Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, January 25, 2011

லிப்ட் - குட்டிக்கதை

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசே நடத்தும் பந்த். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாவனா கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து பொறியியல் படிக்கும் மாணவி.

சாலைகளில் சிற்சில தனியார் வாகனங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆட்டோ, டாக்ஸி எல்லாம் முடங்கி, துடைத்துவிட்டது போல சாலைகள்.



ஸ்கூட்டி வைத்திருக்கும் தோழியின் மொபைலோ நாட் ரீச்சபுள். செய்வதறியாது தவித்தாள்..

செந்நிற சாண்ட்ரோவில் வந்த இளைஞன் சுகுமார், அழகிய இளம்பெண் லிப்ட் கேட்கும்போது நிறுத்தாமலா போய்விடுவான் ?

ப்ளீஸ். உட்காருங்க. எங்கே போகனும் சொல்லுங்க. நான் ட்ராப் பண்ணிடுறேன். என்றான்.

தேங்ஸ். எப்படி வீட்டுக்குக்கு போறதுன்னு தெரியாம ரொம்ப பயமாயிருச்சு..

ஐந்தே நிமிடங்கள் தான்.

நான் இந்த ஜங்ஷன்ல இறங்கிக்கறேன் சார். நிறுத்துங்க. என்றாள் பாவனா.

அண்ணா நகர் போகனும்னு சொன்னீங்களே மேடம். நான் அங்கயே ட்ராப் பண்றேன்.

நோ தேங்ஸ்.

குழப்பத்துடன் புறப்பட்டது சாண்ட்ரோ !

வேறு ஒரு தோழிக்கு அலைபேசியில் அழைத்து, அவளுடைய வண்டியில் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தவுடன், கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது டைரியில் இப்படி எழுதினாள்.

கார் ஏஸியில் இருந்து ம்யூஸிக் வரை அடுத்தவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஒரு முட்டாளின் காரில் ஒரு கிலோமீட்டர் லிப்ட் கேட்டு வந்தேன். முற்றுப்புள்ளி.

Friday, July 04, 2008

லவ் லெட்டர்...!!!!

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபின் வேறு பெரிய வேலை ஒன்றும் இருக்காது...நாங்கள் நான்கு பேச்சுலர்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம்...

நான், மணி, கோயிந்தன் மற்றும் இளா நாலுபேரும் ரூம்மெட்ஸ்..

திருச்சியில இப்பல்லாம் ரெண்டாயிரத்துக்கு பேச்சுலர்ஸ் வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டமாயிருது...

மாம்பழச்சாலை ஏரியாவுல ஒரு சிங்கிங் பெட்ரூம்...

வீட்டுக்கு பக்கத்துல கேள்ர்ஸ் ஹைஸ்கூல்...

நம்ம மணி ஒரு 'காதலன்'...எங்க ரூம்லயே லவ், அது இதுன்னு போனது அவன் மட்டும்தான்...லவ் லெட்டர்லாம் வரும் அவனுக்கு...காலேஜ் கட்டடிச்சுட்டு வந்து கேர்ல்ஸ் ஸ்கூல் பக்கம் அலைஞ்சுக்கிட்டிருபான்...

நாங்க மாரீஸ்ல படம்பார்க்க போனா, எவளோ ஒருத்திக்கு ட்யூசன் முடியும், பார்க்க போவனும்னு போவான்...

இந்த லவ் மேட்டர் எல்லாம் அதிகம் எங்கக்கிட்ட ஷேர் பண்ணமாட்டான்னு வைங்களேன்...

நான் தான் அப்பப்ப சொல்லிக்கிட்டிருப்பேன்...இந்த லவ் அது இது எல்லாம் வேண்டாம், ஏதாவது பிரச்சினை வரும்டா என்று...

நாங்க மூனுபேரும் வெத்துவேட்டுங்க...எதும் செட்டாகலன்னு வைங்களேன்...

ஆங்...எதுல விட்டேன்...காலேஜ்ல இருந்து வந்தபிறகு நாங்க அப்படியே வீட்டுக்கு பக்கத்துல ப்ளாஸ்டிக் பால் கிரிக்கெட் விளையாடுவோம்னு வைங்களேன்...

அன்னைக்கு அப்படித்தான்...ஒரு நாலுமணி இருக்கும்...நாங்க விளையாடிக்கிட்டிருக்கோம்...

ஏதோ பாரின் கார் வந்து நிக்குது...

தடார் புடார்னு நாலுபேர் இறங்குறானுங்க...

ஏய்...எவண்டா இங்க மணி...அவனுங்களோட குரல்ல அனல் பறக்குது...

எங்க கை விரல் மட்டும் தானா அவனை காட்டுது...

என்ன சார் விஷயம்...இது நான்...

இளா மட்டும், சார், எதுவா இருந்தாலும் உள்ள வாங்க சார், பேசிக்கலாம் அப்படீன்னு அவங்களை தேக்குறான்...

அவனுங்க பேசுற மூட்லயே இல்லை...

பொடேர்னு ஒரு அப்பு அப்பிட்டானுங்க...மணி எழுதுன ரெண்டு 'கவிதை' லவ் லெட்டரை எடுத்து மூஞ்சி மேலே வீசுறானுங்க...(அந்த கவிதை யாருக்கும் புரியாதுங்கறதுன்றது வேற விஷயம்...)

விசயம் இது தான்....பொண்ணோட அண்ணன் அவளோட புத்தகத்தை திறந்து பார்க்கையில...அதுல மணியோட லெட்டர் சிக்கிருச்சு...

பொண்ணு நல்லவ வேஷம் போட்டுட்டு...மணி தான் தன்னை தொந்தரவு செய்யறதாவும், அவ ரொம்ப நல்லவன்னும் சொல்லிட்டா...

அதான், மண்டகப்படி நடத்த பொண்ணோட அண்ணனும் அவனோட ப்ரெண்ஸும் வந்துட்டானுங்க...

காட்டுக்கார்த்தின்னு ஒரு காலேஜ் பிரெண்டு...அவன் யானை மாதிரி இருப்பான்...அன்னைக்குன்னு பார்த்து ஏதோ வேலையா எங்க ஏரியாவுக்கு வந்தவன், வீட்டுப்பக்கம் வரவும்...

நல்ல வேளை....

அதிக மொத்து விழாம அந்த தடியனுங்களை தேக்கிட்டான்...

