பொதுவாக மோகன்தாஸ் எழுத்துக்களை பார்த்தால் ரொம்ப பழுத்த உலக அனுபவவாதியின் எழுத்துக்கள் போலிருக்கும்...இப்போ வவ்வால் எழுதுகிறாரே...அதுபோல இருக்கும்...ஆனால் அவரை நேரில் சந்தித்த வெகுசிலரில் நானும் ஒருவன் என்பது தவிர அதிகம் தொடர்புகொள்வதில்லை.
பி.கே.எஸ் போன்றவர்கள் அவரது எதுக்களின் மீது விமர்சனங்கள் வைக்கும்போது, ரொம்ப பெரிய ரைட்டர் போலிருக்கு என்று எனக்கு ஒவ்வாத குரூப்பில் வைத்து ( அதாவது பதிவைக்கண்டதும் தமிழ்மணத்தையே மூடிவிடுவது :))))...புறக்கணித்துக்கொண்டிருந்தேன்.
ஒருமுறை ஒரு ம.க.இ.க தோழர் கூட மோகன்தாஸ் நன்றாக எழுதுவதாக சொன்னார்...அப்பவே முடிவு செய்துவிட்டேன், இந்தமாதிரி ஆளுங்க பதிவை எட்டியே பார்க்கக்கூடாது என்று...
வெறுப்பு இல்லை, அந்த அளவுக்கு நமக்கு சரக்கு இல்லை என்பதே உண்மையான காரணம்...
ஆனால் - அதனை அந்த சந்திப்பு மாற்றியது.
முதலில் பார்த்ததும், மோகன்தாஸ் தன்னோட மகனை அனுப்பி விளையாட்டு காட்டுகிறாரோ என்று தான் நினைத்தேன். தலைமேலடித்து சத்தியம் வைக்காத குறையாக சொன்னபிறகு தான் நம்பினேன்...
இருபத்து மூன்றுகளில் நிற்கும் மோகன்தாஸா இவ்வளவு நீள அகலமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் என்று நம்பவே சற்று கடினமாக இருந்தது...
அப்புறம் ஆசிப் அண்ணாச்சியுடனும் மோகனாவுடமும் அடித்த நீண்ட லால்பாக் அரட்டை மற்றும் வாலிபால் விளையாட்டு வாட்சிங்...ஊப்ஸ்...மறக்கவே முடியாத காவியம் :))
இவரிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், தன்னுடைய மனதுக்கு பிடித்ததை / மனதுக்கு சரியென்று பட்டதை தயங்காமல் செய்யும் குணம்...
இந்த வார இறுதியில் வரும் நீண்ட பயணத்துக்கான பணிகளில் ஒன்றாக மடிக்கணினியில் நல்ல சிறுகதை - தொடர்கதைகளை இணையத்தில் இருந்து உறிஞ்சும் வேளையில் மோகன் பி.டி.எப் கோப்பாக கொடுத்து இருந்த தொடர்கதைகளின் பட்டியல் தென்பட்டவேளையில் அப்படியே உருவிக்கொண்டேன்.
விமானத்தை தொலைத்தாலோ அல்லது நீண்ட நேரம் விமான நிலையங்களில் அமரவேண்டியிருந்தாலோ படிக்கலாம் என்றுதான் எடுத்தேன், ஆனால் டெஸ்க்ட்டாப்பிலேயே அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்ததால் இன்றைக்கு திறந்துவிட்டேன்.
இதுக்கு பிறகு தான் விமர்சனமே வருதுங்னா, ப்ளீஸ் வெயிட்...
கதைகள் ஏனோ வளவளா !!!! ஒன்றுக்கொண்று தொடர்பில்லாத பல வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பத்திகளை உருவாக்குகின்றன...
ஒவ்வொரு காரெக்டர்களும் ஏதோ தாடி வைத்த சாமியார் பேசுவது போல விஷயங்களை அள்ளித்தெளித்திடுகின்றன....
இண்டராக்டிவ் என்பதை விட ப்ரீச்சிங் அதிகமாகவே காணக்கிடைக்கிறது....
கொஞ்ச நேரம் படித்தபிறகு ஏனோ ஒரு திடீர் சலிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது....
இவ்ளோ தான் என்னோட விமர்சனம்....எனக்கு மட்டும்தான் இப்படி தோனுதா என்பது தெரியவில்லை, இருந்தாலும் எழுதிவிட்டேன்...
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Wednesday, March 26, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...