Friday, June 27, 2008

மஞ்சள், மங்களம், திருமணம்...

மமதி...பளீஸ்...உன்னோட முடிவை சொல்றதுல எதுக்கு இவ்ளோ தயக்கம் ? நீ ஜூனியரா சேர்ந்த வருஷத்திலருந்து கணக்கு வெச்சு பார்த்தா இன்னையோட நாலு வருஷம் ஆகுது என்னோட லவ்வை சொல்லி...

நான் வேலையில சேர்ந்து இந்த ஒரு வருஷத்துல எத்தனை வீக் எண்ட் காலேஜுக்கு வந்திருக்கேன்...

சரி நீ பைனல் இயர்ல இருக்கறதால உன்னை அதிகம் தொந்தரவு செய்ய மனசு வராமத்தான் கேட்டோட போயிக்கிட்டிருக்கேன்...

நான் எந்த விதத்துல உனக்கு பொருத்தம் இல்லன்னு நீ நெனைக்கிற ?

பர்சனல் ப்ராப்ளம் அப்படீன்னு எத்தனை நாளைக்கு ஒரே பொய்யை சொல்லிக்கிட்டிருக்க ?

இனிமேலும் என்னால பொறுமையா இருக்கமுடியாது மமதி...ப்ளீஸ்...என்னை விரும்பறியா இல்லையான்னு ஒரே ஒரு வார்த்தையில பதில் சொல்லிடலாமே...

நோ...குமார்...என்னோட பிரச்சினை உங்களுக்கு தெரியாது...வேண்டாம்னா விட்டுடுங்க...

மமதி, உங்க வீட்ல இருக்க எல்லோரும் உன் மேல பாசமாத்தானே இருக்காங்க...உன்னோட விருப்பப்படியே எல்லாம் செஞ்சு தராங்களே ? நீ என்னை விரும்பறேன்னு சொன்னா அவங்க வேண்டாம்னு சொல்ற டைப் இல்லையே ? உன் டாடிக்கிட்ட வந்து நான் பேசவா ?

வேண்டாம் குமார்...நீங்க வரவேண்டாம்...சட்டென இடைமறித்தாள்...

மமதி ப்ளீஸ்...உன்னோட ரீசன் கரெக்ட்டா இருந்தா நான் கண்டிப்பா அதை அக்ஸப்ட் பண்ணிக்கறேன்...இனிமே உன்னோட லைப்ல கண்டிப்பா வரமாட்டேன்...

மமதியிடம் இருந்து மெல்லிய மவுனம்...அவள் கண்களின் ஓரம் ஈரம்....அலைபுரளும் கேசத்தை மென்மையாக ஒதுக்கியபடி - சின்ன கண்களால் அவனை பார்க்கும் அவளது செய்கையில் அவனால் எதையும் அவளது சங்கடத்தை உணர்ந்துகொள்ளமுடியவில்லை...

ஓக்கே ப்பா...நான் நெக்ஸ்ட் மந்த் லாங் டெர்ம் ஆன்சைட் போறேன்...அதுக்குள்ள ஒரே ஒரு முறை தான் என்னால வரமுடியும்...நெக்ஸ்ட் வீக் சண்டே ஈவ்னிங் உங்க வீட்டுபக்கம் வரேன்...உன்னோட கடைசி முடிவை சொல்லிடு...அதுக்கு பிறகு உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்...

பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென கேண்டீனிலிருந்து வெளியேறுகிறான்...

*******************************************************************

ஏங்க, பிரான்ஸ இருந்து எங்கண்ணன் போன் பண்ணார்...நம்ம சின்னப்பொண்ணுக்கு ஏற்கனவே பேசினபடி தை மாசம் கல்யாணத்தை வெச்சுக்கலாமான்னு கேக்குறார்...

மமதியை கேட்டியாம்மா ?

அவளை என்னங்க கேக்குறது ? அவ வயசுக்கு வந்தவுடனே பேசி முடிவு பண்ணது தானே ?

இல்லம்மா...அவளோட பதினாலு வயசுல நாம எடுத்த முடிவு...ப்ரான்ஸ்ல இருந்து வந்த உங்கண்ணன் நிச்சயம் பண்ணனும்னு உறுதியா இருந்ததால பாக்கு மட்டும் தானே மாத்தினோம் ? இப்ப மமதி காலேஜ் முடிக்கப்போறா...அவ மனசுலயும் என்ன இருக்குன்னு ஒரு முறை கேட்டுடலாமேடீ...

அவளை என்னங்க கேக்குறது ? எங்க வீட்டு ஆளுங்கன்னாவே உங்களுக்கு ஆகாதே ? ஏற்கனவே பேசி வெச்சது, வேற எதையும் நினைக்காதேன்னு அவளுக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்...அவ மட்டும் எதையாவது இழுத்துக்கிட்டு வந்து நிக்கட்டும், அப்புறம் என்னை நீங்களோ உங்க பொண்ணோ உயிரோடவே பார்க்கமுடியாது...