அப்புறம் என்ன...காம்பரமைஸ் அது இதுன்னு ஒரு வழியா முடிஞ்சது.....இந்த காம்பரமைஸ் நடக்கும்போதும் சரி, அவனுங்க மொத்தும்போதும் சரி, மணி ஒரு விஷயத்தை மட்டும் ஓப்பன் பண்ணவேயில்லை...

எனக்கும் பயங்கர டென்ஷன் தான்...அது என்னன்னு கேக்குறீங்களா...

அந்த பொண்ணும் இவனுக்கு சில பல லெட்டர்களை எழுதுச்சு தானே...அதை பட்டுனு எடுத்து அவனுங்க மூஞ்சியில எறிஞ்சிருந்தா, அவனுங்களே ஆப் ஆகி போயிருப்பானுங்க...

ஆனா இந்தப்பய கெணத்துல போட்ட கல்லுமாதிரி கம்முனு இருக்கான்...அதான் எனக்கும் டென்ஷன்...

சரி அவனே சொல்லலை...அதுக்கு ஏதாவது காரணம் சொல்வான்...அந்த பொண்ணை காட்டி கொடுக்க விரும்பல அப்படீ இப்படீன்னு ஏதாவது... அதனால நானும் அமைதியா இருந்துட்டேன்...

ஒருவழியா ஓஞ்சு போய் - பெரிய வார்னிங் மெஸேஜ் எல்லாம் கொடுத்துட்டு கிளம்பினானுங்க.....காட்டுக்கார்த்தி அனுப்பிவுட்டுட்டானுன்னு வெய்ங்களேன்...

நான் எரிச்சலா கேட்டேன்...மணிய...

ஏண்டா நாதாரி...அவனுங்கக்கிட்ட அந்த பொண்ணு எழுதுன லட்டரை எடுத்து போட்டிருந்தின்னா, இவ்ளோ நேரம் அவனுங்க பேசியிருப்பானுங்களா....அப்படீன்னேன்..

இவன் அமைதியா சொல்றான்...

டேய் அது எனக்கு தெரியாதா...இவனுங்க என்ன பெரிய ஆளா...ஆனா...இந்த லட்டர்ஸை நான் மாலாவுக்கு எழுதினேனா இல்லை அவங்கக்கா பிரதீபாவுக்கு எழுதினேனான்னு தெரியலடா...அதுமட்டும் நியாபகம் வந்து தொலைஞ்சிருந்துது....கரெக்டா எடுத்து மூஞ்சியில வீசியிருக்கமாட்டேன்...ஹூம்...

Thursday, July 03, 2008

ஹிராநந்தானி இட்லி

என்ன ? நேத்து நைட்டு சாம்பாரா ?

சாப்பாட்டு தட்டை தடாரென வீசி எறிந்தவுடன் அதிர்ந்து போனாள் அம்மா...

அதிகம் அலம்பல் எல்லாம் பண்ணாத நான் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை...தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் எனக்கு யாரை மதிக்கவேண்டிய அவசியம்...

என்னுடைய ப்ராஜக்ட் மேனேஜரும், அப்ரைசலும், ப்ராஜக்ட்டும் தான் முக்கியம் எனக்கு...

என்னுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அம்மா, அப்பா உட்பட எல்லோரும் சகித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்...

வேற வழி...

ஆனால் இப்போதெல்லாம் அதிகம் கோபம் வருகிறது எனக்கு...ஹும்...

ஏண்டா சாப்பாட்டு தட்டை வீசுற...பிடிக்கலைன்னா வெச்சிடலாமில்ல...

என்னது...பிடிக்கலைன்னா வெச்சுடறதா ? என்ன பண்ணிவெச்சிருக்க நீ ?

இட்லி தாண்டா...இவ்ளோநாளா சாப்பிட்டுக்கிட்டு தானே இருக்கே...தெரியாதா...

இட்லி சரி...ஏன் நேத்து நைட்டு சாம்பாரை ஏன் சூடு பண்ணி வெக்குற ? ஏன் புதுசா செய்யவேண்டியது தானே ?

நேத்து நைட்டு உனக்காக பண்ணது தாண்டா...நீ லேட்டா வந்தெ...ஆபீஸ்ல பிசா சாப்பிட்டேன்னு சொன்னே...அப்படியே நின்னுபோச்சு...

நானும் அப்பாவும் இதை தாண்டா சாப்பிட்டோம்...நல்லாத்தானே இருக்கு...

நல்லா இருக்கு - நல்லா இல்லைங்கறது இல்லை பிரச்சினை...நேத்து சாம்பார் எதுக்கு வெச்சே ? ஆபீஸ்ல நாலு வெரைட்டி சாப்பாடு இருந்தும் இங்கே சாப்பிடுறேன் பாரு...என் தலையெழுத்து...

சரேலென வெளியேறினேன்....

***************************************************

மும்பைக்கு மாற்றலானது...மேனேஜராக உடனே பணி ஏற்கும்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள்...

அந்தேரிக்கு அருகில், ஹிராநந்தானி காம்ப்ளக்ஸில் ஆபீஸ்...

ஒரு வாரமாக ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம்...

அடுத்த வாரம் அப்பார்ட்மெண்ட் ஷிப்ட் ஆகிறேன்...

ஆபீஸ்ல வெறும் சப்பாத்தி சப்ஜிகள், நார்த் இண்டியன் ஐட்டம்ஸ்...

ஒரே வாரத்தில் வெறுத்துப்போனது...

உடன் பணியாற்றும் பஞ்சாபி கேள், அந்தேரி ஈஸ்ட்டில் இருந்து வருகிறாள்...

அவளிடம் உணவுப்பிரச்சினையை சொல்லி, ஈவ்னிங் ஏதாவது நல்ல சவுத் இண்டியன் ஹோட்டலுக்கு அழைத்துப்போகுமாறு சொன்னேன்...

ஹோ யூ வாண்ட் ஸவுத் இண்டியன் புட் ? இன் அவர் கேப்பஸ் நீல்கிரீஸ் ஈஸ் தேர் யா...

ஐ வில் டேக் யூ டுடே லஞ்ச் ஒன்லி...என்றால்...

நீல்கிரீஸ் நான் நினைத்த அளவு பெரியதாக இல்லை என்றாலும்...ஏதோ தமிழ் முகம் அங்கே கவுண்டரில் இருந்தது...

