இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வீடிழந்து அகதிகளாக உயிரைக்காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...!!! மக்கள் வசிக்கும் இடங்களில் இலங்கை அரசு குண்டுகளை வீசுகிறது...

படம் : இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவம்
இந்திய அரசு கொடுத்த ராடார்கள், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகள் கொண்ட உதவிக்குழு, இந்திய அரசால் பயிற்சி பெற்ற இராணுவப்படையை கொண்டு தமிழர்களை வேரறுக்க கொலைவெறியோடு கிளம்பியுள்ளது இலங்கை இராணுவம்...
தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளை ஏவி விட்டு, கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது இலங்கை அரசு. வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக சொந்த நாட்டு மக்களை கொள்ள முப்படைகளையும் ஏவியவர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டுமே.

படம் : ராஜபக்ஸ, பிரதமர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்.
இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் திரு.M.K.நாராயணன், இலங்கை துணை தூதர் பலிதனகோடாவை அழைத்து (தூதர் மெடிக்கல் லீவ்) இலங்கையில் தமிழர்களிடம் டீசண்டாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்தினால் ஏதாவது உண்மையிலேயே உருப்புடியா நடக்குது என்று நம்பலாம்...
துணைதூதரிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்ன பேசினார் என்று யாராவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வழக்கு தொடர்ந்தால் நல்லது...ட்ராபிக் ராமசாமி முகவரி கொடுங்களேன்...
அமைச்சரவையில் இடம் தேவை என்பதால் டெல்லிவரை சென்று சோனியாவை சந்திந்த கலைஞர் அவர்கள், டாக்டர் ராமதாஸ் சொல்வது போல இந்த பிரச்சினைக்கும் டெல்லி செல்லவேண்டும், சோனியாவை, பிரதமரை சந்திக்கவேண்டும்.
இன்னும் அண்ணா, காமராஜர் காலத்து தந்தி மெத்தட் படு த்ராபை ஐடியா, ஒரு வேளை தந்தி மெஷின்கள் துருப்பிடித்து வேலை செய்யாமல் போகலாம்...அல்லது தந்தி ஊழியர்கள் கோடிக்கணக்கான (??) தந்திகளை அனுப்பி ஓய்வை இழக்கலாம்..!!! மேலும்
வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..
மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டால் என்ன டெல்லிக்கா கேட்கப்போகிறது ? முட்டுச்சந்து முருகேசன்கள் வேறு வழியில்லாமல் போடுவது தெருமுனைக்கூட்டம், நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள் ?
சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்..
டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் மாதிரி குறைந்த விலை விமானத்திலாவது டிக்கெட் எடுங்கள்...
இலங்கை துணை தூதர், முழு தூதர், முக்கா தூதரை அழைத்து சட்டையை பிடியுங்கள்...
ப்ளீஸ் ஏதாவது செய்யுங்கள்...ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள்...அதான் எங்களை வைத்து காமெடி செய்வது ?!!!!!!!!!