Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, July 29, 2010

கார்க்கி - ஜெகநாதன் - ஆதி - லைனக்ஸ் பெங்குவின்

  அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இவர்களில் என்ன ஒற்றுமை வேற்றுமை ?

லைனக்ஸ் பெங்குவின் மட்டும்தான் குளிர் கண்ணாடி போட்டு உதார் விடலை. இந்த போஸ்டில் 12 மணிக்கு மேல கும்மி அடிப்பவர்களுக்கு ஒரே ஒரு பொற்காசு வால்பையன் ஆண்(ன்)லைனில் ஆர்டர் செய்வார். அல்லது விஜய் ஆதிராஜ் புதிதாக தோன்றும் டாய்லெட் க்ளீனர் ஒரு டஜன் வழங்கப்படும். இல்லை என்றால் கார்க்கி ஆதியின் நீலகிரி பயணத்தில் நான்காவது நபராக (ட்ரைவர்) சேர்த்துக்கொள்ளப்படும். இதன் எதிர்பதிவு போடப்பட்டால் அதில் தமிழ்மணம் கார்க்கி பெயரை கூர்க்கி என்று காட்டுமாறு admin @ tamilmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Monday, September 22, 2008

என்னுடைய தனிப்பட்ட வங்கி கணக்கு ஒரு கோடியை தாண்டியது

இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கை நோண்டிக்கொண்டிருந்தபோது சரி, இந்த கணக்கை துவங்கியதில் இருந்து எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று பார்த்தபோது வந்த வினை...

மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது...இதை ஏன் சொல்கிறேன் என்பது பின்னால்...

வேறு சில விஷயம் பார்க்கலாம் : ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்...அடுத்த பாகம் எப்போ போடுவீங்க எப்போ போடுவீங்க என்று கேட்டுக்கொண்டேயிருந்த அனைத்து (???) ரசிகப்பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி !!! (அசத்த/கலக்க போவது யாருல இப்படித்தான் ஸ்டீரிடோ டைப்ல முடிக்கறானுங்க)

வடிவேலு உணர்ச்சி வசப்பட்டு விட்ட அறிக்கை நல்ல காமெடி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா என்று நாளைக்கு கல்லு உடாமே இருந்தா சரி...

சின்னப்பையன் சமையல் குறிப்பு மொக்கை போட்டுட்டார், நல்லாருக்கு (நான் படிச்சது தலைப்ப மட்டும்தான்) , எனக்கு மிகவும் பிடித்த பொட்டொகிராபர் மிஸ்டர் மோகந்தாஸ் இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கார்.

நரசிம் சார் ஏதோ கவிதை ட்ரை பண்ணியிருக்கார், பாருங்களேன்...!!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு மனம் விட்டு சிரிச்ச பதிவு அபி அப்பாவோட சந்துரு பதிவு. (குசும்பா, லிங்க் காணோம், கொஞ்சம் தேடி போடுறியா )

ஆங், மேட்டருக்கு வாரேன்...

மருதமலையில பரிசல்காரன் பொரி வாங்கி கொடுத்தார். பத்து ரூபாய்னு நெனைக்கிறேன்...அந்த காசை கையில வாங்கியிருந்திருக்கலாம்...ஹூம்....!!

இதை ஏன் இங்க சொல்றேங்கறீங்களா ?

அக்கவுண்டுல இப்ப நானுத்து நாப்பத்தஞ்சு ரூவாத்தான் இருக்கு, காருக்கு பெட்ரோல் போடனும், ஏற்கனவே மஞ்ச லைட் எரியுது, யாராவது ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணீங்கன்னா ஐநூறா ட்ரா பண்ணீருவேன்...



எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்...

யார் இவர் ? பின்னூட்டத்தில் சொல்லுங்க ?

Saturday, July 12, 2008

தமிழ் வலைப்பதிவு for டம்மீஸ் !!!

முதலில் நீங்கள் பழைய வலைப்பதிவரா, அல்லது புதிய வலைப்பதிவரா என்பதை கண்டுபிடித்துவிட்டு எப்படி வலைப்பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்...

அ மற்றும் ஆ என்றால் என்ன என்பதை கடைசியில் பார்க்கலாம்...

