Showing posts with label தொடர் கதை. Show all posts
Showing posts with label தொடர் கதை. Show all posts

Thursday, September 18, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (4)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

யாஹூ குழுமத்தில் விஜய்க்கு பரிச்சயமான பெண் அவள். கேம்பஸ் இண்டர்வியூ எட்டிப்பார்க்காத ஏதோ ஒரு எஞ்சினீயரிங் கல்லூரியில் படித்துவந்தாள், மின்வாரிய ஊழியர் தந்தை...

மூன்று பெண்களில் மூத்தவள், குடும்பம் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்தது, படிப்பை முடித்தவுடன் விஜயை ஏதாவது வேலைக்கு உதவுமாறு கேட்டிருந்தாள்...ரெஸ்யூமையும் எனக்கும் விஜய்க்கும் அனுப்பியிருந்தாள்...

எல்லாரையும் ஆக்ரமிக்கும் காதல் பிரச்சினை அவள் மனதையும் மையம் கொண்டு இருந்தது, அவள் காதலன் சொந்த அத்தை மகன், ஐ.டி.ஐ முடித்துவிட்டு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தான், அட்லீஸ் நாம் நல்ல வேலைக்கு போய், காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி அசைக்கும்படி செய்யலாம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு...இதெல்லாம் பின்னால் விஜய் சொல்லி தெரிந்துகொண்டேன்...

எங்க ரெண்டுபேருக்கும் ஒரே எக்ஸ்டென்ஷன் போன், அடிக்கடி அந்த அலுவலக எக்ஸ்டென்ஷன் போனுக்கும் அழைத்து, விஜயை எப்படி இருக்கேப்பா என்று கேட்பாள்...நானும் அவ்வப்போது ரெண்டொரு வார்த்தை பேசியதுண்டு...ரெஸ்யூமை மேனேஜருக்கு அனுப்பினால் எப்படியும் ஜாவா டீமில் ஒரு ட்ரெயினியாகவாவது சேர்த்து ஒரு மூவாயிரம் சம்பளம் கொடுத்தால் அப்படியே பர்மணட் ஆக்கிவிடுவார்கள் என்று கணக்கிட்டான் விஜய்....

அனுப்பிவிட்டு அதுபற்றி கேட்டு அதிகம் தொந்தரவு செய்யவில்லை அவன்....அதிகம் பேசாத டைப் அவன்...

ஒருவாரமாக மேனேஜர் தொலைபேசியில் இரண்டு மணிநேரம் மூன்று மணி நேரம் யாரிடமோ என்று பேச ஆரம்பித்தார், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்போனாலும் அப்புறம் அப்புறம் என்று ரூமில் இருந்தே கையாட்டுவார்...

ஒரு சனிக்கிழமை மதிய வேளை, அடுத்த வாரத்துக்கான துணி எல்லாம் துவைத்துவிட்டு பக்கத்தில் இருந்த செட்டிநாட்டு ஹோட்டலில் நன்றாக கட்டிவிட்டு, தூக்கமோ தூக்கம்..வீட்டுக்கு வெளியே கார் ஹாரன் சத்தம், எங்கேயோ கேட்ட சத்தமாக இருக்கே என்று கண்ணை திறக்காமல் படுத்திருந்தபோது வீட்டு அலாரமும் அடித்தது, திறந்தால் இவர்....

பர்முடாஸ், டி ஷர்ட், க்ளாஸ் என்று ஏதோ பிக்னிக் போவதுபோல் கிளம்பியிருந்தார், மொபைலில் பேசிக்கொண்டே கிளம்பு கிளம்பு என்பதுபோது சைகை செய்தார், வேற வழி, பேண்டை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்...

காரில் ஏறும்போது தான் கவனித்தேன், பின் சீட்டில் மிக இளவயது பெண், என்ன ஒரு இருபது வயதிருக்கலாம், கோழிக்குஞ்சு போல இடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்...

எந்த விதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் முன் சீட்டில் ஏறி அமர்ந்தேன், சர்ர்ர் என வண்டியை கிளப்பினார்..

