பரிசுப்போட்டி பரிசுப்போட்டி பரிசுப்போட்டி...
சரி விஷயத்துக்கு வந்திடுறேன்...நீங்க பல தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க...நம் தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ அபத்தத்துக்கு பஞ்சமே இருக்காது...இங்கே விஷயம் என்னான்னா, உங்களுக்கு தெரிஞ்ச அபத்தத்தை நீங்க சொல்றீங்க...சிறந்த அபத்தமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அபத்தத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு...சரி அபத்தம் எப்படி இருக்கும் நான் ரெண்டு சாம்பிள் சொல்லட்டா....
1. எந்த இடத்தில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் சரி...அதை அப்பல்லோ டாக்ரரே போட்டாலும் சரி...வெள்ளை கட்டு துணிக்கு மேலே ஒரு சொட்டு அல்லது வட்டமா ரத்தம் இருக்கிறதை பார்க்கலாம்...( அவருக்கு அடி பட்டிருக்காம் டோய்..)
2. ஹீரோவுக்கு பேரு வெக்க நம்ம தமிழ்சினிமா இயக்குனருக்கு ஒரு கஷடமும் இருக்காது...அதான் இருக்கே ஒரு பேரு...ராஜா..
3. ஆப்பரேஷன் செய்யுற எல்லா டாக்டரும் கண்ணாடி போட்டிருக்கறதும், ஆப்பரேஷன் செய்யப்போற / பெயிலியராகிப்போன / சக்ஸஸஸா ஆகிப்போன விஷயத்தை கண்ணாடியக்கழட்டிக்கிட்டே காட் இஸ் க்ரேட்...எல்லாம் அவன் கைல...என்று மொக்கையான மூஞ்சியை வெச்சுக்கிட்டு சொல்றது...
4. அணுகுண்டே தாக்கினாலும் அடிபட்ட ஹீரோ படுத்துக்கிட்டு ரெண்டு பக்க டயலாக் பேசுறது அபத்தத்திலும் அபத்தம்...
நான் கொஞ்சம் எடுத்து கொடுத்திட்டேன்...இனிமே நீங்க பூந்து விளையாடுங்க மக்களா...சாதாரணமாவே தமிழ்மணம் படிக்கறவங்களோட க்ரியேட்டிவிட்டி என்னை ஆச்சர்யப்பட வெச்சிருக்கு...கலக்குவீங்கன்னு தெரியும்...இருந்தாலும் நியாபகம் வெச்சுக்கோங்க...சர்ப்ரைஸ் கிப்ட்.....
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
175 comments:
ஒருத்தரே எத்தனை அபத்தம் சொல்லலாம்?
1. பிறந்த குழந்தை எப்பவுமே 3 மாதக் குழந்தையாத் தோற்றமளிக்கும் அபத்தம்.
பல படங்களில் பாரதிராசாவின் புதுமை பெண் பாடல் காட்சியில் ரேவதி உட்பட, இன்றைய பாடல் காட்சி வரலாறு ஆறு ஏழு வயது சிறுவன்வரை. காலையில் இருந்து இரவுவரை வகை வகையாய் வேலை செய்து குடும்பத்தைக்காப்பாற்றுவார்கள்.
உதாரணமாய் காலையில் பேப்பர் போட்டு, பிறகு டீ கடை பெருக்கி, துடைத்து, டீ கிளாஸ் கழுவி, வெய்யிலில் காய் வியாபாரம்,
கை வண்டி இழுத்தல், பிறகு பிரிண்டிங் பிரஸ், கை பழுக்க சுத்தி அடித்தல்.... இவை எல்லாம் செய்துவிட்டு வீட்டு வேலை வேறு. பாடிக்கொண்டே மனைவி/ கணவன்? பெற்றத்தாயை குளிப்பாட்டி, தலை சீவி, உடை அணிவித்து, சாமி கும்பிட்டு,நோயாளிக்கு விபூதி பூசி, சோறு ஊட்டி, ... யப்பா எழுதுகிற எனக்கே மூச்சு வாங்குது :-)))))
ஒரு முறை உறவு கொண்டதுமே கதாநாயகியோ அல்லது வேறு பெண்ணோ உடனே வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவாள். மருத்துவ உலகுக்கே சவால் விடவைக்கும் தமிழ் (இந்திய) பட லாஜிக் இது.
குங்கும பொட்டே யாரும் வைக்கிறதில்ல என்று தெரிந்தும்....
எல்லாம் முடிந்த காட்சிகளில் நெற்றியில் அதை அழித்துக் காட்டுவது ...:)
ஹீரோயினின் கற்புக்கு சோதனை வரும் எந்த நேரத்திலும் கதவை உடைத்துக் கொண்டு ஹீரோ வந்து காப்பாற்றி விடுவார்.
அதே நேரம் ஹீரோவின் தங்கையை வில்லன் கற்பழிக்கும் போது ஹீரோ எங்கேயாவது கும்மி அடிக்கச் சென்று விடுவார் போல. கற்பிழந்த தங்கையும் பொதுவாக தூக்கு மாட்டிக் கொள்வார்.
கொள்ளைக்காரனை தேடி போலிசார் மொத்தமாக காட்டுக்குச் செல்வார்கள். தலைமை தாங்கும் போலிஸ் அதிகாரி கான்ஸ்டபிள்களை பார்த்து இப்படி கட்டளை இடுவார்.
"401 யூ கோ திஸ் சைட். நீ இந்தப் பக்கமா போ"
"501 யூ பாலோ மீ. நீ என் பின்னாடியே வா"
அதாவது முதலில் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பின்னர் அதையே ட்ரான்ஸ்லேட் செய்து சொல்வார். அதாவது அதிகாரி என்பதால் ஆங்கிலம் தெரிந்திருக்குமாம் :-)
விஜயகாந்த் படங்களில் அவரது என்ட்ரி ரொம்ப ரொம்ப காமெடியாக இருக்கும். யாரோ ஒரு ஏழை பாழைக்கு ரவுடி எவனாலாவது பிரச்சினை இருக்கும். உடனே கேப்டன் அங்கே என்ட்ரி ஆவார்.
அட்மாஸ்பியராக கேப்டன் வரும் போது புயல் அடிக்கும் அல்லது கேப்டனுக்கு பின்னால் கிராபிக்ஸில் அவரது கொடி பறக்கும். அதுவும் இல்லையென்றால் சம்பந்தமேயில்லாமல் கேப்டனுக்கு பின்னால் பெரும் தீப்பிழம்பு எழும்.
பொதுவாக தமிழ் கிராமத்துப் படங்களில் வரும் காட்சி இது. ஹீரோவும், ஹீரோயினும் ஓடிப்போய் விடுவார்கள். அவர்களை துரத்திவரும் ஊர்மக்கள் பட்டப்பகலிலேயே கையில் லாந்தர் விளக்கு எடுத்துக் கொண்டு ஓடிவருவார்கள்.
(முதல் மரியாதையில் கூட இப்படியொரு காட்சி உண்டு)
ஏன்னு தெரியலை. கதாநாயகனை கத்தியில் குத்தியவுடனேயே மழை வந்து விடுகிறது. மழையில் கதாநாயகன் முதுகில் குத்திய கத்தியுடன் தன்னை கத்தியால் குத்தியவனை முறைப்பார் (அவர் கண்ணுக்கு ஒரு குளோஸ் அப் வைக்கப்படும்). கத்தியால் குத்தியவன் அப்படியே பயந்து ஓடிவிடுவான்.
வில்லனால் வன்புணரப்பட்ட ஹீரோ-வோட தங்கை சொல்லி வச்ச மாதிரி அடுத்த மாசம் வாந்தி எடுக்கிறது.
வில்லன்கள் எப்போதுமே காமுகர்களாக இருப்பது வழக்கம். கிளைமேக்ஸில் வில்லன் முறியடிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு கவர்ச்சி நடனம் இருக்கும். வில்லனும் அவர் குழுவினரும் அதை ரசித்துப் பார்ப்பார்கள்.