செக்-பாய்ண்ட் - 1

தமிழ்மணத்தை துவக்கியது காசி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...

செக்-பாய்ண்ட் - 2

தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்...

தமிழ்மணம் ஆப்ரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 3

லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

லக்கிலூக் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், செவன் அப் குடித்தாலே மப்பு ஏறக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 4

பார்ப்பணீயம், மீபொருண்மை, பெண்-ஈயம், பின்நவீனத்துவம், பொதுவெளி, வர்க்கபோராட்டம், போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இதெல்லாம் இன்னாது என்று கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 5

ஆடுமாடு, பைத்தியம், கூடுதுறை போன்ற வஸ்துக்கள் என்னவென்று தெரிந்தால் நீங்கள் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

மாடு என்பது மேயும், பைத்தியம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் போன்ற பொதுவான பதில்களை நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 6

சூடான இடுகையில் வர, "தசாவதாரம்" என்று தலலப்பு வைக்கவேண்டும் என்று தெரிந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

பக்கம் பக்கமாக ஆராய்ச்சி, பயணக்கட்டுரை, சோதிடம் என்று நல்ல பதிவுகள் போட்டால் உங்கள் பதிவை பலர் வாசிப்பார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 7

உண்மைத்தமிழன் பதிவை ஓப்பன் செய்ய ஒன்னே முக்கா மணிநேரமும், படிக்க பதினாறு மணி நேரமும் ஆகும் என்ற ரகசியம் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 8

நரேந்திர மோடி, சோ, குருமூர்த்தி, இஸ்ரேல் போன்றவற்றை ஆதரிப்பவர் ஒரு க்ராஸ் பெல்ட் என்று ஜஸ்ட் லைக் தட் நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

கராத்தேயில் ப்ளாக் பெல்ட் தானே தருகிறார்கள், அது என்ன க்ராஸ் பெல்ட் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 9

உள்குத்து, கும்மி, சுண்டக்கஞ்சி, மொக்கை, டவுஸர் கிழிந்து தாவு தீருவது, ஏஞ்சலினா கோவிந்தசாமி, கேத்தரின் பழனியம்மாள், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்ற பதங்களையும் அவற்றின் பயன்களையும் நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இவை எல்லாம் தமிழில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

இப்போது பதில்கள்...

அ - பழைய
ஆ - புதிய]

நன்றாக இருந்தால் இந்த விண்ணர் கையை அமுங்குங்க !!!

Tuesday, July 08, 2008

நான் கொரியாவில் நேஷனல் பார்ட்டியைத்தான் ஆதரிக்கிறேன்...

ஜப்பான் பற்றியும் ஜிங்கிலி கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது கொரியா முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று காண்டு கஜேந்திரன் கத்துகிறான்).

அப்பதிவில் உள்ளதுபோல் இங்கேயும் என்னை சப்பை மூக்கு கொரியனாகவே கருதிக்கொண்டு எழுதுகிறேன் (பச்சையாக சாப்பிட்ட மீன் பற்றி சொல்லமாட்டேன்..அது நிறைய பேருக்கு உவ்வே ஏற்படுத்திவிடும்)..

கொரியாவில் கிராண்ட் நேஷனல் பார்ட்டி மற்றும் யுனைட்டட் நியூ டெமாக்கிரட்டிக் பார்ட்டி ஆகியவை இருந்தாலும் கிரியேட்டிவ் கொரியா பார்ட்டி என்று ஒரு பாட்டி...ச்ச்சே பார்ட்டி உண்டு...அந்த கட்டியின்...ச்சே கட்சியின் மூன் கூக் கியூன் தவிர மீதிப்பேர் முப்பது ஓட்டுக்கு கம்மியாகத்தான் வாங்கியுள்ளார்கள்...அதனால் அதுகுறித்து இப்போது பேசவேண்டாம்...(எப்போது பேசினால் என்ன ? புரியவா போவுது ?)

