Showing posts with label மூடு. Show all posts
Showing posts with label மூடு. Show all posts

Saturday, August 30, 2008

எதையும் செய்யவேணாம் பாஸு...பொ$$ மூடிக்கிட்டு இருந்திடலாம் பாஸு...!!!

லக்கிலூக் எதையாவது செய்யனும் பாஸு என்று பதிவு எழுதி இருக்கிறார்..பதிவர் நரசிம் உடைய தூண்டுதல் இந்த பதிவுக்கு காரணம்...

பரிசல் / வெண்பூ / வால்பையன் மாதிரி மொக்கை கோஷ்டிகள் எல்லாம் இதை படித்துவிட்டு, ஆஹா, வாங்கடா கிளம்பி உலகத்தை திருத்தலாம் என்று கிளம்பினீர்கள் என்றால் அதைவிட அட்டர் வேஸ்ட் எதுவும் இல்லை...

ஏதாவது மொக்கை போட்டோமா, நாலு நன்பர்களோடு அரட்டை அடித்தோமா, எப்பவாவது பார்க்கும்போது - டாஸ்மாக்கில் போய் மப்பை போட்டோமா என்று உருப்புடியாக இருக்கவும்..

அதை விட்டு விட்டு, வாருங்கள் குழுவாக உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு, சமூகத்தை திருத்தலாம் என்று தனியாளாக உங்களது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்தால் முதலுக்கு கொஞ்சம் மோசமாகும்...

இதுவரை நேரத்தை தின்று உங்கள் பிழைப்பை கெடுத்துவரும் வலைப்பூ அடிக்-ஷன் உங்கள் பாக்கெட்டிலும் வேட்டு வைக்கக்கூடும்..

எங்கிட்ட கோடிகளும் - லட்சங்களும் குவிஞ்சிருக்கு, இல்லை நான் ஏற்கனவே நாலு கம்பேனிக்கு சி.இ.ஓ என்னை எவனும் கேள்விகேட்க முடியாது அப்படீன்னா கெளம்புங்க...நரசிம் சாரோட பதிவுக்கு டைரக்ட் ஆடியன்ஸ் நீங்க தான்...ஏன்னா உங்ககிட்ட இழக்கறது ஒன்னுமில்லை...

ஆனா வாழ்க்கையில் பெருசா எதுவும் சாதிக்காத ஆளு என்று நீங்கள் நினைச்சீங்கன்னா, உங்கள் துறையில் பெரிய அளவில் சாதிச்சுட்டு அதுக்கப்புறம் இதுமாதிரி சமூகத்தை திருத்த கிளம்பலாம்...

போன வருஷம் 2006 அப்போ மகாலட்சுமி கல்விக்கு உதவுங்கள் என்று ஒரு பதிவிட்டு, இன்றைக்கு அந்த பெண் ஒரு டீச்சர். ஆனால் இதன் மூலம் நான் அடைந்ததை விட இழந்தது அதிகம்...

என்னுடைய பதவி உயர்வு
நான் விரும்பிய நாட்டில் இரண்டு மூன்று வருடங்கள் தங்கும் வாய்ப்பு
எப்போதும் வலைப்பதிவையே பார்த்துக்கொண்டிருந்து என்னுடைய சொந்த வேலைகளை கூட சரியாக செய்யாத நிலை

என்று திருப்பி எடுக்கவே முடியாத பல இழப்புகள்...

அடைந்தது...எங்கோ ஒரு கிராமத்தில் வசித்த ஒரு பெண்ணை அரசாங்க ஆசிரியை ஆக்க உதவியது...

இந்த சேட்டிஸ்பேக்சன் மட்டுமே நான் இழந்தை அனைத்துக்கும் சமம் ஆகுமா ?

நான் என்ன அவ்வளவு பெரிய தியாகியா ?

என் குடும்பம் என் மனைவி என் சொத்துக்கள் என்று சுயநலம் உடைய ஒரு மனிதன்...

திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...

ஓக்கே...

அவதார புருஷர்கள் : எதையாவது செய்யுங்க பாஸு...
சுயநலவாதிகள் : மூடிக்கிட்டு போங்க பாஸு..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....