வாட் யூ வான்ன ஹாவ் சார் ?

தமிழ்லேயே சொல்லுங்கப்பூ...என்ன இருக்கு...

இட்லி இருக்கு சார்...ரொம்ப ப்ரஷ்...பிப்டி ருப்பீஸ் பர் ப்ளேட்...என்றான்...

ஓக்கே ரெண்டு ப்ளேட்டா கொடுத்திருங்க என்றேன்...

நாக்கு உள்ளுக்குள் தாளம்போட்டது...

சார் வீ டோண்ட் ஹேவ் சட்னி...சாம்பார் மட்டும்தான் சார்...என்றான்...

ஓக்கே பரவால்ல கொடு என்றேன்...

ரெண்டு ப்ளேட்களில், ப்ளேட்டுக்கு இரண்டு இட்லியாக வந்துசேர்ந்தது...

படபடவென சாம்பாரில் நனைத்து நான்கு இட்லிகளை ஐந்து நிமிட நேரத்தில் உள்ளே இறக்கியதை பார்த்து 'ஆ' வென வாயை பிளந்தது பஞ்சாப்...

பில் கொடுக்கும்போது...

இட்லி நல்லா இருக்கே...நீங்க இங்கேயே பண்றீங்களா...

நோ சார்...ஈரேட்ல இருந்து வருது...கிங்பிஷர் ஏர்லைன்ஸ்ல...சண்டே நைட் பாக் ஆகி, மண்டே மார்னிங் வந்திரும் சார்...அது ஒன் வீக் ப்ரிஜ்ல வெச்சு, ஹாட் பேக்ல சூடு பண்ணி தரோம் சார்...என்றான்...

கையில் இருந்த வாட்சில் கிழமையை பார்த்தேன்...வெள்ளிக்கிழமை...

ஹே. நவ்ஜோத்...ஐ நீட் மை போன் கால்யா...கேன்யூ கிவ் யுவர் மொபைல்...

வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்...அம்மாவிடம் பேசவேண்டும்போலிருந்தது.

*******************************************

ஏங்க, அவன் என்னை மொறைக்கிறான்..!!!

அலுவலகம் விட்டு வந்தவுடன் வீடு இரண்டுபடுவது போல கத்தினாள்...

ஏய்...ஏன் இந்த கொலைவெறி ? என்ன ஆச்சு ?

அவன்...அவன்...பல்லை நறநறவென கடிக்கிறாள்...

என்னாச்சு சொல்லும்மா...

அவன் என்னை மொறைக்கிறான்...

யாரு ?

எதிர்த்த அப்பார்ட்மெண்ட் வாச்மேன்...

ஹெஹ்ஹே...

ஏங்க...நீங்க என்ன லூசா ? இவ்ளோ சீரியசான விஷயத்தை சொல்லிக்கிட்டிருக்கேன்...

என்னம்மா இது...உன்னை கல்யாணம் பண்ணப்பவே தெரியாதா ? இப்பதான் கண்டுபிடிச்சமாதிரி சொல்ற...

ஏங்க...உங்க மொக்கை காமெடியை நிறுத்துங்க...மொதல்ல விஷயத்துக்கு வாங்க...

இதுல என்னம்மா பெரிய சீரியஸ்...மொதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...அவன் யாரு ?

முகத்தை சிடுசிடுவென வைத்தபடி...எதையுமே புரிஞ்சுக்கமாட்டியாடா என்றதுபோன்ற ஒரு பார்வையுடன்...

ஏன் உங்களுக்கு தெரியாதா ?

சும்மா சொல்லேன்...

எதிர்த்த வீட்டு வாச்மேன்...

அப்புறம் ? மொறைக்காம என்ன செய்வான்...கேட்ல நின்னுக்கிட்டு மொறைக்கறதுக்கு தான் அவனுக்கு சம்பளம் தறாங்க...ஹி ஹி...

ஏங்க, இப்படி லூசுமாதிரி பேசுறதை என்னைக்கு தான் நிறுத்தப்போறீங்களோ ? அவன் போறவறவங்களை பார்த்து மொறைக்கறதை நான் சொல்லலை...இந்த புதுவீட்டுக்கு குடிவந்த ஒரு வாரமா நான் எப்ப வெளிய வந்தாலும் என்னையே மொறைச்சு பார்க்குறான்..

அவன் கண்ணு இன்னுமா அவிஞ்சு போகாம இருக்கு ? ஹி ஹி

சர்ர்ர்ரென பறந்து வந்த வாட்டர் பாட்டில் ஒன்று பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது எனக்கு...

ஓக்கே ஓக்கே செல்லம்...நான் இப்பவே கவனிக்கறேன்...

மெதுவாக வெளியே வந்தேன்...பெங்களூரின் மெல்லிய காற்று முகத்தை வருடியது...எங்கோ பார்ப்பதுபோல் லேசாக எதிர்விட்டு கேட் பக்கமாக பார்வையை திருப்பினேன்...

குள்ளமான வடக்கத்தி வாச்மேன்...குறுகுறுவென பார்க்கிறான்...ஆமாம்...இவன் பார்வையில் ஏதோ வித்யாசம் இருக்கிறது...எனக்கு ஜில்லென்றது...

போனவாரத்திலிருந்து வாச்மேன் கொலைகாரனாக மாறிய கேஸ் ஒன்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது...

மனைவியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் போகும் எனக்கு அது வேறு நினைவுக்கு வந்து லைட்டாக கிறுகிறுத்தது...

வேகமாக உள்ளே வந்தேன்...

ஏய்..ஆமாண்டி..என்னையும் குறுகுறுன்னு பார்க்கிறான்...

நான் சொன்னேனே...மடையா...என்றதுபோன்ற ஒரு பார்வையோடு சரேலென்று சமையல் கட்டுக்குள் புகுந்துகொண்டாள்...

என்ன பண்றது இவன....ராம்கிக்கு போனை போட்டு வரச்சொல்லலாமா...என்று மனசுக்குள் கணக்கு போட்டபடி மீண்டும் வெளியே வந்தேன்...

வாச்மேன் என்னை பார்த்து கிடுகிடுவென வருகிறான்...அய்யோ என்னடா இது கிட்டயே வர்றான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே....

கிட்ட நெருங்கிவிட்டான்...

