Posts

Showing posts from May, 2009

கானா பிரபாவின் கம்போடிய உலாத்தல் புத்தகமாக

Image
கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவி விட்டிருக்கிறார். நீயும் போய்ப் பார் இந்த இடங்களை எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள் அவை.
-எஸ். எழில்வேந்தன்

இது முகவுரைக்கு எழில்வேந்தன் சொல்வது மட்டுமல்ல. என்னுடைய மனதிலும் இதுதான்...

முதல் முதலில் உலாத்தல் பதிவில் படித்த இந்த வரிகள் இன்னும் கூட மனதை விட்டு அகலவில்லை..

"எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு" என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அ…

டேட்டா எண்ட்ரி செய்ய செய்ய விருப்பமா ?

டேட்டா எண்ட்ரி செய்ய செய்ய விருப்பமா ?

என்னிடம் 5 பேர் செய்யக்கூடிய அளவில் டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் உள்ளது. ஏற்கனவே டேட்டா எண்ட்ரி துறையில் இருப்பவர்கள் அல்லது டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்...

- ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை
- மிக எளிமையான பணி.
- குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை ( கண்ணால் பார்த்து டைப் செய்யவேண்டும்)
- கணிணி மற்றும் இணைய இணைப்பு வேண்டும்
- தனி நபர்களும் தொடர்புகொள்ளலாம்.
- வாரம் ஒரு முறை பண பட்டுவாடா செய்யப்படும்
- ஆண்டு முழுவதும் பணி
- தினமும் செய்த பணியை மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி ravi.antone@gmail.com

பணியை நாளை தொடங்கவேண்டும், அதனால் விரைந்து தொடர்புகொள்ளவும்.

நீ ஷேக்கு இல்ல..பேக்கு...!!!

Image

மயிலாடுதுறையை துபாயாக மாற்றிய மணிசங்கர அய்யர்

Image
கடந்த தேர்தலில் மயிலாடுதுறையை துபாய் ஆக மாற்றுவேன் என்ற வாக்குறுதியோடு ஓட்டு வாங்கி, பெட்ரோலியத்துறை அமைச்சராக கடைசிவரை இருந்து, கடைசியில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்து ரிட்டையர் ஆகி, இப்போது மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளார் மணிசங்கர அய்யர்...

மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டதா ? எங்கே தோண்டினாலும் பெட்ரோல் வருகிறதா ? அல்லது துபாயில் விற்கும் விலைக்கே பெட்ரோல் விற்கிறதா ?

ஷெல் பெட்ரோல் நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே முடிவு கசிந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தான்...

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், நீங்கள் வாகனம் வைத்திருப்பவர் என்றால் தெரியும். ஒரு பெட்ரோல் பங்கில் போட்டால் 60 கி.மீ தரும் வாகனம், இன்னொரு பெட்ரோல் பங்கில் போட்டால் 50 தரும். ஷெல் பங்கில் போட்டால் 70 கி.மீ தரும். ஆனால் ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்கு உரிமையாளரும் விரைவில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். அல்லது கோடீஸ்வர்கள் மட்டுமே பெட்ரோல் பங்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இராணுவத்தில் இறந்தவர்களின் மனைவிக்கு லை…