Showing posts with label முகில். Show all posts
Showing posts with label முகில். Show all posts

Thursday, June 03, 2010

முகில் எழுதுகிறார்...


நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல்லாம் படிக்க நேர்ந்தது....

நர்சிம் அவர்களின் பூக்காரி தவிர. என்னிடம் சொல்லி என்னை கோபப்படுத்தவேண்டாம் என்றோ, காயப்படுத்த வேண்டாம் என்றோ, முல்லையும் என்னிடம் அதுவரை பகிர்ந்துகொள்ளவில்லை.ரவியும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விஷயத்தை முழுவதும் படித்தபின் என் மனைவியிடம் பேச ஆரம்பித்து பிணக்கில் முடித்துக்கொண்டோம்....

ஆனாலும் நர்சிம் என்ன எழுதினாரென்று அப்பவும் எனக்குத் தெரியாது. என்னுடன் படித்து, தங்கி வளர்ந்த 10 வருட நன்பனிடம், இமெயில் மூலம் ஏதும் பெறமுடியுமாவென்று தகவலனுப்பிவிட்டு மீண்டும் வலைப்பதிவில் துழாவினேன். நான் பூக்காரியை கண்டெடுத்த நேரத்தில் நண்பனிடமிருந்து பதில், இதோ.

please ignore it da _ its fixable and he feels sorry about that

do not read all those

பூக்காரியை படிக்கும்போதே என் அர்த்த நாளங்களும் ஆடிப்போயிருந்தன! எத்தனை வசைமொழிகள்? எந்த கணவனுக்கும் என் நிலைமை வரக்கூடாது!! நர்சிம் மணமானவரா எனக்கு தெரியாது,இருந்தாலும் அவரது குடும்பப் பெண்ணை யாரேனும் இப்படி எழுதி அவர் படிக்கும் நிலைமை வேண்டாமென்பதே என் பிராத்தனை.

காரணகாரியங்களை மீறியும் நர்சிம் எழுதிய வார்த்தைகள் என்னை இன்னமும் சுற்றியே வருகின்றன. அவரால் எப்படி ஒரு பெண்ணைப்பற்றி இப்படி எழுதமுடிந்தது? எழுதி இத்தனை பின்னூட்டம் வரும்வரை எப்படி அவரால் ரசிக்கமுடிந்தது? அவரை ஆதரித்து பின்னூட்டமிட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவ்வளவு நேரம் அவரால் ஏன் அந்தப் பெண்ணுக்கும் ஓர் குடும்பமிருக்குமே என யோசிக்கமுடியவில்லை? நாம் மட்டும்தானா ஆம்பிளை என ஏன் யோசிக்க தவறினார்? இப்படி எத்தனையோ கேள்விகள் என்னிடம்.

சரி என்ன செய்யலாம்? அப்போது எனக்கு தோன்றியது இரண்டேவழிகள்.........

1) நேரடியாய் அவரை சென்று வீட்டிலோ / அலுவலிலோ சந்திப்பது
2) சட்டப்படி நடவடிக்கை எடுப்பது
3) என் மனதின் நியாயப்படி நடவடிக்கை எடுப்பது

இதைச்சொல்ல,என் மனைவியோ அவரை வலையுலகிலிருந்து வெளியேறுகிறாராம்... நீங்கள் யாருக்கும் மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்று சொல்லி ஆற்றாமையில் பொங்கிக்கிடந்த என்னை ஆற்றுப்படுத்திவிட்டு அலுவல் கிளம்பியாயிற்று....

நானும் பொறுத்திருந்தேன்....அதுவரை வினவில் வந்ததை நான் படிக்கவேயில்லை!

ஆனாலும் விட்டபாடில்லை, மேன்மேலும் இதுபற்றி பதிவுகள், விமர்சனங்கள், போதாக்குறைக்கு வினவு இவ்விசயத்தில் RAPE என்று கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது, நிறவேற்றுமை, சாதிய உள்ளிழுப்புகள், அவர் பணக்காரர்-இவர் ஏழை, இன்னும் பல.

நர்சிம் ஏனோதானோ என்று எழுதிய மன்னிப்பு பதிவையும் பார்த்தேன், பாய்ந்துவிட்டு பதுங்குகிறாரோ எனவும் யோசித்தேன். அதற்குள் என் நண்பர்கள் சிலரிடமிருந்தும் இதைப்பற்றி விசாரிப்புகள். முல்லையிடமிருந்தும் பல போன் கால்கள், மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்றும், தன்னிடம் சொல்லாமல் எதுவும் செயலில் இறங்கிவிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன்.

எனக்கு தெரிந்த சட்டநிபுனர்களிடம் விசாரித்துவிட்டு நேற்று மாலையே அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தேன். முல்லையோ, வலையுலகில் எனக்கு தெரிந்த மற்றும் என்னை தெரிந்த நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என பார்த்துவிட்டு பிறகு செல்லலாம் என மறுத்துவிட்டாள்.

எல்லாரையும்விட முல்லையும், நானும் என் குடும்பத்தாரும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக ஒன்றுமறியா நாலரை வயது குழந்தையை கொலைசெய்ய அறிவுறுத்தும் அவர் நண்பர்களை என்ன சொல்ல!

இப்பிரச்சனையை சாதியாக்கியவர்களுக்கு:

என் மனைவியின் கொள்ளுப்பாட்டி சுதந்திரப் போராட்ட தியாகி! நர்சிம் வழியில்?
பதிவிட்ட நாலாம் நாளிரவு மன்னிப்பு கோரியுள்ளார், இதுவரை நாங்கள்?
சொல்லுங்கள் யார் உயர்சாதியென்று?
எத்தனையோ பேர் சொல்லியும் நம்மால் சாதியை ஒழிக்கத்தான் முடியவில்லை, அதன் வரையறைகளையும் கோட்பாடுகளையுமாவது மாற்றிக்கொள்வோமே? உயர் சாதி பற்றுடன் இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சொல்கிறேன், இப்போது நாங்கள்தான் உயர்சாதி, எங்களுக்காக போராடுங்களேன் !!!

அடுத்து பணத்தைப் பற்றியும், நிறத்தைப் பற்றியும் கூட சிலர் எழுதியும் பின்னூட்டமிருந்தும் படித்தேன். குறிப்பாய் குழந்தையை கொல்லவேண்டாமென்ற கார்க்கி (அதாவது கொல்லவேண்டும்), தங்கம் கருப்பு நிறமாவென்று கேட்டிருந்தார். ஆமாம் கார்க்கி சார், என் மனைவி கருப்புந்தான், தங்கமும்தான், அதற்குமேலுந்தான்!

என் மனைவியைப் பற்றி எனக்குத்தெரியும், நர்சிம் பதிவிலும் அவர் நண்பர்கள் பின்னூட்டத்திலும் ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்.....

போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!!

என் மனைவி இன்னும் எழுதுவாள், பின்னூட்டமிடுவாள். இனி சற்று எச்சரிக்கையாய், மனிதர்களைப் பற்றி மட்டும்.

ஏனென்றால் நான் அவளைமட்டும் காதலிக்கவில்லை, அவள் எழுத்தையும்தான்.

-முகில்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....