சாப்...துமாரா காடி க்ளீன் கரேங்கே சாப் டெய்லி...டூ ஹண்ரட் ருப்பீஸ் சார்ஸ் தேதே சாப் மந்த்லி... என்று தலையை சொறிகிறான்....

ங்கே !!!!

Saturday, June 21, 2008

அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்..........

நேரடியா விஷயத்துக்கு வந்திடுறேன்...நாம இப்ப இருக்குற இடம் ஒரு ஹாஸ்பிட்டல்...ஓக்கே....ஹாஸ்பிட்டல்ன்ன உடனே ஊசி, வெள்ளைக்கலர் மாத்திரை, லைட்டான பினாயில் கலந்த பெர்பியூம் வாடை, பச்சைக்கலர் பெட்ஷீட் எல்லாம் உங்க நியாபகத்துக்கு வந்திருக்குமே...

நாம இங்க பாக்கப்போறது அது இல்ல...இந்தா எதிர்த்த பெட்டுல தாத்தா இருக்காரே அவரைப்பத்தி சொல்றேன்...பக்கத்து பெட்ல கைல கட்டுப்போட்டுக்குட்டு ஒல்லியா இருக்கானே அவனைப்பத்தி சொல்றேன்...கதவுக்கு பக்கத்துல லெப்ட்ல தெரியுதே..அந்த பெட்ல இருக்க குண்டனை பத்தி சொல்றேன்...எல்லார் கதையும் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்...

தாத்தாவுக்கு கால் ப்ராக்சராயிருக்கு...காம்பவுண்ட் ப்ராக்சர்...அப்படீன்னா எலும்பு சுக்கல் சுக்கலா உடைஞ்சிருச்சின்னு அர்த்தம்...காலுக்குள்ள கம்பியெல்லாம் போட்டு கட்டியிருக்கு...வெள்ளையா கம்பி வெளியில நீட்டிக்கிட்டு பாக்கவே பயங்கரமா இல்லை ?

கவர்மெண்ட் ஆபீஸ்ல க்ளார்க் அவரு...வேலைய முடிச்சுட்டு வெளிய வந்திருக்கார்..அவருக்கு பழக்கமான ட்ரைவர்தான்...ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்திருக்கார்.. ஷெட்ல நிறுத்த...ஜீப்ல ப்ரேக் பிடிக்கல...இவருக்கு நேரா ஜீப் வேகமா வரும்போதே தெரிஞ்சுருச்சு இவருக்கு...இவர்மேல மோதப்போகுதுன்னு...ஏய் ஏய்னு கையை ஆட்டிக்கிட்டு விலகத்தான் பார்த்திருக்கார்..அப்படியும் இவர்மேல மோதி கால்ல ஏறி, அதுக்கப்புறம் ஆபிஸ் வெளித்தூண்ல முட்டி வண்டி நின்றுக்கு...

அவர பாக்க வர்ரவங்கக்கிட்ட எல்லாம் புலம்பி தள்ளிக்கிட்டிருக்கார்...ரெண்டு வருஷத்துல ரிட்டைடாகப்போறவர்...அவர் மேல முட்டின ட்ரைவர் செல்வராஜைத்தான் திட்டி தீர்த்துக்கிட்டிருக்கார்...

அவருக்கு ரெண்டு பசங்க...ஒரு குண்டன்...வயசு முப்பத்தஞ்சு இருக்கும்...ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பெரியவர பார்க்க வர்ரவங்க வாங்கிட்டு வந்த பழம் பட்டு எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டு போவான்...அவர் திங்கமாட்டார்..

சின்னவனும் குண்டந்தான்...ஆனா கொஞ்சம் ஒயரமா இருப்பான்...எதுவும் பேசமாட்டான்..ஸ்கூல் கடைசி வருஷம் படிக்கிறான்...அவர் யூரின் பாட்டில் எடுத்துப்போய் ஊத்தறது, பெட் பேன் வைக்கறதுன்னு எல்லா வேலையும் செய்வான்..அமைதியா நிப்பான்...அவர் போகச்சொல்லும்போது தான் போவான்...

அப்புறம் கிழவி....தலையே சீவாது...பரட்டத்தலையாவே எப்பவும் இருக்கும்..ஏதாவது லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்கும்...வீட்ல இருந்து சமையல் பண்ணி டப்பாக்கள்ல போட்டுக்கிட்டு வரும்...கிழவர் ஆசையா திம்பார்...ஹாஸ்பிட்டல் சாப்பாட்டை விட கிழவி சாப்பாட்டைத்தான் ருசிச்சி சாப்பிடுவார்...சாப்பிடும்போது அவர் முகம் போற போக்கை பாக்கனுமே...

அப்புறம் நம்ம கையை உடைச்சுக்கிட்டிருக்கிற ஒல்லிப்பிச்சான்...அவன் பேரு சரவணன்...எங்க விழுந்து உடைச்சிக்கிட்டான்னு இதுவரைக்கும் தெரியாது....சிரிச்ச முகமாவே இருப்பான்...கிழவர் பசங்க யாரும் வரலைன்னா அவருக்கு எல்லா வேலையும் செய்யுறது அவந்தான்...

அவனோட அம்மாக்கிழவி ஒன்னு இருக்கு...இவன் இன்னும் சின்னக்குழந்தைன்னு நினைப்பு அதுக்கு...சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து தின்னச்சொல்லி சாவடிக்கும்...போதும்மா போதும்மான்னாலும் அவனை விடாது...எடுத்து எடுத்து தட்ல வெச்சிக்கிட்டே இருக்கும்...

கைல சின்னக்கட்டுதானே..இவனை எதுக்கு பெட்ல சேர்த்திருக்காங்கன்னு எனக்கு இதுவரைக்கும் புரியல...

அப்புறம் கதவுக்கு பக்கத்துல இருக்க குண்டனை பத்தி சொல்லிடறேனே...அவனுக்கு கால் பாதத்துல முறிவு...ஆனா கட்டு ரொம்ப பெரிசா இருக்கும்...அவனுக்கு ஒய்ப், ரெண்டு புள்ளைங்க இருக்கு...ஒன்னுக்கு நாலு வயசு இருக்கும்...அது பொண்ணு...இன்னோரு பையன் ஆறுலருந்து ஏழுவயசுக்காரன்...

