மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது...
மொத்த பரிசுத்தொகையை கணக்கிட கால்குலேட்டர் ஓப்பன் செய்தேன்...தலை சுற்றுகிறது...
என்ன செய்வதென்றே தெரியவில்லை...
பார்த்துக்கொண்டிருக்கும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாமா ?
பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டல் போல ஒரு ஓட்டலை டெல்லியில் கட்டலாமா ?
ரஜினிகாந்தை வைத்து ரோபோவுக்கடுத்தது "மார்ஸ்" என்று டைட்டில் வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்ஷனில், இளையராஜா இசையில் படம் எடுக்கலாமா ? தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?
ஒரு லட்ச ரூபாய்க்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி பீடி பிடிப்பவர்களுக்கெல்லாம் இலவசமாக கொடுக்கலாமா ?
ஜாலிமார்க் என்ற பெயரில் காளிமார்க் சோடாவை திரும்ப கொண்டுவரலாமா ?
ரிலையன்ஸ் அதிபர் கட்டுவது போல மேல் மாடியில் புட்பால் கிரவுண்ட் வைத்து வீடு கட்டலாமா ?
முன்றாவது படிக்கும் அரசு பள்ளிக்குழந்தைகள் ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வாங்கிதரலாமா ?
ரெண்டு ஐ.ஏ.எஸ், மூன்று நீதிபதிகளை வாங்கிடலாமா ?
டுபாக்கோ - ட்ரினிடாட் அரூகே ஒரு குட்டித்தீவை வாங்கி தமிழ் ஈழம் என்று பெயர் வைத்து பாஸ்போர்ட் எல்லாம் அடித்து பிரபாகரனை அரசராக்கலாமா ?
பிரெயின் லாராவை சம்பளம் கொடுத்து கூட்டிவந்து இண்டோர் கேம்ஸில் ஸ்பின் பந்து போட்டு அவரை போல்டாக்கலாமா ?
கபடிக்கு க.பி.எல் என்று இந்தியா முழுக்க டோர்னமெண்ட் நடத்தலாமா ? அதுக்கு லலித் மோடியை விட்டுவிட்டு நரேந்திர மோடியை தலைவராக்கலாமா ?
துக்ளக் ஆபீஸை விலை கொடுத்து வாங்கி - பத்திரிக்கையை நிறுத்துவிட்டு அதில் மாட்டுத்தொழுவம் நடத்தி சந்திரபாபு நாயூடுவின் ஹெரிடேஜ் மாதிரி சொறிடேஜ் என்று பால் வியாபாரம் செய்யலாமா ?
பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மடிக்கணினி பரிசா தரலாமா?
அய்யோ ஒன்னுமே புரியலியே, எல்லோரும் பின்னூட்டம் போட்டாவது ஹெல்ப் பண்ணுங்களேன் சாமிகளே ?