வில்லனால் வன்புணரப்பட்ட ஹீரோ வோட தங்கை சொல்லி வச்ச மாதிரி அடுத்த மாசம் வாந்தி எடுக்கிறது.
:-))
மாறுவேடம் தான் தமிழ்சினிமாவின் முதல் எதிரி. க்ளைமேக்ஸில் வில்லனின் கோட்டைக்குள் ஹீரோவும், ஹீரோயினும் மாறுவேடம் போட்டுக் கொண்டு ஆடிபாடுவார்கள். அவர்களை வில்லனால் அடையாளம் காணமுடியாது.
ஹீரோயின் கவர்ச்சி உடையில் இருப்பார். அதுவே மாறுவேடமாம். ஹீரோ கன்னத்தில் ஒரு மச்சம் மட்டும் ஒட்டிக் கொண்டிருப்பார். தேவைப்பட்டால் தாடியும் வைத்துக் கொள்வார். யாராலும் இவர்களை அடையாளம் காண முடியாதும்.
இந்தப் பாட்டு முடிந்ததுமே வழக்கமாக மின்சாரம் தடைப்பட்டு விடும்.
காதல் காட்சிகள் ரொம்பவும் கொடுமை. பொறுக்கியான ஹீரோ எவனுடனேயோ நடு ரோட்டில் சண்டை போடுவதை ரசித்துப் பார்த்து ஹீரோயின் அவர் மீது காதல் கொள்வாராம்.
ஹலோ...!
காசு கொடுத்து படம் பார்க்க வருகிறவர்களுக்கு ....
படத்தில் நடிகரின் எண்டிரி சீனில் shoe
போட்ட காலை தூக்கி காட்டுவது அபத்தம் மட்டும் தானா ? அவமானப் படுத்துவதும் தான். உங்களுக்கு முன் ஒருவர் காலைத்தூக்கி காட்டினால பொருத்துகுவிங்களா ?
நான் சந்திரமுகியை சொல்லலிங்க ...
:))
குடும்பத்துக்கு ஒரு கொடுமையான பேமிலி சாங் இருக்கும்...யாராவது தொலைஞ்சு போய்ட்டா அந்த சாங்கை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்...
காணாமே போறவங்களுக்கு முதுவுல மாங்கா மச்சம் இருக்கறது மிகவும் சிறந்த டெக்னிக்...
கோர்ட்டு காட்சிகள் தமிழ் சினிமாவைப் பிடித்த பீடை.
க்ளைமேக்ஸில் குற்றவாளி கூண்டில் நிற்பவர் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார். நீதிபதி ஆர்வமாக பார்ப்பார். எதிர்க்கட்சி வக்கீல் தலையை குனிந்து கொள்வார். போலிஸ் அதிகாரி தொப்பியை கழட்டி விட்டு திருட்டு முழி முழிப்பார். பார்வையாளர் ஒருவர் (காமெடியன்) சபாஷ் போடுவார்.
கலைஞரே ஏன் தான் பராசக்தியை எடுத்து தொலைத்தோமோ என்று நொந்துக் கொள்ளும் அளவுக்கு கொலைவெறியுடன் கோர்ட்டு காட்சிகள் 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
சேதுக்கரசி, எத்தனை வேனுமுன்னாலும் சொல்லலாம்....
இரட்டை வேடங்கள் ரொம்பவும் கொடுமை.
அதிலும் தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட ஹலோ பிரதர் படம் உச்சத்துக்கு சென்று விட்டது.
ஒரு நாகார்ஜூனா கையைத் தூக்கினால் ஆட்டோ மேட்டிக்காக இன்னொரு நாகார்ஜூனாவின் கையும் தூக்கப்படுமாம். இது எப்போதும் நடக்காதாம் எப்போதாவது நடக்குமாம்.
கிளைமேக்ஸில் ஒரு நாகார்ஜுணா (சண்டை தெரிந்தவர்) கூண்டுக்குள் அடைபட்டிருப்பார். இன்னொரு நாகார்ஜுணா (சண்டை தெரியாதவர்) கூண்டுக்கு வெளியே வில்லன்களோடு மாட்டிக் கொண்டிருப்பார்.
உள்ளே இருப்பவர் காற்றோடு சண்டை போட வெளியே இருப்பவர் ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படுபவர் போல வில்லன்களை பந்தாடுவார்....
அட்றா.... அட்றா.... அட்றா....
சாமி படங்கள் இன்னொரு காமெடி.
சாதாரண மனிதராக வரும் அம்மனோ அல்லது சிவனோ டபுள் மீனிங் டயலாக் பேசுவார். அந்த டயலாக் இதுமாதிரி இருக்கும்.
"அம்மா. உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது"
"எனக்கா தெரியாது. சர்வமும் எனக்குத் தெரியும்"
பஞ்சாயத்துக் காட்சிகள் வேறு நம்மை தொல்லைப்படுத்த இருக்கவே இருக்கிறது.
சின்னக் கவுண்டரோ அல்லது நாட்டாமையோ தீர்ப்பு சொல்லும்போது மட்டும் சுழற்காற்று சுற்றி சுற்றி அடிக்கும். புழுதி பறக்கும்.
மக்கள் எல்லோரும் கையைக் கட்டிக் கொண்டு அட்டென்ஷனில் நிற்பார்கள்....
வில்லன் கைல இருக்கற துப்பாக்கிய ஹீரோ கீழ தட்டி விடுவார். சண்டை முடியும் போது திரும்பவும் அது வில்லன் கிட்ட கிடைக்கும் . ஆனால் வில்லனால சுட முடியாது, தோட்டா அதுல இருக்காது. இப்போ ஹீரோ தன்னோட கைய திறந்து காமிப்பார். அவை கைல தோட்டா இருக்கும். அப்போ கரெக்டா போலீஸ் வரும்.
கல்யாணமாகி முதலிரவுல பாலோட உள்ளார பொண்ணு வர்ரது ஒரு அபத்தம்.....உள்ளே இருப்பவர் ஹீரோவா இருந்தா இளிச்சிக்கிட்டு உக்காந்திருப்பார்...வில்லனா இருந்தா பழத்தை கடிச்சிக்கிட்டு இல்ல சரக்கு சாப்பிட்டுக்கிட்டு இருப்பார்..
நாயகனோட சண்டை போடுற ரவுடிகள் எல்லம் கும்பலா இருந்தாலும் நாயகன் ஒருத்தரை அடிச்சு முடிச்சப்புறம இன்னொருத்தர் வந்து அடி வாங்கிகிட்டு போய் விழுறது
கூலி வேலையோ அல்லது மெக்கானிக் வேலையோ செய்யும் ஹீரோ ரீபோக் ஷூ, பீட்டர் இங்கிலாந்து சட்டை, லீ ஜீன்ஸ் அணிந்து காட்சியளிப்பார். முகத்தில் புல் மேக்கப் இருக்கும். தலை கலையவே கலையாது.
ராமநாராயணன் படங்களில் வரும் குரங்கோ அல்லது நாயோ மனிதனை விட அதிபுத்திசாலியாக இருக்கும்.
ஹீரோயினை கட்டிப் போட்டு உடலில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். திரி சுமார் 10 மீட்டர் தொலைவில் இருக்கும். வில்லன் பற்ற வைத்து விட்டு ஹீரோவுடன் சண்டை போடுவார்.
ஹீரோ சண்டையில் கான்சன்ட்ரேட் செய்வதால் திரியை அணைக்க முடியாது.
திரி பற்றிக் கொண்டே போகும். நாய்க்கோ அல்லது குரங்குக்கோ அது வெடிகுண்டு என்று தெரிந்து வெடிக்கப் போகும் நேரத்தில் கடைசி நொடியில் திரியின் மீது "உச்சா" போய் திரியை அணைக்கும்.
