Showing posts with label பொருளாதாரம்.. Show all posts
Showing posts with label பொருளாதாரம்.. Show all posts

Sunday, October 12, 2008

என்னை அடி அடியென்று அடித்தவன்...



ஞாயிறு மதியம் வழக்கம்போல லேட்டாக ரெண்டு மணி வாக்கில் கொஞ்சம் ஹெவி சாப்பாடு...ரெண்டு மணி நேர தூக்கம்...!!!

அப்படியே எழுந்து ம்மா ஹேர் கட் பண்ணனும் நூறு ரூபாய் கொடு என்றேன்...

ஓக்கே ப்ரூ காபித்தூள் அப்படியே ஒரு சின்ன பாக்கெட் வாங்கிவந்திருங்க என்றாள் தங்கமணி...

<<< கிரி வடிவேல் பாணியில் படிக்கவும் >>>

நானும் மெதுவாத்தாம்மா போய் உக்காந்தேன்...மொதல்ல ஒருத்தன் தலையில கைய வெச்சு கட்டிங்கா ஷேவிங்கா மஸாஜிங்கும் பண்ணவா அப்படீன்னான்...

நானும் சரி மொத்தமா மூனையும் பண்ணுடா...தலை காலியாத்தானிருக்குன்னேன்...

கட்டிங் ஷேவிங்க முடிச்சுட்டு நவரத்தின தைலமா தேங்கா எண்ணையான்னான்...

நவரத்தின தைலமே போடுப்பா அப்படீன்னேன்...

ஹூம்...<<<வடிவேல் பாணியில் ஒரு பெருமூச்சு>>>

மொதல்ல லைட்டாத்தாம்மா ஆரம்பிச்சான்...லெப்ட்ல ஒருத்தன் ரைட்ல ஒருத்தன் நின்னுக்கிட்டு...

அடி அடின்னு அடிச்சானுங்கம்ம்மா...

நானும் எவ்ளோ நேரந்தான் தூங்குறாமாதிரியே நடிக்கறது...

******************

தாய்லாந்து போன்ற நாடுகளில் மசாஜுக்காகவே உலகமெங்கிலிருந்தும் டூரிஸ்ட் வருகிறார்கள்...

வருபவர்கள் பல பேருக்கு "அது" அஜெண்டா என்றாலும் நல்ல மசாஜை எஞ்சாய் பண்ணாமல் போகமாட்டார்கள்...

பல ரக மசாஜ்கள் உண்டு...சாண்ட்விச் மசாஜ் என்று ஒரு ரகத்தில் நாற்பது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு, இரண்டு பெண்கள் நடுவில் உம்மை வைத்து...!!!!

ஹூம்...

திண்ணையில் இரண்டு வருடங்களுக்கு முன் யாரோ குமரகமோ அல்லது கேரளாவோ சென்று அற்புதமான மசாஜ் அனுபவத்தை எழுதியிருந்தார்கள்...அவரது ரீடிப் மெயில் முகவரிக்கு நானும் ஒரு மடல் அனுப்பினேன், பதில் இல்லை...

இந்தியச்சூழலில் இப்போதெல்லாம் நாளிதழ்களில் மசாஜ், தாய் மசாஜ், கேரளா மசாஜ் என்றெல்லாம் வரும் விளம்பரங்களை பார்த்து தொலைபேசியில் அழைத்தீர்கள் என்றால் ஒரு நைட்டுக்கு மூன்றாயிரம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்...

*******************************

பெங்களூரில் சலூன் கடைகளில் தலையில் எண்ணை வைத்து செய்யும் மசாஜுக்கு இருபது ரூபாயோ முப்பது ரூபாயோ வாங்குகிறார்கள்...

ச்ச்சும்மா படபடவென அடிக்கும் அடியிலும்...ஷோல்டரை பிடித்து நசுக்கி, முடியை பிடித்து உலுக்கி...அற்புதம்...

அப்புறம் ஏதோ மோட்டர் வைத்த மெஷின்...அதில் கையை நுழைத்துக்கொள்கிறார், மோட்டர் ஓடுகிறது, அதன் அதிர்வு அவரது கையில் பாய்கிறது, அதை அப்படியே தலைக்கு, கழுத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்...

கூல் !!!

*******************************

கட்டிங், ஷேவிங், மசாஜ் எல்லாம் சேர்த்து 85 ரூ ஆனது...ப்ரூ காப்பித்தூள் வாங்க மறந்து போய் கொட்டு வாங்கியதோடு குளிக்கச்சென்றால்...

ஷாம்பூ நுரையே வரவில்லை...

ஏம்மா, ஏன் இந்த ஷாம்பூ நுரையே வரமாட்டேங்குது ?

குரங்கு...அந்த கூம்பு வடிவத்தில இருக்கிறதை போட்டியா ?

ஆமாம்...

அது கண்டீஷனர்...அறுவத்தஞ்சு ரூபா...அதை வேஸ்ட் பண்ணிட்டயா ? டவ் ஷாம்பு இருக்கும் பார் பாட்டில்ல...அதை போடு...

வாழ்க பன்னாட்டு கண்டீஷர் விற்கும் முதலாளிகள்..வாழ்க 1991 பொருளாதார புரச்சி மேதை மன்மோகன் சிங்..வாழ்க பூர்ஷ்வா உணவு உண்ணும் ப.சிதம்பரம்..

வீழ்க புலி மார்க் சீயக்காய்த்தூள்...!!! வீழ்க உள்நாட்டு முதலாளிகள்...வீழ்க காளிமார்க் சோடா !!!

நன்றி !!!!!!!!!!!!!!!!!


:((((((

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....