அடக்கிவிட்டு, இங்க தான் சார் டொம்ளூர் பக்கம் என்றேன்...

டாக்டர் ஓ.பிக்கு ஓகித்தே...சொல்ப வெயிட் மாடி என்றார் அட்டெண்டர்...நாங்கள் தமிழில் பேசியதும் தமிழில் பதில் சொல்ல ஆரம்பித்தார்...

முதல்ல டாக்டர்கிட்ட சீட்டு வாங்கிக்கிட்டு, முந்தே ஓகி...ஒரு பில்டிங் வர்து..அங்க சிஸ்டர் இருக்கும்...அவுங்க கிட்ட ஒரு புக்கு 5 ரூவாய்க்கு வாங்கு...அதுல டாக்டர்கிட்ட சைன் மாடி...பிறகு லெப்ட்ல இருக்க பில்டிங்ல போய்ட்டு ஊசி போட்க்கோ...என்றார் அட்டெண்டர்..

பெரிய பில்டிங்...உள்ளே கருநாடக அரசு வாகனங்கள் எல்லாம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன...எல்லாம் கடந்து 5 ரூபாய் கொடுத்து புக் வாங்கி, டாக்டரிடம் போனால்...

வெகு இளமையாக இருந்தார் டாக்டர்...தரமான ஆங்கிலத்தில் பேசினார்...தமிழும் புரியும் போல...

அந்த நாய் ஏன் கடிச்சது ? நீங்க தூண்டினீங்களா ? என்றார்...

அய்யோ நான் ஒன்னும் தூண்டலை...அதுவா பாய்ஞ்சு வள்ளுன்னு புடுங்கிருச்சி என்றேன்...

நாய்க்கு என்ன ஆச்சு ?

அதை பார்க்கலை டாக்டர்...

கன்னடத்தில் எழுதி இருந்த புத்தகத்தில் இப்படி தெளிவாகவே எழுதினார்...

Dog Bite at 7:00 PM on 5/7/07. by a street dog, unprovoked bite. condition of the dog : unknown. O/E:- Small wound around 2X2 mm on the lateral aspect of the left leg.

பின்னால் இருந்த அழுக்கடைந்திருந்த ஒரு காலண்டர் பார்த்து நாள் குறித்தார்..

அடுத்த பக்கத்தில்..

Rabipur 1M - 1CC

0 - 5/7/07
3 - 8/7/07
7 - 12/7/07
14 - 19/7/07
28 - 2/8/07

இப்படி எழுதிவிட்டு, 3 ர்ட் டே ஒரு ஊசி, அப்றம் 7 த் டே, அப்றம் 14த் டே, அப்றம் 28 டே...ஓக்கே...என்றார்...

ஓக்கே டாக்டர்...

ஓ.பில சிஸ்டர் இருப்பாங். ஓகி...என்றார்..

சுத்தி சுத்தி ஓ/பி வார்டை கண்டுபிடித்து, உள்ளே கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கும் 'சிஸ்டர்' அமர்ந்திருந்த இடத்தை கண்டுபிடித்தேன்...

அங்கே சிஸ்டர் ஒரு நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு ( ஊசிக்கான பீஸ்) - என்னுடைய புத்தகத்தில் ஒரு எண்ட்ரியை போட்டுக்கொண்டு, பெயர் ரவி, வயது 28 என்று அவரது புத்தகத்தில் எழுதிக்கொண்டு, (எனக்கு தெரிந்து - குமாரசாமி + லோக் அயுக்தா புண்ணியத்தால் லஞ்சம் என்பது துளியளவும் கிடையாது கருனாடக அரசு மருத்துவமனைகளில்...) டக்கென ஒரு ஊசியை உடைத்து, ஷோல்டரை விலக்கி காட்டும்படி செய்து ஸ்ஸ்ஸ்ஸ்...

எனக்கு தெரிந்து இப்போதுதான் முதல் முறையாக ஷோல்டரில் ஊசி போடுகிறேன்...வலி இல்லை...

ஊசி போட்ட பிறகு பரபரவென தேய்த்துக்கொள்ளலாம் என்று எத்தனித்தபோது...நோ...தேய்க்க கூடாது என்றார்...

ஒரு நன்றியை சொல்லிவிட்டு, வரும்போது டாக்டருக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்...அட்டெண்டர் வழியில் மடக்கி...தண்ணியெல்லாம் அடிக்காதீங்க...நான் வெஜ் கூடாது...கட்டுப்பாடா இருக்கனும் என்றார்...மண்டையை ஆட்டிக்கொண்டு...

காருக்கு அருகில் வந்தேன்...நன்பரிடம் சிகரெட் பாக்கெட் வாங்கி ஒரு கிங்ஸ் எடுத்து பற்றவைத்தேன்...வண்டியை நான் ரிவர்ஸ் எடுக்கிறேன் என்றார்...

