
கடைசி பக்கம் 27 ஏப்ரல் 2009
முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம், சிதம்பரம் டெலிபோன் பேச்சு, இலங்கையின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு, அப்புறம் மறுப்பு என்று பதிவுலகமே அல்லோலகல்லோல படுது. தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், அ.தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், ஈழத்தமிழர்கள் ஒரு பக்கம், நடுநிலைத்தமிழர்கள் ஒரு பக்கம், எவன் எப்படி போனா என்று நகைச்சுவை பதிவு, சமையல் குறிப்பு பதிவு, சுயேச்சை வேட்பாளர் பேட்டி என்று இன்னும் சிலர் இன்னொரு பக்கம்...
எதுவும் விடுபட்டுப்போகாமல் இருக்க செய்திகளை தொகுத்து தர இந்த கடைசி பக்கம்...!!!
**********************
முதலில் போர் நிறுத்தம் என்றார்கள், அப்புறம் கனரக ஆயுதங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளோம் என்றார்கள், இப்போது அப்படி எல்லாம் எதுவுமே இல்லை என்கிறார்கள். இதுவரையில் / நான் கேள்விப்பட்ட வரையில் காலையில் ஆரம்பித்து லஞ்சுக்கு முன் உண்ணாவிரதம் முடித்தவர்கள் எவருமில்லை. முதல்வர் அந்தவகையில் பெரிய சாதனையாளர்தான். ஏய் நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏறிவிட்டார்...என்னுடைய வயதும் அனுபவமும் இதற்கு மேல கிண்டல் செய்ய அனுமதிக்கவில்லை.
நாடகம் விடும் வேளைதான் உச்ச காட்சி நடக்குதம்மா !!!!!!!!
**********************
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திரு.கொளத்தூர் மணி விடுதலையாகியுள்ளார். கலைஞர் அரசுக்கு தர்க்க ரீதியாக கிடைத்த இன்னொரு தோல்வி இது. மணியண்ணனுக்கு வாழ்த்துக்கள்...தொடருங்கள் உங்கள் பணியை..
**********************
புலித்தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி கடல் மார்க்கமாக தப்பியதாக செய்திகள் வெளியாகின்றன. இது உண்மையா அல்லது வட இந்திய / இலங்கை மீடியாக்களின் வழக்கமான பரப்புரையா தெரியவில்லை
**********************
பிரமிட் சாய்மீராவை பங்கு வர்த்தகத்தில் இருந்து விலக்க செபி நடவடிக்கை எடுத்துள்ளது. பங்குகளை போலியாக விலையேற்ற நடவடிக்கை எடுத்தமை போன்ற மோசடி குற்றச்சாட்டுகள் அதன் மீது..ஒரே நாளில் பத்து படங்களுக்கு பூஜை போட்ட / சினிமாவை கார்ப்பரேட் தளத்துக்கு எடுத்துச்சென்ற பிரமிட் சாய்மீராவை பற்றி என்னை விட சில பதிவர்களுக்கு / அங்கேயே பணிபுரியும் பதிவர்களுக்கு தெரியும். அவர்கள் எழுதினார் தேவலை.
**********************
அட்சய திருதியையாம். நகை வாங்குங்கடா என்கிறார்கள். பத்து சவரன் துபாயில் வாங்கினால், அதே காசுக்கு இந்தியாவில் அதைவிட மட்டமான கலப்பட தங்கத்தை ஒன்பது சரவன் தான் வாங்க முடியுமாம்..எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல.
**********************
லக்கியின் பதிவு டார்கெட் செய்வது குழலி மற்றும் தமிழ் சசி என்பது போல ஒரு தோற்றப்பாடு உள்ளது. லக்கி தான் விளக்கவேண்டும்..
**********************
இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமும் ஒரு காரணம். இப்படித்தான் யூதர்கள் இஸ்ரேலை பெற்றார்கள். தொடர்ந்து போராடவேண்டும். இதனை நீர்க்கச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் பலியாகிவிடவேண்டாம்.
**********************
திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்...!!
**********************
**********************
**********************