Posts

Showing posts from 2006

பதிவர் நிலாவுக்கு நன்றி!

நண்பர்களே கடந்த பதிவில் ஏழைப்பெண் மகாலெட்சுமியின் மேற்படிப்புக்கு உதவி கேட்டு பதிவு போட்டிருந்தேன். பதிவர் நிலா சில கேள்விகளை முன்வைத்து தனிப் பதிவு போட்டிருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமானால் என் நண்பர் ஒருவர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், அய்யா ஞான வெட்டியான் அவர்களை விசாரிக்கச்சொல்லி அந்த பதிவை அவசரமாக வலையேற்றினேன்.

நிலா மற்றும் பத்மா அவர்களின் நியாயமான கேள்விகள் என்னை துளைத்து எடுக்க, நான் நேரடியாக மகாலெட்சுமி குறித்து விசாரித்தேன். அதன் படி பெறப்பட்ட தகவலை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

* தற்போது மகாலெட்சுமியின் குடும்பம் சீலப்பாடியில் இல்லை. அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.

* எம்.எஸ்.சி வரை அவர் படித்து வந்ததே கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால் தான். அவரின் ஆசிரியரின் வழிகாட்டுதலால் தான் அவர் பி.எட் சேர்ந்துள்ளார். அதற்காக தங்கள் சொந்த வீட்டை விற்று பணம் கட்டி இருக்கிறார்கள். அதனால் குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் மாறி இருக்கிறது.

* வறுமையிலும் நேர்மை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மகாலெட்சுமியின் தந்தையிடம் பேசிய போது, "என் மகளைப் படிக்…

விடுமுறை - உடலுக்கு மட்டும்

ஒரு ஆண்டுக்கு பிறகு எடுக்கும் ஒரு வார விடுமுறை...ஆறு மாதங்களுக்கு முன்பே அப்ளை செய்தது...கடுமையான அலுவலக பணிகளை தேவையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரைவில் வர இருக்கும் சகோதரர் திருமண விழாவிற்க்காக கிராமத்தில் இருக்கும் வீட்டை பெயிண்டிங் செய்வது நீண்ட கால திட்டம்...

மகாலட்சுமிக்கு உதவி வேண்டி வலைப்பதிவர்களின் ஆதரவு கேட்டு இன்றோடு இரண்டாவது நாள்...இத்தனை ஈர இதயங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது என்ன கவலை என்று ஒருபுறம் அகம் மகிழ்ந்தாலும் இந்த பெரும் பணியை முன்னெடுத்து செல்ல யார் உதவியையாவது பெறவேண்டுமே ?

ஜனவரி முதல் வாரத்தில் ஞானவெட்டியான் ஐயா கல்லூரி கட்டணத்தை செலுத்தும் நாள்தான் அந்த ஏழைப்பெண் நிம்மதி பெருமூச்சு விடும் நாள் என்றாலும், பதிவர்கள் கருணை உள்ளத்தோடு கொடுக்கும் நிதியை சரியான நேரத்தில் ஐயாவின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை மட்டும் இப்போதைக்கு ஏற்க்கிறேன்...

யார் யார் உதவி செய்துள்ளார்கள், இன்னும் உதவி செய்யப்போகின்றவர்களின் விவரங்கள், அனைத்தும் பதிவர் பொன்ஸ் அவர்கள் சேமித்து வைத்துள்ளார், சேமித்துக்கொண்டிருக்கிறார்...

மேற்க்கொண்டு ஆதரவுக்கரம் நீட்டும் அனைவரும் என்னுடைய மடலுக்கு…

மூடுவிழா அறிவிப்பு !!!!

தனித்திரு விழித்திரு பசித்திரு வலைப்பூ விரைவில் மூடுவிழா காண இருக்கிறது !!! இன்று மதியம் அறிவிப்பை வெளியிடுகிறேன்...!!! அதனால ஒன்னும் பெரிசா பாதகமில்லை என்றுதான் நினைக்கிறேன்.. !!!

அன்புடன்,
செந்தழல் ரவி

இதோ வெற்றியாளர்கள் !!!!!!!!!

பின்னி பெடலெடுத்திட்டீங்க மக்களே !!!! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது மக்களே !!! பரிசுக்குரியவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீநாத், பாலு, வனிதா, ராஜீவ் , தீனா ஆகியவர்களுக்கு நன்றி...முக்கியமாக பாலு, அனைத்து பின்னூட்டங்களையும் தனியாக வேர்ட் டாக்குமெண்டில் வைத்து, பெயர்களுக்கு பதில் நெம்பர் கொடுத்து நடுவர்களுக்கு அனுப்பியது மிகவும் சிறப்பான பணி !!!! ஆனால் தான் நடுவராக அமர்த்தப்படாதது குறித்து கோபித்தான்..

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் எண் இடப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டன...ஒவ்வொரு நடுவருக்கும் அதிகபட்ச மதிப்பெண் கொடுக்கப்பட்டது...மதிப்பெண்கள் இடப்பட்டு மீண்டும் பாலு அந்த மதிப்பெண்களின் ஆவரேஜ் எடுத்தார்...டன் டன்டன்ன்னன்...

இதோ வெற்றியாளர்கள்....

முதல் பரிசு...

லக்கிலூக்... ( LG KG300 Mobile - LG Dinamite - Worth RS 10,000.