ஹீரோ வில்லனையோ அவன் கூட்டாளியையோ சுட்டா உடனே செத்துடுவாங்க, ஆனால் ஹீரோவுக்கு வேண்டப்பட்ட ஆளுங்கள யாராவது சுட்டுட்டா 4- 5 பக்க டயலாக் பேசிட்டு அப்பறம் தான் சாவாங்க
கேப்டன் படங்களில் வழக்கமா ஒரு டண்ணல் வரும்...முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் அந்த டண்ணலில் தான் தலீபான், பாக்கிஸ்தான், அல் காயிதா, மற்றும் ஹமாஸ் தீவிரவாதிங்க இருப்பாங்க...கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்கனும்னா நேரா ஜீப்பை எடுத்துக்கிட்டு அங்கியே போயிருவார்..
Jollya padichachu.. mudikkum podhu manasu thaan edho bhaarama irrukku.
Kandippa unga frienda paapeenga Ravi. idha pathi yosikkum podhu ellam kandippa prayer pannikkarein.
good luck.
anbu thozhi.
அரசியல்வாதியாக வருபவர் கெட்டவராகவே இருப்பார். எந்த அரசியல்வாதியாவது நல்லவராக இருந்தால் அவர் கொல்லப்படுவார் :-)
அல்காயிதா தீவிரவாதி அட்சர சுத்தமா விஜயகாந்திடம் தமிழ் பேசுவதும், பிறகு விஜயகாந்தோட அட்வைஸை கேட்டவுடன் திருந்தி மனம் மாறுவதும் எதில் சேர்ப்பது....???
ராத்திரி தூங்கி காலைல எழுந்துக்கற ஸீன்ல ப்ரெஷ்-ஆ காட்சியளிக்கறது....சினிமாவுல மட்டுமே சாத்தியம்!
உண்மையில நாம எப்டி இருக்கோம்கறது நமக்கே தெரியும்!!
(இது சீரியலுக்கும் பொருந்தும்!!)
தாயகம் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்தி விடுவார்கள். அதை மீட்க இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ அதிகாரிகளாலோ அல்லது உளவுத்துறை மற்றும் கமாண்டோ அதிகாரிகளாலோ முடியாது.
தமிழ்நாட்டில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவரான கேப்டனால் மட்டுமே அது முடியுமாம். கேப்டனும் மஞ்சள் பையை தோளில் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாட கிளம்பி விடுவார்.
ஹீரொ போலிஸ் வேலையோ மிலிட்ரி வேலயோ செஞ்சாலும் அதுக்கேத்தாமாறி தலைமுடி எல்லாம் வெட்ட மாட்டார். எப்பவும் பங்க் தான் ,
வேலை இல்லாத ஹீரோ எப்பவும் ஒரே அளவுல தாடி வெச்சிருப்பார்.
நிஜத்துக்கு கொஞசமும் ஒது வராத பாடல் காட்சிகள்..!!நாம எவ்வளவு பேர் மரத்தை சுத்தி
டுயட் பாடறோம்?..இல்ல நம்மள சுத்தி எத்தன பேர் ஆடி பாடறாங்க..??
லீவுக்காக கிராமத்துக்கு வரும் ஹீரோயின் மினி ஸ்கர்ட்டில் வருவார். பஸ்ஸை விட்டு இறங்கியதும் கூலிங்கிளாசை கழட்டி பார்ப்பார். வரப்புகளில் ஹை ஹீல்ஸை போட்டுக்கொண்டு நடப்பார். இங்கிலீஷில் பேசுவார். கடைசியாக மாடு மேய்க்கும் முறை மாமனை கட்டிக்கொள்வார்.
ரமணா படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் லிஸ்ட் கேப்டனுக்கு எல்லா மாவட்ட அரசு அலுவலகங்களிருந்தும் ப்ளாப்பியில் வரும்.
கேப்டன் அதை அவர் கம்ப்யூட்டரில் போட்டு பார்ப்பார். விண்டோஸ் மீடியா ப்ளேயரில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் "மைக்ரோசாப்டு வேர்டு பார்மட்டில்" ஓபன் ஆகும்...
ஹீரோ வில்லன்கிட்ட அடி வாங்கி மயங்கிடுவார். அல்டிமேட் அபத்தம் வந்து,
ரத்தத்தை பார்த்ததும், வீரம் வந்து என்ர்ஜிட்டிக்கா எழுந்து
சண்டை போடுவார்.
ஹீரோ கிராமத்தில இருந்தாலும் ரீபோக் ஷூ போட்டு அல்ட்ராமாடர்னா காட்சியளிப்பது
அது எப்படிப்பா ஒன்னு,ரெண்டு,மூனாவது அடி வாங்கினஒடனே ஹீரோ கிளம்புறாரு...
கேவலத்திலும் கேவலம், ஹீரோ டூயட் ஸாங்ல செய்யுறதை, வில்லன் பெட்ரூம்ல செஞ்சா கற்பழிப்புன்னுன்னுவானுக
வில்லன் ஹீரோயினை கடத்தி ஜீப்பில் கொண்டு போவான், அவனை துரத்த ஹீரோ ஓடி வருவார் அப்போ ரோட்டில் ஒரு பைக் இருக்கும் அது ஹீரோ தொட்டதும் ஸ்டார்ட் ஆகும்.
வில்லனோட க்ரூப்பில கண்டிப்பா மொட்டை போட்ட ஆளு,கன்னங்கரேல்னு இருந்தே தீரணும்.அப்புரம் அவனுக்கு முகத்தில நாலணா சைசுக்கு ஒரு மருவோ/மச்சமோ இருக்கும்
லக்கி / சந்தனமுல்லை / பத்மகிஷோர், கலக்குறீங்க...
வில்லனோட கூட்டத்தில ரோஸி,லில்லி,மேரி அப்படீங்கற பேர்ல ஒரு வேம்ப் இருந்தே தீரணும்.
புரட்சித் தலைவர் படங்களில் ரெகுலராக வரும் அபத்தம்.
வில்லன் தலைவரை முதல் முறை அடித்தால் "வேண்டாம், வீணா பிரச்சினை பண்ணாதே" என்பார்.
இரண்டாம் முறை அடித்தால் "போதும், நிறுத்திக்கோ" என்பார்.
மூன்றாம் முறை அடித்தப் பின்னர் மட்டுமே திருப்பி அடிப்பார்.
குழந்தையோ இல்ல வயசானவங்களோ ரோடை கிராஸ் பண்ணூவாங்க..தூரத்தில ஒரு லாரியோ பஸ்ஸோ வந்துக்கிட்டிருக்கும்...
ஹீரோ வந்து காப்பாத்திடுவார். அந்த டிரைவரே சமயத்தில் ஹீரோவாவும் இருப்பார். :-))
பக்தி படம்னா..சான்ஸே இல்ல..! ஒரு பாம்பு பொண்ணா மாறும்..இல்ல பொண்ணு பாம்பா மாறும் அதிசயம்லாம் நடக்கும்!!
அப்புறம் பாம்பு டான்ஸ்!! நிஜத்தில எங்கியாவது அப்படி நடக்குதா?
(அட்லீஸ்ட் ஆணாவாவது மாத்தி காட்டலாம்..ஒரு சேன்ஜுக்கு!! )
எல்லாத்தை விட அபத்தம்..குழந்தை நட்சத்திரமா ஒரு பொண்ணுகூட ஹீரோவா நடிச்சிட்டு,
அதே பொண்ணு வளர்ந்து ஹீரோயினா நடிக்கும்போதும் இவர் ஹீரோவாவே இருப்பார்.
அதுவும் அந்த குழந்தை நட்சத்திரம் அம்மாவா கூட ஆகலாம்..அதே ஹீரோவுக்கு!! (But still he will be the hero!!)
வில்லனாக குறைந்தபட்சம் ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது ஒரு அரசியல்வாதியாகவோ இருக்கவேண்டும் இருவரில் ஒருவருக்கொருவர் அல்லக்கையாகவும் இருக்கலாம்.
