Showing posts with label கோவி.கண்ணன். Show all posts
Showing posts with label கோவி.கண்ணன். Show all posts

Thursday, April 26, 2007

Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்

வணக்கம்...எனது இந்தி கொள்கை குறித்தான தவறான புரிதலுக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

இந்தியை நான் தாங்கி பிடித்தேன் என்று சொன்னீர்கள்...உண்மைதான்...இந்தி - இந்திய தேசிய மொழி என்ற அளவிலும், இந்தியாவில் - உலகெங்கும் பலகோடிப்பேர் பேசுகிறார்கள் என்பதாலும், தமிழைப்போல அதுவும் ஒரு இனிமையான மொழி என்ற அளவிலும் நான் இந்தியை விரும்புகிறேன்...(ஹிந்தி பாட்டு கேக்க மாட்டீங்களா )

இந்தி எதிப்புக்கும் இந்தி திணிப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...எனக்கு இந்த விஷயம் லேட்டாக புரிந்தாலும் இப்போது தெளிவாகவே உள்ளேன்...

உதாரணம் சொன்னால், தமிழக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கும் ஒருவர், தனது பதவி உரிமை ஆணையில் ஹிந்தியில் கையெழுத்துப்போட்டு, நியமன ஆணையரான இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்...இந்த நடைமுறை இந்த பதிவை எழுதும் ஏப்ரம் 2007 ஆண்டு வரை உள்ளது...

நீங்கள் தமிழராகவே இருந்தாலும் ஹிந்தியில் தான் கையெழுத்திடவேண்டும்...நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பும் நபராகிய இந்திய ஜனாதிபதி மேதகு. ஏ.பி.ஜே அப்துல் கலாமாக இருந்தாலும் நீங்கள் ஹிந்தியில் தான் கையெழுத்திட வேண்டும்...

இதைத்தான் நான் ஹிந்தி திணிப்பு என்று புரிந்துகொண்டேன்...இதை கண்டிப்பாக எதிர்க்கிறேன்...

மற்றபடி,

ஹிந்தியில் பேச பழகுதலுக்கும்
ஸ்டார் ப்ளஸ் சேனலில் சீரியல் பார்ப்பதற்கும்
நமஸ்தே லண்டன் படம் பார்த்து ரசிப்பத்தற்கும் ஹிந்தி திணிப்பு என்று பெயர் வராது என்றூ நினைக்கிறேன்...

தாய் மொழியை மிகவும் நேசிக்கிறேன்...அதே சமயம் பிறமொழியை கற்றுக்கொள்வதினை தடுக்கவேண்டாம் என்று கருதுகிறேன்...என்னைப்பொறுத்தவரை ஜெர்மன், ப்ரெஞ்சு, ஹிந்தி எல்லாம் ஒன்று தான்...என்ன அரைகுறை ஹிந்தி தெரிவதால் ஹிந்தி (மட்டுமே) தெரிந்தவரிடம் ஹிந்தியில் பேசி பானி பூரியில் ஒரு எக்ஸ்ட்ரா வாங்க முடியுது...

ஹிந்தியை யாரும் படிக்காதீங்கடா என்று சொன்ன தமிழக அரசியல் தலைவர்கள் இன்று அதே ஹிந்தி தெரியும் என்பதற்காக தன் பேரனை மத்திய மந்திரி ஆக்கினேன் என்று சொன்னது ஏன் என்ற கவலை சத்தியமாக எனக்கு இல்லை...யார் எப்படிப்போனா எனக்கு என்ன ?

இதுபற்றி சொல்லும்போது, முந்தைய ஒரு பதிவில் முத்து தமிழினி அடிச்ச ஒரு ஷாட் நியாபகம் வந்து மீண்டும் சிரித்தேன்...அவர் சொன்னார், ஹிந்தி தெரிஞ்சா பெரிய ஆளாகலாம்னா ( கொஞ்சம் உளறினது - அப்போ), வட மாநிலத்தவன் ஏன் இங்க வந்து சோன் பப்டி விக்கறான்...!!!!! காமெடியா இல்லை...!!!

இப்போதைய அரசியல்வாதிகளில் இது போன்றதொரு கொள்கையை கொண்டிருப்பது கேப்டன் விஜயகாந்த்...எங்க அம்மா போன எலக்சனில் கேப்டனுக்கு ஓட்டு போட்டுது...ஏம்மா கேப்டனுக்கு ஓட்டு போடறே என்று எவ்ளோ வற்புறுத்தியும் காரணத்தை சொல்லவில்லை...என்னோட ஓட்டை இந்த முறை கேப்டனுக்கு போட்டுடலாம்னு பார்க்கிறேன் ( மீதி பேரை எல்லாம் ஏ.டி.எம்.கேவுக்கு போட வெச்சுரலாம்...எங்க ஏரியாவில எங்கப்பா சொல்லுற ஆளுக்கு தான் ஒட்டு தெரியுமா ஹி ஹி)

கோவியாரே...பதிவு போட்டாச்சு...மக்களே ஒரு பின்னூட்டம் ( சின்னதா) போட்ருங்க )

மத்த மக்கள்ஸ் இந்த விஷயத்தில என்ன நிலைமையில இருக்காங்கன்னு தெரியலை...சர்வேசனை கேட்டா பதில் கிடைக்கும் ( சாமியை இல்லைங்க ) , நம்ம சர்வே Sun !!!!

இவ்ளோ பொறுமையா பதிவை படிச்சதுக்கு நன்றி !!! வர்ட்டுங்களா...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....