இரண்டாம் பரிசு

சந்தனமுல்லை / பத்மகிஷோர் (புத்தகங்கள்)

பன்னிரண்டு மணிக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிறகு சில பின்னூட்டங்கள் வந்தன...அவையும் அருமையாக இருந்தன...இருந்தாலும் அவைகளை ஆட்டத்தில் சேர்க்க முடியவில்லை...அவைகளை எழுதியவர்கள் இரா.அரங்கன், வேலவன், மற்றும் ம…

ஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா ?

Image
இன்றைய தினத்தந்தியில் பார்த்தவிஷயம், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு, அதற்க்கு கலைஞர் கண்டனம்....ஸ்ரீரங்கப்பெரியார் சிலை புகைப்படம் ( முக்காடிட்டது)..அதன் பின்னனியில் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் கோபுரமும்... சரியான படம் கிடைக்கவில்லை....அதனால் நெட்டில் சுட்ட ஒரு படத்தை வெளியிட்டுள்ளேன்...

கடவுள் இல்லை என்று சொன்ன அந்த ஈரோட்டுக்கிழவனுக்கு எதுக்குப்பா சிலை....அவர் இருந்திருந்தா தனக்கு சிலை வைக்க ஒத்துக்கிட்டிருப்பாரா ? இல்லை பெரும்பாலனவர்களின் நம்பிக்கையான கோவிலின் முகப்பில் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவரின் அடையாளத்தை "வைக்க"த்தான் ஏற்றுக்கொண்டிருப்பாரா ?

மற்றவர்கள் மனம் புன்படும் என்றால் அந்த புண்ணை குத்திக்கிளர ஒத்துக்கொண்டிருப்பாரா ? அப்படி என்ன பெரிதாக கண்டறிந்துவிட்டார் அந்த ஈரோட்டுக்கிழவர் ? வெளிவேடம் போடாதீங்கடா, நீங்கள் நீங்களாக இருங்கள் என்று மியூனிச்சில் உடையில்லாமல் நின்றது எவ்வளவு கேவலம் ? ஆண்ரமீடா கிரகத்தையும், செவ்வாயில் தண்ணீர் ஓடியதையும் காணும் இந்த நாளில் செவ்வாய் தோஷம், பரிகாரம் செய்யனும் என்று ஊரை ஏமாற்றும் ஜோசியத்தை நம்பாதீங்கடா, ஜாதகத்துல போட்டிருக்குன்னு…

பரிசுப்போட்டி : அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா

பரிசுப்போட்டி பரிசுப்போட்டி பரிசுப்போட்டி...

சரி விஷயத்துக்கு வந்திடுறேன்...நீங்க பல தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க...நம் தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ அபத்தத்துக்கு பஞ்சமே இருக்காது...இங்கே விஷயம் என்னான்னா, உங்களுக்கு தெரிஞ்ச அபத்தத்தை நீங்க சொல்றீங்க...சிறந்த அபத்தமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அபத்தத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு...சரி அபத்தம் எப்படி இருக்கும் நான் ரெண்டு சாம்பிள் சொல்லட்டா....

1. எந்த இடத்தில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் சரி...அதை அப்பல்லோ டாக்ரரே போட்டாலும் சரி...வெள்ளை கட்டு துணிக்கு மேலே ஒரு சொட்டு அல்லது வட்டமா ரத்தம் இருக்கிறதை பார்க்கலாம்...( அவருக்கு அடி பட்டிருக்காம் டோய்..)

2. ஹீரோவுக்கு பேரு வெக்க நம்ம தமிழ்சினிமா இயக்குனருக்கு ஒரு கஷடமும் இருக்காது...அதான் இருக்கே ஒரு பேரு...ராஜா..

3. ஆப்பரேஷன் செய்யுற எல்லா டாக்டரும் கண்ணாடி போட்டிருக்கறதும், ஆப்பரேஷன் செய்யப்போற / பெயிலியராகிப்போன / சக்ஸஸஸா ஆகிப்போன விஷயத்தை கண்ணாடியக்கழட்டிக்கிட்டே காட் இஸ் க்ரேட்...எல்லாம் அவன் கைல...என்று மொக்கையான மூஞ்சியை வெச்சுக்கிட்டு சொல்றது...

4. அணுகுண்…

நன்பனைத்தேடி ஒரு நெடும்பயணம்

Image
எல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா ? அட சொல்லுங்க...முடியாதில்லையா....

அதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...

நான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்
கண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...

வருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...

எழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி …

கோழித்திருடன்.........

சில விஷயங்கள் வெளியில வந்தாகவேணும் என்றால் வந்தே தீருமாமா ? உண்மையா ?

திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் பயணம் செய்தா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...

இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவணார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது....

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு கிழவணார் வீட்டுப்பக்கம் போறேன்...

தெரு முக்குல - கண் நிலை குத்துது...

செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுத…

வெற்றியென்பது யாதெனில்...

உண்மையான வெற்றியென்பது யாதெனில் எழுகிறாயே நீ ஒவ்வொருமுறை விழும்போதும்...அது தான்...அது மட்டும்தான்....இந்த சுட்டியை பாருங்கள்...விரும்பினால் கருத்து சொல்லுங்கள்..

http://www.the-race-movie.com/

தேங்காய் பொறுக்கி !!!!!!

நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவாவது போடனும் என்று ஏதோ ரூல்ஸ் இருக்காமே....பொன்ஸ் சொல்றாங்க...அதனால எனக்கு பிடிச்ச ஒரு பதிவை மீள்பதிவாக்குகிறேன்....நிறையபேர் சொல்வது "கோழித்திருடன்" பதிவை நீ நல்லா எழுதி இருக்கடா என்பது தான்...ஆனால் என் நன்பன் விஜயராகவனுக்கு பிடித்த பதிவு இது தான்..அதனால்...பிடிங்க மீள்பதிவு...இனி ஓவர் டு மீள்பதிவு...