யாராவது தற்கொலை பண்ணிக்கணும்னா, ஒரு தூக்கமாத்திரை பாட்டிலில் இருந்து, எல்லா தூக்கமாத்திரையும்
கொட்டி கலக்கவேண்டியது..ஆனா, அதை குடிக்கும்போது யாராவது வந்து தட்டி விட்டு காப்பாத்திடுவாங்க!!
முன்பெல்லாம் திரைப்படங்களின் முக்கியத் திருப்பங்களில் "பன்ச்"ஆக இயக்குநரின் பெயர் திரையில் வரும். ஆனால் பேரரசு என்ற காமாட்டி படவா அவனாகவே ஒரு ஃபைட் சீன் கிரியேட் "பன்னி" அவனே பன்ச் டயலாக்கும் பேசி யாரையாவது அவன் யார்னு கேக்க வச்சி ஸ்க்றீன்ல இயக்குநர் என்று அவன் பெயரையே போடுவான். அதவிட கொடுமை படம் முடியரதுக்கு முக்கால் மணி இருக்கும்போது போட்டு சாவடிப்பான்
அடேடே..எப்பவும் நீங்கதான் மத்தவங்க இதுமாதிரி பதிவு போட்ட மொக்கை பதிவும்பீங்க. இப்ப நான் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீட்டிங்களே.. :))
சும்மா ஜாலிக்குத்தான்..கலக்குங்க!
தரையில கால் படாம அடிக்கரது. வாயில வெச்ச பீடி தரையில் வுழாம அடிக்கரது. அந்த பீடிய துப்பாக்கியால சுட்டு லைட் பன்றது. அது பாதி கூட் அனஞ்சிருக்காது அதுக்குள்ள பைட்டே முடிஞ்சிடும்.
தூக்கு மாட்டிக்கொள்வதற்காக கதவை சாத்திபாங்க....கழுத்தில் சுருக்கு விழும் வரை
கதவை தட்டிக்கிட்டே இருப்பாங்க! கடைசி நிமிஷத்தில ஹீரோ (வந்து ) காப்பாத்திடுவார்!
ஆனா அந்த சுருக்கு கயிறு எப்டி அவங்க கைக்கு கிடைக்கும்னு தெரியாது! அதுவும் அளவு வேற க்ரெக்டா
இருக்கும்!! சைடில ஒரு ஸ்டூல்..!!
America,Singapore,London ena yaethavuthu oru country lae erunthu oru 2 scene kagae India vuku kootivarae padurae america mapillai's(AM). Enna thaan heroines "AM" koda jodi potu 2 scene suthinalaum kadasilae hero ku thaan heroine. "AM" yellarkum soga keetham thaan.
- Tamil cinema raasigai
லக்கிலுக்கு,
"அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா" இதான் தலைப்பு. "அபத்தக்களஞ்சியம் கேப்டன் படங்கள்" இல்ல. so லக்கிலுக் வெற்றிவாய்ப்பை இழக்கிறார் ;)
1. ஹீரோ திடீரென்று மேடையில் மைக்கை பிடிப்பார், orchestra இம்மியளவும் சுருதி பிசகமால் வாசிப்பது.
2.வெளிநாடு செல்லும்போதும் ஒரே ஒரு Bag-யை தூக்கி செல்வது
3.பிரியாமானவர்களின் Birthday என்றால், இரவோடு இரவாக வீட்டை அலங்காரம் செய்வதாக காட்டுவதும், அடுத்த நாள் காலை, அந்த Birthday baby நடந்த ஒன்றுமே தெரியாததுபோல கண் விழிப்பதும், சரியாக இரண்டு துளி கண்ணீர் சிந்துவதும், உடனே பாடல் பாடுவதும்
குறும்பான நாயகனை கலாய்க்கும் நாயகி "ப்ரப்போஸ்" பன்னும் போது சொல்வது, இப்போ தான் உங்களோட நல்ல மனசைப் புரிஞ்சிகிட்டேன்" ஐ லவ் யூ. அதுக்கு சிம்பு மாதிரி அரை வேக்காடு "ஐயாம் ரியலி எக்ஸ்ட்ரீம்லி சாரி"ன்னு சொல்லரது.
கிராமத்துலேர்ந்து உறவுக்காரனை பாக்க மெட்ராஸ் வரும் ஆள்கிட்ட எப்பவும் ஒரு வாழைதாரும் பூசணிக்காயும் இருக்கும், (சென்ட்ரல்லியோ, கோயம்பேட்டிலியோ இப்படி யாரயாவது பாத்துருக்கீங்க?).
கிராமத்துப்பண்ணையார் பெரிய பணக்காரா இருந்தாலும் , காரிலெல்லாம் போகமாட்டார். வில்வண்டிதான், ரேக்ளாதான். சட்டை போடமாட்டார், உடம்பெல்லாம் சந்தனம் பூசியிருப்பார்
ரிசல்ட்ஸ் எப்போ நைனா?
ஆபிஸ்லே வேலையே பாக்க முடியலை.... நாளைக்கு வெள்ளிக்கிழமை தடலாடியார் வேற ஆரம்பிச்சுடுவார் :-)))))
Olli pichu hero vidura kuthula villain mattum illa newton laws um serndhu parakkumm...Innum veru sila abathangal niraya irukkum...
Edho karanathukaga hero heroine kalyanam panika mudiyama pogum... epdiyo kadaisila onnu seruvaanga... ana indha idaipatta gap la heroine kum andha maangaa maapillaikkum ONNUM nadakkadhu...
Adhey pola perumbalum heroine than modhalla propose pannuvaanga... avanga than hero va nenachu duet paaduvaanga... hero ozukka seelara irupaaru...
Flashback la manaiviya izandha ella hero vayum pakkathu veetu college ponnu kandippa kadhalippa...
ramana padathula neraya logic ottai irukkum... windows media player la type panradhulerndhu kandippa captain a thookula than podanum nu mudikkura varaikkum... yen aayul thandanai ellam illaya?
konjam neraya ezudhitano?
-boss
கோர்ட் என்று எந்தக் காட்சி வந்தாலும், காட்டப்படும் நீதி தேவதை சிலை, பார்வையாளர் பகுதி, ஆர்டர்..ஆர்டர் எனத் தட்டப்படும் சுத்தி. (இதுவரை) ஆங்கிலம் மட்டுமே புழக்கத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் ,அ பல்லைக்கடித்துக் கொண்டு ஹீரோ(ஹீரோயின்) தமிழில் வசனம் பேசுவது.
அதெல்லாம் விட நிஜமாய் கோர்ட் பார்த்த எல்லோருக்கும் தெரியும் சாட்சி காதில் ரகசியமாய் பேசும் வக்கீல்கள், நீதிபதி அசுவராசியமாய் அமர்ந்திருக்கும் ஒரு சிறு அறை எதுவேமே இதுவரை காட்டப்படாத ஒன்று.
மொத்தத்தில் மாறவே மாறாத சில டயலாக் இருக்கும்.
1.சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் சிறு விளக்கு.
2. ஜட்ஜ்மெண்ட் ரிசெர்வ்ட்!
3. நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
4. யுவர் ஆனர்! இவர் குற்றவாளியல்ல குற்றம் சுமத்தப்பட்டவர்.
5. நீதிமன்றம் இது போன்ற வழக்கை இது வரை சந்தித்தேயில்லை.
...போதுங்க ! அப்புறம் யாராவது வழக்கு தொடங்கியிரப்போறாங்க!
இனி போலிஸ் அபத்தங்கள்:
1.போலீஸ் ஸ்டேசன் செல்லும் வக்கீல் மறக்காமல் முழு வக்கீல் உடையணிந்து செல்லுவது.
2.கோர்ட் செல்லும் போது இன்ஸ்பெக்டராக இருந்தாலும், ஐ.ஜி யாக இருந்தாலும் முழு உடையுடன் குறுக்குப்பட்டையணிந்து தான் செல்லவேண்டும்.
3. வாரண்ட் இருக்கா! என்ற அதிபுத்திசாலித்தனமான கேள்வி
4. லாக்-அப் மிக அழகாக லைட்டிங் செய்யப்பட்டு, மேலே இருந்து போகஸ் லைட் அடிக்கும்.