ஏய்...மறுபடி உன்னோட உளறல ஆறம்பிச்சிட்டியா ? என்னோட பேங்க் மேனேஜர் பையன் ஐ.பி.எம்ல ஒர்க் பண்றான்னு சொல்லியிருக்கேன் இல்ல...அவர் பையனுக்கு கேட்டார்டி...ஏற்கனவே - பதினாலு வயசுலயே - பாக்கு மாத்தியாச்சுன்னு சொன்னா சிரிக்கிறார்...இந்த காலத்துல இப்படியான்னு....

அதெல்லாம் அப்படித்தான்...என்னோட அண்ணன் மகன் சுதாகர் தான் நம்ம வீட்டு மாப்பிளை...

ஏண்டி...ப்ரான்ஸ்ல இருக்கான்...அங்கேயே அவன் அப்படி இப்படி எதாவது இருக்கப்போவுது ?

அதெல்லாம் கிடையாது...அவனும் ஒத்துக்கிட்டு தான் அவங்கப்பாவை பேசச்சொல்லியிருக்கான்...அப்படி இருந்தா நானே வேண்டாம்னு சொல்லிருவேன்...அதுக்கப்புறம் உங்க பேங்க் மேனேஜர் பையனுக்கோ, பெட்டிக்கடைக்காரன் பையனுக்கோ கொடுத்துக்கோங்க...நான் வேண்டாம்னு சொல்லல...

கடைசி வாசகத்தை முடிக்கும்போது, மமதி கதைவைத் திறந்து உள்ளே வருகிறாள்...

***********************************************************

மமதி...

என்னப்பா ?

உங்க மாமா பையன் சுதாகருக்கும் உனக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணலாம்னு இருக்கோம்...என்னம்மா சொல்ற ?

நான் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு ?

உன்னோட விருப்பம் எதாவது இருந்தா சொல்லிரும்மா...வாழப்போறவ நீ...முட்டாள்தனமா நாங்க பரிசம் போட்டுட்டோம் அப்படீங்கறதுக்காக உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காத...

உன்னோட அம்மா பிடிவாதக்காரி...நான் உன்னோட பிரண்டாத்தானே நடந்துக்கறேன்...சொல்லும்மா...

இல்லப்பா...அப்படி இருந்தா நான் சொல்லியிருப்பேனே...உங்களையும் கஷ்டப்படுத்தாம அம்மாவையும் கஷ்டப்படுத்தாம மேரேஜ் பண்ணிக்கறதுக்காக நான் சில தியாகங்களையும் செஞ்சுட்டேன்பா...

என்னம்மா ஆச்சு...சொல்லு...சொல்லு...

வேண்டாம்பா..அதெல்லாம் முடிஞ்ச கதை...இனிமே உங்கக்கிட்ட சொல்லியும் ஒன்னும் ஆகப்போறதில்லை...அம்மாவோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்ப்பா...

என்னை எதுவும் கேட்டு கம்ப்பல் பண்ணாதீங்க...

ஓக்கேம்மா...அப்புறம் உன்னோட இஷ்டம்...

மகளின் இதயத்தில் இருப்பதை அறிந்துகொள்ள முடியாமல் போனதில் கனத்துப்போன இதயத்தோடு இருக்கையில் இருந்து எழுந்து போகிறார்....

*****************************************************

டேய் சுதாகர்...ப்ளைட் டிக்கெட் ஸ்டேட்டஸ் வந்திருச்சா ?

வந்திருச்சுப்பா...பேக் பண்ணவேண்டியது தான்...

ம்ம்...அப்புறம்...உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கு இல்லையா ?

ஓக்கேப்பா...எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை...இருந்தாலும்

என்னடா இழுக்கற ? எதாவது மனசுல வெச்சிருந்தா சொல்லிடு...

இல்லைப்பா...சின்ன வயசுல பரிசம் போட்டுக்கிட்டு வந்திட்டீங்க...அதை எல்லாம் ஏன் செஞ்சீங்கன்னு நான் கேக்கல...பட்...காலேஜ் எல்லாம் போயிருக்கா...அங்க ஏதும் லவ் அது இதுன்னு போயிருப்ப்பாளோன்னு ஒரே டவுட்டா இருக்குப்பா...

டேய், தமிழ் படங்களை பார்த்து நீ கெட்டுட்ட...காலேஜ் போற பொண்ணுங்க எல்லாம் லவ் பண்ணத்தான் போறாங்களா ?

இல்லப்பா...ஜஸ்ட் ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்கு...

என்னோட தங்கச்சி பொண்ணை எப்படி வளத்திருப்பான்னு எனக்கு தெரியும்...இருந்தாலும் நீ இப்படி கேட்டுட்டதால நான் உன்னோட டவுட்டை க்ளியர் பண்ணாம ப்ளைட் ஏறப்போறதில்லைடா...

அப்பா...ஸாரி...நான் சாதாரணமாத்தான் கேட்டேன்...நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா...

நோ...இப்பவே அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு முருகனுக்கு போன் பண்றேன்...மமதி பத்தி ரகசியமா விசாரிக்கறேன்...நீயும் வா...ஸ்பீக்கர் போன் போடறேன்.....

