
ஹொக்கேனக்கல் அருவியில் நான் குளித்தது ஒரே முறை...குற்றாலம் கூட ஒரிரு முறை சென்றிருக்கிறேன்...
அருவி என்றால் ரொம்ப உயரத்திலிருந்து விழுவது தான் என்பது என்னுடைய மூளையில் பதிவான ஒன்று...
ஹொக்கேனக்கல் கொஞ்சம் சிறப்பானது...
சட்டென தோளுக்கு சற்று மேலே தட தடவென விழும் நீரில் உடலின் உள்ள அத்துனை வலிகளும் பறந்துபோகக்கூடும்...
மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு போயிருதீர்கள் என்றால் குளியல் முடிந்தவுடன் அற்புதமாக ஒரு வெட்டு வெட்டலாம்...
விஷயத்துக்கு வருகிறேன்...

கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்துவிட்டு அளித்த பேட்டி மிக முக்கியமானது...
முதலில் குறைவான அளவு நீரே எடுக்கப்படும் என்று சொல்லியிருந்த தமிழக அரசு, இப்போது 2.5 டி.எம்.சி அளவு நீரை எடுக்கப்போவதாக சொல்கிறது...
இதை எதிர்த்து இரண்டு விஷயங்களை செய்யப்போவதாக அவர் கூறுகிறார்..
1. உச்சநீதிமன்றத்தில் ஹொக்கேனக்கல் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வழக்கு..
2. ஜப்பானுக்கு கருநாடக அரசு சார்பான குழு ஒன்றினை அனுப்பி, அங்கே இந்த திட்டத்துக்கு நிதியளிக்கும் துறையினரை சந்தித்து, தங்கள் எதிர்ப்பை சொல்லி, தமிழக அரசுக்கு வழங்கவிருக்கும் நிதியை தடுக்கும் திட்டம்...
கருநாடக அரசு இந்த விடயத்தில் உச்சநீதிமன்றத்தினை அணுகுவது, கீழ்க்கண்ட காரணங்களுக்காக இருக்கலாம்...
முடிந்தவரை இந்த திட்டத்தினை கிடப்பில் போடவைப்பது...அதன் மூலம் ஜப்பான் நிதித்துறையையும் நிதியை கொடுக்காமல் தடுப்பது...
டெல்லி சென்று மத்திய நீர்பாசனத்துறை அதிகாரிகளையும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாளர்களாக ஆக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை கருநாடக அரசு ஏற்கனவே ஆரம்பித்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டதாக கருதுகிறேன்...
இப்போது தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பதை காணும் முன், சில விடயங்களை சொல்லவேண்டும்...
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையை மரமாக்கி, அதில் வரும் பழத்தையும் தின்று கொட்டை போடும் கலைஞர் அவர்களின் அரசியல் அனுபவத்துக்கு முன் ஹொக்கேனக்கல் திட்டம் ஒரு ஜுஜுபி என்று தான் நான் நினைக்கிறேன்...
கலைஞர் அவர்கள் சமீபகாலமாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் இந்த பிரச்சினையை மறந்துவிட்டாரா அல்லது வேறு மறைமுக அழுத்தங்களின் காரணமாக இந்த பிரச்சினையை கிடப்பில் போட்டுவிட்டாரா தெரியவில்லை...
இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை வரை கலைஞர் சிறப்பாகவே கையாளுகிறார் என்று எண்ணுகிறேன்...
மின்வெட்டு பிரச்சினையில் தமிழக அரசு தோல்வி அடைந்தது போல பிரச்சாரம் செய்யப்பட்டாலும், உண்மையில் முந்தைய ஜெயலலிதா அரசில் மின் துறை பொறியாளர்கள் நன்கு உண்டு உறங்கியது தான் இந்த மின்வெட்டுக்கு காரணம்...
இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும், ஆந்திராவிலும், ஏன் கருநாடகத்திலும் இருக்கிறது...
மெட்ரோபாலிட்டன் சிட்டி, இந்தியாவின் சிலிக்கான் முள் வேலி என்றெல்லாம் அழைக்கப்படும் பெங்களூரின் இதயப்பகுதியான எம்.ஜி ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய பகுதிகளில் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின் வெட்டு இருப்பது, இந்த பிரச்சினை ஒரு பொதுப்பிரச்சினை என்பதை தெளிவாக சொல்கிறது...
மாறிவரும் சமூகச்சூழலில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பூம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதனங்கள் அதிக அளவில் பொதுமக்களால் வாங்கப்பட்டது, அவற்றின் விலை குறைப்பு, பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, இண்ப்ரா ஸ்ட்ரக்சர் க்ரோத் காரணமாக புதிய மின் இணைப்புகள் என்று பல காரணிகளை அலசி ஆராய்ந்து, மின் தேவைகளை கணிக்காமல் போனது அரசியல்வாதிகள் அல்ல, பொறியியல் படித்து அரசு ஊழியர்களாக வேலை பார்த்து சம்பளம், கிம்பளம் வாங்கும் அதிகாரிகளே...
லெட்ஸ் கோ பேக் !!!
கலைஞர் இந்த பிரச்சினையை சற்று ஆற விட வேண்டும் என்று தான், கருநாடகத்தில் தேர்தல் முடிந்தபிறகு இந்த பிரச்சினையை பேசி தீர்ப்போம் என்றார்...
ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை கையில் எடுக்கவில்லை...அல்லது வசதியாக மறந்துவிட்டார்...அல்லது திரு.நாகநாதனின் ஹொக்கேனக்கல் சம்பந்தமான டைரிக்குறிப்புகள் தொலைந்துபோய்விட்டன...
மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரருக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதை சோ.ராமசாமியே ஒத்துக்கொள்வார்...அவருக்கென்ன சொல்லியா தரவேண்டும் ?