இவங்க வீட்ல வாரத்துக்கு ரெண்டுமுறைதான் வருவாங்க...நிறைய பழம், கூல்ட்ரிங்ஸ் எல்லாம் கொண்டுவருவாங்க...நேத்து அவன் மச்சினிச்சியும் வந்திருந்திச்சு...தாத்தா விசாரிக்கும்போது நானும் தெரிஞ்சிக்கிட்டேன்...

ஆங்..என்னைப்பத்தி சொல்லவேயில்லையே...

இவங்க எல்லாருக்கும் மையமான பெட்டு என்னுது...எனக்கு என்ன நடந்தது, நான் ஏன் இங்க இருக்கேன்னு எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல..ஒரு பெண்ணின் கூர்மையான ரெண்டு கண்கள் மட்டும் அப்பப்போ கனவுல வரும்...ஆனா போனவாரம் ஊசிப்போடும்போது நர்சு தாத்தாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தது...

எனக்கு கோமாவாம்...கழுத்துக்கு மேல உணச்சியில்லையாம்...எதுவும் பேசமுடியாதாம்...நீங்களே சொல்லுங்க......நான் பேசிக்கிட்டு தானே இருக்கேன்...

Thursday, April 19, 2007

என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை

இன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...

ஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...

என்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ?) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...

நானும் திவ்யாவும் ஒரே ஆபீஸ்ல தான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம்...ரொம்ப திக் ப்ரண்ஸ்...திவ்யாவை பற்றி சொல்லனும்னா அவளோட குண்டு கண்களை சொல்றதா, இல்லை கழுத்தில் புரளும் கருமையான முடியை சொல்றதா, இல்லை எப்போதும் புன்முறுவலோட பேசும் அவளோட குணத்தை சொல்றதா...இந்த புன்முறுவலே அவளுக்கு தனி அழகுதான்...என்னோட ஆளை பற்றி அதிகமா சொல்ல மாட்டேன் போங்க...விஷயத்துக்கு வரேன்...அவளுக்கு ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு வேற ட்ரை பண்ண ஆரம்பிச்சா...ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும்போது அவளுக்கு வேற பெரிய கம்பெனி கிடைச்சு அதுக்கு மாறிட்டா...நானும் ட்ரைபண்ணிக்கிட்டு தான் இருக்கேன்....லாஸ்ட் இயர் திவ்யா போன கம்பெனியிலேயே ஜாய்ண் பண்ணனும்னு வெறியா ட்ரை பண்ணேன்...ஆனா முடியல...அவளோட இண்டர்வியூ மாதிரி என்னோடது சக்ஸஸ் ஆகல...ஊத்திக்கிச்சு...அதுக்கு நான் கொஞ்சம் மெண்டலி அப்செட் ஆனதும் ஒரு காரணம்...

மொதல்ல நான் ஏன் திவ்யா பின்னால ஓடுறேன்னு தெரிஞ்சுங்கோங்களேன்...ஆமாம் இதுல என்ன கம்ப சூத்திரம் (இது டிஸ்க்ரீட் மேக்ஸ விட பெரிய சப்ஜெட்டா - எல்லோரும் சொல்றாங்க, நானும் சொல்றேன், நீங்க பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்) அப்படீன்னு கேக்கறீங்களா ? அவளை லாஸ்ட் இயர் ஏப்ரல்ல நான் ப்ரபோஸ் பண்ணேன்...மொதல்ல பிப்ரவரி 14த் தான் பண்ணலாம்னு நினைச்சேன்...இருந்தாலும் அப்படியே தயங்கி தயங்கி ஏப்ரல் ஆகிருச்சு...

ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல மணிக்கணக்கா பேசுவோம்...ஏர்டெல் டூ ஏர்டெல் ப்ரீ கார்டு வாங்கி போன் சூடாக சூடாக பேசுவோம்...கே டிவியில பார்த்த அரதப்பழசு படம், சினிமா கிசு கிசு, ஜாவா அப்படீன்னு பேச்சு மணிக்கணக்கா நீளும்...அவளுக்கு அவளோட டாடின்னா உசுரு...அது தெரிஞ்சதுல இருந்து நானும் என்னோட டாடின்னா உசுருன்னு சொல்லிக்கிட்டேன்...அவளுக்கு ஜாஸ் மியூசிக் பிடிக்கும்...நானும் என்னை நானே ஜாஸ் மியூசிக்கு கண்வர்ட் ஆக்கிக்கிட்டேன்...அப்படி எல்லாம் அவளுக்கு பிடிச்சமாதிரி தான் நடந்துக்கிட்டேன்...

ஆனா அவளை ப்ரபோஸ் பண்ணப்போ கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு 'வேணாம்' குமார்னு ஒத்தை வார்த்தையில சொல்லிட்டா...நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன்...காரணம் ஒன்னும் பெரிசா அவளால சொல்ல முடியல...இண்டர் காஸ்ட் மாரேஜ் எல்லாம் எங்க பேமிலியில ஒத்துக்கமாட்டாங்க குமார் அப்படீன்னா...அவளோட கணவன் எப்படி இருக்கனும்னு சில கனவுகள் இருக்காம் அவளுக்கு...அதுக்கு நான் சூட்டாக மாட்டேன் அப்படீன்னு சொன்னா...நான் விடலை...எப்படி எல்லாம் இருந்தா உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்றெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுப்பார்த்தேன்...அவ ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லிட்டா...கடைசியா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனப்புறம், நான் கொஞ்சம் யோசிக்கனும் அப்படீன்னா...

ரெண்டு மூனு நாள் வேலையே ஓடலை...அப்புறம் கேண்டீனுக்கு போய் சாப்டுட்டு வந்தப்புறம் கொஞ்ச நேரம் பார்க் பக்கமா இருந்தா...பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்...

திவ்யா...

ம்...சொல்லுங்க குமார்...

என்ன யோசிச்சாச்ச...என்னால சாப்பிட முடியல, தூங்க முடியல திவ்யா...ப்ளீஸ்...சொல்லும்மா...

குமார்...எனக்கு யோசிக்க டைம் வேனும்னு சொன்னேன்...ரெண்டு மூனு நாள்ல சொல்ல முடியாது குமார்...

வேற எவ்ளோ நாள் வேனும் திவ்யா...

லுக்..இது என்னோட லைப் பிரச்சினை...இதுல நான் திங்க் பண்ணி தான் டிஸிஸன் எடுக்க முடியும்...