*********************************************************

" உலக நாயகனே..." லேட்டஸ்ட் ரிங்டோன் போகிறது...

ஏதோ அவசரத்துக்கு கொடுக்கப்பட்ட பக்கத்து வீட்டு முருகனின் அலைபேசி எண், எங்கிருந்த்தோ எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உபயோகப்படுகிறது....

ஹலோ...

ஹலோ, முருகனா ? நாங்க ப்ரான்ஸ்ல இருந்து சுதாகர் அப்பா ரமலிங்கம் பேசுறேன்...

சார் சொல்லுங்க சார்...நல்லாயிருக்கீங்களா ?

முருகா...நான் உங்கிட்ட பேசனும்...

பேசுங்க...தாராளமா பேசுங்க...

ஒரு விஷயம் கேக்கனும்...நீ தப்பா எடுத்துக்க கூடாது ?

இல்லை சார் சொல்லுங்க...

இந்த மமதி இருக்கா இல்லையா...அவளோட கேரக்டர் எப்படி...

நீங்க தப்பா எடுத்துக்ககூடாது ?..........

என்னப்பா சொல்ற ?

கேரக்டர் மோசம் சார்...

அவளோட ட்ரெஸ்ஸும் அவளோட கூலிங் க்ளாஸும்...

சரியா புரியலையேப்பா ? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...

அவ போற இடமே சரியில்லை சார்...ஏதோ கடல் பக்கம் போறா...எவனோ அவ பின்னாடியே போறான்...வீட்டு வாசல்ல இருக்க அயன் வண்டிக்காரனுக்கும் அவளுக்கும் ஏதோ கணெக்சன் இருக்கு சார்...

என்ன ? அயன் வண்டிக்காரனா ?

ஆமாம் சார்...அவன் ஒரு முறை அவளை கொல்லப்பார்த்தான் சார்...போலீஸ் இண்ஸ்பெக்டர் 'தில்லா' ன்னு ஒருத்தர் சார்..அவர் வந்து கேட்டதுக்கு ஏதோ ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக்கொடுக்கிறான் அந்த அயன் வண்டிக்காரன்...

என்னப்பா சொல்ற ?

அட ஆமாம் சார்...ஆதியை அவ லவ் பண்றான்னு நினைக்கிறேன்...இதுக்கே அந்த ஆதி நல்லவன் இல்லை சார்...அவனோட தம்பி பொண்டாட்டி மேல அவனுக்கு ஒரு கண்ணு...

என்ன ? லவ் பண்றாளா ?

ஆமாம் சார்...ஆர்த்தி தெரியுமில்லையா சார் உங்களுக்கு ? அவளோட புருஷன் சார் இந்த ஆதி...கல்யாணம் ஆனவன் சார் அவன்..

என்ன ? கல்யாணம் ஆனவன் கூடவா ?

ஆமாம் சார்...தொல்காப்பியன் கூட அவ பின்னாடியே போறான் சார்...எத்தனை பேரை லவ் பண்றான்னே தெரியலை சார்...

பீப்ப்ப்ப்ப்ப்.................தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது......

******************************************************

ஏங்க....எங்க அண்ணன் வரலையாம் இந்த வாரம்...சுதாகருக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொல்றார்...மமதிக்கு இங்கேயே மாப்பிள்ளை பார்க்க சொல்றார்...ஆசிர்வாதம் பண்றதுக்கு வராராம்...உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றார்...எனக்கு தலை கிறுகிறுன்னு வருதுங்க...

ஆதரவாக தாங்கி பிடிக்கிறார்...

அப்போ நான் என்னோட மேனேஜர் பையனை பார்த்திடவா ? மமதி...நீ என்னம்மா சொல்ற ?

இல்லைப்பா...நான் என்னோட காலேஜ் சீனியர் ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்...அவரும் அதே ஐ.பி.எம்ல தான்ப்பா வேலை பாக்குறார்...எனக்கு இந்த உதவியை செய்வீங்களாப்பா ? என்னோட விருப்பத்தை நிறைவேத்துவீங்களாப்பா ?

இருவரின் பாதங்களையும் பற்றிக்கொள்கிறாள் மமதி...

எழுந்திரும்மா...இவ்ளோ நாள் இதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் எதையும் சொல்லாம இருந்தியா ? உன்கிட்ட எப்பவாவது ஒரு அப்பா மாதிரி நடந்திருப்பேனா ? ஒரு ப்ரெண்ட் மாதிரித்தானே நடந்துக்கிட்டிருக்கேன்... உன்னோட விருப்பத்துக்கு மாறா நான் எதையாவது செய்திருக்கேனா ?

நீ என்னடீ சொல்றே ?

அப்பாவும் பொண்ணும் முடிவே பண்ணிட்டீங்க போலிருக்கே ? என்னோட அண்ணன் மகன் தான் இல்லைன்னு முடிவாகிருச்சு...இனிமே மமதி விருப்பப்படியே செய்யலாம்ங்க...


*************************************************

முருகன் வீட்டில்.............

