இலங்கையின் வன்னிப் பகுதியில் முள் வேலிக்குள் முடங்கிப் போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குகிறார்.
வரும் ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை, மதுரையில் 'நாம் தமிழர்' என்ற பெயரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். அன்று மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
திரைப்பட இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது. நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது.
உலகமெங்கும் தமிழீழத்துக்காகவும் ஈழத் தமிழ் மக்களுக்காகவும் தமிழர்கள் போராட்டங்களை கொ்ண்டிருக்க, தாய் வழி உறவுகள் என பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் தாயகத் தமிழர்கள் மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கிறார்களே என்ற வேதனையின் விளைவே இந்த நாம் தமிழர் இயக்கம் என்று தெரிவித்துள்ளார் சீமான்.
Thanks, Thatstamil.
2 comments:
நல்ல பதிவு நண்பரே.... நன்றிகள் நாங்களும் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலைதான்...
உங்கள் எழுத்தின் ஆளுமைதிறனும் எடுத்துக் கொண்டு பொருளும் சந்தோஷமளிக்கின்றது.
நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம்.
திருப்பூர்.
http://texlords.wordpress.com
Post a Comment