ஓக்கே ஓக்கே...திங் பண்ணி சொல்லும்மா...அதுல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...ஆனா உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்...

குமார்...நீ எனக்கு நல்ல ப்ரண்ட்...ஒன்னை லூஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல...இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ப்ரண்ஷிப்பை விட லைப் தான் முக்கியம்னு நாம டிசிஷன் எடுக்கவேண்டியிருக்கும்...பிக்காஸ்........

திவ்யா...நீ எடுக்கற எந்த முடிவும் எனக்கு ஓக்கே தான்...நான் உன்னை கண்டிப்பா கட்டாயப்படுத்தல...ஆனா என்னோட மனசுல இருக்க ஆசையை சொல்லக்கூடாதுன்னு நீ சொல்லலியே...

ஓக்கே...ஒனக்கு ஒரு விஷயம் சொல்லனும்...நாம ரெண்டு பேரும் அட்டண் பண்ண இண்டர்வியூ ரிசல்ட் கண்ஸல்டண்ட் மெயில் பண்ணியிருக்கா...நான் செலக்டடாம்...உன்னோட ரெஸ்யூமை ஹோல்டு ல போட்டுட்டாங்களாம்...15 டேய்ஸ்ல ஜாய்ன் பண்ணச்சொல்லி ஆபர் அனுச்சிட்டாங்க...நான் கண்டிப்பா ஜாய்ண் பன்றதா சொல்லிட்டேன்....என்னோட மனசு சரியில்ல...எனக்கு இப்போ ஒரு சேஞ்ச் வேணும் குமார்...

திவ்யா...உன்னோட மனசு சரியில்லாததுக்கு நான் காரணமா ? ப்ளீஸ் திவ்யா...என்னால இதுக்கு மேல ரெஸிஸ்ட் பண்ண முடியல...

நோ நோ...எனக்கு இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்...புது கம்பெனியில சூப்பர் ப்ராஜக்ட்...அருமையான சேலரி...கண்டிப்பா நல்லா இருக்கும் குமார்..டாடி கூட ஓக்கே சொல்லிட்டார்...எனக்கு டெண் டேய்ஸ் லீவ் இருக்கறதால நான் நெக்ஸ்ட் வீக் போயிருவேன் குமார்...

அப்படியே கண்கள் கலங்க ஆரம்பித்தது எனக்கு...

சீ..என்ன சின்ன குழந்தை மாதிரி அழற குமார்...நான் ஒன்னும் ரிஜக்ட் பண்ணல்லியே உன்னோட ப்ரபோஸலை...ஒரு ஒன் இயர் போகட்டும்...பிறகு சொல்றேன்...

என்னாது ஒன் இயரா ?

என்ன திவ்யா சொல்ற ?

எஸ் குமார்...நான் புது கம்பெனியில ஜாயின் பன்றேன்..நீயும் வேற நல்ல கம்பெனி ட்ரை பண்ணு...வீட்டுக்கு எப்போதும் போல வா...போன் பண்னு...நெக்ஸ்ட் இயர் கேளு...சப்போஸ் எனக்கு ஓக்கேன்னா சரி...இல்லைன்னா நம்ம எப்போதும்போல ப்ரன்ஸாவே இருக்கலாம்...

சரி திவ்யா...இருந்தாலும் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா ?

ப்ளீஸ் குமார்..இந்த விஷயம் இதோட விடுவோமே...ஹாரி பாட்டர் புக் வாங்கித்தரச்சொன்னனே என்ன ஆச்சு...

நேத்தே வாங்கிட்டேன்பா...உன்னோட ட்ராயர்ல வெச்சிருக்கேன்...எடுத்துக்கோ...

தேங்ஸ் குமார்....நான் கிளம்பறேன்...டைம் ஆச்சு...

இவ்ளோதான் எங்களோட உரையாடல் நடந்தது...அதுக்கப்புறம் எப்போ போன்பண்ணாலும் நான் பிஸி...அப்புறம் பேசறேன்...அப்படீனே சொல்றா...நானும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் போன் பன்றதையும் விட்டுட்டேன்...அவங்க வீட்டுக்கு மட்டும் சண்டேஸ்ல போவேன்...ஆனா அவ பெரும்பாலும் வீட்டுக்கே வரதில்லயாம்...புதுக்கம்பெனியில அக்காமடேஷன் இருக்காம்...நிறைய வேலைன்னு அங்கயே தங்கிடறாளாம்...யூ.எஸ். ஹெச் ஒன் பி வேற ப்ரபோஸ் பண்றாங்களாம் கம்பெனியில.....என்று அவங்க அம்மா ஒரு முறை போன்ல சொன்னப்ப கொஞ்சம் சுர்ர்ருனு இருந்தது...

இன்னையோட எங்களோட (என்னோட) ப்ரபோஸலுக்கு ஒரு வயசாச்சு...

சரி இன்னைக்கு எப்படியும் அவளோட பேசிடலாம் என்று அவள் அலுவலக நெம்பருக்கு போன் அடித்தேன்...

ரிங் ரிங்...!!

நாலு ரிங்குக்கு பிறகு வாய்ஸ் மெயில் போனது.....

மக்களே...இந்த கதையில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்...முடிவை நீங்களே கணியுங்களேன்...சரியான முடிவை எடுத்து பதிவில் சேர்த்து கதையை கம்ப்ளீட் செய்கிறேன்...முடிவு ரெண்டு லைனிலும் இருக்கலாம்...ரெண்டு பாராவிலும் இருக்கலாம்...சரியான முடிவு எதுவும் வரலைன்னா நானே எழுதிடுறேன்...

Thursday, March 01, 2007

நேற்று, இன்று, நாளை.....

நேற்று

தஞ்சை மாவட்டம்...பத்தூர் மேல்கரை கிராமம்...வருடம் 1960....வீட்டில் இருந்தேன்...தாத்தா ஹெட் மாஸ்டர்...நான் பி.யூ.சி முடித்துவிட்டு அரசாங்க வேலைக்கான உத்தரவுக்காக காத்திருந்தேன்...குபு குபுவென இருகரையும் நிரம்பி பொங்கி வரும் காவிரியில் கைகளை வீசி நீச்சலலடித்து குளிப்பதும், அத்தை மகள் மல்லிகாவை சுற்றி சுற்றி வருவதும், அம்மா செய்யும் பொன்னாங்கன்னி கீரை குழம்பை மிளகாய் வற்றலுடன் இணைத்து நன்றாக சாப்பிடுவதுமாக பொழுது ஓடியது....

