விஜயகோந்தை சாட்டையால் அடித்த பஹரைன் சுரேஷ்ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர் டவுசர் கிழித்துள்ளார்...

ஓவர் டு சுரேஷ்...

சுரேஷ்,பக்ரைனிலிருந்து, இக்கரையிலிருந்து அக்கரைக்கு தண்ணியிலே நீந்தி கொண்டிருப்பவனுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் இங்கே இந்த "மப்பு" தலைவர் வெளிப்படுத்தும் பேச்சு "நான் நீந்தவே தேவையில்லை சும்மா மூழ்கினாலே போதும் இந்த மனித தெய்வங்கள் (இவருக்கு வாக்கப்பளிப்பவர்கள் மட்டுமாம்) என்னை கரையேற்றி விடுவார்கள்" என்று ஆகம்பாவ பேச்சு பேசுகிறார்.

இவர் மற்றவர்களை கொள்ளைக்காரர்கள் என்றும் ஊழல்வாதிகள் என்றும் சொல்வதை சரி என்று வைத்து கொள்வோம்.

அதே வேளையில் இவர் தன்னை உத்தமன் என்றும் தன்னுடன் இருக்கும் "முன்னாள் கொள்ளைக்காரர்களுக்கு" நான் புனிதநீர் தெளித்து அவர்களை சுத்தமாக்கி விட்டேன் என்றும் சொல்வதற்கு முன் சில உண்மைகளையும் இவர் வெளியிட வேண்டும்.

இவர் தான் மட்டுமே நேர்மையானவர் தன் கட்சி மட்டுமே புனிதமான கட்சி என்பதாலேயே சில கேள்விகளை வைக்கிறேன்.

1) மு.க & ஜெ இருவருமே கொள்ளையர்கள் என்று சொல்கிறிர்கள். ஆனால் இதே மு.க_வின் காலடியில் நீங்கள் கிடந்ததும் அவரை தன்னுடைய தலைவர் என்று நீங்கள் அறிவித்து அவருடைய தலைமையிலேயே திருமணம் கட்டி கொண்டதும் அனைவரும் அறிந்ததே.

அப்போது உங்களை கருப்பு எம்.ஜி.ஆர் என்று உங்களை சொல்லி கொள்ளாதது ஏன்?

ஒருவேளை அப்போதிருந்த மு.க_ வேறு இப்போதிருக்கும் மு.க_தான் ஊழல்வாதி என்று உங்கள் பதில் வருமாயின், மக்களாகிய நாங்கள் உங்களை மட்டும் எப்படி நம்ப முடியும்?

இப்போதிருக்கும் வி.காந்த் நாளை வேறு வி.காந்த் ஆக மாற மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

என்னுடைய அடுத்த கேள்வியும் இதை சம்பந்தப்படுத்திதான்.

2) நீங்கள் சொல்வது போல் நீங்களொருவரே நேர்மையானவர் என்றால் நீங்கள் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய உண்மையான சம்பளத்தை கருப்பு பணத்தில் வாங்கியதே இல்லையா?

நீங்கள் வாங்கிய சம்பளம் அனைத்திற்க்கும் முறையான வருமான வரி செலுத்தியதுண்டா?

அதுப்பற்றிய தெளிவான அறிக்கையை தகுந்த சான்றிதழ்களுடன் வெளியிட்டு உங்களை நேர்மையானவரால காட்டலாமே அது உங்களால் முடியுமா?

3) கட்சி தொடங்கப்பட்டவுடன் இருந்த உங்களுடைய சொத்துக்களின் விபரங்களை மக்கள் பார்வைக்கு வைக்கமுடியுமா?

அதே போல் உங்கள் குடும்பத்தார் மற்றும் உங்கள் கட்சியினரின் சொத்து விபரங்களை வெளியிட முடியுமா?


4) தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு குடும்பத்தின் தலைவனுக்கே அவசியம் என்கிற போது ஒரு கட்சியின் தலைவருக்கு அது மிகமிக அவசியமாகி விடுகிறது அவ்வகையில் உங்களை பற்றி எழுப்பப்படும் "ஒழுக்க" கேள்விகளுக்கான உண்மையான பதிலை வெளிப்படையாக தரமுடியுமா?

5)மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் மது, சூதாட்டம் போன்ற முக்கிய பிரசினைகளில் உங்களின் முடிவு என்ன? அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பது உங்கள் பதிலாயின் ஏன் உங்களின் "லீ கிளப்" என்ற ஹோட்டலில் இன்னும் இந்த வியாபாரத்தை செய்து வருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்?

6) அக்பருக்கு பின் அவர் வாரிசு என்ற மொகலாய வாரிசு அரசியலை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் ஏன் இப்போதே உங்கள் மொத்த குடும்பமும் கட்சியை குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை சொல்வீர்களா?