**************************************************************************

எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...என்னாது...அப்படியெல்லாம் இல்லையா...சரி பரவாயில்லை...நான் என் மேட்டரை சொல்லுறேன்..

சம்பவம் நடந்து சுமார் 15 வருடம் இருக்கும் நான் அஞ்சாப்பு (5th) படிச்சேன் என்று நியாபகம்...சில நன்பர்களோட கோயில் பக்கமா போயிருந்தேன்...

ஏதோ பண்டிகை நாள்...

கோயில் வாசலில் ஒரு கருங்கல்...தேங்காய் உடைப்பதற்க்கென்றே போல...

அய்யரா - அருணாச்சலமா தெரியவிலை...

ஒரு தேங்காயை கொண்டுவந்து - படார் என்று உடைத்தார்..

என் கூட இருந்தவனுங்க ஓடி ஓடி பொறுக்கினாங்க..

நான் கொஞ்சம் தேமே என்று வேடிக்கை பார்த்தேன்...

என்னோட கூட வந்த ஒட்டு என்றழைக்கப்பட்ட - ஜஹாங்…

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா..

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா என்று கேட்டால், பாலபாரதியை தெரியும்...அவர் கவிஞரா என்று கேட்பவரும் உண்டு...சிலபேர்...எங்கியோ கேட்ட பேரா இருக்கு...ஆனா சரியா தெரியலை...என்பார்கள்...நான் சொல்வது வலைப்பதிவர்களை அல்ல...வலைபதியாதவர்களை சொல்கிறேன்...

எனக்கு தெரியும்...

சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கிழக்கு பதிப்பகம் சென்று பாலாவை சந்தித்தேன்...அப்போது அவர் எழுதிய "இதயத்தில் இன்னும்" என்கிற குறுங்கவிதை (ஹைக்கூ) தொகுப்பை பரிசளித்தார்...இதயத்தில் இன்னும் இருக்கின்றன சில கவிதைகள்....அட்டைப்படத்தில் மேலிருந்து கீழாக சற்று கோணலான பாண்ட்டில் இருந்த தலைப்பை பார்த்துவிட்டு என்னுடைய அண்ணன், என்ன கன்னட புக்கா ? என்று கேட்டுவைத்தான்...பிறகு புத்தகத்தின் பின் அட்டையை பார்த்து அதில் இருந்த ஒரு கவிதையால் மனம் கவரப்பட்டு முழுமையாக படித்து முடித்தபிறகே கீழே வைத்தான்...

அந்த கவிதை...

சமத்துவபுரம்...
கழிவுநீர் சுத்தம் செய்ய..
அதே கருப்பன்...

கவிதை என்றாலே தெறித்து ஓடும் ஒரு நபர் (அதான் என்னோட அண்ணன்) ஒரு கவிதை புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தான் என்றால் அந்த எழுத்தின் வீச்சும், சொல்லின் த…

தென் பெண்ணையின் செல்(லொள்)வன்...

இந்த நிகழ்ச்சி நடந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு அப்புறம் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில் உள்ள காரெக்டர் காவிரி ஆற்றின் சுழலில் மாட்டி, தப்பிப்பதை காவிரித்தாய் கரை சேர்ப்பதாக அருமையாக எழுதி இருப்பார் கல்கியார்...(ஒரு புள்ளியையும் எழுத்தையும் மாத்திப்போட்டா..சும்மா டைம் பாஸ் மச்சி !!!)

நான் இவ்வளவு நாள் லொள்ளு செய்ய இந்த சம்பவமும் ஒரு காரணம்..ஆமாம் பிறகு...இப்போ செய்யுற இந்த லொள்ளு எல்லாம் செய்ய நான் இருந்திருக்க மாட்டேனே...விஷயத்தை படிங்க... கொஞ்சம் லைட்டா மத்த விஷயங்களை போட்டுட்டு கடைசியா மேட்டருக்கு வரேன்...

முதல் படகு முயற்ச்சி

இது வேறு சம்பவம்...ஆனால் முந்தின சம்பவத்தோடு தொடர்புகொண்டது...வீடு கட்ட நிலம் பார்ப்பதற்க்காக ஒரு காரில் திருக்கோவிலூருக்கு பக்கத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் என் குடும்பமும் என் மாமா குடும்பமும் சென்றிருந்தோம்....பெரியவர்கள் எல்லாம் நிலம் பார்த்துக்கொண்டிருக்க, சில்வண்டுகளாகிய நாங்கள் ( அத்தை பிள்ளைகள் இரண்டுபேர், நான், அண்ணன்) எல்லாரும் பக்கத்தில் விளையாட ஓடினோம்...பெற்றோர் நின்றிருந்த இடத்தில…

ஏற்றம் தரும் யோகா கலை !!!

Image
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்க்கத்திய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்க்கப்படுகிறது...லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள்..சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள்..ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்...

ஆனால் இந்தக்கலையை கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்துள்ளது...

இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்ச்சியை கொடுக்கிறது...இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள்..தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்கிறார்கள்...இதன் பெருமையை சிலாகிக்கிறார்கள்...இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாக சொல்கிறார்கள்...

யாருக்கு பயன் ?

