நிறைய புதிய பதிவர்கள் வந்திருக்கிறார்கள்...சிலர் இந்தி வாழ்க, கருணாநிதி மட்டும் என்னை ஹிந்தி படிக்க விட்டிருந்தால் அம்பானிக்கு அஸிஸ்டெண்ட் வேலையில் மும்பையில் இருந்திருப்பேன் என்கிறார்...இந்தி எதிர்ப்புக்கும் இந்தி திணிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தனியாக எழுதவேண்டும்...
ஆனால் இந்த பதிவு, பார்ப்பனீயம் என்றால் என்னவென்று அறியாத புதிய பதிவர்களுக்கு அது குறித்து விளக்கும் ஒரு சிறு முயற்சி...
இரண்டு கேள்விகளுக்கு விடை காண்போம்...
1. யார் பார்ப்பனர் ? மற்றும் 2. எது பார்ப்பனீயம் ? என்ற இரு கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்...
யார் பார்ப்பனர் என்ற கேள்விக்கு பொதுவாக வரும் விடை, ப்ராமின் (பார்ப்பண) சாதியில் பிறந்திருந்தால் அவர் பார்ப்பனர் என்பது...
இது தவறு !!!
பார்ப்பன சாதியில் பிறந்த அனைவரும் பார்ப்பனர் இல்லை...!!!
பாரி.அரசு அவர்கள் எழுதிய பதிவில் இருந்து ஒரு ஸ்னிப்பெட் கீழே தருகிறேன்...
உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
தமிழரங்கம் சொல்வதை கொஞ்சம் பாருங்களேன்...!!
பார்ப்பனீயம் என்ற இந்துமதம் சாதியமாக இருக்கின்ற எல்லையில், அது உயர் சாதிய நலனை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. அதிலும் பார்ப்பன நலனை குறிப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. இந்த பார்ப்பனீயம் அனைத்தும் தழுவிய சமூக முரண்பாடுகள் சார்ந்து சுரண்டும் ஒரு வர்க்க கோட்பாடாகவும், அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கின்றது.
உறையூர்க்காரன் சொல்வதில் மேட்டர் இருக்கிறது...
அமேரிக்கா என்கிற நாடு, தம்முடைய நாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நாடு. உலகையே அடக்கி ஆளும் ஆண்மை தங்கள் நாட்டிற்கு உண்டு என்று எண்ணுவதுக் கூட பார்ப்பனீயம்தான். இந்த ஒற்றுமையின் காரணமாகவே சிலர் "நான் அமேரிக்க ஆதரவாளன்" என வெளிப்படையாக பீற்றிக் கொள்கிறார்கள்.
பார்ப்பன சாதியில் பிறந்துவிட்டு, தங்கள் மீது பெற்றோராலும் உற்றோராலும் மற்றோராலும் அழுத்தப்பட்ட சாதீயக்கூறுகளை, உயர் சாதி திமிரை, கண்டுணர்ந்து, அதனை வெறுத்து ஒதுக்கி, வெளிப்படையாக அவற்றை சாடியவர்கள் பலர் இருக்கிறார்கள்...அவர்களுக்கு ஹேட்ஸ் ஆப் !!!!
ஆனால் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் பார்ப்பன சாதி பெரியவர்கள், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தங்கள் பிள்ளைகளுக்கு அதே வகையான சாதியக்கூறுகள், தீண்டாமை போற்றவற்றை ட்ரான்ஸ்பர் செய்துவிடுவது உண்மையில் வருத்தப்படக்கூடிய, வெறுக்கக்கூடிய ஒரு விடயம்...
விஜய் டி.வி லாவண்யா ஒரு சிறந்த உதாரணம்...மறந்துபோனவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன், "தன்னுடைய ஜாதியில் தான் திருமணம் செய்துகொள்வேன்" என்று அவர் கூறினார்...ஆனால் அதற்கான காரணம், "ஐயங்கார் ஜாதியில் பிறந்துவிட்டதால் I Feel blessed, அதனால் அதே ஐயங்கார் ஜாதியிலேயே திருமணம் செய்வேன்"...

இளையதலைமுறை பெண், மருத்துவமோ அல்லது பொறியியலோ படித்துக்கொண்டிருக்ககூடும்...இவரிடம் எப்படி வந்தது சாதீயக்கூறு ? கண்டிப்பாக அவரது பெற்றோர்களையே நான் சந்தேகிப்பேன்...
