
ஒரு சட்டமன்ற உறுப்பினர் எதிர்பாராதவிதமாக மறைந்துபோனால் அந்த கட்சியை சேர்ந்தவர்களே அந்த தொகுதியில் போட்டியிடுவது தான் முறை...தர்மம்...
ஆனால் இந்த முறை மதுரை திருமங்கலம் தொகுதியில் என்ன நடக்கிறது என்று நான் நீட்டி முழக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை...
அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை...(அல்லது தேவர் என்று முடியும் பெயர்)
தே.மு.தி.க சார்பில் ஏதோ ஒரு நாயுடு காரு போட்டியிடப்போகிறார்...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகாவே போட்டியிட வாய்ப்புண்டு...
லட்சிய தி.மு.க சார்பில் டி.ஆர், பிரசாரம் செய்ய போகிறாராம் லிட்டில் ஜூப்பர் ஸ்டார்.
ஏன் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரியே போட்டியிடக்கூடாது ?
கருப்பு எம்ஜியார் சொல்கிறார், எம்ஜியாருக்கு திண்டுக்கல் தொகுதிபோல எனக்கு திருமங்கலம் என்று..நல்ல அடுப்புக்கரியாக அரைத்து அவர் முகத்தில் பூசவேண்டும்...
சித்தியும், செல்வியும், அரசியும் அப்படியே அடுப்படியில் இருந்து ஓட்டாக சமைத்து யாராவது வாயில் வைப்பார்கள் என்று சிங்கப்பூரில் இருந்து காசு வாங்கி நாடார் கம்பேனி நடத்தும் சித்தப்பா நினைக்கிறார். நாட்டாமை நல்ல படம். அதுல டேய் தகப்பா ஜோக் சூப்பர். ஆனால் மக்கள் நாட்டாமை படத்தை மறந்திருப்பார்களே ?
லெச்சிய தி.மு.க கம்பேனியில் என்ன லச்சியம் இருக்கு என்று தெரியவில்லை...ஆனால் சமீபமாக நன்றாக பேசுகிறார் டி.ஆர். பெண்களை போனில் கூப்பிட்டு மிரட்டும் சுளுக்கு விழுந்த விரல் லிட்டில் சூப்பர் ஸ்டார் - அவன் அவனுக்கு ஒரு ஆசை. இதுக்கு இப்படி - திருமங்கலத்தில் பிரச்சாரம் வேறு செய்யப்போகிறார்.
சேதுராம பாண்டியன், வாண்டையார்கள் என்று அ.தி.மு.க கம்பேனி சிறப்பாக உள்ளது, அதில் புதிதாக சேர்ந்துள்ள காம்ரேடுகள் மம்மி ஒருமுறை அத்துவானியை சொன்னது போல - செலக்டிவ் அம்னீஷியாவில் திளைக்கிறார்கள்...கேரளாவில் கதக்களியும், வெஸ்ட்டு பெங்காலில் குச்சுப்புடி டேன்ஸும் இங்கே தமிழகத்தில் குத்தாட்டமும் போட எப்படித்தான் காம்ரேடுகள் பழகினார்களோ தெரியவில்லை...
பாரதீய சனதா கட்சிக்கு மதுரை திருமங்கலத்தில் இருக்கும் இரண்டு உறுப்பினர்களும் சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை அப்போது...
காங்கிரசு கட்சியை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை...திருமங்கலத்தில் எந்த கோஷ்டி என்று தெரியாததால் அப்படியே லூஸ்ல விடுகிறேன்...
எஸ்.ஏ சந்திரசேகர் சொல்லி திடீர் என டாக்டர் விஜய் தேர்தலில் நிற்காமல் இருந்தால், என் நினைவுக்கு வந்தவரை எந்த எந்த முனைகளில் போட்டி என்று தெரிவித்துவிட்டேன்...
இவற்றை எல்லாம் சுனாமி வந்தது போல அடித்து தூள் கிளப்பக்கூடிய ஒரே சக்தி பதிவின் தலைப்பில் உள்ளது...

சன் டிவியும் தேவை இல்லை, கலைஞர் டிவியும் தேவை இல்லை...
வந்து நின்றாலே சும்மா அதிரும் !!!
ஆகவே இந்த பதிவில் நான் சொல்ல விரும்புவது, கலைஞர் அவர்கள் தி.மு.க திருமங்கலம் கோப்பையை கைப்பற்றவேண்டும் என்று நினைத்தால், ரீபோக் ஷூ மற்றும் ஸ்போர்ட்ஸ் டவுசர் போட்டு அனுப்பவேண்டியது திரு.மு.க அழகிரியை மட்டும்தான்...
என்ன ஒன்று, தேர்தல் நேரத்தில் அய்யோ அராஜகம், ஏழாவது வார்டில் ஓட்டுப்பெட்டியை காணவில்லை, ஐந்தாவது வார்டில் அரசு ஊழியரே மின் ஓட்டு இயந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்துவிட்டார் என்பது போன்ற பிரச்சினைகளை ஜெயா டிவியில் ரபி பெர்னாடும், தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க வக்கீலின் பிராதும் ( அழகிரி வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்) நமது கண்களுக்கு காண கிடைக்கும்...!!!
பத்த வெச்சுட்டயே பரட்ட !!!!!!!
********
*******
*****
***
**
*