5. ஒரு காமெடியன் கண்டிப்பாக போலீஸ் ஸ்டேசனில் இருக்கவேண்டும் அது எவ்வளவு சீரியஸான படமாக இருந்தாலும் சரி.
6. இதையெல்லாம் விட உச்சகட்ட காமெடி என்னவென்றால், சினிமாபோலீஸ் எப்போதுமே கைத்துப்பாக்கி வைத்திருப்பார். (நிஜத்தில் அது மேலதிகாரி உத்தரவு இல்லாது முடியாது)
7. கட்டங்கடைசி சீனில் வந்து , எனக்கு எல்லாம் தெரியும் ஒரு கம்ப்ளெய்ண்ட் தர யாரும் இல்லைன்னு தான் உன்னை விட்டு வச்சேன் என்பார் இன்ஸ்பெக்டர்.
8. வயர்லெஸ்ஸில் பேசுவார் ஆனால், அருகிலிருப்பவருக்குத் தெரியாது.
9. துப்பாக்கி வைத்திருந்தாலும், அதில் தேவையில்லாமல் முறையான அனுமதியில்லாமல் குண்டு நிரப்பக்கூடாது. ஆனால், சினிமாவில்..
:)
இதெல்லாம் விட நான் மட்டுமல்ல, சினிமாவிலேயே அபத்தம் எனக்காட்டப்படும் அபத்தம்...
"அட அடே! அதோ டாக்டரே வந்திட்டாரே!"
கதையில ஹீரோ அனாதையா வந்தாருன்னா, கடைசீல ஹீரோ முதுகுல இருக்குற ஒரு மச்சத்தை வெச்சு அவர் குலம் கோத்திரம் DNA எல்லாத்தையும் ஒரு பெருசு சொல்லிடும்.
அதன்படி அமையும் உறவுப்படி ஹீரோயின் கரெக்டாக முறைப்பெண் ஸ்லாட்டில் ஃபிட் ஆவார்.
எனக்குத் தெரிந்த பெரிய அபத்தம் இதுதான்
காதலுனும் காதலியும் சேர்ந்து பாடும் பாடற்காட்சியில் (பாடற் காட்சிகூட அபத்தம்தான் - ரியல் லைஃபில் காதலர்கள் எங்கே பாடியாடுகிறார்கள்?)
அதை வேண்டாமென்று சொல்லவில்லை - அதனால் சில நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன - உதாரனம்:
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் மனதைத் தந்து செல்லவா
மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா
மாலைஇளம் தென்றல் தன்னைத் தூதுவிடவா?
ஆனால் கடந்த இருபது வருடங்களாக வரும் காதற்பாடல்களில் நாயகனும், நாயகியும் ஆடிப் பாடும் காட்சிகளில் 20 முதல் 25 பெண்கள் வரை உடன் ஆடுகிறார்கள் - அவர்கள் யார்? எதற்காக இவர்களுடன் ஆடுகிறார்கள் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை!
இதைத் தொடந்கி வைத்தவர் பாரதிராஜா. ஆனால் அவர் படங்களில் உடன் ஆடுபவர்களைத் தேவதைகளைப் போன்ற காஸ்ட்ட்யூமில் காட்டுவார்
ஆனால் இப்போது....?
இந்தக் கருமத்திற்கு இப்போது குத்தாட்டம் என்ற பெயரும் வைத்து விட்டாரகள்
சரி விஷ்யத்திற்கு வருகிறேன்
இப்போது திரைப் படங்களில் வரும் அதிகபட்ச அபத்தம் குத்தாட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசப் பாடற்காட்சிகள்தான்.
SP.VR.SUBBIAH
ரிசல்ட் நாளைக்கு காலையில தான்...அமெரிக்கன் நேரத்துல வேலைசெய்யும் பதிவர்கள் + அனானிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவேனாமா ? அப்படி அவங்க ஜெயிச்சா பெடெக்ஸ் கொரியர்லெ வெச்சாவது பரிசை அனுப்புவேன்..
வேலை செய்ற்வங்க கிட்ட போய் கதாநாயகன் "எல்லாம் நல்ல வேலை செய்ங்கன்னு" இவ்ரு மட்டும் வேலை செய்யாம் பாட்டு பாட்டுரது
பொதுவிடத்தில் வில்லன் ஹீரோயின் மீது கை வைத்தால் ஹீரோ மட்டுமே வந்து தட்டிக்கேட்பார். பொதுமக்கள் இருவருக்கும் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள்.
ஆனால் காமெடியன் சின்ன தப்பு பண்ணாலும் மக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுப்பார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க வேண்டும்,
கெட்ட மந்திரியிடமிருந்து நாட்டைக் காக்கவேண்டும்,
ஸ்கூலில் உள்ள வெடிகுண்டை எடுக்கவேண்டும் என்று
டைட் ஷெட்யூல் இருந்தாலும் ,
இதற்க்கெல்லாம் நடுவில் நம்ம ஹீரோ இரு டூயட் பாடி ஒரு குத்தாட்டமும் போடுவார்.
அனானி ஜெயிச்சா எப்படி பரிச அனுப்புவீங்க?
அனானியா இருந்தாலும் ஊரு பேரு எல்லாம் இருக்கும் இல்லை....இருந்தாலும் அனானிக்கு தர முடியாது இல்லையா...அவர் யார் என்று எழுதி தனிமடலில் தொடர்புகொண்டு கேட்டால் ( வேறு யாரும் கேட்காத பட்சத்தில்) தரலாம்..
அட முக்கியமான மேட்டர உட்டுட்டீங்களேப்பா...ஒரே பாடலில், பிச்சைக்காரனாயிருக்கும் நாயகன் & கோ எல்லோரும் பயப்படுகிற மதிக்கின்ற அளவில் செல்வாக்கானவனாக வளர்வது...எந்த தமிழ் கதாநாயகனும் இதற்கு விதிவிலக்கல்ல.
பெண் பார்க்கும் சீனில் , `இவர் தான் மாப்பிள்ளை நல்லா பாத்துக்கோம்மா` என்று பெண்ணிடம் ஒருவர் மாப்பிள்ளையை காட்டுவது,
பெண்ணும் கப்பி காஃபி ட்ரேயுடன் லேசாக நிமிர்ந்து ஒரு delta theta தலை அசைவுடன் பார்ப்பது , அந்த நேரத்தில் ஹீரோ காப்பி டம்ளரை வாயில் வைத்தபடி லுக்விடுவது.
உடனே ஒரு டூயட்
hero mela avangappa va nikka vachu avaru kaluthula surkka pottu rendu peryaum kaiya katti nikka vachittu avanga edhirlaye ammavayum heroine ayum katti pottu time balm set pannittu mukyamana oru velaya villain velila poidradhu...
அபத்தங்கள் பலவிதம்.
விக்ரமன் ஸ்டைல் : அப்பாவால் வீட்டை விட்டு துரத்தப்படு ஹீரோ , சைக்கிள் கடை ஆரம்பிப்பார்..பாடல் ஸ்டார்ட்..ஹீரோவிற்கு, வசதி வந்து விடுகிறது.. பாதிப் பாடலில், ஹீரோ, பெரிய முதலாளியாகிறார்..பாடல் முடியும் போது, 40-50 கம்பெனீக்கும் சொந்த்க்காரர் ஆகி , கோட், சூட், சகிதம் , நான்கைந்து டை கட்டிய மேனேஜர்கள் புடை சூழ , வலம் வருவார்.
2. ரஜினி ஸ்டைல்: துப்பாக்கிக் குண்டிலிருந்து , நண்பனையோ , அம்மாவையோ காப்பாற்ற, ஸ்லோ மோஷனில் பறந்து வருவார். துப்பாக்கிக் குண்டும், ஸ்லோ மோசனில் பத்து செகண்டுக்கும் மேலாக பறந்து வரும். கடைசியில் , அவர் வந்து , டார்கெட் டை தள்ளிவிட்டு காப்பாற்றி விடுவார்.