நான் ஜப்பான் விடயத்தில் கூறியதுபோல கிராண்ட் நேஷனல் பார்ட்டி ஆச்சி...ச்சே ஆட்சி காலத்தில் கொரியா பல பெருமைகளை அடைந்தது...மனதுக்கு வருபவர்கள் பிம்பிலிக்கா பிலாப்பி, மற்றும் மாமா பிஸ்கோத்து...இல்லை இல்லை...லீ இன் ஜீ மற்றும் ஹக் ஹுக் ஹெக் ஜங்...

லீ இஞ்சி பற்றி இப்போது கூறுவேன்...இல்லை கூறமாட்டேன்...இல்லை இல்லை கூறுவேன்...அதுக்கு முன்னால அப்பாலிக்கா ஒரு டைவர்ஸ்..இல்ல..டைவர்ஷன்.....

"yes Mr.Mokkai's an-yong-ha-sim-ni-ka", "No Mr.Mokkai yo mokkai's kam- sa - mi - da" போன்ற கொரிய சீரியல்களை பதிவர்கள் பலர் பார்த்திருப்பார்கள்..(யோவ் நான் எப்பய்யா அதெல்லாம் பார்த்தேன் என்று கேக்கப்படாது ஆமாம்)

அந்த சீரியலில் ஆட்டுக்கால் சூப்பை மந்திரிகளும் பிரதமரும் போட்டி போட்டுக்கொண்டு வெவித்து திங்கும்போது சூப்பராக இருக்கும்...

லீ இஞ்சி, குடி கஞ்சி ஆகியவர்களை தவிர வேறு யாரும் என் கண்ணில் படவில்லை...( அவங்க எப்படி கண்ணில் படுவாங்க...அவுங்க என்ன தூசா, துரும்பா ? )

லீ இஞ்சி அமெரிக்காவுக்கு ஜால்ரா போட்டு வட கொரியா அழிவுக்கு காரணமாக இருந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கூறுவேன்...(எவனாவது அழிஞ்சா மகிழ்ச்சிதானே )

லீ இஞ்சி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கி நல்ல துட்டு சம்பாதித்தார்...மேலும் அவரது காலத்தில் சியோலில் இருந்து பூசான் செல்லும் பாதையில் மொத்த வரிவசூல் பதினைந்து மில்லியன் கொரியன் வான் (WON - கொரியா காசு) ஆனால் அதே நேரத்தில் பூசான் பக்கத்தில் மொத்த வரிவசூல் பண்ணிரண்டு மில்லியன் வான் மட்டுமே...

இதில் இருந்தே தெரியவில்லையா ? லீ இஞ்சி எப்படிப்பட்ட நிர்வாகி, எவ்வளவு சிறப்பான ஆட்சியை தந்தார் என்று ?

லீ இஞ்சி அவர்களுக்கு ஜுரு ஜூர்த்தி என்று ஒரு ஆலோசகர் கூட இருந்தார்...அவர் சிறப்பாக செயல்பட்டதால் கொரியாவில் எல்லா இடங்களிலும் விளக்கு எரிந்தது, பகலில் கூட...

பதிவை பப்ளிஷ் செய்தபிறகு இன்று வாடிக்கையாளர் அனுப்பிய வாடகைக்காரில் கஸான் தாங் (KASAN DONG) ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று காய்கறி வாங்கவேண்டும்...

அதுவரை கணிணியை திறந்து வைத்தால் காற்றுபோய் விடும் என்பதால் கணினியை மூடிவிட்டு, இந்த பதிவை பப்ளிஷ் செய்த கையோடு, பதிவர் லக்கி அவர்களிடம் என்னுடைய பதிவை மீள் பதிவாக அவர் பதிவில் போடுமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டு, கிளம்புகிறேன்...

அடுத்த பதிவு, சீனாவை பற்றியது...சீனாவில் நான் எந்த கட்சியை ஆதரிப்பேன் என்று யூகமாக கூறுபவர்களுக்கு ஒரு செட் சாரைப்பாம்பு வறுவல் அனுப்பத்தயார்...

வளர்க மொக்கை...!!!

Thursday, June 19, 2008

அய்யோ தாங்கலையே !!!!

************

நடிகர் கார்த்திக் "நாடாளும் மக்கள் கட்சி"ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காராம்...

ஏன் சார், மீதிப்பேர் எல்லாம் காட்ட ஆள்றதுக்கா கட்சி ஆரம்பிக்கறாங்க...