என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்..என்னுடைய நன்பர் ஒருவர் பார்ப்பனர். அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன், உணவு நேரம், என்னையும் உணவுக்கு அழைத்தனர்...
எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் ப்ளாஸ்டிக் தட்டு, இருப்பினும் நான் அதை வேறுபாடாக நினைக்கவில்லை, ஆனால், உணவு அருந்திவிட்டு வாஸ் பேஸின் சென்றபோது, பதினோரு மணிக்கு காபி அருந்திய சிறிய எவர்சில்வர் டம்ளர் குப்பைக்கூடையில் கிடந்தது...
பார்ப்பனர்கள் அனைவரையும் சமூக உணர்வாளர்கள் சாடுவதன் காரணம், பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...
தாங்கள் பின்பற்றுவதோடல்லாமல் தன்னுடைய இளைய தளைமுறைக்கு சத்தம் இல்லாமல், அவர்கள் உணரும் முன்பே, அவர்கள் எது நல்லது / எது தீயது என்று பிரித்தறியும் வயதை அடையும் முன்பே ( கடவுள் நம்பிக்கையை புகுத்துவது போல) பார்ப்பனீயத்தையும் புகுத்தி விடுகிறார்கள் அவர்களது பார்ப்பனீயப்பெற்றோர்...
ஒருமுறை ஒரு வலைப்பதிவர் சொன்னார், தன்னுடைய பிள்ளை மந்திரம் சொல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்று...வேறு பதிவர் சொன்னார், அவருடைய நன்பர் சட்டைக்குள் என்ன அணிந்திருக்கிறார் என்பதையே நேர்முக தேர்வுக்கு சென்றபோது தேர்வாளர் கவனித்தார் என்று...
இவை பார்ப்பனீயக்கூறுகளே !!!!
இங்கே ஒரு வலைப்பதிவர் தான் வடகலை அய்யங்கார் என்றார்...ஆனால் அவர் வடகலை அய்யங்கார் சாதி உயர்ந்த சாதி என்று எங்கேயும் வாதிட்டதாக நினைவில்லை...
ஆனால் அவர் குலக்கல்வி முறையை கொண்டுவரவேண்டும் என்பதால் 4000 ஆரம்ப பள்ளிகளை மூடிய மூடன் ராஜாஜியை ஆதரிக்கிறார். இஸ்ரேலை ஆதரிக்கிறார். சோ ராமசாமி சொட்டைத்தலையனை ஆதரிக்கிறார். இவை பார்ப்பனீயக்கூறுகளாம்...
சாதியால் உயர்வு தாழ்வு சொல்லல் பார்ப்பனீயமாகும்...மேலப்பாளையமும் சரி, திண்ணியமும் சரி...பார்ப்பனீயத்தை பின்பற்றுபவரில் தேவர், முதலியார், வன்னியர் என்றெல்லாம் பிரிவினை கிடையாது...அவர் அனைவரும் ஒருவரே...
கீழ்சாதியாக ஆக்கப்பட்டவரின் உரிமைகளை மறுக்கும் இந்த மேல்சாதி திமிர், இரட்டைக்குவளை முறையில், சுவர் எழுப்புவதில், தெரு வழியாக பிணத்தை கூட தூக்கி செல்வதை தடுப்பதில் நிற்கிறது...
கெஞ்சிப்பார்ப்பான், மிரட்டிப்பார்ப்பான் : பார்ப்பான் என்ற பெரியாரின் வாக்கை அறிமுகம் செய்தார் ஒரு வலைப்பதிவர்...
பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...
அது பலவகையில் உணமை...
பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..
தன்னுடைய சொந்த லாபத்துக்காக எவரையும் / எதையும் அழித்து, ஒழித்து செல்ல இவர் தயங்கமாட்டார் என்பது சரியான கூற்றாகும்...
இவை அனைத்தும் என்னுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, விவாதம் செய்ய விரும்புபவர்கள் "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்ற சொல்லின் அடிப்படையில் நல்ல சொற்களை உபயோகம் செய்து விவாதித்தால் மகிழ்வேன்...
தரவுகள்
உறையூர்க்காரன் http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post.html
பாரி.அரசு http://pktpariarasu.blogspot.com/2008/06/blog-post_25.html
தமிழரங்கம் இணையதளம் (சிறு பகுதி) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3439:2008-08-30-16-17-33&catid=73:2007&Itemid=76
சிந்தனைக்கு ஒரு குறள் !!!
தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்காருக்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
சோ, சூ.சாமி தவிர வேறு யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் போடலாம்...