உள்ளே சரளமாக நிறைய இடம் இருக்கிறது...சரி எடுங்க என்று...அப்படியே முன்னால் கேட் பக்கம் வந்தேன்...சற்று புகையை உள்ளே இழுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டே இன்னும் இரண்டடி எடுத்து வைத்தபோது...

கர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒரு சத்தம்...

சற்றே இருட்டான காம்பவுண்டு சுவர் அருகில் எங்கிருந்தோ விழும் ட்யூப் லைட் வெளிச்சம் கண்களில் பட்டு பளபளக்கும் கண்களால் என்னை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார் அவர்...அது தான் நமது எதிரி...கரிய நிறம்...

கர்ர்ர்ர்ர் என்று மீண்டும் ஒரு உறுமல்...

பின்னால் நமது நன்பர் ரிவர்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று வளைத்து ஒடித்துக்கொண்டிருந்தார்...

அய்யோடா சாமீ ஆளை விடுப்பா என்று காரைநோக்கி ஓட்டமெடுத்தேன்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, July 06, 2007

அ.தி.மு.க - பா.ம.க இணையுமா ?

வேலூர்: திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் பாமகவுக்கு இல்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

திமுக, பாமக இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலோடு, திமுகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. இப்போது பாமக எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி என்று கூறினார். இது திமுக, பாமக வட்டாரத்தில் பலவித எதிர்பார்ப்புகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா, அதிமுக கூட்டணியில் இணையுமா என்று கேட்டனர். அதற்கு மணி, திமுக அரசை ஆதரிக்கிற முதல் கட்சியாக பாமக இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாமக கண்டிப்பாக இணையாது. முடிந்து விட்ட விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றார்.

டாஸ்மாக் மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இன்னும் குறைக்க வேண்டும் என்றார் மணி.


நன்றி - தட்ஸ் தமிழ்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

முஷாரப் விமானம் சுடப்பட்டது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் சென்ற விமானம் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைக் கொல்ல நடந்த முயற்சி இது என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தான் தென் மேற்கில் உள்ள துர்பாத் என்ற நகரில் வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று முஷாரப் சென்றார். இதற்காக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தளத்திலிருந்து அவர் விமானம் மூலம் துர்பாத் கிளம்பினார்.

அப்போது முஷாரப் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இருப்பினும் அதில் விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. முஷாரப்புக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவரது விமானம் துர்பாத் நகரில் பத்திரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தளத்திற்கு அருகே உள்ள 2 மாடிக் கட்டடத்தின் உச்சியில் நீண்ட இரண்டு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளரும் கூறியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டது போக ஒரு ராக்கெட்டும், முஷாரப் விமானம் மீது வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட 2 மாடிக் கட்டடத்திற்கு அருகே வசிக்கும் அர்ஷத் மஹமூத் என்பவரும், துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக கூறியுள்ளார். அந்தக் கட்டடம் காலியாக உள்ளது. வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அங்கு வந்து சென்றதாக மஹமூத் கூறியுள்ளார்.

ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. அப்படி ஒரு முயற்சியே நடக்கவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூற்படும் பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

முஷாரப் பதவிக்கு வந்த பின்னர் இருமுறை அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்துள்ளன. அந்த இரு முயற்சிகளின் பின்னணியிலும் அல் கொய்தா அமைப்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இஸ்லாமாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ள மதரஸாவை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள தீவிரவாதத்திற்கு ஆதரவான மாணவர்களைப் பிடிக்க போராடி வருகிறது. இதுதொடர்பாக நடந்த சண்டையில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முஷாரப்பைக் கொல்ல முயற்சி நடந்ததாக வெளியாகியுள்ள தகவலால் பாகிஸ்தானில் பரபரப்பு அதிகரித்துள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, July 02, 2007

விடாது செருப்பு !!

விடாது செருப்பு....!!!!



எனக்கு தெரிஞ்ச மன்னார்குடி ஆசாரியிடம் ஒரு ஸ்டூல் செய்யுமாறு ஒரு மரக்கட்டையை கொடுத்தேன்...ஆனால் அந்த அரைலூசோ மூன்றே காலில் ஒரு ஸ்டூலை செய்து கொண்டுவர, எங்கேடா நாலாவது கால் என்றேன்...அவன் சொன்னான்...வரும்போது ஒரு தாத்தா கால் ஊன்ற வழியில்லாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார்...அவரிடம் கொடுத்துவிட்டேன்...என்றான்...



அடப்பாவி...அப்போ நீ இந்த ஸ்டூலை எப்படியடா நிற்க வைப்பாய் என்றேன்...



அவன் சொன்னான் என் மனைவி கூறியபடி, இந்த ஸ்டூலை மூன்று காலில் செய்திருக்கேன்...இன்றையில் இருந்து இதன் பெயர் முக்காலி என்றான்...



