Showing posts with label தமிழ்ஷ். Show all posts
Showing posts with label தமிழ்ஷ். Show all posts

Friday, March 20, 2009

தமிழ்ஷ் பட்டாம்பூச்சியின் செவ்வி (பேட்டி)


வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...

<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?

தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...

தமிழ்மணம் பற்றி தெரியுமா ?

ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...

உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?

குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...

எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?

சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...

சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...

சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?

தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...

வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?

பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...

பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...

எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?

நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...

தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...

வலையுலகின் எதிர்காலம் என்ன ?

இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...

உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?

தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....

மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...

வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?

கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...

************************************************************************

சகோதரியை தமிழிஷிலும் தமிழ்மணத்திலும் வாக்களித்து வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!

*******
******
*****

Tuesday, December 30, 2008

நன்றி தமிழ்ஷ் !!!!!!!!!

என்னுடைய இந்த பதிவில் தமிழ்ஷ் சுட்டி அளிக்கும் பக்கத்தை கொஞ்சம் எளிமைப்படுத்துதல் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தேன்...

அந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக நான் கேட்டிருந்த மாற்றத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் இணைய தள நிர்வாகம்...

நன்றி !!!!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் அல்லது ஆலோசனை என்ன என்றால், கூகிள் வழி விளம்பரத்துக்காக இணைய தள முதல் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாமே ?

அதில் வரும் தொகையை கொண்டு வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் அல்லது தமிழ் சமூகத்திற்கு ஏதாவது பயன் அளிக்கும் உதவிகள் செய்யலாமே ?



ஏன் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி ஏதாவது ஒரு கிராம நூலகத்துக்கோ அல்லது உதவும் கரங்கள் / சிவானந்த குருகுலம் போன்ற அமைப்புகளுக்கு தரலாமே ?

இந்த வேண்டுகோளை நான் மற்ற திரட்டிகள், இணைய தளங்களுக்கும் அவ்வப்போது எழுதுவதுண்டு...

கூகிள் நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் படி, கூகிள் வழி விளம்பரம் செய்பவர்கள் அதில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்யுமாறு வாசகர்களை கேட்கக்கூடாது...!!! இது கூகிள் ஆட்சென்ஸ் விதியாகும்...

படிக்கும் வாசகர்கள் கூகிள் வழி விளம்பரங்களை தாங்களாகவே க்ளிக் செய்யட்டும்...அல்லது இது போன்ற பதிவுகளை படித்து, கூகிள் வழி விளம்பரங்களால் திரட்டிகள் நல்ல செயல்களை செய்கின்றன, போடுடா ரெண்டு க்ளிக்கு என்று அடிக்கடி க்ளிக்கினாலே போதும்...

காதை கிட்ட கொண்டாங்க, நான் உருவாக்கிய ரெண்டு மொக்கை ஆங்கில ப்ளாக் மூலமாக இரண்டு நாட்களில் 20 டாலர் வந்துள்ளது...(இது பற்றி விரிவான தொடர் ஒன்று எழுதலாம் என்று உள்ளேன்)..

அவ்வளவு தான் நான் எழுத நினைத்தது...மீண்டும் ஒருமுறை "நன்றி"...

Sunday, December 28, 2008

தமிழ்ஷ்க்கு ஒரு வேண்டுகோள்

ஒரு வலைப்பதிவை அல்லது சுட்டியை கொண்டுவந்து தமிழிஷில் சமர்ப்பிக்கும்போது முதலில் ப்ரிவியூ செய்துவிட்டு அதன் பிறகு சப்மிட் பட்டன் தரவேண்டியதாக உள்ளது...





இதனால் இரண்டு முறை க்ளிக் செய்யவேண்டியதாக உள்ளது, எங்களின் நேரமும் விரயமாகிறது...

மேலும் பல்வேறு வேலிடேஷன்களை ஏற்கனவே நீங்கள் வைத்துவிட்டதால் (கேட்டகிரியினை தேர்வு செய்யாமல் ப்ரிவியூ செய்யமுடியாது, தலைப்பை உள்ளீடு செய்யாமலும் ப்ரிவியூ செய்யமுடியாது போன்றவை) இந்த இடத்தில் ஒரு சப்மிட் பட்டனையும் வைத்துவிடுங்களேன்..

இதனால் நேரமும் மிச்சமாகும், அதிக சுட்டிகளை தரும் ஆர்வமும் வரும்..

உங்களுக்கு சொல்லிக்கிட்டு வேற இருக்கனுமா ? ஓட்ட குத்துங்க மக்கா !!!

கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...

*****
****
***
**
*

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....