பொதுவாக என்னுடைய பார்வையில் சோதிடம், ஜாதகம் ஆகியவை மூட நம்பிக்கைகளில் ஒன்றாக தெரிவதால், இதில் எந்தவித இண்ட்ரஸ்டும் காட்டுவதில்லை...சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜோதிடம் பார்ப்பவர்களையும் ( லாங் நாமம் மிஸ்டர். கோழியூர் கோயிந்தன், காழியூர் நாராயணன், சிவல்புரி சிங்காரம்) அதை நம்புபவர்களையும் நக்கல் விட்டு வந்திருக்கிறேன்...
பால்வெளி மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால், கண்ணுக்கு தெரிந்த வெறும் ஒன்பது கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்தி கஞ்சி குடிக்கும் அவர்கள் மீது எனக்கு கோபத்தினை விட பரிதாபமே மேலோங்கும்...
கையில் ஒரு கிளிக்கூண்டை வைத்துக்கொண்டு, அய்ந்து ரூபாய்க்காக மொட்டை வெயிலில் நாயாக அலையும் கிளி ஜோசியக்காரனும், அவன் கொடுக்கும் அரை நெல்லுக்காக அவன் பழக்கியபடி சீட்டை எடுத்துப்போடும் சிறகில்லாத கிளியும் என்னுடைய பரிதாப லிஸ்ட் ஜீவன்களே...
அதேபோல் வெற்றிலைப்பாக்குக்கும், ரேஷன் அரிசிக்கும் காசு தேற்ற பீச்சில் உட்கார்ந்திருக்கும் குறிசொல்லும் லேடீஸ், அதிகாலையில் சேவல் விழிக்குமுன் பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்கும் குடுகுடுப்பைக்காரனும் பெரிய மல்ட்டிநேஷனல் பிஸினஸ் ஒன்றும் நடத்தவில்லைதான்...
சமீபத்தில் கையில் கிடைத்த சோதிட புத்தகங்கள் சிலவற்றை பார்த்தபோது, அவை உண்மையா பொய்யா என்பதை விட, அந்த பொய்களில் சில உண்மைகள் இருப்பதை சற்றே உணர்ந்தேன்...
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் (நம்பாதவர்கள் படிக்கவே போறதில்லை) தன்னம்பிக்கையையும், அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது...
உதாரணத்துக்கு சில ராசிக்காரர்களின் பலன்கள் பாருங்கள்:
மேஷம் : தன்னம்பிக்கையும் சுயகவுரவமும் உடைய நீங்கள் உறவினர்கள் வரவால் நிம்மதி அடைவீர்கள்..பணக்கஷ்டம் தீர வழி பிறக்கும்...வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வழி உருவாகும்...
கடகம் : பொறுமைசாலியான நீங்கள் தைரியமாக உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்...அரசு வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்...வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்..குழந்தைப்பேறு ஏற்படும்...
இவ்வாறு - நம்பிக்கையை விதைக்கும்படி போட்டிருக்கிறார்கள்...
இந்த சோதிடத்தை நம்பி சிலபேர் ஏமாளிகளானாலும், மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தில் சில குடும்பங்கள் சாப்பிடுகின்றன என்றே வைத்துக்கொள்ளலாம்.....சோதிட தொழில் செய்து சொற்ப வருமானம் பெறும் சோதிடர்கள் தான் அதிகம் தமிழகத்தில்...சோதிட தொழில் நடத்தி முதலமைச்சர் பதவியை யாரும் பிடித்துவிடப்போவதில்லை...அதனால் பாவம் பொழைச்சு போறாங்க என்று தான் தோன்றுகிறது எனக்கு...!!! உங்களுக்கு ??
Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts
Monday, January 14, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...