************

சாய் பாபா பொதுக்கூட்டத்துக்கு யாரோ வெடி குண்டு மிரட்டல் விடுத்துட்டாங்களாம்...அதுக்கு மத்திய அமைச்சரே அங்கன போயி "சாமி, சாமி" வீ வில் கிவ் யூ பாது'காப்பு' சாமீன்னாராம்...

ஏங்க, சாமீக்கு தன்னை காப்பாத்திக்கத்தெரியாதா ? இதுக்கா எல்லா வெளிநாட்லருந்தும் புளிசாதமும், பொட்டியும் கட்டிக்கினு வார்றானுங்க ?

************

24 மணி நேர செய்தி சேனலை தொடங்குதாம் ராஜ் டிவி...

ஆமா நீங்க தொடங்கீட்டாலும்..!!!

************

ஷெல்'லுல பெட்ரோல் 68 ரூவாயாமே ? ஷெல் சூப்பர் பெட்ரோல் மட்டும் தான் போடுறான். அப்போ...செய்யவேண்டியது என்ன ? ப்ளான் இது தான்...உடனே ஒரு நல்ல சைக்கிள் வாங்கிர வேண்டியது தான்...!!! வீட்டை ஆபீஸ் பக்கத்துல மாத்திர வேண்டியது தான்...காரை பர்மணட் பார்க்கிங்ல போட்டுட்டு, பைக்கை விட்ல நிறுத்தினா முடிஞ்சது...எக்ஸஸைசுக்கு எக்ஸஸைசும் ஆச்சு...பெட்ரோல் செலவும் மீதியாச்சு :) எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும் ( வடிவேல் டோனில் படிக்கவும்)

*************

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து கருத்து சொல்லுங்க என்று எல்லா பதிவுலயும் ஒருத்தர் கேட்டிருக்கார். எனக்கு தெரிஞ்சு ஒரே பின்னூட்டத்தை அதிகபட்ச பதிவுகள்ல காப்பி பேஸ்ட் செய்த சாதனையை அவருக்கு கொடுக்கலாம்..

*************

www.craigslist.com பத்தி உங்களுக்கு தெரியுமா ?

தெரியலன்னா அது என்னன்னு போய் தெரிஞ்சுக்கோங்க...எல்லாத்துக்கும் ஸ்பூன் பீடிங் செய்யமுடியாது ஆமா...

*************

அனைத்து மதத்தினர் ஆதரவு இருந்தா ராமர் கோயில் கட்டிருவேன் அப்படீங்கறார் அத்வானி..

நோ-கமெண்ட்ஸ்... (கொத்தனாருங்க, மேஸ்திரிங்க ஆதரவு இருந்தாத்தான் கட்டமுடியும்)

*************

ஜே.ஜே சில குறிப்புகள் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு நினைச்சு தான் இதுவரைக்கும் படிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா திடீர்னு வால்பையன் ஒரு குண்டை தூக்கி போடுறாரு...ஜே.ஜேன்னு யாருமே இல்லையாமே ? அது ஒரு கதையாமே ? அமரர்.சுந்தர ராமசாமி ? என்னைய வச்சு காமெடி கீமடி பண்ணலையே நீங்க ?

அப்றம் வரேன்.


************

Wednesday, June 18, 2008

செவ்வாயில் ஐஸ் !!!

செவ்வாயில் ஐஸ் இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை இந்த படங்கள் காட்டுகிறது...



இது...



இதுவும்...



அட இதுவுந்தாங்க...



மெய்யாலுமே செவ்வாயில ஐஸ் இருக்காமே...அதை கேள்விப்பட்டு இப்படி ஒரு மொக்கையை போட்டுக்கிடேன்..

இப்ப எல்லாரும் மொக்கை மொக்கைன்னு வந்துட்டீங்களே, பழைய மொக்கை பதிவரான என்னுடைய மொக்கைய நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் கொஞ்சம் கம்ம்ம்னும் கீறேன்...!!