ஏங்க...உங்க மொபைல் எங்கங்க ? எங்கம்மாவுக்கு ஒரு கால் பண்ணனும்...

அதை ஏன்மா கேக்குற ? என் பக்கத்துல பஸ்ல வந்தவன் ஒரு பைத்தியம்...பஸ்ல வரும்போதே பைத்தியக்காரத்தனமா சட்டை பாக்கெட்டை கிழிச்சுக்கறது, ரூபாய் நோட்டை கிழிக்கிறதுன்னு பண்ணிக்கிட்டிருந்தான்...

நான் அசந்த நேரமா பாத்து மொபைலை புடிங்கிட்டு பஸ்ல இருந்து குதிச்சு ஓடிட்டான்மா...எவ்ளோ துரத்தியும் புடிக்க முடியல...

இன்னும் ரிங் போகுது பாரு....போனை எடுத்து ஏதோதோ உளறுறான்...போலீஸ் கம்ப்ளெண்ட் கொடுத்திட்டு தான் வரேன்...

*************************************************

ஞாயிறு மாலை...ப்ளோரஸண்ட் க்ரோட்டன்ஸ் மத்தியில் வெள்ளை ரோஜாக்கள் பூத்திருக்கும் தோட்டம்...அதன் அருகில் பிள்ளையார் கோவில்....மஞ்சள் நிற சுரிதாரில் மமதி...

அரை மணி நேர காத்திருப்புக்கு பின்...

தொலதூரத்தில் குமாரின் பல்ஸர்...வெறுமையை எதிர்பார்த்து வந்த குமாரின் உள்ளமெல்லாம் பூரிப்பு...அது மமதியை கண்டா அல்லது அவள் கையில் இருக்கும் பூங்கொத்தை பார்த்தா...

முகம் கொள்ளாத சிரிப்புடன் மமதி...

மஞ்சள் துப்பட்டாவை, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் பச்சைக்கொடி போட வீசிக்காட்டுகிறார் அந்த கொடியிடையாள்...

வண்டி வந்து நின்றவுடன், பிள்ளையார் கோவில் அர்ச்சகர் கொடுத்த திறுநீறை அவன் நெற்றியில் வைக்கிறார்...கில்லியாக பில்லியனில் தொற்றி...உரிமையாக தோளை பற்றினாள்...

குட்டிம்மா...என்னது இது...இதெல்லாம் என்ன கனவா நனவா தெரியலியே....

சாரி செல்லம்....போர் இயர்ஸா உன்னை டீல்ல விட்டதுக்கு...வாங்க... என்னோட டாடி உங்களை மீட் பண்ணனும்னு சொன்னார்.....நச் நச்சென்று நான்கு இச் முறையே இடது மற்றும் வலது கண்ணத்தில் பதிந்தது...

குங்குமப்பொட்டின் மங்களம்...நெஞ்சமிரண்டில் சங்கமம்...நெஞ்சமிரண்டில் சங்கமம்...

ஏதோ ஒரு பழைய பாடல் பக்கத்து கல்யாணமண்டபத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது...

****************************************************

Saturday, June 21, 2008

அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்..........

நேரடியா விஷயத்துக்கு வந்திடுறேன்...நாம இப்ப இருக்குற இடம் ஒரு ஹாஸ்பிட்டல்...ஓக்கே....ஹாஸ்பிட்டல்ன்ன உடனே ஊசி, வெள்ளைக்கலர் மாத்திரை, லைட்டான பினாயில் கலந்த பெர்பியூம் வாடை, பச்சைக்கலர் பெட்ஷீட் எல்லாம் உங்க நியாபகத்துக்கு வந்திருக்குமே...

நாம இங்க பாக்கப்போறது அது இல்ல...இந்தா எதிர்த்த பெட்டுல தாத்தா இருக்காரே அவரைப்பத்தி சொல்றேன்...பக்கத்து பெட்ல கைல கட்டுப்போட்டுக்குட்டு ஒல்லியா இருக்கானே அவனைப்பத்தி சொல்றேன்...கதவுக்கு பக்கத்துல லெப்ட்ல தெரியுதே..அந்த பெட்ல இருக்க குண்டனை பத்தி சொல்றேன்...எல்லார் கதையும் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்...

தாத்தாவுக்கு கால் ப்ராக்சராயிருக்கு...காம்பவுண்ட் ப்ராக்சர்...அப்படீன்னா எலும்பு சுக்கல் சுக்கலா உடைஞ்சிருச்சின்னு அர்த்தம்...காலுக்குள்ள கம்பியெல்லாம் போட்டு கட்டியிருக்கு...வெள்ளையா கம்பி வெளியில நீட்டிக்கிட்டு பாக்கவே பயங்கரமா இல்லை ?