அட...இவன் கூட இன்னவேட் செய்கிறானே என்று வியந்தபடி...எனக்கு வந்த பின்னூட்டம் ஒன்றை அப்படியே வெளியிடலாம் என்று தான்...



அனானி: இப்படி எழுதுகிறார்...



"உண்மைதான் ரவி அவனுக்கு கொஞ்சம் கூட உடம்ப்பில்

சொரனையே இருக்காது போலிருக்கிறது, 'அது' திருட்டுத்தனமாக

உங்கள் பெயரில் போட்ட பின்னூட்டத்திற்க்கு அது நீங்கள் தான் என்று

கருதி நான் ஒரு பின்னூட்டம்

போட்டிருந்தேன், அதன் கடுமைக்கு வருந்துகிறேன்.



அந்த மன நோயாளி நிச்சயமாக பெரியாருக்கு கெட்ட பெயரை தான்

ஏற்படுத்துவான்,அவன் பேசுவது நாத்திகமும் அல்ல ஒரு வெங்காயமும்

அல்ல, சதா பாப்பான்,பாப்பான்னு ஊளையிடுகிறானே தவிர

பார்ப்பனியதிற்கு எதிராக ஒன்றையும் கிழித்ததில்லை.



அந்த

கழுதையிடமிருப்பதெல்லாம் வறட்டுத்தனமான

பார்ப்பன சாதி வெறுப்பும்,தன்னுடைய சுய சாதி மீதான

பற்றும் தானே தவிர பகுத்தறிவும் இல்லை ஒரு

MAண்னாங்கட்டியுமில்லை,

மாமா வீரமனிக்கு மாப்பிள்ளையாக இருப்பது

மூட நம்ப்பிக்கையா

பகுத்தறிவா ?



எனவே பெரியார் பெயரை கெடுக்கும் இது

போன்ற சொறி நாய்களை தான் பழைய பிய்ந்து

போன செருப்பைக்கொண்டு துரத்திதுரத்தி

அடிக்க வேண்டும்.

"



நான் போட்ட (போடாத) ஒரு பின்னூட்டத்தை பார்த்து, சூடானவர், உண்மை தெரிந்ததும் இப்படி போட்டு தாக்கியுள்ளார்...



இது உண்மையாக இருக்குமோ ?



ஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.



கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.



சீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே) சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.



கிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.



ஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே விழ வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.

http://zendaily.blogspot.com/



தினம் ஒரு ஜென் கதையை தரும் கங்காவின் பதிவில் இருந்து சுட்டது...அருமையான பதிவு....



இது தலைப்பின் ஒரு பாதிக்கு...அடுத்த பாதிக்கு...



என்னுடைய முந்தைய பதிவுக்கு வழக்கம் போல மலேசியா நாதாரி தன்னுடைய ஸ்டைலில் திட்டி பின்னூட்டம் மட்டுமே போட்டுவிட்டு ஒதுங்கி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிட்டது...



அடத்தூ...இவ்ளோதானா உன்னோட தைரியம்...உனக்கு ஆண்மை என்ற ஒரு விடயமே இல்லை என்பது உறுதியானது சரி...ஆனா கொஞ்சம் கூட சொரணை கூட இல்லை என்பது இப்போது தான் தெரிகிறது...



நீ சோத்துல உப்பு போட்டு தின்கிறாயா என்று கேட்டது தப்புதான்...உப்பு என்றால் எப்படி என்றே தெரியாதவனிடம் அதன் பயன் பற்றி எப்படி கேட்க முடியும் ?



சுத்தமான ஆம்பளையா இருந்தா வெளியே வாடா என்றேன்..என் கேள்வி ஒன்னுத்துக்கும் பதில் இல்லை...



இந்தா இது தான் என்னுடைய மொபைல் எண் : 98863 97051....பேசுடா முடிஞ்சா கேன......அதை விட்டுவிட்டு கேவலமாக போலிப்பெயரில் அங்கங்கே பின்னூட்டம் என்ற பெயரில் கழிந்துவைக்காதே சோமாறி...!!! (அது சரி...அது தான் அதிகபட்ச வீரமான செயல் என்றால் தொடந்து கழியவும்)



படிக்கும் மற்ற பதிவர்கள் இதெல்லாம் லூஸ்ல விடுங்க...பின்னூட்டம் எதுவும் நான் போடுவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு மனதில் ஏற்றிக்கொள்ளுங்க....











#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

சிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை

நன்பர்களே...

 

இன்னும் சில நாளைக்கு நான் பின்னூட்டம் எதையும் போடுவதில்லை...உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை - அது நான் போட்டது தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டே வெளியிடுங்கள்....

 

அன்புடன்

ரவி

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....