எங்க சார் என்றேன், மகாபலிபுரம் என்றார்...

பொதுவாக வண்டியில் ப்ரேக்கை அதிகம் அப்ளை பண்ணமாட்டார், திடீர் திடீர் என்று ப்ரேக் போடுவார், உயிரே போய்விடுவது மாதிரி இருக்கும்..சார் ப்ரேக், வண்டி சார் வண்டி சார் என்றால், ஏன் அவன் கால்லயும் தான் ப்ரேக் இருக்கு, அவன் போடட்டுமே என்று அதிரடியாக சொல்வார், எதிர்த்து பேசமுடியாத அந்த சிச்சுவேஷனில் என்ன செய்வது என்று தேமே என்று அமர்ந்திருப்போம் நானும் விஜயும்...

சார், விஜய் கூட ப்ரீயாத்தான் சார் இருப்பான், அவனையும் கூப்பிடலாம் சார் என்றேன், ம்ஹும் அதெல்லாம் வேண்டாம் என்றார், அந்த நேரத்தில் அந்த பெண் பேசினாள்...விஜய் உங்களுக்கு தெரியுமா, நான் உங்களோட எக்ஸ்டென்ஷனுக்கு பேசியிருக்கேன் என்று அந்த பெண் சொன்னதும் தான், ரொம்ப நாளாக டெஸ்க்டாப்பில் இருக்கும் ரெஸ்யூம் இந்த பெண்ணோடது என்று புரிந்தது..

ஏதோ ஒரு ரிசாட்டில் கார் நின்றது, எனக்கு ஒரு மாதிரியாக புரிந்தது, ஆனால் எதையும் சொல்லமுடியவில்லை, இந்த பெண்ணே இப்படி இருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை, சார் நான் ஏதாவது ப்ரவுஸிங் செண்டர் போய்ட்டு வரேன் சார் என்றேன், நானே சொல்லனும்னு நினைச்சேன், கார் எடுத்துட்டு போறியா என்றார்..சார் எனக்கு கார் ஓட்டத்தெரியாதுன்னு உங்களுக்கு தெரியுமே என்றேன், நான் பஸ்ல போய்க்கிறேன் சார் என்று மனதெல்லாம் பாரத்துடன் வெளியே வந்தேன்..

வெளியே பஸ்ஸை பிடித்து மஹாபலிபுரம் பஸ்ஸ்டாண்ட் போய் அங்கே ஐவேயில் உட்கார்ந்தேன், மெயில் செக் பண்ணக்கூட தோன்றவில்லை, ஏதோ வெப்சைட்டுகளை சுமார் ஒரு மணிநேரம் ப்ரவுஸ் செய்துகொண்டிருந்தபோது, சரி என்னவானாலும் பரவாயில்லை, அங்கே போய் பார்த்துவிடுவது என்று ஒரு ஆட்டோ பிடித்து அங்கே போனேன்...

ரிசார்ட் ஹோட்டலை அடைந்து அவர் பெயரை சொன்னபோது அப்படி யாரும் ரூம் எடுக்கலை என்றார்கள், அந்த வெள்ளை நிற காரில் வந்தவர் என்றபோது மூன்றாம் எண், சூட் என்றார்கள்...

கதவை தட்டினேன், உள்ளே சேரில் விசும்பலுடன் அந்த பெண், கையில் ஏதோ ஒரு டம்பளருடன் இவர் டி.வியில் சேனலை திருப்பிக்கொண்டிருந்தார், ஒரு போர்வை சுருட்டிக்கிடந்தது, அதில் மேலுக்கு எல்லாம் துளித்துளியாக ரத்தம்...

இவளை கொண்டு போய் பஸ் ஏத்திவிட்டிரு என்றார், காசு வேண்டுமா என்றார், இருக்கு சார் என்று, அந்த பெண்ணை, வாங்க என்றேன், மனதை ஏதோ ஒன்று பிசைந்தது...என்னவானாலும் இதை விஜயிடம் மட்டும் சொல்லக்கூடாது, அவன் உடைந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டேன்...