Tuesday, December 18, 2007

மொக்கை விருதுகள் 2007

செந்தழல் ரவியுடன் வழக்கமாக சுண்டக்கஞ்சி அருந்தும் சுகுணா, வரவணை, லக்கி ஆகியோருடன் புதிய நன்பராக முட்டம் சின்னப்பதாஸ் மற்றும் ஸ்டாஸி ஏழுமலை....மெரினா பீச்சில் சுண்டல் சாப்பிடுவதாக முடிவு செய்யப்படுகிறது...

எல்லாருக்கும் போன் பண்ணிச் சொல்லிய பிறகும் ஆறு மணிக்கு வரவேண்டிய மொக்கைக்கு ஏழுமலை மட்டுமே வந்திருக்க, லைட்டாக பேச்சுக்கொடுக்கிறேன்...

செந்தழல்: வாங்க ஏழு...ஏது இந்தப்பக்கம் ? சேலத்துல சேவை செய்யறதா கேள்விப்பட்டேனே ? என்ன முதியோர் இல்லம் ஏதாவது ஆரம்பிச்சிருக்கீங்களா ?

ஏழுமலை: ம்ஹும்...அனில் சேமியா டிஸ்ட்ரிபூட்டரா இருக்கேன்...முதியோர் இல்லம் நடத்துறேன்னு சொன்னவன் மனிதனா மிருகமா ?
செந்தழல்: என்ன சார்...ஏழுமலைன்னு சாமி பேர் வெச்சிருக்கீங்க...மிருகம் பட டைரக்டர் 'சாமி' மாதிரி அடிக்கடி சூடாகறீங்களே ? நீங்க டிஸ்டிபூட்டர் இல்ல...பொறுக்கி...

ஏழுமலை: டேய்...நீ கொழைந்தை...ஏழாவது படிக்கும்போது ஈமெயில் அணுப்பினவன் நானு...என்னையா பொறுக்கிங்கறே ?

செந்தழல்: சார்...ஏன் சார் டென்ஷனாகிறீங்க...ச்ச்ச்சும்மா...ஒரு எதுகை மோனைக்கு சார்...உங்களுக்கு இப்பவே நாப்பது வயசு இருக்கும்...நீங்க ஏழாவது படிக்கும்போது ஈமெயிலே வரலையே ? ஏதாவது "டெக்னிக்கல் பால்ட்" மேட்டர்ல 'குசும்பா' டூப்படிக்கறீங்களோ ??

ஏழுமலை: டாடாடாய்....என்னை மிருகமாக்கிராத...

செந்தழல்: நீங்க இப்பவே அப்படித்தான் இருக்கீங்க :)))))) (ஸ்மைலி) - சரி வாங்க சார் மீதி பேரை தேடுவோம்...

ஏழுமலை : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...ஒட்டுற வரைக்கும் ஓட்டுங்க...அப்புறம் பொது விஷயம் பேசுங்க...தலைவலிடா சாமியோவ்...

(டங்கென எண்ட்ரியாகிறார் லக்கி...!!!)

லக்கி : நான் டெல்லிக்கு போனேனா...அங்க எனக்கு ஒரு விருது கொடுத்தாங்க...நான் வாங்காம வந்துட்டேன்...

செந்தழல் : என்ன வந்ததும் வராததுமா விருது பேருந்துன்னுக்கிட்டு...என்ன மேட்டர்...தலையும் புரியல வாலும் புரியல...

லக்கி : என்ன வவ்வால் புரியலையா ?

கொய்யனார்: இதுக்கு நான் பின்னவீனத்துவ பாணியில ஒரு கதை எழுதட்டுமா ?

செந்தழல்: யோவ் யாருய்யா நீ ? சம்மன் இல்லாம ஆஜராகுற ?

கொய்யனார் : சுண்டல் வாங்குறீங்களா சார் ?

செந்தழல் : அதெல்லாம் ஒன்னும் வேனாம்...ஏழுமலை சார்...உங்களுக்கு சுண்டல் ?

ஏழுமலை: இல்ல வேணாம்..இப்பத்தான் குக்கர் நிறைய இடியாப்பம் சாப்பிட்டுட்டு வந்தேன்...

வரவணை: எச்சக்கையால காக்கா ஓட்டாதவனுங்க எடது கையால ஏரோப்பிளேனா ஓட்டப்போறானுங்க ?