3. பணக்கார முதலாளியால்,அவமானப் படுத்தப் படும் போது, ஹீரோவின் அம்மா பொங்கி எழுந்து, "டே, அவனை யாருன்னு நினைச்ச , நீ, அனுபவிச்சுக்கிட்டிற சொத்தெல்லாம் ,அவன் அப்பா போட்ட பிச்சை டா " என்று 20 வருடத்திற்கு முந்திய ஃபிளாஷ் பேக்கை எடுத்து விடுவார்.
4. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு , கெட்டவர்களை பழிவாங்கும் ஹீரோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது , "ராஜாவை விடுதலை செய்", என்று தமிழ்நாடே பொங்கி எழுந்து விடும்.
இன்னும் வரும்..
முக்கியமான ஒரு தடையமோ, பேப்பரோ, டேப்போ பிரோ கீழயோ, சோஃபா கீழயோ போய்விடும், படம் முழுக்க தேடியபின் க்ளைமாக்ஸில் எப்படியோ வில்லன் கைக்கு போய் ஒரு சண்டைக்கு பிறகு ஹீரோ அதனை கைப்பற்றுவார்.
ராம நாராயணன் படங்களில் நாயோ, குரங்கோ, பாம்போ கண்டுபிடித்துக் கொடுக்கும்
பத்மகிஷோர், சில படங்களில் கடைசிவரிக்கும் பீரோக்கடியில போன பேப்பர் கிடைக்கவே கிடைக்காது யார் கைலயும்...
////சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு , கெட்டவர்களை பழிவாங்கும் ஹீரோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது , "ராஜாவை விடுதலை செய்", என்று தமிழ்நாடே பொங்கி எழுந்து விடும்.////
அல்ட்டிமேட் !!!
5. "மாணவர்களே ! இன்னிக்கு நாம் பார்க்கப் போற பாடம் "ரோமியா அண்ட் ஜூலியட்" என்று தான் 99% கல்லூரிப் பேராசிரியர்கள் பாடத்தை ஆரம்பிப்பார்கள்.
6. நீண்ட நெடுங்காலமாக, தாமு, கல்லூரி மாணவனாக நடித்தது. அபத்தம், அபத்தமர், அபத்தமெஸ்ட்.
7. செத்து விட்டான் என்று நினைக்கப்பட்ட வில்லன், "டாய்" என்று சவுண்டு கொடுத்துக்கொண்டே , அரிவாளுடன் ஸ்லோ மொசனில் ஹீரோவை நோக்கி ஓடி வர, குணச்சித்திர நடிகரால் ,மறுபடியும், துப்பாக்கியால், சுடப்பட்டு , கண்கள் நிலைகுத்தி , சாய்கிறார்.
/////பணக்கார முதலாளியால்,அவமானப் படுத்தப் படும் போது, ஹீரோவின் அம்மா பொங்கி எழுந்து, "டே, அவனை யாருன்னு நினைச்ச , நீ, அனுபவிச்சுக்கிட்டிற சொத்தெல்லாம் ,அவன் அப்பா போட்ட பிச்சை டா " என்று 20 வருடத்திற்கு முந்திய ஃபிளாஷ் பேக்கை எடுத்து விடுவார். ///
கலக்குற மச்சி !!
ஜீவன் - கலக்குறீங்க...ஒரு தமிழ் படத்தை டைரக்ட் செய்யும் அத்துனை தகுதியும் இருக்கு..
நாலை காலை பத்து மணி வரை பின்னூட்டம் போடலாம்...பரிசு ரொம்ப பெருசு...அதனால் நல்ல க்ரியேட்டிவ் முயற்ச்சி வெற்றி பெறும்...
வெற்றியாளரை ஒரு நடுவர் தேர்ந்தெடுப்பார்...
வில்லன் அரிவாளால் வெட்ட வரும்போது தோளில் போட்டிருக்கும் துண்டால் ஹீரோ தடுத்து துண்டை கேடயமாக்குவார்.
ஹீரோவின் அக்காவோ அம்மாவோ ஹீரோயினோ அரிவாளை கையாலேயே பிடிப்பார்கள்.
9. வில்லன் , ஹீரோயினி கையப் புடிச்சு இழுத்தா, அந்த இடத்தில ஃபைட்டு. ஹீரோ , ஹீரோயினி கையப் புடிச்சி இழுத்தா, அங்க பாட்டு..
10. வில்லன்களிடம் செமையாக மாட்டிகொள்ளும் போது, ஹீரோயினி, குலுக்கு நடனம் ஆடி, பாடல் முடிவில் துப்பாக்கியைப் பிடிங்கிக் கொள்வார்.
1. பெரும்பாலும் சினிமாவில் வரும் ப்ரொபசர்கள் மாங்கா மடையர்களாக இருப்பார்கள்.
2. ஹீரோவுக்கு இக்கட்டான் நேரம் வரும்போதெல்லாம் மழை பெய்யும்
3. கைதிகள் ஜெயிலுக்குள் பாட்டு பாடி டான்ஸ் ஆடுவார்கள்
ஹீரோ எப்ப்பவுமே நல்லவராவே இருப்பார்!!
வில்லன் நல்லவரா இருந்து திருந்துவார் இல்லனா செத்துபோய்டுவார்!!!
ஒரே பாட்டுல ரொம்ப பெரிய்ய பணக்காரங்களா ஆகிடறது!!
11.ஹீரோயின் - பாத்ரூம் - கரப்பான் பூச்சி - ஹீரோ - கட்டிப்பிடித்தல் - டூயட்
12. அப்பா நாட்டாமை செத்த வுடன், மகன் அவரை விட பெரிய மீசையுடன் ,நாட்டாமையாக வருவது...
13. ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் நடக்கும் போட்டியில், வில்லன் கண்டிப்பாக கல்லாட்டை செய்வார் ( உம்: ரேகளா ரேஸ் வண்டியில், அச்சாணியைப் பிடுங்குதல் , கபடிப் போட்டியில் , பிளேடால் கீறுதல்).இருந்தாலும் , ஹீரோ ஜெயித்து, "உன் மேல நம்ப்பிக்கை வை" என்று வில்லனை அடித்து துவைத்து வசனம் பேசுவார்.
ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பாளர் சொன்னார்.
"நம்ம படம் பிச்சுக்கிட்டு ஓடும்"
அவருடைய நண்பர் கேட்டார்.
"எப்படிச் சொல்கிறீர்கள்?"
"படத்தில இரண்டு குத்தாட்டம் வச்சிருக்கின்ல! அதோட மட்டும் இல்ல - சரக்கு வச்சிருக்கேன், இறக்கி வச்சிருக்கேன் -ங்கிற மாதிரி பாட்டெல்லாம் அதுக்கு சூப்பரா போட்டிருக்கோம்ல"
இந்த அபத்தம் தான் தற்சமயம் எல்லாத் தமிழ்ப் படங்களிலும் அதிகமாவும், அசுர வளர்ச்சியுடனும் உள்ள அபத்தம்.
அகவே இதுதான் அபத்தம் நம்பர் ஒன்
என்னடா பரிசை யெய்ம் பண்ணி எழுதியிருக்கானே என்று நினைக்க வேண்டாம்
தருமி ஸ்டைலில் சொல்லி விடுகிறேன்.
எனக்குப் பரிசு, வேண்டாம்! வேண்டாம்!! வேண்டாம்!!!
சபைக்கு வரும் வேறு ஏதாவது புலவருக்குக் கொடுத்து விடுங்கள் அரசே!
குற்றம் கண்டு பிடித்துப் பரிசு வாங்கிய வாத்தியார் என்ற கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்.
சுப்பையா
கிராமத்து ஹீரொயின்கள் எல்லாம் தண்ணிர் எடுக்க தோழிகளுடன் ஆத்தங்கரைக்கு தான் போக வேண்டும் .