மற்றவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பது போல ஹொக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாத மைனாரிட்டி தி.மு.க அரசு உடனே பதவி விலகவேண்டும் என்று நான் முழங்கவில்லை...
ஸ்டாலின் போட்ட மேம்பாலங்களில் பயணம் செய்துகொண்டே நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவை பற்றி கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது அவா...
விஜயகாந்த்...பெரிய இரு கட்சிகளில் பிசினஸ் செய்ய ஒரு கிளைச்செயலாளர் பதவி கூட வாங்கமுடியாத இளைஞர்களின் பெருங்கூட்டதை பின்னால் வைத்துள்ளார், சிவந்த கண்களுடன் ஏதாவது ஒரு பேட்டி கொடுத்து கலைஞர் அவர்களை சீண்டுகிறார்...இவரை கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் மற்ற விடயங்களை கையில் எடுத்து செயல்படவேண்டும்....
கலைஞர் அவர்கள் உடனடியாக செய்யவேண்டியது இதுதான்...
1. உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு சார்பில் அணுகி, இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்து, "நோ அப்ஜெக்சன், கேரி ஆன்" என்ற சர்ட்டிபிக்கேட்டை வாங்கவேண்டும்...
2. ஜப்பான் அரசு திட்டக்குழுவை தொடர்புகொண்டு, இந்த பிரச்சினையின் உண்மை நிலையை விளக்கவேண்டும்...
3. மத்திய அரசு நீர்ப்பாசன துறை அதிகாரிகளை உடனே தொடர்புகொண்டு அவர்களுக்கு பிரச்சினையை முழுமையாக விளக்கி, அவர்களை "என்ன விலை கொடுத்தாவது" தமிழக அரசின் பால் திருப்பவேண்டும்...
அவ்வளவு தான்...
இதை படிக்கும் நீங்கள் தமிழ்மணத்துக்காரர் எனில் பின்னூட்டம் போடவும் அல்லது ஒரு மகுட ஓட்டை குத்தவும்...
தமிழ்ஷ் என்றால் ஒரு ஓட்டை குத்தவும்...
தமிழ்வெளிக்காரர் என்றால் பின்னூட்டம் போடவும்...

கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))
:))
நன்றி !!!!