கவர்மெண்ட் ஆபீஸ்ல க்ளார்க் அவரு...வேலைய முடிச்சுட்டு வெளிய வந்திருக்கார்..அவருக்கு பழக்கமான ட்ரைவர்தான்...ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்திருக்கார்.. ஷெட்ல நிறுத்த...ஜீப்ல ப்ரேக் பிடிக்கல...இவருக்கு நேரா ஜீப் வேகமா வரும்போதே தெரிஞ்சுருச்சு இவருக்கு...இவர்மேல மோதப்போகுதுன்னு...ஏய் ஏய்னு கையை ஆட்டிக்கிட்டு விலகத்தான் பார்த்திருக்கார்..அப்படியும் இவர்மேல மோதி கால்ல ஏறி, அதுக்கப்புறம் ஆபிஸ் வெளித்தூண்ல முட்டி வண்டி நின்றுக்கு...

அவர பாக்க வர்ரவங்கக்கிட்ட எல்லாம் புலம்பி தள்ளிக்கிட்டிருக்கார்...ரெண்டு வருஷத்துல ரிட்டைடாகப்போறவர்...அவர் மேல முட்டின ட்ரைவர் செல்வராஜைத்தான் திட்டி தீர்த்துக்கிட்டிருக்கார்...

அவருக்கு ரெண்டு பசங்க...ஒரு குண்டன்...வயசு முப்பத்தஞ்சு இருக்கும்...ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பெரியவர பார்க்க வர்ரவங்க வாங்கிட்டு வந்த பழம் பட்டு எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டு போவான்...அவர் திங்கமாட்டார்..

சின்னவனும் குண்டந்தான்...ஆனா கொஞ்சம் ஒயரமா இருப்பான்...எதுவும் பேசமாட்டான்..ஸ்கூல் கடைசி வருஷம் படிக்கிறான்...அவர் யூரின் பாட்டில் எடுத்துப்போய் ஊத்தறது, பெட் பேன் வைக்கறதுன்னு எல்லா வேலையும் செய்வான்..அமைதியா நிப்பான்...அவர் போகச்சொல்லும்போது தான் போவான்...

அப்புறம் கிழவி....தலையே சீவாது...பரட்டத்தலையாவே எப்பவும் இருக்கும்..ஏதாவது லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்கும்...வீட்ல இருந்து சமையல் பண்ணி டப்பாக்கள்ல போட்டுக்கிட்டு வரும்...கிழவர் ஆசையா திம்பார்...ஹாஸ்பிட்டல் சாப்பாட்டை விட கிழவி சாப்பாட்டைத்தான் ருசிச்சி சாப்பிடுவார்...சாப்பிடும்போது அவர் முகம் போற போக்கை பாக்கனுமே...

அப்புறம் நம்ம கையை உடைச்சுக்கிட்டிருக்கிற ஒல்லிப்பிச்சான்...அவன் பேரு சரவணன்...எங்க விழுந்து உடைச்சிக்கிட்டான்னு இதுவரைக்கும் தெரியாது....சிரிச்ச முகமாவே இருப்பான்...கிழவர் பசங்க யாரும் வரலைன்னா அவருக்கு எல்லா வேலையும் செய்யுறது அவந்தான்...

அவனோட அம்மாக்கிழவி ஒன்னு இருக்கு...இவன் இன்னும் சின்னக்குழந்தைன்னு நினைப்பு அதுக்கு...சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து தின்னச்சொல்லி சாவடிக்கும்...போதும்மா போதும்மான்னாலும் அவனை விடாது...எடுத்து எடுத்து தட்ல வெச்சிக்கிட்டே இருக்கும்...

கைல சின்னக்கட்டுதானே..இவனை எதுக்கு பெட்ல சேர்த்திருக்காங்கன்னு எனக்கு இதுவரைக்கும் புரியல...

அப்புறம் கதவுக்கு பக்கத்துல இருக்க குண்டனை பத்தி சொல்லிடறேனே...அவனுக்கு கால் பாதத்துல முறிவு...ஆனா கட்டு ரொம்ப பெரிசா இருக்கும்...அவனுக்கு ஒய்ப், ரெண்டு புள்ளைங்க இருக்கு...ஒன்னுக்கு நாலு வயசு இருக்கும்...அது பொண்ணு...இன்னோரு பையன் ஆறுலருந்து ஏழுவயசுக்காரன்...

இவங்க வீட்ல வாரத்துக்கு ரெண்டுமுறைதான் வருவாங்க...நிறைய பழம், கூல்ட்ரிங்ஸ் எல்லாம் கொண்டுவருவாங்க...நேத்து அவன் மச்சினிச்சியும் வந்திருந்திச்சு...தாத்தா விசாரிக்கும்போது நானும் தெரிஞ்சிக்கிட்டேன்...

ஆங்..என்னைப்பத்தி சொல்லவேயில்லையே...

இவங்க எல்லாருக்கும் மையமான பெட்டு என்னுது...எனக்கு என்ன நடந்தது, நான் ஏன் இங்க இருக்கேன்னு எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல..ஒரு பெண்ணின் கூர்மையான ரெண்டு கண்கள் மட்டும் அப்பப்போ கனவுல வரும்...ஆனா போனவாரம் ஊசிப்போடும்போது நர்சு தாத்தாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தது...

எனக்கு கோமாவாம்...கழுத்துக்கு மேல உணச்சியில்லையாம்...எதுவும் பேசமுடியாதாம்...நீங்களே சொல்லுங்க......நான் பேசிக்கிட்டு தானே இருக்கேன்...

