
என்னுடைய நன்பன் அல்ப்போன்ஸு பார்வைக்கு டொங்கன் மாதிரி இருந்தாலும் அறிவாளி.
பள்ளிக்காலத்தில் நான் படித்த பள்ளியில் கணிப்பொறியின் உபயோகம் பற்றி ஒரு பாடம் இருந்தது.
அந்த பாடத்துக்கு செய்முறை வகுப்பும் உண்டு.
மைய கணினி (Server) ஒன்று உண்டு. ஓவ்வொரு மாணவருக்கும் அவரின் பெயரில் ஒரு கோப்புகள் சேமிக்கும் இடம் (File Folder) , அதனுள் ஒவ்வொரு வாரத்துக்கான செய்முறைகளை கோப்புகளாக சேமிக்கவேண்டும்.
கணிப்பொறி ஆசிறியரோடு அல்ப்போன்ஸுக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம்..
செய்முறை வகுப்பு நேரத்தில் ப்ரின்ஸ் (Prince Of Persia / DOS Game) என்ற விளையாட்டை விளையாடியதை பார்த்துவிட்டு அவனுடைய பின்புறத்தை பிரம்பை உகயோகப்படுத்தி பழுக்கவைத்துவிட்டது கூட காரணமாக இருக்கலாம்...
தமிழ் கம்ப்யூட்டர் என்ற கணினி தொடர்பான புத்தகம் ஒன்று அல்ப்போன்ஸு பத்து ரூபாய் கொடுத்து வாங்கியதில் இருந்து ஒரே ஏழரை.
அதில் வந்த ஒரு கட்டுரையில் கணிப்பொறியில் அழித்தல் வேலைகளை செய்யும் அதி புத்திசாலிகளான ஹேக்கர்களை பற்றி படித்துவிட்டு, தானும் ஒரு ஹேக்கராகனும் என்று சதா சர்வகாலமும் புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தான்...
கணிப்பொறி தேர்வு நெருங்கும் சமயம்...
ஒரு அதிர்ச்சியான செய்தியை முந்தின நாள் செய்முறை வகுப்புக்கு சென்ற D பிரிவு மாணவர்கள் சொன்னார்கள்...
சர்வரில் இருந்த எல்லா கோப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தது...
எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி...
யார் யாரையோ சந்தேகப்பட்டு மாணவர்கள் தங்களுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்...
தேர்வு தள்ளிப்போகுமா ? மீண்டும் எல்லாவற்றையும் உள்ளீடு செய்யவேண்டுமா என்று ஒரே பேச்சு..
எனக்கு அல்ப்போன்ஸு மீது துளியும் சந்தேகமில்லை...
இந்த மடப்பய மருமகன் அந்த அளவுக்கு இறங்கமாட்டான் என்பதல்ல, இவனுக்கு அந்த அளவுக்கு மண்டையில் மசாலா கிடையாது...
ஆனால் அதை செய்தது அல்ப்போன்ஸு தான் என்று ஆசிறியர் கண்டறிந்து, அவனை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் என்ற தகவல் பேஸ்கட்பால் கோர்ட்டில் இருந்த வேளையில் வந்துசேர்ந்தது...
நூற்றைம்பது பேர் உபயோகப்படுத்தும் கணிணி செய்முறை பட்டறையில் எப்படி அல்ப்போன்ஸை மட்டும் சரியாக கண்டுபிடித்தார் என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது...
அப்புறம் உண்மை தெரிந்து ரூம் போட்டு சிரித்தேன்...
உண்மை என்னவா ?
முண்ட கலப்பை...எல்லோர் கோப்புகளையும் அழித்துவிட்டு அல்போன்ஸு என்ற பெயருள்ள தன்னுடைய கோப்பை மட்டும் அழிக்காமல் விட்டிருந்தது..
*********
*******
*****
****
***
**
*
ஓட்டு போடுங்க ~~~ ஓட்டு போடுங்க ~~~ ( கவிதா மன்னிச்சுருங்க )
..