7) தொடக்ககாலத்தில் மற்றவர்கள் நடத்திய மாநாடுகளையும் ஆர்பாட்டங்களையும் வீண் ஆடம்பர செலவுகள் என்றும் மக்களுக்கு பிரசினையை ஏற்படுத்தும் விஷயங்கள் என்றும் விமர்சித்த நீங்கள் இப்போது அதே போல் மாநாடுகளையும் ஆர்பாட்டங்களையும் ஏன் செய்கிறீர்கள்?

8) "புரட்சி" "அதிரடி" என்றெல்லாம் முழங்கும் நீங்கள் ஏன் உங்கள் வேட்பாளரை மற்ற கட்சிகளை போல் அந்த பகுதியிலுள்ள பெருன்பான்மை சாதியினரின் ஒட்டின் அடிப்படையிலேயே தேர்தெடுக்கிறிர்கள்?

தைரியமிருந்தால் வேற்று சாதியினரை தேர்ந்தெடுத்து நிற்க வைப்பீர்களா?

9) ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் கிட்டும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்ற நீங்கள் இப்போது மாறியது ஏன்?

தனியீழம் கிட்டி விட்டதா?

ஈழத்தமிழர் பிரசினையை பற்றிய தெளிவான பதிலை இப்போதெல்லாம் தருவதில்லையே அது ஏன்?

இப்போது வறுமை ஒழிப்பு தினமென அறிவித்து பிறந்தநாளை கொண்டாடுவதை எப்போது நிறுத்துவீர்கள்? வறுமையை எப்போது ஒழிப்பீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்?

10) கல்வி பற்றிய உங்கள் சிந்தனை என்ன? உங்கள் பொறியியல் கல்லூரியில் வெறும் கல்வி கட்டணம் மட்டும் தான் வாங்கிகீறீர்களா?

11) "நான் ஆட்சிக்கு வந்தால் மின்சார பிரசினையை ஒழிப்பேன் அதற்கான மந்திர கோல் என்னிடம் உள்ளது" அதை இப்போது வெளியில் சொன்னால் மற்றவர்கள் செய்து பேர் வாங்கி விடுவார்கள் என்று சொல்லும் மோடி மஸ்தான் பேச்சுக்களை விட்டுவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக கல்வி,அடிப்படை கட்டுமானம்,நிதி,விவசாயம்,தொழில் போன்றவற்றில் உங்கள் திட்டங்கள் என்ன என்பதை மக்கள் பார்வைக்கு வைக்கலாமே?

12) மகளிரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மனைவியை முன்னிலைப்படுத்தவே என்கிற விமர்சனம் இருக்கிறது அது உண்மையில்லை எனில் உங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலில் 234 தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்களை உங்களால் அறிவிக்க முடியுமா?

மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மிகமிக சிலதான். இன்னும் பல கேள்விகள் உண்டு. அதற்கான பதில்கள் உங்களிடம் இருந்து வர வாய்ப்பில்லை இருக்கிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்கிற நிலையில்தான் மக்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்..

ஆனால் அதற்காக உங்களை மட்டுமே "உத்தமன்" "புனிதன்" நேர்மையானவன்" என்றெல்லாம் சொல்லி கொண்டு அலைவீர்களாயின், அதற்கு முன் மேலே கேட்கப்பட்டவைகளுக்கு "தெளிவான" பதில் தர முடியுமா?

உண்பதற்க்கு காகிதம் கிட்ட வேண்டுமென்றால் இன்றைக்கு கழுதை கூட நாட்டை முன்னேற்ற பாடுபடுவேன் என்று சத்தியம் செய்யும் அதற்காகவெல்லாம் ஒட்டளிப்பது என்றாகி விட்டால் நம் நிலை கழுதையை போல் பொதி சுமக்கும் நிலைக்கே தள்ளப்படுவோம்.

**************************

ஹேட்ஸ் ஆப் சுரேஷ்...!!!! ஆனால் இன்றைய நிலையில் அரசியல் அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரே கம்பெனி விஜியகோந்து கம்பெனி மட்டுமே !!! குடிகார கருப்பு எம்ஜியாரை நோக்கி நல்ல கேள்விகள்...

இன்னோரு கொசுறு : மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய ராணுவம் சிறப்பு லெப்டினெண்ட் ஜெனரல் என்ற பதவியை வழங்கி கவுரவித்திருக்கிறதாம்...காரணம் அவர் ரெண்டு மூனு ராணுவ படங்களில் நடித்து ராணுவத்தின் சிறப்பை பொது மக்களுக்கு தெரிவித்தாராம்..

டேய் உங்களுக்கெல்லாம் கண்ணு என்ன பொடனியிலயா இருக்கு ? எங்க விஜயகோந்து இதுவரைக்கு தமிழ்ல பேசி திருத்தின தீவிரவாதிங்க எண்ணிக்கை மூவாயிரத்து முன்னூத்து பதினைஞ்சு, அதுல ஆம்பளை தீவிரவாதிங்க ரெண்டாயிரத்து நாப்பத்தஞ்சு...ச்சே...