எப்போதும்போல் அன்றும் காலையில் அம்மா கொடுத்த பசும்பாலை மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு, காவேரி ஆற்றுப்பக்கம் கிளம்ப எத்தனித்து துண்டை எடுத்து தோள் மேல் போட்டேன்....

வீட்டு வாசலில் "அய்யோ அம்மா என்று யாரோ குய்யோ முறையோ என்று கத்தும் சத்தம்..."...வெளியே ஓடினேன்...எனக்கு முன்பாக அம்மா வெளியே ஓடிக்கொண்டிருந்தாள்...என்ன சத்தம் என்று பார்க்க...

அங்கே நானும் அம்மாவும் பார்த்தது அதிர்ச்சியான அதிர்ச்சி....எந்த விஷயத்துக்கும் கோபப்படாத ஊர்ப்பெரியவர், ஊர் பஞ்சாயத்தில் அமர்பவர், பள்ளி தலைமை ஆசிறியர், என் அப்பா, ஒரு தாழ்ந்த சாதி பயலை செருப்பால் அடித்துக்கொண்டிருந்தார்...

"ஏ உனக்கு அவ்வளவு திமிராகிடுச்சா.."

என்று அவன் தலை மயிரை பிடித்து அடித்துக்கொண்டிருந்தார்...

அவனோ, அய்யா, விட்டுடுங்க, இனிமே செய்யமாட்டேன் என்று கூவிக்கொண்டிருந்தான்...

விஷயம் பார்த்தவுடன் எனக்கு விளங்கி விட்டது...அம்மாதான் எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்...

புதிய ரப்பர் காலனி ஒன்று அருகில் கிடந்தது...இந்த பயல் அதை அணிந்து வந்திருக்கவேண்டும்...அதை வீட்டு திண்னையில் உட்கார்ந்திருந்த அய்யா பார்த்துவிட்டிருக்கவேண்டும்....அதுதான் விஷயம்....

அய்யா அனுப்பி பட்டனத்துக்கு போனவன் சும்மா வராமல் அங்கே விற்ற ரப்பர் காலனியை வாங்கி மாட்டிக்கொண்டு வந்திருக்கிறான்....இடுப்பில் துண்டை கட்டி சேவகம் செய்யும் பயலுக்கு அவ்வளவு ஏத்தம் என்று அவர் செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறார்...

என்ன செய்ய, காலம் இப்படி கிடக்கு...

இன்று

நான் தனியாத்தான் பெங்களூர்ல கேள்பிரண்டோட லிவ்விங் டுகெதரா இருக்கேன்......அப்பாம்மா சென்னைல...போனதரம் மச்சான் கல்யாணத்துக்கு தஞ்சாவூருக்கு போனப்ப தாத்தாகிட்ட ப்ராமிஸ் பண்ணேன்...

தாத்தா ஹெட் மாஸ்டரா இருந்து ரிட்டயர் ஆனவரு...இருந்தாலும் தமிழ்நாட்டைத்தாண்டி எங்கேயும் போனதா எனக்கு தெரியல...அதும் இல்லாம ஒரு ஏழெட்டு வருஷமா கொஞ்சம் உடம்பு சரியில்லாம கிராமத்துல தான் இருந்தார்...

இப்போ ஆப்பரேஷன் பண்ணதுல இருந்து கொஞ்சம் தேறி இருக்கார்....ம்ம்ம்...தாத்தாக்கிட்ட நான் சொன்னது என்னன்னா...."தாத்தா, உன்னைய பெங்களூர் சுத்திக்காட்றேன்னு"...அர்ச்சு செல்லம் ( அதான் என்னவள், என் மனம் நிறைந்தவள் - கவித கவித) ஊருக்கு போயிருக்கா..அவ அக்கா மேரேஜ்...ஒரு டெண் டேய்ஸ்..வரமாட்டா......

ஊர்ல அத்தை பையன் ப்ரபாட்ட சொல்லி ட்ரெயின் ஏத்தி விடச்சொன்னேன்....நேத்து நைட் வந்திட்டார்.....சாட்டர்டேதானே...பத்து மணிக்கா எழுந்தேன்...இன்னைக்கு மல்டிப்ளக் த்யேட்டருக்கு கூட்டிப்போயி கிழவனை அசத்திடனும்...மக்கா...அங்க வர்ர பிகருகளை பாத்து ஆடனும் கிழவரு.....

அப்படியே போனைப்போட்டு ஒரு ரெண்டு டிக்கெட் வீட்ல கொண்டுவந்து கொடுக்கச்சொன்னேன்...

மத்தியானம் கார்ல தூக்கிப்போட்டேன் தாத்தாவ...அப்படியே இந்திரா நகர் அடையாறு ஆனந்த பவன்ல ஒரு மினி மீல்ஸ வாங்கிக்கொடுத்தேன்...இவ்ளோ கூட்டமா அப்படீன்னு வாய பிளந்தாரு...

வாய விட்டு கேட்டுட்டாரு...

சின்னவரே, என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு...

என்னா தாத்தா, கண்ணு தெரியலைன்னாலும் நல்ல பிகருங்களை அப்படியே ஐடெண்டிபை பண்ணிடுற...என்று சிரித்தேன்...

சத்தம் போட்டு பேசாதடா...இவங்கள்ளாம் இதே ஊர்க்காரங்களா...என்றார்...

இல்ல தாத்தா...கன்னடாக்காரங்கதான் இங்க அதிகமா இருக்காங்க....நம்ம தமிழ்காரங்க,டெல்லிக்காரங்க,ஒரிசாக்காரங்க,மலையாளீஸ்,
தெலுங்குக்காரங்க எல்லாரும் இருக்காங்க தாத்தா...

நெறைய வெளிநாட்டுக்காரங்க கூட இருக்காங்க...

தாத்தா பொளந்த வாய மூடவே இல்லை...

அப்படியே மல்ட்டிப்ளக்ஸ் த்யேட்டர்...அங்கே கொஞ்சம் ஷாப்பிங் சைடு கூட்டிப்போனேன்...வெள்ளைக்காரனையோ, கருப்பனையோ பார்த்தா, இவன் எந்த நாட்டுக்காரன், அவன் எந்த நாட்டுக்காரன், என்று வாய் ஓயாம கேட்டார்...நானும், அவன் கென்யா ஸ்டூடன்...இவன் சைனீஸ் மாதிரி இருக்கான்...இவன் யூரோப்பியன்....என்று சொல்லிக்கிட்டிருந்தேன்...