தமிழ்நாட்டில் வற்றாத ஜீவநதிகள் பல ஓடுகின்றன மேலும்
தமிழ்நாட்டில் போர், மோட்டர், பைப் இதெல்லம் கிடையாது.
பட்டணத்துல படிக்க போன பணக்கார ஹீரோயின் மார்டன் டிரஸ்-ல வந்து இறங்கும் .உடனே 10 வருஷம் கழிச்சி பாக்குற மாதிரி "எப்படி வளர்ந்திருக்கா பாரு" பாட்டி சொல்லும் .ஏண்டா பட்டணத்துல படிக்க போனா செமஸ்டர் லீவு -க்குகெல்லாம் வீட்டுக்கு வற்றதில்லியா ? 10-வருஷமா காலேஜ்-லேயே தங்கிடுறதா?
2006லும் ஹீரோயின்கள் தாவணி அணிவது :-))
ஜோ...சூப்பர்...
லக்கி, உக்காந்து யோசிப்பீங்களோ...
பத்மகிஷோர், அடிச்சு தூள் பண்றீங்க !!!
சென்சுரி பின்னூட்டம்
பாக்யராஜ் படங்களில் வரும் அபத்தம் ரொம்ப முக்கியமானது. இவர் கண்ணு தெரியாம கண்ணாடி போட்டுக் கொள்கிறார் என்பதற்காக தேவையில்லாமல் அவருடன் நடிக்கும் கதாநாயகிகளும் கண்ணாடி போட்டு வருவார்கள்.
வில்லனை சந்திக்க பாரினில் இருந்து வெள்ளைக்கார போதை மருந்து கடத்தல்காரர்கள் வருவார்கள். அவர்கள் சந்திக்கும் இடம் ஒரு பாராக இருக்கும். தண்ணி அடித்துக் கொண்டே கேஷையும், போதை மருந்தையும் பரிமாறிக் கொள்வார்கள். அப்போது ஒரு கவர்ச்சி நடிகை தொடை தெரிய ஆடிக் கொண்டு இவர்கள் அருகே வந்து பாட்டு பாடி, ஆட்டம் போடுவார்.
இதுமாதிரி காபரே டேன்ஸ் நடக்கும் பார் எங்காவது இருந்தால் ஜொல்லுங்கள்...
உலகிலேயே எந்த நாட்டு சினிமாவிலும் இப்படி ஒரு அபத்தம் இருக்குமா எனத் தெரியாது....
மிலிட்டரியில் இருந்து ரிட்டையர் ஆன பெருசு அவர் சொந்த கிராமத்துக்கு வந்திருப்பார். அவருக்கு ஒரு கால் ஸ்லைட்டாக ஊனமாகியிருக்கும். எப்போதுமே (தூங்கும்போது கூட) மிலிட்டரி யூனிபார்மில் இருப்பார். கையில் துப்பாக்கியும் வைத்திருப்பார். நியாயத்தை தட்டிக் கேட்டு வில்லனால் கொல்லப்படுவார்.
இந்திய ராணுவம் இந்த கொடுமையை எப்படி தான் அனுமதித்துத் தொலைக்கிறதோ தெரியவில்லை :-(
கிராமத்துப் படங்களில் பட்டணத்து ஹீரோயின் என்றாலே ஒரே கலகலப்பு தான். இடைவேளைக்கு முன்னர் வரை ஹீரோவை முறைப்பார். "ஹே மேன் வாட் இஸ் திஸ்?" என்று ஆங்கிலம் பேசுவார். வரப்பில் நடக்க அவருக்கு தெரியாதாம். மாடர்ன் டிரஸ் (மிடி மட்டும் தான் அவங்களுக்கு மாடர்ன் டிரஸ்) போட்டிருப்பார்.
இடைவேளைக்குப் பின்னர் தலைகீழாக மாறி விடுவார். வில்லனான தன் தந்தையை எதிர்த்துப் பேசுவார். புடவை கட்டி தலைநிறைய மல்லிகைப்பூ வைத்திருப்பார். ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பார்.
////இதுமாதிரி காபரே டேன்ஸ் நடக்கும் பார் எங்காவது இருந்தால் ஜொல்லுங்கள்... ////
பெங்களூரில் இருக்கு...கும்பலாக குத்தாட்டம் போடுவதை ரசிக்கலாம்...ஹிந்திப்பாடல்கள் தவிர தமிழ் பாடல்களும் ( மோஸ்ட்லி விஜய் பாட்டுகள்) போடப்படும்...
////உலகிலேயே எந்த நாட்டு சினிமாவிலும் இப்படி ஒரு அபத்தம் இருக்குமா எனத் தெரியாது....
மிலிட்டரியில் இருந்து ரிட்டையர் ஆன பெருசு அவர் சொந்த கிராமத்துக்கு வந்திருப்பார். அவருக்கு ஒரு கால் ஸ்லைட்டாக ஊனமாகியிருக்கும். எப்போதுமே (தூங்கும்போது கூட) மிலிட்டரி யூனிபார்மில் இருப்பார். கையில் துப்பாக்கியும் வைத்திருப்பார். நியாயத்தை தட்டிக் கேட்டு வில்லனால் கொல்லப்படுவார்.
இந்திய ராணுவம் இந்த கொடுமையை எப்படி தான் அனுமதித்துத் தொலைக்கிறதோ தெரியவில்லை :-( ///
அல்ட்டிமேட்...எந்த ராணுவ வீரரும் எப்போது யூனிபார்ம் ட்ரஸ்ஸோடு அலைவதில்லை...ஆனால் நம்ம தமிழ்சினிமாவில் அந்த கொடுமை ஆண்டாண்டு காலமா நடந்துக்கிட்டிருக்கு
கொடுமையான ஒரு விஷயம், நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கற ஹீரோவை, "ஒரு வார்த்த கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று ஹீரோயினி துரத்தி துரத்தி லவ்வடிப்பது..ஒரு வருஷம் காத்திருந்தா ஹீரோவுக்கு நாப்பத்தாறு வயசாயிடுமே ? யாரும் சொல்லலையா அவளிடம் ?
ராமராஜன் ஒரு படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். காலையில் பேப்பர் போடுவார். அதன் பிறகு ஒரு 192 பக்கம் நோட்டைத் தூக்கிக் கொண்டு கேன்வாஸ் ஷூ போட்டுக் கொண்டு காலேஜுக்கு போவார்.
இன்னொரு படத்தில் (பார்த்தால் பசு) ராமராஜன் வக்கீலாக வக்கீல் கோட்டு அணிந்து நடித்து அசத்தியிருந்தார்.
ராமராஜன் காளைகளை அடக்கும் விதமே தனி!
"பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி" என்று இவர் பாட்டு பாடினாலே போதும். முரட்டுக் காளை தானாக அடங்கிவிடும். பால் தர மறுக்கும் பசு கூட நம்ம பசுநேசனைக் கண்டால் போதும்... அவர் பாட்டைக் கேட்டுக் கொண்டே 50 லிட்டர், 100 லிட்டர் என்று பால் கொடுத்து அசத்தி விடும் :-)
விக்ரமன் போன்ற இயக்குனர்களின் படங்களில் வரும் ஒரு அபத்தம்.
ஹீரோவோ அல்லது ஹீரோயினோ தெருப்பாடகர்கள் ரேஞ்சில் இருப்பார்கள். எப்படியோ முன்னேறி ஒரு மேடையில் பாடி கேசட் ஒன்றும் போட்டுத் தொலைத்து விடுவார்கள்.
அந்தப் பாட்டை கல்லூரி இளைஞன் ஒருவர் வாக்மேனில் கேட்பார், ஆட்டோக்காரர் ஆட்டோவில் கேட்பார், குடும்பத்தலைவி வீட்டில் கேட்பார். இதுமாதிரி பல வெரைட்டியான ஆட்கள் நம்ம ஹீரோவோ அல்லது ஹீரோயினுடைய பாட்டையோ கேட்பார்கள்.
