சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்டார் இந்திரா அம்மையார் என்பதால் தலையில் முண்டாசு கட்டிய சீக்கியர்களை அனைவரையும் வெறுத்துவிட்டோமா என்ன ? அதே சீக்கியரை பிரதமர் ஆக்கி அழகு பார்க்கவில்லையா காங்கிரஸ் கட்சியினர் ?
தமிழர்கள் அனைவரையும் வெறுக்கும் இதுபோன்ற இலங்கை தமிழ் / ஈழ எதிர்ப்பாளர்களின் டவுஸர் பற்றி எனக்கு கொஞ்சம் விளங்காமலேயே இருந்துகொண்டிருக்கிறது..

வியட்நாமில் வீசப்பட்ட நேபாம் போன்ற குண்டுகளை / ரசாயன மற்றும் பெட்ரோல் மூலப்பொருட்களை கொண்ட குண்டுகளை (காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி மக்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் குண்டுகள் இவை) இலங்கை ராணுவம் வீசி வருகிறது...இந்த குழந்தைதான் உங்களுக்கு கரும்புலி, பச்சைப்புலியாக தெரிகிறதாடா டாபர்களா ?

இப்படி சிரித்துக்கொண்டிருந்த குழந்தைகள்

இப்படி சிதறுண்டதே !!! இந்த காட்சிகளை கண்டு கல் கூட கரையுமே ? இரக்கமில்லா நெஞ்சில் கூட ரத்தம் கசியுமே ?
இப்படியான சம்பவங்களுக்கு பிறகும் குப்பையை போல எழுதினால் நாம் அதில் உமது கொண்டையை கண்டுபிடிப்பது என்ன கடினமா என்ன ?
இரண்டே விடயங்கள்...!!!
1. நீர் மனநோயாளியாக இருக்கக்கூடும்...அல்லது
2. நீர் ஒரு "சோ" கோஷ்டியாக இருக்கக்கூடும்...
எப்படி உங்களால் மட்டும் இன்னும் அதே பார்ப்பணீயச்சிந்தனையோடு இருக்கமுடிகிறது ? பெங்களூர் என்று வேறு தெரிகிறது, டவுசர் பத்திரம்..அட்ரசை வெளியே சொல்லிவிடாதீரும்...நானும் பெங்களூரில் தான் இருக்கிறேன்....அவ்ளோதான் சொல்லமுடியும்...(கொஞ்ச நாளாகவே யார் காதையாவது கடிக்கவேண்டும் என்று வெறி....நீங்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள், மீதியை கடைசி லைனில் சொல்கிறேன்..)
**********************
நான் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் என்று எல்லோருக்கும் தெரியும், இன்னும் ரத்த படலம் அடுத்த பார்ட் வருமா என்று காத்திருக்கும் ஒரு சராசரி வாசகன்...தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தலைப்பில் நாங்கள் ஆரம்பித்த காமிக்ஸ் குழுப்பதிவில் உள்ள பதிவுகள் கொஞ்சம் தான், இருந்தாலும் அவ்வப்போது சென்று ஆவலோடு வாசிப்பேன்...என்றைக்கு படித்தாலும் புதிய கட்டுரை மாதிரியே இருக்கும்...
இதோ இன்னுமொரு காமிக்ஸ் ரசிகரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்...!!!
இவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற பெயரிலேயே ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து உள்ளார் (காப்பிரைட் சட்டத்தை மீறுவதில் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு நிகர் அவர்களேதான் :) இருந்தாலும், அட்லீஸ்ட் கொஞ்சம் ஸ்கேன் செய்யப்பட்ட காமிக்ஸ் பக்கங்கள் வலையேற்றப்படும் என்றால், செந்தழல் ரவி என்ற பெயரில் ஆரம்பித்தால் கூட கண்டுக்கப்போறதில்லை )

நிறைய பதிவுகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்...தமிழில் எழுதுமாறு அவருக்கு அன்பு கட்டளை இடுகிறேன்...!!!!
**********************
கொண்டை டாபருக்கு கடைசி லைன் : கவலை வேண்டாம், நான் காதை எல்லாம் கடிப்பதில்லை...ச்ச்சும்மா லுலூவாயிக்கு...!!!
***********************