அப்புறம் அப்படியே த்யேட்டருக்கு கூட்டிப்போயி நான் டிக்கெட் எடுத்திருந்த ப்ளட் டைமண்ட் படத்தை காட்டினேன்...சவுண்ட் எபக்ட்டை பார்த்துட்டு மீண்டும் தெறந்த வாயை மூடலை கிழவர்...

இங்கே எல்லாம் இருக்கவங்க என்ன சாதிக்காரங்க என்று கேட்டார்...நான் லைட்டாக முறைத்தேன்....அதெல்லாம் இங்கே பாக்குறதில்லை...எவன் எந்த ஜாதின்னு கேட்டா அது எங்கப்பன் காலத்தோட முடிஞ்சுருச்சுன்னு சொல்வாங்க...என்றேன் சூடாக...

அர்ச்சுவும் நானும் வேற வேற சாதியாச்சே.....

நாளை

வருடம் 2106...

என்னோட குட்டிப்பேத்தியை ஜப்பான் இறக்குமதி ஜுமோங் வி.2 எழுப்பும்போது மணி காலை எட்டு...என்னோட ஆயுளை ஜீன் தெரபி மூலம் இருநூறாக அதிகரித்து ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன....

என்னுடைய மூவிங் சேரை அவள் அறைக்கு நகர்த்திக்கொண்டு போனேன்....வணக்கம்...என்று சிரித்தாள்...மற்றவர்கள் இதை கேட்டால் ஆச்சர்யத்தில் உறைவார்கள்..ஆங்கிலத்தை உலக மொழியாக்கி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டதே...இவள் தமிழ் பேசுவது என்னிடம் மட்டும்தான்...

மூன்றாம் உலகப்போருக்கு பின்னால் உலகம் முழுமையும் பல நாட்டு பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு கவுண்ஸில் கீழ் வந்து, சீன மொழியா, ஆங்கில மொழியா உலக மொழி என்ற போட்டியில் ஆங்கிலம் வெற்றி பெற்று ஆங்கிலம் உலக மொழியானது.....விடுங்கள் அது பழைய கதை...

ஏய் பாப்ஸ்...மானேஜ்மெண்ட் ஸ்கூல் போகலியா...என்றேன்...

படு சமத்து...தமிழை கூட பேசுவாள்...தமிழ் என்ன, பதினைந்து மொழிகளை பேசும்/புரிந்துகொள்ளும் நேனோ டேட்டாஷீட்டை அவளிடம் கொடுத்திருந்தேன்...

அவளுடைய ட்ராபிக் பஸ்டர் ஹெலிகார் காலையில் எட்டுமணிக்கே வந்திடுமே...

நோ தாத்ஸ்.....இன்னைக்கு என்னோட 6G போன்ல வீடியோ காஸ்ட்...என்னோட அங்கோலா டியூட்டர் நடத்தப்போறா என்றாள்...

அங்கோலா டியூட்டரா....அந்த சோமாலியாக்காரி என்ன ஆனாள் ? என்றேன்...

அவளா...அவளோட J2C இண்டியன் வொர்க் பர்மிட் முடிஞ்சு போச்சு..அவள் கிளம்பி போயிட்டா...போவும்போது ரொம்ப புலம்பினா...அவ இண்டியன் யெல்லோ கார்ட் வாங்கி இங்கேயே செட்டில் ஆகலாம்னு நினைச்சாளாம்...இம்மிக்ரேஷன்ல ஏதோ ப்ராப்ளம்...அதான் கிளம்பிட்டா...

இந்த க்ரோயிங் கண்ட்ரீஸ்ல தான் நிறைய எம்ளாயீஸ் இருக்காங்களே...உடனே எங்க ஸ்கூஸ் மெயின் ரோபோ அடுத்த ட்யூட்டரை ஸர்ஸ் மோடில் காட்டி கொடுத்திருச்சி......நேத்துல இருந்து இவங்கதான் எங்க ட்யூட்டர்.....இன்னைக்கு செக்கண்ட் க்ளாஸை 6G வீடியோ காஸ்ட்ல வெக்கிறேன்னு சொல்லிட்டாங்க தாத்ஸ்...

தாத்ஸ்...நேத்து நான் கேட்டது என்னாச்சு...என்றாள்...

செல்லக்குட்டி...ஸாரிடா..நீ என்ன கேட்டேன்னு மறந்துபோச்சு...என்றேன் அவஸ்தையாய்.....பேசாம ஒரு ஹெட் மெமரி சிப் வாங்கி ஆப்பரேட் பண்ணிக்க வேண்டியதுதான்...முக்காவாசி பேர் இப்போ அதைத்தானே செய்துக்கிறானுங்க...

தாத்ஸ்....என்ன தலையில ட்ரீம் சிப் ஏதாவது மாட்டிங்கிட்டீங்களா...என்ன யோசனை...என்றாள் வெடுக்கென்று...

இல்லை செல்லம்...நான் மறந்துட்டேன்...நீ ஒரு முறை சொல்லு...என்றேன்...

தாத்ஸ்....வீடியோவிலயும், வால் நெட்லயும் ( சுவற்றிலேயே இணையம்), பார்த்து பார்த்து எனக்கு போரடிச்சுருச்சு....ஆப்ரிக்காவில லைவ் ட்ரீ இருக்காமே...மரம்னு நீ சொல்லுவியே....அதை நீ காட்டு...இண்டியாவில இருந்து ட்ராவல் தர்ட்டி மினிட்ஸ் தானே...போலாம் தாத்ஸ்...

ஓ எஸ்...மறந்துட்டேண்டி செல்லம்...நாளைக்கே போலாம்....ஆமாம் உன்னோட சைனீஸ் பாய் பிரண்ட் என்ன ஆனான்...என்றேன்...

ஓ அவனா...அவன் ஏதோ நெட்ல தமிழ்மணம்,தேன்கூடுன்னு எதையோ பார்த்திட்டானாம்...அந்த லாங்குவேஜ் என்னன்னு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கான்...

என் ப்ரேக்பாஸ்ட் அலாரம் பீப்ப்ப்ப்பியது...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....