Showing posts with label ஜல்லி. Show all posts
Showing posts with label ஜல்லி. Show all posts

Tuesday, January 12, 2010

திரும்பத்திரும்பத்திரும்ப - உரையாடல் கவிதை போட்டிக்கு

போ
நீ
வா
நீ
யோ
நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

ஊரான்
வீட்டு
நெய்
அதில்
என்
பக்கத்துவீட்டுக்காரி
கை
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

நடை
கடை
உடை
சடை
இடை
மடை
வடை
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

கும்தலக்கடி
கும்மா
உட்டாம்பாரு
யம்மா
போட்டாபாரு
சும்மா
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

எண்டர்
மெண்டல்
தண்டர்
குண்டர்
அண்டர்
சண்டர்
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

கல்வி
கல்கி
கலவி
காவி
பாவி
ஆவி
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ

திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பத்திரும்ப சொல்ற நீ
திரும்பித்திரும்பி சொல்ற நீ
திரும்பித்திரும்பி சொல்ற நீ

உரையாடல் கவிதைப்போட்டிக்கு எழுதிய கவிதை. வாக்களித்து வெற்றிபெற செய்வீர்கள் என்ற நம்பிக்கையில், படுத்துக்கொண்டே எழுதிய கவிதை ( ஒரு சிலருக்கு இது ஏன் என்று தெரிந்திருக்கலாம்)


.
.

Tuesday, February 20, 2007

நைல் நதி நீரை வாங்கித்தருவார்களா உலக ஜல்லிகள்

உலகம் உலகம் என்று இல்லாத ஒரு வடையாளத்தை உருவாக்கி இந்தியாவுக்கென இருந்த இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து நின்றதன் முழு பலனையும் இந்தியன் இன்று அனுபவிக்கிறான். நம்மை சுற்றி உள்ள 'உலக' நாடுகளான பாக்கிஸ்தான், வரீசிஸ்தான், ஆப்கானிஸ்தான், தமிழ் ஈழம், இலங்கை, பர்மா, சிங்கை, வங்காளதேசம் (மற்றும் கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளும்), நமக்கு அல்வாவை கிண்டித்தர, நாம் ஜெய்ஹிந்த் என்று முழங்கிக்கொண்டு வாயில் அரை ஆழாக்கு சைஸ் வாழை பழத்தை வைத்து சப்பிக்கொண்டிருக்கிறோம்...

உலக அளவில் இந்தியனுக்கென்று ஒரு கட்சியாவது இருக்கிறதா தெரியவில்லை...அமெரிக்க ரிபப்ளிக் பார்ட்டிக்கு கழுதையா, யானையா சின்னம் என்றே தெரியவில்லை...பெனாசிர் புட்டோ லண்டனில் தஞ்சமடைந்துள்ள நிலையில், கலீதா ஜீயா எப்போது ஊர்வலம் நடத்தினாலும் குண்டு வெடிக்கிறது.....இலங்கை நிலவரம் சொல்லவே தேவை இல்லை...அகில உலக இந்தியன் கட்சி என்று இல்லாதாதன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்..அவ்வளவு ஏன், இண்டிப்ளாக்ஸ் விருதென்று சொல்லும் இவர்கள் உலக அளவிலான வலைப்பதிவுகளை நடத்து போட்டி நடத்தாதான் மூலம், தங்களை "உலக இந்தியன்" என்று சொல்லும் தகுதியை இழந்து தனிமரமாக நிற்கிறார்கள்..

இந்தியாவில் தூங்கும் பிரதமர், சிரிக்காத பிரதமர், நொண்டி பிரதமர், ஜல்லி பிரதமர், ஜால்ரா பிரதமர் என்று எல்லாரும் வந்து தொலைந்துவிட்டார்கள்....அனைவரையும் இந்தியர்கள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம்..ஆனால் எகிப்தில் ஓடும் நைல் நதியை இந்த பக்கம் திருப்பி விடும் எண்ணம் கூட எந்த பிரதமருக்கும் இல்லாதது கேவலத்திலும் கேவலம்..