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எ…

நான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்

வலைபதிய ஆரம்பித்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது...வந்த புதிதில் அப்படி இப்படி வலைப்பூக்களை படித்து நேரத்தை கழித்துக்கொண்டிருந்த எனக்கு, சொந்தமாக ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது..வலைப்பூ போண்டா சந்திப்புகள் பற்றி அவ்வப்போது வரும் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த காலத்தில் பதிவர்கள் சிலருடன் மின்மடல் தொடர்பும் இருந்தது...அப்படி இப்படி என பல பதிவர்களை இந்த ஆறுமாதத்தில் சந்தித்தேன்...இன்னும் பலரை சந்திக்க வேண்டும் என்று ஆவல்...இந்த பதிவில் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் பற்றியும், நான் அவர்களுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றியும் எழுத ஆசை..(அதான் ஆரம்பிச்சுட்டயே, எழுதி தொலைக்க வேண்டியது தானே ? - மிஸ்டர் மனசாட்சி)

கானா பிரபா

பெங்களூருக்கு அலுவலக வேலையாக வந்தவர் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று மின் அஞ்சல் மூலமாக அறிந்தேன்..அவர் மொபைல் வேலைசெய்யாததால் லேண்ட் லைனில் பிடித்தேன்..உங்களை பார்க்க வருகிறேன் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷமாக எதிர்பார்த்திருந்தார்...நானும் ஸாஸ்கன் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் - இப்போது லண்டனில் குப்பை கொட்டும் தலை ஆதியும் சென்று சந்தித்தோம்...உ…

பொன்ஸ் அவர்களே... டம்ளர் என்பது எது..

Image

வேணாம் விட்ருங்க அந்த கிளியை

சமீபத்தில் ஒரு தோழர் தொலைபேசினார்...பணி வாய்ப்பு தேடும் முயற்சியில் சமீபத்தில் இறங்கி இருக்கிறார்...அவர் கூறி ஒரு விஷயம் இந்த பதிவுக்கு காரணமாக அமைந்தது..

சமீபத்தில் தான் கிளி ஜோசியம் பார்த்ததாகவும் அந்த கிளி ஜோசியர் தனக்கு இன்னும் ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும் என்றும் அது வெளிநாட்டு வேலையாக இருக்கும் என்றும் விரைவில் விமானத்தில் பறந்துவிடுவாய் என்று கூறியதாகவும் சொன்னார்...

எனக்கு தோன்றிய எண்ணங்கள் இவை, அதை வெளிப்படையாக சொல்லி அவனை கடுமையாக கலாய்த்தேன்..

* அடப்பாவி...கிளியே ஜோசியக்காரன் கொடுக்குற நெல்லுக்காக வெளிய வந்து சீட்டு எடுக்குது...அது எப்படிடா உன் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும்...கிளியோட வாழ்க்கையே அதன் கையில் இல்லையே, ரெக்கையை புடுங்கி கூண்டுல இல்ல அடைச்சிட்டானுங்க ?

* கிளி ஜோசியன் நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்காக உன்னிடம் கெஞ்சிக்கிட்டு நிக்குறான் தன்னோட வாழ்க்கையை கணிக்க முடியாம, அவன் பொழப்பு ஒடனுமுன்னு...அவன் எப்படிடா உன் வாழ்க்கை விவரத்தை கணிக்க முடியும் ?

இதில் அந்த கிளி ஐந்து ரூபாய் கொடுத்தால் வாங்கவில்லையாம், பத்துரூபாய் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று ஒத்தை (?!) காலில் நி…

எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசு

Image
படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்...கவனம்..உங்களை ஏமாற்றும் தவறான வழிகாட்டுதல் இருக்கலாம்...இது என்னோட ஒன்னாப்பு போட்டோ...இதுல நான் எங்கே இருக்கேன் என்று கண்டுபிடித்தால் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு....

இது தடாலடியாருக்கு போட்டி இல்லை....விளம்பர உத்தியும் இல்லை....சூடாகிக்கிட்டிருக்கும் தமிழ்மணத்தை கொஞ்சம் கூலாக்கலாமேன்னு தான்...அப்படியே அவங்க அவங்க ஸ்கேன் செய்து வைத்திருக்கும் போட்டோக்களை போட்டீங்கன்னா கொஞ்சம் குன்ஸாவா பொழுது ஓடும்..

போட்டோவை ஸ்கேன் செய்யாமல் வைத்திருக்கும் பதிவர்கள் உடனே ஸ்கேனிங் செண்டருக்கு விரையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

ஜால்ரா அடிப்பது எப்படி ?

Image
தென்னகத்து இசைக்கருவிகளில் ஜால்ராவுக்கு ஒரு நிச்சய இடம் உண்டுங்க..மற்ற இசைக்கருவிகளை போல் இல்லாமல் கைக்கு அடக்கமாக எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய, தேவைப்பட்டால் எப்போதும் கையிலோ அல்லது பையிலோ வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு உபகரணம்..இதை வாசிப்பத்தற்க்கு தனியாக எந்த பயிற்ச்சியும் தேவை இல்லை என்பது தனிச்சிறப்பு..மென்மையாக தட்டினாலும் சரி, வன்மையாக தட்டினாலும் சரி, "ஜங்" என்ற அழகான ஓசையுடன் தன்னை வெளிக்காட்டும்...

சில சமயங்களில் இசையுடன் சேராமல் இது அடிக்கப்படும்போது, நாராசமான ஓசையாக இருக்கும்..

