சித்தர்கள் பற்றிய வலைப்பூ அது. http://siththarkal.blogspot.com
அந்த வலைப்பூவில் வரும் உடான்ஸுகளை தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்...!! வீர ரசம் காந்த ரசம் என்று காதில் பூ சுற்றும் சமாச்சாரங்களாக இருக்கிறது.
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவ முறைகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அனுபவத்தால் கற்று தேர்ந்து, அதனை வைத்து பல வாழ்வை ஒளியேற்றியது உண்மைதான். அவர்களை நான் மதிக்கிறேன், வணங்குகிறேன்...

ஆனால் அந்த காலத்திய வாழ்க்கை முறைக்கும் சமூக நிலைக்கும் மட்டுமே அவை பொருத்தமானவையாக இருந்தன.
ஆனால் இப்போது சைக்யாட்ரிஸ்டும் ஆங்கில மருத்துவமும் தான் பொருத்தமான ஒன்று. காரணம் நமது வாழ்வியல் முறையும், சமூக அமைப்பும் மாறிவிட்டது. நாம் உண்ணும் உணவில் இருந்து, பேசும் பேச்சில் இருந்து, பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் மாறிவிட்டது.
ஆகவே பழைய மருத்துவம் ஒருவேளை ஒருசில நோய்களில் பயன்படலாம். அதே அனைத்துக்குமான சர்வலோக நிவாரணி அல்ல. மேலும் நவீன மருத்துவத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் பழைய முறைகளில் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
நான் பொங்குவதன் காரணம் அது அல்ல. அதில் மூட நம்பிக்கைகளின் உச்சமாக ரசவாதம் , இரும்பை தங்கமாக மாற்றுதல் ஆகியவற்றை பற்றி உடான்ஸ் விடப்படுகிறது..
தங்கம் உருவாக பல லட்சம் டிகிரி வெப்பம் தேவை. நட்சத்திரங்களின் நடுவே நியூக்ளியர் ப்யூஷன் ஏற்பட்டு பெருவெடிப்பு ஏற்படும்போது அங்கே உருவாகும் தனிமங்களில் தங்கமும் ப்ளாட்டினமும் சிதறுகின்றன என்று நான் மிகவும் மதிக்கும் இப்போதைய வாழும் அறிவியலாளர்களில் முதன்மையான காஸ்மாலஜிஸ்ட் ஸ்டிபன் ஹாக்கிங் சொல்கிறார்.
இங்கே சட்டியில் தங்கம் உருவாக்கலாம் என்கிறார்கள். இது போன்ற பாடல்களை உண்மையில் போகர்தான் எழுதினாரா ? இல்லை வேறு யாராவது எழுதினார்களா ? இந்த மருத்துவ முறையால் எயிட்சுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்து கொடுக்கமுடியவில்லையே ? என்று பல கேள்விகள் எழுகின்றன.
எதுவும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்க தோழி அல்லது தோழர். உங்களை வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிகிச்சை மருத்துவர் என்று நான் நம்பவில்லை. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத பொய்த்த தகவல்களை ஏன் பதிவு செய்து படிப்பவர்களை முட்டாளாக்குகிறீர்கள் ?
ரசவாதத்தில் காந்த ரசத்தில் இருந்து தங்கம் வரும் என்றால் நான் அமவுண்டு தருகிறேன். வால்பையனை போல ஆன்லைன் தங்கம் இல்லாவிட்டாலும் ஐந்து கிராம் தங்கமாவது கையில் கொடுத்திடவேண்டும்..!! இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் உங்களை சந்திக்க வரும்போது தக்காளி ரசமும் முட்டை ஆம்லெட்டும் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு போகிறேன்...!!!
பின் கேள்விகள் :
ஜெயா டிவியில் திருவண்ணாமலையில் சிந்தர் ராக்கெட் போல பறந்த ஒரு வீடியோ வேறு வந்தது. திருவண்ணாமலையில் நல்ல கூட்டம்...!!! அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் சொல்லவும்..
போகர் ஒரு சீனர் என்றும் நினைத்த மாத்திரத்தில் சீனாவுக்கு சென்று மேட்டர் செய்துவிட்டு வந்துவிடுவார், அதனால் தான் அவர் பெயர் போகர் என்றும் வரவணையான் சொன்னார். அது உண்மையா ? அவர் ஒரு சீனரா ? இப்போதெல்லாம் விக்கிபீடியாவிலும் உடான்ஸ் கலையை ஆரம்பித்துவிட்டார்கள் அய்யா...!!

..
..