முன்பு இந்திய பகுதியான பி.ஓ.கே, கச்சத்தீவு, எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டோம்...விட்டால் அஸ்ஸாமையும் சீனா அடித்துச்செல்லும் போலிருக்கிறது...

எப்படி இருக்கிறது பிழைப்பு பாருங்கள் ?

இளிச்சவாயன் இந்தியனை தவிர வேறு எவனும் உலகம் பேசுவதாயில்லை...அவனவன் கைப்புள்ளைத்தனமாக புகைப்படம் எடுத்து திரிந்துகொண்டிருக்கின்றனர்...

இனியாவது பிரதமர் சென்று எகிப்து பிரதமர் ரூபர்ட் முர்டோக்கிடம் சென்று பேசவேண்டும்...( டேய் நீ மாறித்தொலைக்கலியே )...அப்போதுதான் உலகம் உலகம் என்று இத்தனை நாள் உளறியதற்கு பலன் கிடைக்கும்...இத்தனை நாள் இந்தியனை ஏமாற்றியதற்கு உலக லூசுகள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

செய்வார்களா ?

(ஆமா, அவனுக்கு வேற வேல வெட்டி இல்லை பாரு...நீ கப்பித்தனமா வேல வெட்டி இல்லாம ( நானுந்தான்) வலையில் மொக்கை போடுறதுக்கு...நல்லா வருது வாயில...)

Friday, February 16, 2007

தலைப்பு வைங்கோ !!! தலைப்பு வைங்கோண்ணா !!!

கலாய்க்கறதுக்காகத்தான் இந்த பதிவுன்னாலும், சில பல பழைய அருமையான பதிவுகளுக்கு அப்படியே ஒரு லிங்கை கொடுத்துட்டா, மக்கள்ஸ் ஜாலியாவாங்க...!!!

ஆனாலும் இந்த தலைப்பு வைக்கறதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைலே இருக்குங்க...எத்தனை வருஷம் ஆனாலும் அது மாறாது போல இருக்கு...இனி, ஓவர் டூ தலைப்புகள் மற்றும் பதிவின் முதல் ரெண்டு வரிகள்..(காப்பிரைட் பிரச்சினை வராதுன்னு நினைக்கிறேன்...)

******************************************
மெலட்டூர் இரா நடராஜன்

எனது 395 ஆவது சிறுகதை (!!)

கோவையில் இருந்து வந்த கோலங்கல் 2010 மார்ச் 19 குங்குமம். " ஸார் டிக்கெட் ப்ளீஸ், என்றார் ரயில் கண்டக்டர். அப்படியே பாக்கெட்டை தடவிப்பார்த்தேன்..........

********************************************
விடாது கருப்பு

அமெரிக்காவில் பார்ப்பணர்கள் அட்டகாசம்

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி வந்த பார்ப்ஸ்களால் இந்தியாவில் தான் வருணாசிரம கொள்கை பரப்பப்பட்டதென்றால் இப்போது அமெரிக்காவிலும் அவர்கள் வருணாசிரமத்தை தாங்கி பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது, அய்யாவின் சீடனான நான் இதுகுறித்து......

***********************************************
வெட்டிப்பயல்

கன்னாடிகா..........

இது கண்டிப்பாக என்னோட கதை கிடையாது...நான் பெங்களூரில் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தப்போ இது நடந்தது...ஆக்சுவலி அவள் தமிழ்னு தான் நெனைச்சுக்கிட்டிருந்தேன்..அவள் கொஞ்சம் நெருங்கி வந்து "சொல்ப போன் கொடி" என்று என்னோட எக்ஸ்டென்ஷன் போனை கேட்டதும்தான் அவர் கன்னடா காரி என்று தெரிந்தது....தமிழ் சுட்டுப்போட்டாலும் வராத அவள் தமிழில் வெண்பா / ஹைக்கூ எழுதுமளவுக்கு போவாள் என்று.........