செம்பினால் செய்யப்படும் இந்த வட்ட வடிவ இசைக்கருவி, ஒரு நூலால் அல்லது சிறிய கயிறால் ஒன்றோடொன்று பிரிந்துவிடாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும்...

இன்றைக்கு இசைக்கச்சேரிகளில் இந்த ஓசை இல்லாமல் பாடல் இல்லை என்ற அளவுக்கு மற்ற இசைக்கருவிகளோடு ஒன்றி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது...

( இந்த பதிவில் எந்த உள் குத்தும் இல்லை என்று டிஸ்கி போடும் அதே நேரம், தமிழ் வலையுலகிற்கு ஜால்ரா பற்றி அருமையான தகவலை பகிர்ந்தளிக்க முடிகிறது என்பது உள்ளத்தில் உவகையை கூட்டுகிறது )

பி.எஸ்.ஸி (2005/2006) நிறைவு : விப்ரோவில் வாய்ப்பு

Opportunities in Testing services - நாளை மறுதினம் கடைசி தேதியாக இருப்பதால் இங்கு பப்ளிஷ் செய்கிறேன்...

Walk in @ Kochi on Friday, 24th November, 2006

பணி : Test Engineer

தகுதி: Exposure to Software/Product Testing / Testing Life Cycle/Automation tools like WinRunner/QTP/ Defect tracking tools. Trained in Embedded Systems / Device drivers / RTOS will be desirable. Good communication skills is mandatory.

என்ன வேலை : The selected person will be taken as a Tester and would get an opportunity to work in the area of Manual and Automation Testing. Your roles and responsibilities will include Test Case Writing, Test Case Execution, Defect reporting, tracking and verification.

அனுபவம் : 0 to 1 Year

எங்கே பணி : Cochin (flexibility to relocate to Bangalore/Chennai/Hyderabad)

தகுதி : BCA/ BCM / BSc (CSc/ Maths/ Electronics /IT/Physics /Statistics) 2005 & 2006 pass outs.

கண்டிப்பாக தேவை : Must have had Mathematics as one of the subjects in XIIth /Predegree.

கல்வி காலம் : Should ha…

........./\.........என்னப்பா ஏதுப்பா......./\..........

************************************************************************************

இஞ்சாருங்கோ, இஞ்சாருங்கோ வாருங்கோ இங்கே....கொஞ்சம் வந்திட்டுப்போங்கோ...

அடாடா என்ன, கொஞ்ச நேரம் ரெலிபோனில் கதைக்கலாதோ ?

நம்மட மகன் எப்போதும் ரீவியை பாவிச்சிக்கிட்டு, ஊரு உலாத்திக்கிட்டிருக்கான்...என்னா ஏது எண்டு கேட்க கூடாதா ?

டேய் நிலவா, இங்கே வாடா...

என்னப்பா சொல்லுங்கோ?

என்னா ஏது...

என்னங்க, என்ன ஏதுன்னு கேட்க சொன்னா அதுக்காக இப்படியா ?

************************************************************************************

ஏண்ணா, சித்தே வாங்கோ இப்படி...

ஏண்டியம்மா காயத்ரி, சித்த நாழி டெலபோன் பேசிண்டிருக்கபடாதே நேக்கு...அபிஷ்டு...ஏண்டி...

நம்ம புள்ளையாண்டான் கிருபா எப்போ பார்த்தாலும் டீவியை ஈஷிண்டு தீட்டு புடிச்சவாளோட ஊரை ஷுத்திண்டு இருக்கு..சித்தே என்னா ஏதுன்னு கேக்கப்படாதோ...

நான் இப்பவே அந்த அபிஷ்டுவை கேட்குறேன்....எங்கே அங்க ப்ரகஸ்பதி ?

தோ இர்க்கேன் பா...தேடினேளா ?

ஆமா ஷகடை...உன்னே என் ஆத்துக்காரி என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னாள்...கேட்டுட்டன்..போருமாடீ....

ஏண்ணா...என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னா அதுக்கு இப்படியா...

***…

இனியெல்லாம் இலவசமே !!!

சமத்துவபுரத்தில் இலவசமாக கிடைத்த என்னுடைய வீட்டில் இலவசமாக கிடைக்கும் டி.வி சேனல்களில் ஒன்றை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். இலவச அரிசிச்சோறை மனைவி பொங்கிப்போட்டாள்..சாப்பிட்டுவிட்டு சென்ற ஆண்டு பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டியை அப்படியே விரித்து, இலவச சேலையை தலைக்கு முட்டு கொடுத்து சாய்ந்தேன்..பக்கத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் இலவச சைக்கிள்..குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..கொஞ்சம் அசட்டையாக இருந்ததில் நாலு பசங்க...சின்ன பெருமூச்சோடு அப்படியே உறங்கிப்போனேன்..

கொஞ்சநேரத்தில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம்..உலுக்கு உலுக்கென்று உலுக்கி எழுப்புறான் சின்ன மகன்...அப்பா அப்பா ஏந்திரு ஏந்திரு என்கிறான்..என்னடாவென எழுந்து பார்த்தால்...வா...வெளியே என்று கையை பிடிச்சு தெருவுக்கு இழுக்கிறான்...இருடா வர்ரேன் அப்படி என்னடா என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தால்...வாசலில் புதிய டொயட்டோ இன்னோவா நிக்குது..டேய் யாருடைய வண்டி இது என்றால்...மூத்தவன் வண்டியை சுற்றி வந்து சொல்கிறான்..இது நம்ம வண்டிதாம்பா..நம்ம இலவச டீவியில் வந்த "காசுமேல" புரோகிராமில வந்த ஒரு கே…

ஸ்ஸ்ஸ்ஸ்...ப்ப்ப்பா...கண்ணைக்கட்டுதே !!

