Showing posts with label ரிலையன்ஸ் ஓல்ட். Show all posts
Showing posts with label ரிலையன்ஸ் ஓல்ட். Show all posts

Friday, October 03, 2008

வீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்)

முதலில் ஒரு கவிதை

பேருந்து நிறுத்தம்
குப்பைத்தொட்டி
எச்சில் இலை
நான்
நீ
உன் கூச்சல் உனக்கு
என் கூச்சல் எனக்கு
இருவருடைய பேருந்து எண் என்னவோ 47D


*** தமிழில் மிகப்பெரிய சிந்தனையாளர் - ஏஞ்சலீனா கோவிந்தசாமீ aka (அஞ்சலை) ***


இன்று இரவு ஏழு மணி வாக்கில் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு நானும் தங்கமணியும் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு சென்றிருந்தோம்...இப்போதெல்லாம் எல்லாவற்றையும் பாக்கிங் செய்து விற்றுவிடுகிறார்கள்...பூண்டு, வெங்காயம் உட்பட - உரித்து - பாலித்தீன் கவர்களில் கட்டி - இரண்டு மூன்று ரூபாய்கள் அதிகம் தான், விற்றுவிடுகிறார்கள்...

நம்மை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் முயற்சியா அல்லது நமது சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியா தெரியவில்லை...

அன்னாசிப்பழத்தை (சின்ன ன் ஆ அல்லது பெரிய ண் ஆ தெரியவில்லை அன்னாசிக்கு) அப்படித்தான் டப்பாவில் அடைத்து பதினைந்து உரூபாய்க்கு விற்றார்கள்...

அது மற்றும் மாதுளையையும் உரித்து பெட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள்...இது முப்பத்து இரண்டு ரூபாய்...

வாங்கினோம், அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து லைட்டாக திறந்தபோதே உஷார் ஆகியிருக்கவேண்டும் நான்...

விதி வலியது...

படபடவென நாலைந்து துண்டங்களை உள்ளே தள்ளிவிட்டிருந்தேன்...

தங்கமணியோ, எனக்கு பழம் வேண்டாம் என்று பக்கத்து கடையில் வாங்கிய பப்ஸ் ஒன்றை பதம் பார்க்க ஆரம்பித்தார்...இப்படித்தான்...எனக்கு சோதனையான காலகட்டங்களில் தங்கமணி மட்டும் தப்பிவிடுவார்...

ஐந்தே நிமிடம்...லைட்டாக உமட்டிக்கொண்டுவர ஆரம்பித்தது...

ஏம்மா இதை கொஞ்சம் மோந்து பாரு, லைட்டா ஏதோ வாசனை வர்ராமாதிரி இருக்குல்ல ?

அட ஆமாங்க...கெட்டுப்போச்சு...வாசனை வரலையா ? இதை எப்படீங்க திங்கறீங்க ? உவ்வே...என்று வாந்தி எடுப்பது போல ஒரு ஆக்சன் காட்டுகிறார்...

எனக்கு உண்மையிலேயே எகிறிக்கொண்டு வருகிறது...

வாம்மா போய் ரிட்டன் பண்ணலாம் என்று வேகவேகமாக போய் காரை எடுத்து ஸ்டார்ட் செய்கிறேன்...

ஏற்கனவே லக்கிலூக் / அதிஷா / வரவணையான் இதே ரிலையன்ஸ் ப்ரஷ் எதிரே தங்கியிருந்தபோது சைடிஷ் என்ற பெயரில் வெறும் எக்ஸ்பையர்டு மிக்சர் பொட்டலங்களை கொடுத்த கோபமும் கொஞ்சம் பாக்கியிருந்தது...பண்ணிரண்டு மணிக்கு எங்கேயிருந்து போய் அதனை மாற்ற ? ரிலையன்ஸ் பனியன் போட்ட சனியன்கள்...!!!

அங்கே சென்று குதித்த குதி !!! நான் தமிழில், தங்கமணி கன்னட மொழியில்...அய்யோ அய்யா இதுக்கு ஈடா எதையாவது எடுத்துக்கிட்டு போயிரு ராசா என்று கெஞ்சும் வகையில் வந்துவிட்டார்கள் அம்பானியின் அடிப்பொடிகள்...

இதே அம்பானி என்னை ஏமாற்றி போன் பில் என்ற பெயரில் மூன்றாயிரம் திருடியவன்...அந்த காசில் தான் மும்பையில் கட்டும் பல கோடி அடுக்கு மாடி வீட்டுக்கு செங்கல் வாங்கியிருப்பான் ராஸ்கோல். அது தனி கதை...பின்னால் எழுதுகிறேன்...

ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி முப்பது வினாடிகளுக்குள் !!!

ஏதோ ஒரு அழுக்கு பின்னவீனத்துவ எழுத்தை படித்தவுடன் வரும் உணர்ச்சிங்க !!! அட தெரியலியா ?

உவ்வ்வே !!!!!!!!!!!!!!!

தங்கமணி : ஏங்க வீட்டுக்குள்ள வந்து வாந்தி எடுக்கக்கூடாதா ?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....