
இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.
மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.
எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.
எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.
எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்சாளியால எதாவது உபயோகம் இருக்கும்டி, சும்மா இரு அப்படீங்குறாராம். பெருச்சாளிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீங்களா ? நல்லா பெட்ல வாலை நீட்டி படுத்துக்கிட்டு, மோட்டு(?)வளையை பாக்குது.
சரி நான் இனி மேட்டருக்கு வரேன். சமீபமா அரசு துறையில் இருந்து கிடைத்த சில தகவல்கள் கொஞ்சம் ஷாக்கிங் ரகம்.
தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறித்தவ, சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்து கூட்டத்தின் மொத்த அசையா சொத்து (நிலம்) ஒரு லட்சம் ஏக்கர். இவை மூன்று வகைகளில் அவர்களால் அனுபவிக்கப்படுகிறது.
- வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தம் வகையில்.
- பாரினில் இருந்து வந்த நிதி ஆதாரங்கள், மற்றும் இங்கே உண்டியல் குலுக்கியது, பணக்காரர்களிடம் தானப்பத்திரமாக பெற்றது எக்ஸட்ரா
- வேறு சில சொல்லமுடியாத ரீசன் பேரில் மிஷிநரிக்கு வந்த அசையா சொத்துக்கள் வகை.
முதலில் சொன்ன பெருச்சாளி கதை இப்போ புரிந்ததா ? நமது நாட்டு நிலங்களை, எவனோ ஒருவன் எவன் எவனுக்கோ அனுபவ பாத்யதையாக எழுதி வைத்துவிட்டு போக எப்படி அய்யா முடிந்திருக்கிறது ?
அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சிறுபான்மை ஓட்டுக்கு குறிவைக்கும் ஆட்சியாளர்களும் இதனை கண்டும் காணாமல் இருப்பது, அவ்வப்போது பெறும் தேர்தல் நிதிக்காகவா ?
இவர்களின் ஹை க்ளாஸ் லைப் ஸ்டை பற்றி சொல்லவேண்டும். 2000 ஆம் ஆண்டு ஒருமுறை புதுவையின் பேமஸ் கண்ணியாஸ்திரி ஒருவரின் ட்ரைவர் சொன்னான், க்வாலிஸ் வண்டி பூட்ட 12 லட்சம் ஆனது என்று. ஏம்பா எத்தனை அட்டு அட்டாச்மெண்ட் போட்டாலும் 8 லட்சத்தை தாண்டாதே அப்படி என்னப்பா வண்டியில் வேலை செய்தீர்கள் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்பர் 4 லட்சமாம்.
பார்த்தீர்களா கண்ணிகாஸ்திரிகளின் ஏழை வாழ்க்கை லட்சனத்தை ? கேரள கன்னிகாஸ்திரி புத்தகம் எழுதும் முன்பே பல மேட்டர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த ஆண்மைக்குறைவு டாக்டர், கம்பூட்டர் வேண்டும் என்று அப்போது நான் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலை செய்த கம்பேனியை அழைத்தார். நான் அந்த காலை அட்டண்ட் செய்து, அவருக்கு கம்பூட்டர் பூட்டி கொடுத்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், அவரிடம் சிகிச்சைக்காக பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் தான் கும்பல் கும்பலாக வருகிறார்களாம் !! இது எப்படி இருக்கு ?
பதிவில் மையமாக பேசும் விஷயத்தை விட்டு விலகிப்போகிறோம் என்று நினைக்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால், இது போன்ற மிஷநரிகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உட்பட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினரை மிரட்டி கொள்ளையடித்த, எழுதி வாங்கிய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மார்க்கெட் ரேட் என்னவோ அதை கட்டும்படி சொல்லவேண்டும். இல்லை என்றால் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கவேண்டும்.
பஞ்சமி நிலம் என்றால் என்ன தெரியுமா ? அதாவது, ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிலங்கள் என்று பொருள். அந்த பஞ்சமி நிலங்களை மற்றைய சாதியாருக்கு விற்பது சட்டப்படி கூடாது. அப்படியான நிலங்களை கூட சர்ச், பங்கு கோவில் ஆகியவற்றின் பெயரில் பல இடங்களில் ஆட்டையை போட்டுவிட்டதாக அறிகிறேன். அதையும் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.
என்னப்பா, எவ்வித சாதி / மத / அரசியல் சார்பில்லாமல் சிவனே (?) என்று இருக்கும் கிறித்தவ பிரம்பச்சரிய பாதிரியார்களை அவர்களின் நிலங்களை போய் டார்கெட் செய்கிறாயே என்கிறீர்களா ? அடப்போங்க சார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் சர்ச்சுகளில் / பங்கு கோவில்களில் அங்கே திரட்சியாக திரண்டிருக்கும் ஜீசஸ் பாலோயிங் மந்தைகளிடம் (?) தி.மு.கவுக்கு போடு, அ.தி.மு.கவுக்கு போடு என்று ப்ரீச்சப்படுகிறது. வன்னியர் மாவட்டத்து சர்ச்சு ஓட்டுகள் அன்னியருக்கில்லை. பாட்டாளிகளுக்குத்தான்.
- பாரின் மது, க்யூப (கூப ?) சுருட்டுகள், செட்டப்புகள், ஜில்பான்ஸுகள், என்று ஜலபுல ஜங்காக பாதிரியார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் காட்டும் முழு வெள்ளை உடை அவர்கள் எப்போதாவது தான் அணிவது. ஜீன்ஸ் ட்ஷ்ர்ட்டும் அணிகிறார்கள்.
- வன்னியர், தேவர், முதலியார், நாடார் என சாதி பாகுபாடு பாதிரியார்களிடம், பங்கு கோவில்களில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் வரை தலை விரித்தாடுகிறது.
மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்.
ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை, தேர்தலுக்கு பின்னாலாவது (அரசாணை எண் உ.ஆ 392 படி இதை தேர்தலுக்கு அப்பாலிக்கா தான் செய்யமுடியும் என்று அறிகிறேன்) செய்வதன் மூலம், தமிழகம் புதுவையில் இருக்கும் லட்சக்கணக்கான பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு டாலர் 35 அளவில் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் லைனக்ஸ் ஐ (ஐ பார் இண்டியா) பேடை கொடுக்கமுடியும். வாக்களிப்பதன் மூலமும் இந்த பதிவை பேஸ் புக், டுட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் பகிர்வதன் மூலமும் துணை முதல் மு.க ஸ்டாலினுக்கு அனுப்புங்கள் ஓக்கே ?