Image
சோம்பேறித்தனத்துக்கு ஏதாவது உச்சவரம்பு இருக்குதுங்களா ??

வலைப்பதிவாளர்களே..சந்திக்கலாமா பெங்களூரில் ?

அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்...

பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸ்ல புக் பேர் நடக்கப்போகுது...10 ஆம் தேதி ஆரம்பம் என்று ஷைலஜா சொல்றாங்க...ஜி.ராகவன் வரப்போறார்...தனிமடலில் தெரிவித்தார்...

சனி ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்களில், சனிக்கிழமை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் ஷைலஜா..காரணம் ஞாயிறு கூட்டம் அதிகமா இருக்கும் என்கிறார்..

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தவற விட்டுவிட்டேன்..ஆனால் அதற்க்கு முந்தைய ஆண்டு சென்று "பொன்னியின் செல்வன்" எல்லா தொகுதிகளையும் குறைந்தவிலைக்கு வாங்கினேன்..அப்போதே முழுவதும் படித்துவிட்டேன் என்றாலும், மீண்டும் வந்தியத்தேவன் வீரநாராயண ஏரி மதகுகளை எண்ணுவதை நேற்றில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்...

என்னோட டார்கெட், சாண்டில்யனின் "கடல்புறா"..அப்புறம் எங்க அம்மாவுக்கு மைக்ரோ அவன் குங்கிங், வேறு ஏதாவது சமையல் புத்தகம்..(பாப்கார்ன் செய்யுறேன்னு பிளாஸ்டிக் பாத்திரத்தை கருக்கிட்டாங்க..), பிறகு பாப்பாவுக்கு படிக்காமலேயே ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி, கல்லூரிக்கு கட் அடித்து வீட்டில் உறங்குவது எப்படி என்றெல்லாம் ஏதாவது புத்தகத்தை பிரசண்ட் செய்ய ஆசை..சொந்தக்க…

டெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்ஸ்

Kodiak Networks (சுட்டி) ஒரு நல்ல டெலகாம் கம்பெனி..

"Kodiak Networks is the leading advanced wireless systems innovator for GSM and CDMA network operators worldwide. " அப்படீன்னு சொல்றாங்க..

அங்கே உள்ள வேலை வாய்ப்பு பற்றிய விபரம்.

பதவி : சீனியர் டெக்னிகல் மேனேஜர்
அனுபவம் : 10 - 12 ஆண்டுகள்
விவரம் : 12+ yrs of hands-on, technical system development and architecture experience. Strong background in defining system architectures and implementing VOIP or any transaction based telecom software products. Must have thorough understanding of performance efficient software design principles. Must have experience in leading highly skilled design team members.Priming System design activities which include translating feature requirements into system requirements, putting high level system blocks, defining interfaces across subsystems, interfacing with different peer architecture, development and Validation teams.


பதவி : டெஸ்ட் லீடர்
அனுபவம் : 5 - 6 ஆண்டுகள்
விவரம் : Strong Testing skills, Do…

ஆர் யூ எ பேச்சுலர் ?

இது என்னுடைய கம்யூனிகேஷன் கிளாஸில் நடந்த மேட்டர்..

முதல் நாள் வகுப்பறையில் அனைவரும் தங்களை பற்றிய சொந்த அறிமுகம் செய்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டது...டீச்சர் ஒரு கர்நாடகா பெண்..

அவரவர்கள் அறிமுகத்தை செய்துகொண்டிருந்தார்கள்...நமது நண்பரின் முறை வந்தது...

அவர் அயம் கந்தசாமி, கம்மிங் பிரம் காரைக்குடி என்று ஆரம்பித்தார்...

நம் டீச்சர் இடையில் புகுந்து செய்த ஒரு குட்டிகலாட்டாவால் வந்தது வினை..அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க...நான் தொடந்து 2 நிமிடம் சிரித்து, டீச்சரிடம் வார்னிங் பெறும்படி ஆனது...

விஷயம் இதுதான்...

நம் நன்பர் சுய அறிமுகம் செய்துகொ(ல்)ண்டிருந்தபோது...

ஆர் யூ எ பேச்சுலர் (Bachelor) என்று கேட்டுத்தொலைந்தார் டீச்சர்...

என்ன எழவு புரிந்ததோ, நம்மாள்....நோ நோ மேடம்..அயம் செட்டியார்...என்றார்...

நான் அப்போதே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்....டீச்சர் என்னை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு...நன்பரை பார்த்து...

வாட் ??? செட்டியார்.. ??? என்றார்...

நம்மாளு மூஞ்சியை சீரியசாக வைத்துக்கொண்டு...

நாட்டுக்கோட்டை செட்டியார் மேடம்...என்றார்...

எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு....உங்களுக்கு ??

அய்யோ..விடு'தலை....பின்னூட்டம் போடுவதிலிருந்து...

Image
அய்யோ இன்னும் எத்தனை பின்னூட்டம் தான் போடுவது...விடு'தலை ன்னா கேக்கமாட்டேங்குறாங்களே...

என்னைக்குத்தான் எனக்கு விடுதலை...சரி ராத்திரி முழுக்க கண் முழிச்சு அமெரிக்கா, ஆப்ரிக்கா நேரத்துல எல்லாம் பின்னூட்டம் போடனும்...