முட்டிக்கால் வரைக்கும் தண்ணி இருக்க அந்த வழக்கமான டன்னல்ல இதுவரைக்கும் நானூத்து சொச்ச தீவிரவாதிங்களை சொழட்டி சொழட்டி அடிச்சாரேடா எங்க கேப்டன்...

என்ன வடிவேலுக்கிட்ட தான் கொஞ்சம் டவுசர் கழண்டுபோச்சு...

மீனவனா இருந்தப்ப கூட காஷ்மீருக்கு ரஞ்சிதா கூட போயி மன்சூர் அலிகானை முறியடிச்சாரேடே...இவருக்கு ஒரு பதவி குடுங்கடே !!!!

Comments

கபீஷ் said…
மீ த பர்ஸ்டூ!!!
கபீஷ் said…
//முட்டிக்கால் வரைக்கும் தண்ணி இருக்க அந்த வழக்கமான டன்னல்ல இதுவரைக்கும் நானூத்து சொச்ச தீவிரவாதிங்களை சொழட்டி சொழட்டி அடிச்சாரேடா எங்க கேப்டன்...//


கலக்கல் :-):-):-)
theevu said…
அன்புத் தம்பிங்களா

என்னய்யா தேசியம் பேசிறீங்க?

//மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய ராணுவம் சிறப்பு லெப்டினெண்ட் ஜெனரல் என்ற பதவியை வழங்கி கவுரவித்திருக்கிறதாம்//

தமிழ்நாட்டான் என்ன இளிச்சவாயனா?

உடனடியாக பிரணாப்முகர்ஜியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி அண்ணன் நடிகவேள் விசயகாந்துக்கு காப்டன் பதவியை வழங்கவேண்டும்.
உங்களை விஜயகோந்து கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் :-)

இவன்
உண்மை தொண்டன்
கோயம்பேடு மார்க்கெட் கிளை (ரோகிணி திரை அரங்கு அருகில்)
என்ன வடிவேலுக்கிட்ட தான் கொஞ்சம் டவுசர் கழண்டுபோச்சு...

கலக்கல் :))))))))))
SP.VR. SUBBIAH said…
////மீனவனா இருந்தப்ப கூட காஷ்மீருக்கு ரஞ்சிதா கூட போயி மன்சூர் அலிகானை முறியடிச்சாரேடே...இவருக்கு ஒரு பதவி குடுங்கடே !!!!////

:-))))))))))))))))
கபீஷ் நீங்க கடைசீ வரைக்கும் படிச்சீங்களா இல்லை கடைசி மூனு பாராவை படிச்சீங்களா ????
வாங்க தீவு...

ஏற்கனவே நாங்க குடுத்துட்டோம்...விவேக் கூட ரெண்டு மூனு படத்துல சொல்லிட்டார்...

கேப்டன் என்றாலே அது விஜியகோந்துதான்...
வாங்க ஸ்ரீதர்கண்ணன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
பஹரைன் சுரேஷ் சும்மா பறந்து பறந்து அடிச்சிருக்கிறார்....( ஆமாம் , இவர் உங்க மனசாட்சி இல்லியே. ?? )


//உண்பதற்க்கு காகிதம் கிட்ட வேண்டுமென்றால் இன்றைக்கு கழுதை கூட நாட்டை முன்னேற்ற பாடுபடுவேன் என்று சத்தியம் செய்யும் //

அனேகமாக பஹரைன் சுரேஷ் சார் , நீங்க விருச்சிககாந்தை கழுதைன்னு சொன்னதால , ரைட் லெக்கை செவுத்துல ஊணி லெப்ட் லெக்கில ஒதை வுண்டுன்னு தான் நினைக்கிறேன்....

சூப்பரான கேள்விகள் , ஒண்ணுக்கு ( இந்த 1 , அந்த ".." க்கு அல்ல ) கூட பதில் சொல்ல முடியாது அந்த விஸ்கிகாந்தால.!!!!
.இவருக்கு ஒரு பதவி குடுங்கடே !!!!
குடுங்கடே !!!! . குடுங்கடே !!!!
அதிஷா said…
விஜயகாந்தின் மீதான இந்த கொலவெறி தாக்குதலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்...

அகில உலக பின்னங்கால் கிக் ஷாட் கிங் கருப்பு வைரம் நிலக்கரி சுரங்கம் அண்ணன் விஜயகாந்த் ரசிகர் மன்றம்..

மண்டயநக்கினாம்பட்டி மூன்றாவது வீதி கிளை..
வாங்க மதிபாலா...

கருத்துக்கு நன்றி...!!!!!!!
தலைவரே. . .
சும்மா பிச்சி ஒதறிட்டீங்க போங்க.
வாழ்த்துக்கள்.
KEEP IT UP!!!
GALEEL BHASHA said…
பகரைன் சுரேஷ் link பன்னியிருந்தால், அவரை நேரடியாக பாராட்டி இருக்கலாம்...

அவரின் கருதுக்களை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்ரி நன்பரே !!!
நன்றி செவ்வானம்...
நன்றி...டெஸ்டிங்...டெஸ்டிங்...
1 – 200 of 471 Newer Newest

Popular Posts