
ஒரு செமி.சீரியஸ் பதிவு ஒன்றுக்கு எழுதப்பட்ட படு காமெடி பதிவு, ஆணாதிக்க வெறியும், வன்மமும் அழுக்கும் ஆக நிறைந்த ஒரு கீழ்த்தரமான ஆபாச புனைவு பதிவும், அதில் குழந்தையை கொல்வேன் என்பது போன்ற மிரட்டல் உருட்டல்களாகவும், அந்த ஆபாசத்தை சமப்படுத்தும், நியாயப்படுத்தும் பின்னூட்டங்களாகவும், இதனை வைத்து காமெடி செய்து கல்லா கட்டும் பதிவுகளாகவும்...
எனக்கு கோபம் மட்டுமே வருகிறது...!
அவள் என் மீது கல் எறிந்தாள். நான் அவள் நெஞ்சைப்பிளந்து இதயத்தை எடுத்தேன் என்பது போல, என் மீது எதிர்பதிவும் பின்னூட்டமும் போட்டமைக்காய், நாள் அவளை அவுசாரி என்றேன். எவனோடோ படுப்பவள் என்றேன். குழந்தையையும் அதில் கொண்டுவந்தேன். என்று சொன்னால். உங்களால் ஒருவேளை, ஓ கொஞ்சம் ஓவராய்த்தான் டென்ஷன் ஆகி புனைந்துட்டார் என்று நினைக்கமுடிகிறதென்றால், நீங்கள் என்னைப்போல அவளுக்கு சகோதரன் இல்லை என்று நினைக்கிறேன்...
நாம் என்ன வகையான சமூகத்தில் வாழ்கிறோம் ? பகுத்தறிவும், சக மனிதனை மதிக்கும் பாங்கும் வளரவேண்டிய தருணம். அதை வளர்க்கவேண்டிய ஆட்களே அதனை குழி தோண்டி சமாதி செய்தால் எங்கே சென்று முறையிடுவது ?
பிள்ளை கண்ணாடி டம்ளரை உடைத்தமைக்கு கத்தியால் குத்தியது போல இருக்கிறது இந்த செய்கை. பலர் பின்னூட்டங்களில் சொம்பை தூக்கிகொண்டு நிற்பதும் இதை வைத்து கும்மி அடிப்பதும் கொடூரத்தின் உச்சம்..
அந்த 'புனைவில்' தெறிக்கும் வன்மத்தை வைத்து சொல்கிறேன். இதை போன்றதொரு வார்த்தை பிரயோகத்தையும், ஏதுமறியா குழந்தையை கூட ஆபாச வார்த்தைகளை சொல்லி எழுதுவதற்கும், ஒன்று மனப்பிறழ்வு இருக்கவேண்டும், அல்லது அந்த அளவு காயப்பட்டிருக்கவேண்டும்...
நன்பருக்கு உதவுகிறேன் என்று சகா அங்கே பின்னூட்டத்தில் பேசும் வார்த்தைகள் உச்சகட்ட ஆபாசம். இந்த ஆபாசங்களையும், பெண் இனத்தையே இழிவு செய்யும் வார்த்தைகளையும் 'தோழி' படித்துப்பார்ப்பாரா ? உருகி உருகி காதல் செய்யும் கார்க்கியின் மனதில் இருந்து வழியும் அந்த அமிலம். நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு குழந்தையை கொல்கிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் மனநோயாளி. அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்..
முதல் பதிவை எழுதிய ஆதி, எதிர்பதிவு விஜி, அதில் பின்னூட்டிய முல்லை, அப்புறம் நர்சிம், அதன் பிறகு கார்க்கி என்று எல்லாரும் ஒன்று என்மீது மதிப்பாய் இருப்பவர்கள். அல்லது உறவினர். அல்லது நன்பர். என் கண்களும் கைகளும் ஒன்றோடொன்று காயப்படுத்திக்கொள்வதை போலத்தான் கடந்த இரண்டு நாட்களுக்குமான பதிவுகள் வந்துள்ளன..என்ன ஒரு கை இன்னொரு கையை லேசாக தட்ட, அது கண்களை பிய்த்து எறிந்துவிட்டது. என்னால் தான் சரியாக பார்க்க இயலவில்லை.
நான் பெரிதும் நட்பை வைத்துள்ளவர்கள் இப்படி கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நர்சிம் அந்த ஆபாச பதிவை நீக்கினாலும், அது அனைவரின் ரீடரிலும் உள்ளது. அவர் தனது தவறை உணர்ந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விட்டால் பாதி கிணறு. அதனை பாதிக்கப்பட்ட எனது சகோதரி ஏற்றுக்கொண்டால் மீதி.