இப்போ ஒரு குட்டி தூக்கம் போடலாம்...(விடு'தலை : தேன்கூடு போட்டிகு)

ஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்

ஐகேட் நிறுவனம் (சுட்டி) இளம் பொறியாளர்களை (FRESHERS) வரவேற்க்கிறது...

யார் யார் விண்ணப்பிக்கலாம் ?

B.E (Engineering)

எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் (2003 மற்றும் 2004 பேட்ச்)
கம்ப்யூட்டர் சைன்ஸ் / இன்போடெக் (IT) / எலக்ட்ரானிக்ஸ் ( 2006 பேட்ச்)

B.C.A

2006 பேட்ச் ஆக இருக்கவேண்டும்

B.Sc / M.Sc ( Computer Science)

கம்ப்யூட்டர் சைன்ஸ் / இன்போடெக் (IT) ( 2006 பேட்ச் ஆக இருக்கவேண்டும்)

முக்கியமான விஷயம்

60% மார்க்குக்கு மேல வாங்கி இருக்கனும்

எங்கே இண்டர்வியூ

பெங்களூர் / சென்னை / ஹைதராபாத்

எப்போ இண்டர்வியூ

முதல் கட்ட தேர்வு : நவம்பர் 11 மற்றும் 12
இரண்டாம் கட்ட தேர்வு : நவம்பர் 25 & 26

எங்கே அனுப்ப வேண்டும்

ereferral@igate.com

தகவல் கொடுத்த ராஜுக்கு நன்றி....

வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்

அன்பின் வலைபதிவர்களே...

ஒரு சிறு முயற்ச்சியாக வேலைவாய்ப்பு - கல்வி போன்ற தகவல்களை அளிக்க ஒரு தனிப்பதிவு தொடங்கி இருக்கிறேன்...

பதிவு இங்கே

என்ன எழுதலாம் என்று கேட்டு ஒரு பதிவு இட்டுள்ளேன்..

உங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதை சொல்லும் இந்த பதிவும் இருக்கிறது...

விரைவாக உங்கள் கருத்துக்களை தாருங்கள், நிறைவாக ஏதாவது செய்யலாம்...

அன்புடன்,
செந்தழல் ரவி

சொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்

ONSITE POSITIONS

1. IBM TIVOLI - SYSTEM ADMINISTRATOR
NO. OF POSITION: 1
Location: Germany.

2. Z/OS- SYSTEM ADMINISTRATOR
NO. OF POSITION: 1
Location: Germany

ONSITE & OFFSHORE LATER
1. SR. AIX SYSTEM ADMINISTRATOR
NO. OF POSITION: 3

Location: Germany/Hyderabad
2. MIDDLEWARE ADMINISTRATOR
NO. OF POSITION: 3

Location: Hyderabad/Germany
3. SOLARIS – SYSTEM ADMINISTRATOR
NO. OF POSITION: 4
Location: Hyderabad/Germany.

OFFSHORE POSITIONS

1. JR. AIX SYSTEM ADMINISTRATOR 3
NO. OF POSITION: 1
Location: Hyderabad.

2. DATABASE ADMINISTRATOR- DB2 UDB FOR LUW
NO. OF POSITION: 2
Location: Hyderabad

3. DATABASE ADMINISTRATOR
NO. OF POSITION: 1
Location: Hyderabad

3. NETAPP ADMINISTRATOR
NO. OF POSITION: 1
Location: Hyderabad.

4. SOLARIS 10- SYSTEM ADMINISTRATOR
NO. OF POSITION: 2
Location: Hyderabad

5. TSM - ADMINISTRATOR
NO. OF POSITION: 1
Location: Hyderabad

6. WINDOWS SERVER- ADMINISTRATOR
NO. OF POSITION: 3
Location: Hyderabad

முழுமையான விவரங்கள் தனிகோப்பாக இங்கே கொடுத்துள்ளேன்..

http://www.evilshare.com/cf154cb8-b604-1029-9802…

யூனிஸிஸ் வேலைவாய்ப்புகள் !!!

யூனிஸிஸ் நிறுவண SDG குரூப்பில் சிறந்த ஓப்பனிங்ஸ்..

பணி : .NET, C# and Windows Forms.
எத்தனை பேர் தேவை : 12
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : .Architects and developers: Linux Internals with exposure to data centre environment and worked on High availability and/or business continuity Support: Linux internals and Data storage products experience such as EMC, Hitachi
எத்தனை பேர் தேவை : 9
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : Postgre SQL, Oracle DBA knowledge, Linux, scripting knowledge (C/C++)
எத்தனை பேர் தேவை : 4
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : Postgre SQL, Oracle DBA knowledge, Linux, scripting knowledge (C/C++) எத்தனை பேர் தேவை : 4
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5

பணி : Java, JRE அல்லது Java/J2EE, Eclipse IDE usage
எத்தனை பேர் தேவை : 10
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5

பணி : Testers - Manual and automated, Experience in Java installation, Database knowledge and experiene in …

MS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....

பர்ஸ்ட் அமெரிக்கன் கார்ப், அதிரடியான ஒரு வேலை வாய்ப்பு...

பணி : MS SQL Server ( Programing and Database Maintenence)

தகுதி : இந்த துறையில் இரண்டு வருட அனுபவம்

சம்பளம் : வருடத்திற்க்கு 6 லட்சம், மற்றும் இதர பெனிபிட்ஸ்.

எங்கே அனுப்பவேண்டும் : kramanathan@firstam.com ( ராமநாதன்)

சப்ஜெக்ட் லைனில் "Ref by Ravi" அப்டீன்னு மட்டும் போட்ருங்க...