************************************************
வடுவூர் குமார்

காங்கிரீட் தளத்தில் ஜல்லி போடும்போது....

பொதுவாக ஜல்லியை முதலிலேயே சிமிண்டோடு குழைத்து வைத்துக்கொள்ளவேண்டும்...அப்போதுதான் சிமிண்ட் அதில் நன்றாக ஊறி கொழகொழவென இருக்கும்...அதை அப்படியே தளம் போட பயன்படுத்தக்கூடாது...சிறிது நேரம் ஆறவிட வேண்டும்....இந்த சிறிது நேரத்தை நீங்கள் சித்தாளுடன் கடலைபோட பயன்படுத்தலாம்..அதற்குள் சிமிண்ட் நன்றாக ஊறிவிடும்...இங்கே சிங்கப்பூரில் இப்படித்தான் சிமெண்டை ஊறவிடுகிறோம்....மேலும்....

************************************************
சர்வேசன்...

குழந்தை சட்டையில் மூச்சா போனால் - அதிரடி சர்வே

அதாவது என்னாங்னா...மேட்டர் இதுதாங்னா...நான் எந்த வித்த காட்டவும் வர்லேங்னா :). உங்க வீட்டு குழந்த உங்க சட்டையில மூச்சா போச்சுன்னா என்ன செய்யலாம்னு ஒரு சர்வே வெச்சுருக்கேன்...இங்கே சொடுக்கவும்..

சர்வே

* மேற்கொண்டு ஆய் போறவரை வெயிட் பண்ணலாம்
* லைட்டா சூடானவுடனே வேற யாரையாவது கூப்பிட்டு குடுக்கலாம்
* புல்லட் ப்ரூப் ஜாக்கெட் மாதிரி ஏதாவது ஒன்னை போட்டுக்கிட்டே புள்ளையை தூக்கலாம்
* யோவ், கப்படிக்குது, போய் கழுவிட்டு வந்து சர்வே போடுய்யா.

*********************************************
பாஸ்டன் பாலா

Dont know what to do : someone proposed me STORY

சமீபத்தில் "காதலர் தினம்" வந்தது எல்லருக்கும் தெரியும்.தினுசு தினுசான மின்னஞ்சல்கள் வந்து குவிந்திருக்கும். அதில்தான் இதுவும் வந்தது. குழப்பத்தில் ஆழ்த்தாமல் சுருங்க சொல்லிவிடுகிறேனே..நேற்று வந்ததொரு மின்னஞ்சலில்., "பாபா" ஐ லவ்யூ என்று வந்தது...

குழப்பினேன் நான்...பிறகுதான் தெரிந்தது, அது மனீஷா கொய்ராலா ரஜினிக்கு ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதென்பது...நான் ஏழெட்டு புத்தகத்தை ஒன்றின்மேல் ஒன்றாக போட்டு படித்துக்கொண்டிருந்ததில் சற்றே.....

***********************************************
அருட்பெருங்கோ

இது காதல் பிடுங்கி அடிக்கும் மாதம் (350)

வகைவகையாக வந்தாள்
வரிசைக்கொன்றாக வந்தாள்..
ஆனால் எனக்கானவள் வந்தாளா ?

கடந்தவாரம் சிங்கப்பூருக்கு ஒரு நன்பன் திருமணத்திற்காக சென்றபோது, அங்கே இருந்த எம்.ஆர்.டி நிலையத்தில் நின்றிருந்தேன்....வெள்ளைதோசா ->> 15 கி.மீ என்று எழுதி இருந்தது..காதலர்களின் சொர்க்கபூமியோ என்று எண்ணியிருந்தேன்...

பூங்காவில் நீயா அல்லது உன்னில் பூங்காவா ? குழப்பம்...குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்...மீனாவை பிடிக்க முடியுமா ?

அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ..