Thursday, June 19, 2008

அய்யோ தாங்கலையே !!!!

************

நடிகர் கார்த்திக் "நாடாளும் மக்கள் கட்சி"ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காராம்...

ஏன் சார், மீதிப்பேர் எல்லாம் காட்ட ஆள்றதுக்கா கட்சி ஆரம்பிக்கறாங்க...

************

சாய் பாபா பொதுக்கூட்டத்துக்கு யாரோ வெடி குண்டு மிரட்டல் விடுத்துட்டாங்களாம்...அதுக்கு மத்திய அமைச்சரே அங்கன போயி "சாமி, சாமி" வீ வில் கிவ் யூ பாது'காப்பு' சாமீன்னாராம்...

ஏங்க, சாமீக்கு தன்னை காப்பாத்திக்கத்தெரியாதா ? இதுக்கா எல்லா வெளிநாட்லருந்தும் புளிசாதமும், பொட்டியும் கட்டிக்கினு வார்றானுங்க ?

************

24 மணி நேர செய்தி சேனலை தொடங்குதாம் ராஜ் டிவி...

ஆமா நீங்க தொடங்கீட்டாலும்..!!!

************

ஷெல்'லுல பெட்ரோல் 68 ரூவாயாமே ? ஷெல் சூப்பர் பெட்ரோல் மட்டும் தான் போடுறான். அப்போ...செய்யவேண்டியது என்ன ? ப்ளான் இது தான்...உடனே ஒரு நல்ல சைக்கிள் வாங்கிர வேண்டியது தான்...!!! வீட்டை ஆபீஸ் பக்கத்துல மாத்திர வேண்டியது தான்...காரை பர்மணட் பார்க்கிங்ல போட்டுட்டு, பைக்கை விட்ல நிறுத்தினா முடிஞ்சது...எக்ஸஸைசுக்கு எக்ஸஸைசும் ஆச்சு...பெட்ரோல் செலவும் மீதியாச்சு :) எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும் ( வடிவேல் டோனில் படிக்கவும்)

*************

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து கருத்து சொல்லுங்க என்று எல்லா பதிவுலயும் ஒருத்தர் கேட்டிருக்கார். எனக்கு தெரிஞ்சு ஒரே பின்னூட்டத்தை அதிகபட்ச பதிவுகள்ல காப்பி பேஸ்ட் செய்த சாதனையை அவருக்கு கொடுக்கலாம்..

*************

www.craigslist.com பத்தி உங்களுக்கு தெரியுமா ?

தெரியலன்னா அது என்னன்னு போய் தெரிஞ்சுக்கோங்க...எல்லாத்துக்கும் ஸ்பூன் பீடிங் செய்யமுடியாது ஆமா...

*************

அனைத்து மதத்தினர் ஆதரவு இருந்தா ராமர் கோயில் கட்டிருவேன் அப்படீங்கறார் அத்வானி..

நோ-கமெண்ட்ஸ்... (கொத்தனாருங்க, மேஸ்திரிங்க ஆதரவு இருந்தாத்தான் கட்டமுடியும்)

*************

ஜே.ஜே சில குறிப்புகள் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு நினைச்சு தான் இதுவரைக்கும் படிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா திடீர்னு வால்பையன் ஒரு குண்டை தூக்கி போடுறாரு...ஜே.ஜேன்னு யாருமே இல்லையாமே ? அது ஒரு கதையாமே ? அமரர்.சுந்தர ராமசாமி ? என்னைய வச்சு காமெடி கீமடி பண்ணலையே நீங்க ?

அப்றம் வரேன்.


************

Wednesday, June 18, 2008

மிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்

எனக்கு தெரிந்து ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியது நீங்க தான் மிஸ்டர் வைகோ...

பொதுவாக சினிமா கலைஞர்கள் ரொம்ப உணர்ச்சிமயமாகவே இருப்பாங்க...சட்டுனு கோபப்படுவாங்க...சட்டுனு சந்தோஷப்படுவாங்க...கோபத்துல என்ன பண்றாங்கண்ணே தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் வருத்தப்படுவாங்க...



அதிமுகவோட கூட்டணி வெச்சு பெருசா எதையும் சாதிக்கலை நீங்க..தேர்தல் டைம்ல உங்களுக்கு ஒதுக்கின நாலஞ்சு தொகுதி மொக்கையானதா இருந்ததுன்னு சொல்லி மாநாட்டுக்கு போகலை நீங்க...அது ஜஸ்ட் ஒரு கோபத்தில் எடுத்த முடிவுதானே ? அப்புறம் வேற வழியில்லாம அம்மாவோட கூட்டணி வெச்சுட்டீங்க...

கட்சிய நடத்தனும்னா ஏதாவது ஒரு கட்சியோட கூட்டணியை வெச்சு தேர்தலை சந்திச்சாத்தான் நடக்கும்னு ஏற்கனவே உங்களோட 'தனியா' நின்ன அனுபவம் சொல்லுச்சு, அதனால அப்படி ஆச்சு...