இது ஒரு அருமையான வாய்ப்பு....உங்க நன்பர்கள் யாராவது பணி மாற விரும்பினால் தெரியப்படுத்துங்க...

நோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்

நோக்கியா ( பெங்களூர் மற்றும் கிரேட்டர் நோய்டாவில் உள்ள பணிவாய்ப்புகள் கீழே..

இவை தவிர,

1. RF Development Engineers
2. RF Test Engieers

அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்...(மொபைல் டெஸ்ட் எஞ்சினீயர்கள்)...
பெங்களூர் நோக்கியாவின் தற்போதைய ஆள் பலம் 250. வரும் ஜனவரிக்குள் 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள்..ஆகவே அறிவுசார் பணிகளுக்கான தேவைப்பாடு மிக அதிகமாக உள்ளது...

நோக்கியா நிறுவனம் மிக அதிகமாக சம்பளம் அளிக்கும் நிறுவனம். இரண்டு ஆண்டு அனுபவசாலிக்கு 8 லட்சம் வருட சம்பளமாக உள்ளது..

அதே நேரம், வேலை இருந்தால் அலுவலகம் செல், அல்லது வீட்டிலேயே நில் என்ற கொள்கையும் உள்ளது மிகவும் சிறப்பானது...(பிளக்ஸி டைமிங்)...

கீழே உள்ளவை சற்று விரிவாக..

விருப்பம் உள்ளவர்கள்ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு சற்று தெளிவான ஒரு மடலோடு அனுப்பினால் நன்று..

BackEnd_RS
Physical implementation of complex digital blocks & SoC, In Adv ST technologies. This Includes complete Asic flow from Netlist to GDS.
Exp:2 -5 yrs

QA_RS:
-To define, update and deploy QMS compliant with various standards like ISOTS 16949 and CMMI
-Impart tra…

தமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்

அன்பு நன்பர்களே..

சென்னையில் தமிழ் பதிப்புலகில் இரண்டு பணிவாய்ப்புகள் காத்திருக்கிறது..சென்னையில் ஒரு பதிப்பகத்துக்கு...

1. தமிழ் ப்ரூப் ரீடர்...

தமிழ் ப்ரூப் ரீடிங்கில் அனுபவம் இருந்தால் சிறப்பு..இல்லை எனினும், பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ இந்த பணியை செய்ய முன்வரும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் / தமிழார்வலர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்...நல்ல சம்பளம் வழங்க நிறுவனத்தார் தயார்...

2. கணினி நிபுனர் - அடோப் பேஜ்மேக்கர்

அடோப் பேஜ்மேக்கர் மென்பொருளில் தொழில்நுட்ப அறிவை பெற்றிருத்தல் அவசியம்..ஏற்க்கனவே பதிப்பு துறையில் அனுபவம் இருந்தால் சிறப்பு...

இந்த இருபணிகளுக்கும் சி.வி அனுப்பவேண்டிய முகவரி

ravi.antone@gmail.com

இந்த தகவலை தந்த 'தலை' க்கு நன்றி..

zensar புனே : வேலைவாய்ப்பு விவரம்

பதவி விவரங்களை அனுப்பிய பெயர் வெளியிட விருப்பாத நன்பருக்கு நன்றி...

1. Peregrine Developers
Peregrine Developers with 2+ years of relevant experience in
· Asset Center
· Connect It
· Service Center
Good Communication Skills is a must.

Job Code: Peregrine


2. .Net developers

.Net with experience in C#, WinForms &.Net development;
Retail experience will be plus.
Experience : 3 – 5 years
Good Communication skill is a must

Job Code: C#

3. .Net Developers
Senior Developers
1. Minimum Science/Engineering Graduate from Premier Institute (BE/ME/BTech/MTech/BCS/MCS/Full time MCA) with 5+ Years of Justifiable IT Experience.
2. Hands on experience in developing applications on .NET (Web Based as well as Desktop).
3. Must have experience in N-Tier architecture, Distributed Transactions, COM+, Web Services,
Remoting, Authentication and Authorization mechanisms, State Management, Directory Services, Single SignOn, Web Security, Reporting etc.
4. Experience in writing and optimizing stored p…

கேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்

அனைத்து பதவிகளுக்கும் உங்கள் ரெஸ்யூமை அனுப்பவேண்டிய முகவரி...பதவியின் தலைப்பை சப்ஜெக்ட் லைனில் கொடுத்தால் பயனளிக்கும்...

mohandoss.i@gmail.com

DISTRIBUTED SYSTEMS

1) Pega (PRPC) Tech Lead/ Architect with 4+ years experience for Hyderabad Location.2) Pega (PRPC) Developer/ Sr Developers with 1-4 years of experience for Hyderabad Location.

3) Java Senior Developers/ Team Leads with 3-6 years experience for Pune Location.4) Perl Developer with 2-7 years experience for Pune and Hyderabad Location

5) Dot net Architect with 7-10 years experience for Pune and Hyderabad location
6) Unix Tech Architect with 5-10 years experience for Hyderabad location

7) Technical Architect (J2ee) with 8 years of experience for Hyderabad Location.டெஸ்டிங் துறையில்

1) QTP Testers with 2-6 years of experience for Pune and Hyderabad Location

2) Automation Test Lead with 5-8 years of experience for Pune Location.

3) Test Manager with 8-12 years of experience for Pune and Hyderabad Location.

mzIlangovan@kanbay.com

மெயின்பிரேம்…