*********************************************
லக்கிலூக்

எலிக்குட்டியை வறுக்கலாம் வாங்கோன்னா !!

திராவிடம் பேசும் காளைகள் சிலபேர் தறிகெட்டு குதிக்கிறோம் என்று தப்புக்கணக்கு போடுபவர்களுக்கு சாட்டையடி அல்ல இந்தப்பதிவு..

இது அனானி முன்னேற்ற கழகத்தினர் கும்மாங்குத்து குத்த எழுதப்பட்ட ஸ்பெஷல் மசாலா பதிவு. எந்த போட்டோஷாப் ட்ரிக் ஷாட்டும் இல்லை..வெறும் டெக்ஸ் பதிவு....டெக்ஸ் வில்லர் பதிவல்ல...மேலும்....

**********************************************
டி.பீ.ஆர். ஜோசப்

சூரியன் ( 2304856558)

நான் ஒருமுறை வங்கியில் என்னுடைய மானேஜர் இருக்கையில் அமர்ந்துகொண்டு இருந்தபோது, வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர் வங்கியை ஆட்டையை போடும் கண்களோடு உள்ளே வந்துகொண்டிருந்தார்..

என்னுடைய அஸிஸ்டெண்ட் மானேஜர் அப்போது ஒரு வவுச்சர் போடும் பணியில் இருந்தார்...வவுச்சர் போடுவது என்னவென்றால், முதலில் ஒரு லெட்ஜரை எடுக்கவேண்டும்...அதில் தூசி இருந்தால் அதை துடைக்க வேண்டும்...பிறகு டங் என்று மேஜையில் வைக்கவேண்டும்...

அப்போது அங்கே ஏற்கனவே இருக்கும் அழுக்கு டீ டம்ளரை நகர்த்திவிட்டுத்தான் வைக்கவேண்டும்...இல்லை என்றால் எப்படி வவுச்சர் போட முடியும்...

மேலும்,

**********************************************
மோகன்தாஸ்

சில ஜல்லிகளும், சில விளங்கங்களும், சில க்ரிப்டோகிராபிக்கதைகளும்

சில விளக்கங்களை கொடுத்தால்தான் சில விலக்கங்களை பெறமுடியும் என்றால் அது நியாயம் தான் உண்மையில். ஆயா என்று நான் கதையில் குறிப்பிட்டது உண்மையில் செந்தழல் ரவியின் செத்துப்போன ஆயா என்று அவர் நினைத்து பதிமூன்று பக்கத்துக்கு என்னை திட்டி எழுதிய கடிதம் ஆயாசம் தந்தது...

ஆனால் அவர் நினைப்பதுபோல அவருடைய ஆயாவை என்றும் நான் குறிப்பிட்டதில்லை...மேலும் வெத்திலை பாக்கு போட்டு புளிச் என்று முகத்தில் துப்பியதாக நான் எழுதியது, வெற்றிலைப்பாக்கு போடாத அவர்ருடைய செத்துப்போன ஆயா கோபிப்பார் என்று பி.கே.எஸ் அய்யா கூறுவது முறையல்ல..

இனிமேல்தான் அடிக்கத்தான் போகிறேன் க்ரிப்டோகிராபி ஜல்லி...அதாவது...மேலும்....

*********************************************

போதும் போதும் என்று நீங்கள் கதறுவது புரிகிறது...இன்னும் பொன்ஸ், பாலபாரதி, வரவணை, சுகுனா திவாகர், கப்பி பய, கோவியார், ஜி.ரா, இளா, தேவ், சிபி, ராம், மங்கை, ஞானவெட்டியான், சிரில் அலெக்ஸ், பினாத்தல், கொத்தனார், கால்கரியார், மகேந்திரன் பெ, உங்கள் நன்பன், நெல்லை சிவா எல்லாம் இருக்காங்களே...

அவுங்களை எப்போ கலாய்க்கறது ? ஓ சரி அப்பாலே பாத்துக்கலாம்....இப்போ வர்ட்டா...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....