அவளை பஸ் ஏற்றிவிடும்போது கலங்கிய கண்களோடு அவள் கேட்ட கேள்வி இன்னும் கூட சில ஆழமான தூக்கங்களில் வரும் கனவுகளில் இதயத்தை துளைக்கிறது...

"வேலை கிடைச்சுரும் இல்ல..."

நினைவுகள் தொடரும்...!!!!!!!!

Wednesday, September 17, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)

அது 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஏதோ ஒரு நாள் மாலை நேரம்....நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருட்களை சென்னையில் இருந்து உருவாக்கிக்கொண்டிருந்தது...

ஒரு சிறிய ப்ராஜக்ட், அதற்கு இரண்டே பேர் கொண்ட ஒரு டீம். நானும் அதில் ஒரு அங்கம். என் வேலைகளையும் சேர்த்து என் நன்பன் விஜய் பார்த்துவிடுவான். நான் வெப் உலகம் அது இது என்று ஏதாவது நெட்டில் மேய்ந்துகொண்டிருப்பேன்...

எங்கள் நிறுவனத்தில் அமெரிக்க ப்ராஜக்டுகளை செய்ய உள்ள பத்து பதினைந்து டீம்களில் எங்களுடையது தான் மிகவும் சிறியது...எங்கள் ஆன்சைட் கோ.ஆர்டினேட்டர் எங்களை அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார். நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்தது பாம், பாக்கெட் பி.சி போன்றவற்றுக்கான அப்ளிகேஷன்கள்...

பழைய மேனெஜர் ரிசைன் செய்து இரண்டு மாதங்களாகியும் எந்த புதிய மேனேஜரும் அமர்த்தப்படவில்லை...நாங்களே க்ளையண்ட் உடன் பேசுதல், டெலிவரி என்று அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்...

எங்களுக்கு ஒரு புதிய மேனேஜர் வந்துள்ளதாக மின்னஞ்சல் வந்திருந்தது...அவரே ஒவ்வொரு ப்ராஜட் டீம் உடனும் சென்று அறிமுகம் செய்துகொண்டுவந்தார். எங்கள் சிறிய டீமையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள்...

கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...

ஒரு ப்ராஜட்க் மேனெஜருக்கு உரிய எல்லாம் அவருக்கிருந்தது...ஆங்கிலத்தில் அரைகுறைகளான எங்களுக்கு அவரிடன் படபட ஆங்கிலம் பெப்பே என்றது...

சிங்கப்பூரில் ஜாவா ப்ராஜட் மேனேஜராக இருந்தவர்...மனைவி இங்கே சென்னையில் ஏதோ இ-பப்ளிஷிங் கம்பெனியில் உயரதிகாரி. ஒரு குழந்தை...

இது இரண்டு நாளில் அவரைப்பற்றி நாங்கள் விசாரித்து தெரிந்துகொண்டது...ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வெர்ட் மேனேஜர்களிடையே - உரிமையுடன் தோளில் கைபோட்டு பேசும் அவரின் அப்ரோச் அலுவலகத்தில் ரொம்ப பேருக்கு உடனெ பிடித்துப்போனது...

நான் வசித்தது திருவான்மியூரில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சரின் வீட்டு மேல் மாடியில். என் நன்பன் விஜய் வசித்தது திருவல்லிக்கேணியில்...

நாங்கள் இரவு இரண்டுமணிவரை இருந்து பணியாற்றினால் அவரும் எங்களோடவே அமர்ந்திருப்பார்...வேலை முடிந்ததும் விஜயை திருவல்லிக்கேணியிலும், என்னை திருவாண்மியூரிலும் ட்ராப் செய்துவிட்டு அவர் கோடம்பாக்கத்துக்கு - அங்கே வசித்துவந்தார், போவார்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளர் என்றாலே கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுத்தான் பழகுவார்கள், இவரிடம் நாங்களே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுவோம்...

ஆனால் இவரே வரும்காலத்தில் வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் என்று கேட்பார் என்று நான் கனவிலும் நினைத்துப்பாராதது...

நினைவுகள் தொடரும்...!!!!!!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....