Showing posts with label பகத் பஸ்பர். Show all posts
Showing posts with label பகத் பஸ்பர். Show all posts

Monday, November 02, 2009

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்



வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.

சரி அந்த கதை எதுக்கு இப்போ ? ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ? வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே ? அது போரடித்துவிட்டதா ? அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே ? அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.

ஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே ? இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே ? யார் கண்டா ? நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.

தயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது ?

நீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா ? நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் ? உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே ? உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் ?

உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'

இப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.

நன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....