கலைஞரோட உங்களுக்கு இருந்த மனஸ்தாபம் தான் தீர்ந்துருச்சு இல்லையா ? மம்மி உங்களை பொடாவுல "போடா" ன்னப்ப ஸ்டாலினை ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பி உங்களை சந்திக்க வெச்சாரு இல்லையா ?

மீண்டும் நீங்க கலைஞரோட சேர்ந்தாத்தான் என்ன ? தேர்தல் நேரத்துலதான் "பேரம்" / "கால்குலேஷன்" எல்லாம் நடக்கும், அப்பத்தான் சேரனும்னும் ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன ?

நாப்பது எம்.பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்துல ஒருத்தர் கூட எந்திருச்சு, ஏம்பா, இப்பிடி ஈழத்தமிழர்கள்களை கொல்றாங்க சிங்களனுங்க, மீன் புடிக்க போனா சுடுறானுங்க சிரீலங்கா ஆர்மி, என்ன ஏதுன்னு கேளுங்கப்பான்னு சொல்றாங்களா ?

எந்திருச்சா "காத்து" பிரிஞ்சு கேஸ் ட்ரபுள் வெளிய தெரிஞ்சுரும்ன்ற மாதிரி சும்மா மொன்னையா உக்காந்திருக்காங்களேப்பா ?

ஒருவேளை நம்ம எம்.பிக்களுக்கு "இந்தி" தெரியலியோ ? நீங்களா இருந்தா ஏதாவது "டியூஷன்" வெச்சு படிச்சாவது பேசுவீங்களே சாமி ?

அந்த ஆப்பர்ச்சூனிட்டி எப்ப உங்களுக்கு கிடைக்கும் ? நீங்க அங்கன இருந்தாத்தானே ? மாநில அரசியல்ல கவனம் செலுத்தினது போதும் சாமி...

ஒத்தையாளா நீங்க ஓரே எம்.பியா போய் நின்னு கரடியா கத்தின காலம் எல்லாம் போயி, இன்னைக்கு மத்திய அரசு தி.மு.க தயவுல இருக்கும்போது நீங்க அங்கன இருந்திருந்தா எவ்வளவு அருமையா இருந்திருந்திருக்கும் ?

இங்கன செய்த லோக்கல் அரசியல் போறும்...நீங்க அங்கன போயி ஈழத்தமிழ்களுக்காக, நம்ம வீட்டு பாத்ரூம்ல நாம கை-கால் கழுவக்கூடாதுன்னு சொல்ற ஒக்கேனக்கல் பிரச்சினைக்காக, ரெண்டு அடி அணையை உசத்தி கட்டினா ஊரே முழுவிரும்னு உடான்ஸ் உடுற (ரிசார்ட் அதிபர்களின் அல்லக்கையான) கேரள முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக, பாலாறு பிரச்சினைக்காக, எல்லாத்துக்கும் உங்களை மாதிரி ஒரு ஆள் அங்க இப்ப தேவை...

அதுக்கு நீங்க தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, தி.மு.க...

நாஞ்சொல்றத கேளுங்க...பா.ம.க கோச்சுக்கிட்டு போயிருச்சு...அதை பத்தி நாம பேசவேண்டாம்...கலைஞரை போய் பாருங்க...

தோஹா மாநாட்டில முழங்கின முரசொலி மாறன் இப்ப இல்லை...அதை இட்டு நிரப்பனும்...நான் மந்திரி பதவி கேக்க சொல்லல...வெறும் எம்.பியாவாவது போகனும் நீங்க அங்க..

அப்படி இருந்தா மத்தியில பா.ஜ அரசாயிருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாயிருந்தாலும் சரி, தமிழனுக்கு தேவையான விஷயங்களை நிறைவேற்ற போராடலாம் இல்லையா ?

இங்கயிருந்து மன்மோகன் சிங்குக்கு லட்டர் அனுப்பி எதுக்கு வேஸ்ட்டா பேனா மை, போஸ்டல் சார்ஜ் எல்லாம் செலவு பண்றீங்க ?

பெஸ்ட் நீங்க அங்க போயிருங்க...தமிழனுக்காக குரல் கொடுங்க...

தெரியும் நீங்க செய்வீங்க...நீங்க ஒரு போராளி..!! உணச்சிமயமான போராளி..!!!!

செவ்வாயில் ஐஸ் !!!

செவ்வாயில் ஐஸ் இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை இந்த படங்கள் காட்டுகிறது...



இது...



இதுவும்...



அட இதுவுந்தாங்க...



மெய்யாலுமே செவ்வாயில ஐஸ் இருக்காமே...அதை கேள்விப்பட்டு இப்படி ஒரு மொக்கையை போட்டுக்கிடேன்..

இப்ப எல்லாரும் மொக்கை மொக்கைன்னு வந்துட்டீங்களே, பழைய மொக்கை பதிவரான என்னுடைய மொக்கைய நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் கொஞ்சம் கம்ம்ம்னும் கீறேன்...!!

Sunday, June 15, 2008

No more தசாவதாரம் ப்ளீஸ் !!!!!!