செந்தழல் : வரவணை, எப்ப வந்தீங்க ? நாங்க கும்பல(a) உக்காந்திருக்கோம், பின்னால என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க ?

வரவணை : என்னுடைய சமையல் கட்டு பதிவுக்கு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கேன்...தூய்மையான இடமே இல்ல...

அதுக்கு தோதா நீங்க பீச்சுக்கு கூப்டீங்க...வந்துட்டேன்...பொட்டிக்கடை கூட பாண்டிச்சேரில மாஸ் ஹோட்டல்ல தான் இருக்காராம்...நம்ம மொக்கை கூட்டம் முடிஞ்சதும் அப்படியே ஈஸியார் ரோட்ல காரை திருப்பப்போறேன்...

செந்தழல்: என்னது ? இன்னும் பொட்டிக்கடை பாண்டிச்சேரிய உட்டு போவலியா ? பட்டறை ஒம்போதாந்தேதி...பதினெட்டாந்தேதி வரைக்கும் ரூம் போட்டு குடிக்குறானா ?

சுகுணா திவாகர்: அவன் ரூம் போட்டு குடிக்கறது இருக்கட்டும்...என்னை எதுக்கு போன் போட்டு வரச்சொன்னே ? ஒரு மாசமா போனையும் கானோம் ஆளையும் கானோம்...எங்க போன...

செந்தழல் : வாங்க சுகுணா, வந்துட்டீங்களா....எல்லாரும் வரட்டும் மேட்டர சொல்லலாம்னு பார்த்தேன்...

லக்கி: இன்னும் யார் வரனும் ?

செந்தழல்: நாப்பதாயிரம் ரூபா கேமரா வெச்சிருக்க சின்னப்பதாஸ் வரனும்...அவர் இப்பத்தான் கடல் அலையை அலை மேல நின்னு ஜூம்ல போட்டோ புடிக்க போயிருக்கார்...

ஏழுமலை: யோவ்...உன்னை எல்லாம் மதிச்சு இவ்ளோ தூரம் வந்ததே பெரிய விஷயம்....இப்ப என்ன விஷயம்னு ஒழுங்கு மரியாதையா சொல்லல...கடிச்சு வெச்சுருவேன்...

செந்தழல்: இன்னும் அஞ்சு நிமிசம் பார்க்கலாமே ப்ளீஸ்...

லக்கி: சலோ சலோ, டீக்கே...

வரவணை : பரவால்ல சொல்லு ரவி...

செந்தழல் : ஆக்சுவலி மொக்கை அவார்ட்ஸ் 2007 அப்படீன்னு தரலாம்னு இருக்கேன்...அதுக்கு நடுவர்களா நீங்க எல்லாரும் இருக்கனும்...

எல்லாரும் கொலைவெறியுடன் ரவியை பார்க்க...!!!!! ( தொடரும் )

பி.கு : டேய் இந்தமாதிரி எத்தனை முறை தொடரும் போட்டு ஏமாத்துவ...எப்பத்தான் முழுசா எழுதப்போற...என்று கேட்பவர்கள் மன்னிக்க...ஆணித்தொல்லை...!!!

Tuesday, March 13, 2007

ஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு

எல்லாருக்கும் வணக்கம்......உங்கள் எல்லோரோடும் பேசனும் என்று ஒரு திடீர் ஆசை...உங்கள் மொபைல் எண்ணையோ / லேண்டு லைன் எண்ணையோ எனக்கு தாருங்கள்...மொக்கை போட சரியான நேரத்தையும் அளியுங்கள்....குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து அறுக்கிறேன்..

என்னோட நம்பர் +91 98805 97061. இந்த எண்ணுக்கு உங்கள் நம்பரை எஸ்.எம்.எஸ் அடிங்க. அல்லது என்னோட மின்னஞ்சலுக்கு உங்கள் நெம்பரை ஐ.எஸ்.டி கோடு உடன் தாருங்க...


குறிப்பாக

கனடா
சூடான்
சிங்கை
யூ.எஸ்
மற்றும்
துபாய்

நல்லதொரு மொக்கைக்கு தயாராகுங்கள்:))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....