மக்களே ஏன் இந்த கொலைவெறி ? தசாவதாரம் படத்தை டார் டாரா கிழிக்கிறீங்களே ?

தசாவதாரம் பற்றி பதிவு போடலைன்னா ப்ளாகர் அக்கவுண்டை முடக்கிடுவோமுன்னு கூகிள்ல இருந்து மெயில் வந்திரும் போலிருக்கே...

விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனப்பார்வை...

லக்கிலூக் விமர்சனம் ஒரு கமர்ஷியல் காக்டெயில்....அந்த படத்துல வொர்க் பண்ணமாதிரி எழுதியிருக்கார்...

ஜி.ரா, தேவ் விமர்சனம் படிக்கல...

வி.எஸ்.கே விமர்சனத்தில் பல விஷயங்கள் சூப்பரா டச் பண்ணி எக்ஸலண்ட்டா கொண்டு போயிருக்கார்...அசினுக்கு அவர் கொடுத்திருக்க கமெண்ட் சூப்பர்...மிஸ் பண்ணிடாதீங்க...

நானும் போடறேன் விமர்சனம்னு நிறைய பேர் போட்டிருக்காங்க...

ஓவர்த வீக் எண்ட் டைப்படிச்சு மண்டே ஒரு ட்வெண்டி வந்திரும் போலிருக்கு...

பைத்தியக்காரன் விமர்சனம் டாப் !!!!! அம்பத்தோரு பதிவு எழுதிட்டாராமே...இன்னோரு பின்னவீனத்துவ பிசாசு இவரு...

மிதக்கும் வெளி விமர்சனம் வருமா ?



*******************************************

சைக்கிள்ல போனா பெஸ்ட்டுன்னு ஞானி சொல்லியிருக்காராமே ? நல்ல ஐடியா...எல்லோரும் சைக்கிள்ல போவோம் வாங்க...அதுக்கப்புறம் உருக்கு விலை உயருது, எல்லாரும் சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கனும்னு சொல்லிடப்போறார்...விக்கி, ஜ்யோராம் சுந்தர் மாதிரி இருக்கவங்கள எப்படி உக்கார வெச்சு இழுத்துட்டு போறது ?

*********************************************

வால் பையன் செய்த ஒரு வால் மேட்டரை சொல்லிடறேன்...பெங்களூர்ல மீட் பண்ணோம்...வழக்கமா மீட் பண்ற இடம்...ஒரு க்வாட்டர்...அதுலயே மசமசன்னு ஆயிட்டது கண்ணு அவருக்கு...

"ஒரிஜினல் சரக்கு போலிருக்கு...எனக்கு ஒரிஜினல் சரக்கு உடம்புக்கு ஆவாது...டூப்ளிகேட் கிடைக்க்குமான்னார்...அப்புறம் ஒரு குவாட்டர்...சர்ருன்னு தூக்கிருச்சு தலைவர..

பில் கொடுக்க போனோம்...அது ஒரு ரெஸ்ட்டாரண்டும் பாரும் இணைந்த கடை...அங்கே ஒரு நாலு பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க...

இந்தாளு, ஒரு நிமிஷம் இரு ரவி, அவன் ஆம்ப்லேட் திங்குறான், கொஞ்சம் பீஸ் பிச்சிக்கிட்டு வந்துடறேன் அப்படீங்குறார்..

யோவ் என்ன விளையாடுறியா, பொது மாத்து போட்டுருவான் வாய்யா என்றேன்...

அட நீவேற, நான் ஈரோட்லயே இப்படித்தான் பார்ல எல்லார் ஆம்லேட்டையும் எடுத்து தின்னுவேன் அப்ப்டீன்னுக்கிட்டு திமிறி திமிறி போறாரு...

புடிச்சு இழுத்துட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்திருச்சு...!!!

இந்தாள் உன்மையிலேயே வால் பையன் தான்...

***********************************************

சுகுணா திவாகர் கல்யாணத்துக்கு போயிருந்தேன்...அ.மார்க்ஸ் தலைமையில அட்டகாசமா உறுதிமொழி எடுத்தார்...அதைவிட தங்கச்சி எவ்வளவு அழுத்தமான குரல்ல அட்டகாசமா உறுதிமொழி எடுத்தாங்க...படங்கள் வலையேற்ற முடியாத அளவுக்கு பெரிய சைஸ்...சுகுணா அனுமதியோட போடறேன்...

************************************************

எனக்கு தெரிந்த நன்பர் ஒருத்தர் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறார். கொஞ்சம் கஷ்டப்பட்டு இப்பத்தான் லைப்ல செட்டில் ஆகியிருக்கார். சாதி எதுவாகயிருந்தாலும் பரவாயில்லையாம்...ஆனா மதம் இந்துவாகத்தான் இருக்கனும்னு சொல்றார்...சென்னையில இருக்கார்...அவருக்கு பிடித்த முருகனுக்கே ரெண்டு வொய்ப்..இவருக்கு இன்னும் செட்டாகலை பாருங்க.....தெரிந்த இடத்துல பொண்ணு இருந்தா பாருங்க...!!!

************************************************

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....