அதுமட்டுமல்ல பத்திரிகைகாரர்களும் இவர்கள் பாட்டு பற்றி மக்களிடம் பேட்டி எடுப்பது மாதிரியான ஒரு காட்சி இடம்பெறும்.
தாலி சென்டிமென்ட வுட்டுட்டோமே.
வில்லன ஹீரோ கொல்லப்போவார், அப்போ வில்லன் மனைவி ஹீரோவின் காலில் விழுவார், அவர் தாலி ஹீரோவின் காலில் படும், உடனே அரிவாளை கீழே போடுவார் நம் ஹீரோ.
//அல்ட்டிமேட்...எந்த ராணுவ வீரரும் எப்போது யூனிபார்ம் ட்ரஸ்ஸோடு அலைவதில்லை...ஆனால் நம்ம தமிழ்சினிமாவில் அந்த கொடுமை ஆண்டாண்டு காலமா நடந்துக்கிட்டிருக்கு //
ஹலோ நான் சொன்னது ராணுவவீரரை மட்டுமல்ல... "ஓய்வு பெற்ற ராணுவவீரர்" எந்நேரமும் யூனிபார்மில் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? :-(((
படத்தில் முஸ்லீம் கதாபாத்திரங்கள் என்றால் 'நம்மள்கி.." என்று முஸ்லீம்கள் யாருமே தமிழர்கள் கிடையாது போல் அல்லது தமிழ் பேச தெரியாதவர்கள் போல் உருது கலந்த தமிழ் பேசுவது போல் காட்டுவது, ஆனால் விஜயகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் மட்டும் பாகிஸ்தான் காரர்கள், கஷ்மீர் காரர்கள் உள்பட அனைவரும் தமிழ் ஆசிரியர் போல் தமிழில் வெளுத்து வாங்குவது,
தொழுகைக்கான அழைப்பு விடுக்கும் போது ஒரு முஸ்லீம் கதாநாயகன் தொழுது கொண்டிருப்பதை காண்பிப்பது,
அலாவுதீன் படத்தில் தொழும் போது நிற்கும் வரிசைகளில் இடைவெளி விட்டு காட்டியது, இப்படி நிறைய கொடுமைகள் உண்டு nagoreismail
மெஷின் கன்னிலிருந்து பாயும் தோட்டாக்களை அப்படியும் இப்படியும் உடலை அசைத்து ஹீரோ உடலில் தோட்டாவை பாயவிடாமல் தப்பிப்பார்.
கடைசியில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்ணடை நடக்கும், சண்டையில் வழக்கம்போல் ஹீரோ ஜெயித்து கடப்பாரையை எடுத்து வில்லனை கொல்ல ஹீரோ கையை ஓங்குவார் வில்லன் கண்ணை மூடுவான் உடனே ஹீரோவுடைய அம்மா ஹீரோவின் கையைப்பிடித்து "விடுப்பா இவனைக் கொன்னுட்டு நீ ஜெயிலுக்குப் போகனுமா?. நீ இவனை இந்த அடி அடித்தே போதும்" என்று கடப்பாரையை வாங்கி வீசி விட்டு ஹீரோவை தடுத்து கூட்டிக்கொண்டு செல்லும் நேரம் வில்லன் ஹீரோ தூக்கிப்போட்ட கடப்பாரையை தூக்கிக் கொண்டு ஹீரோவை கொல்லவருவான் "ஆஆஆஆஆஆஆஆஅ" என்று ஒரு சத்தம் பார்த்தால் வில்லனின் மனைவி அவர் வேறு ஒரு கடப்பாரையை வைத்து வில்லனைக் (பெரும்பாலும் இவர் ஹீரோவின் சகோதரியாய் இருப்பார்) குத்திவிட்டு இரத்தம் தேய்ந்த கடப்பாரையுடன் காட்சி தருவார் பாருங்கள்.
வில்லன்கள் பேசும் ரகசியங்கள் மற்றும் திட்டங்கள் எல்லாம் எப்படியாவது
ஹீரோவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும். (ஒளிந்து கேட்டு கொண்டிருப்பார்!)
///2. ஹீரோவுக்கு பேரு வெக்க நம்ம தமிழ்சினிமா இயக்குனருக்கு ஒரு கஷடமும் இருக்காது...அதான் இருக்கே ஒரு பேரு...ராஜா///
ஹீரோயினுக்கு.. ப்ரியா
14.சின்ன வயதில் , தன் கண் முன்னாலேயே அப்பா,அம்மா, கொலை செய்யப் பட்ட , சம்பவம், ஹீரோவுக்கு, போட்டோ நெகடிவ் கலரில் அடிக்கடி தோன்றும்.
15. தமிழ் சினிமாவில் விஞ்ஞானி என்றால், தாடியுடன் , வெள்ளை ஜாக்கெட் அணிந்து, சிவப்பு, மஞ்சள், பச்சை நிர திரவங்கள் உள்ள 10-15 டெஸ்ட் ட்யூப்கள், 4-5 கண்ணாடிக் குடுவைகளில் ஆராய்ச்சி செய்து, "ஸக்ஸஸ்" என்று ஒரு முறையாது குரல் கொடுப்பார்
நாயகி ஓட்டும் காரின் பிரேக் வயர் வில்லனின் ஆட்களால் வெட்டப் பட்டிருக்கும்.
காரை ஓட்டிக்கொண்டிருக்கும் நாயகி பிரேக் வயர் கட் ஆனது தெரிந்தபின்னாலும் இஞ்சினை ஆஃப் செய்ய மாட்டார்... பிரேக்கையே மிதித்துக் கொண்டிருப்பார்... அதையும் பத்து முறை காட்டிக் கொண்டிருப்பார்கள்!!!
ஆக்சலேட்டரில் இருந்து காலை எடுப்பாரோ மாட்டாரோத் தெரியாது கார் அதே வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கும் (சில சமயம் அதிக வேகத்திலும்)
ஆனால் கண்டிப்பாக நாயகனால் காப்பாற்றப்படுவார் :))
இந்த "மெசின் கன்" என்பது உண்மையில் எடை அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நாயகன் ஒற்றைக் கையில் சாதரணமாகக் கையாள்வார்.
அவர் மீது வீசப்படும் வெடிகுண்டுகளை கேட்ச் பிடித்து திருப்பி வில்லன் அடியாட்கள் மீது வீசுவதெல்லாம் அபத்தத்தின் உச்சம்!
காஷ்மீர், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் தமிழ் பேசுவது!
வில்லன் முறைப்பெண் கதாநாயகி. வில்லன் கதாநாயகனின் தங்கையைக் கெடுத்து விடுவார். கடைசியில் வில்லனுக்கும் கதாநாயகனின் தங்கைக்கும் திருமணம் நடக்கும். கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொள்வார்கள்.
ஊர்ப்பக்கத்துக் கிழவி பாத்திரங்கள் எப்பொழுதும் பழமொழி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
சுட்டதைப் பார்த்து யாராவது குறுக்கே பாய்வது. குண்டை விட இவர்கள் வேகமாகப் பாய்வார்கள்.
படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர படம் முழுக்க கதாநாயகனைத் துன்பம் துரத்தும். கடைசிக் காட்சியில் மட்டுமே வில்லனைத் துன்பம் துரத்தும்.
மாயாஜாலப் படமென்றால் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமைன்னு யாராவது கவர்ச்சி ஆட்டம் ஆடனும். சித்திரகுப்தன் எப்போதும் காமெடியந்தான்.
கதாநாயகின் தலையில் பத்து முழம் மல்லிகைப் பூவை கதாநாயகன் அப்படி வைத்ததுமே பூ நன்றாக நின்று கொள்ளும். அதே போல பொட்டு. கதாநாயகியோ நாயகனோ வைத்தால் வட்டமாக இருக்கும்.
அட லிஸ்ட் எடுத்துகோங்க ரவி..
கதாநாயகி தடுக்கிவிழ நாயகன் அவளை தாங்கி பிடிக்க..தம்தன தம்தன காதல் வந்திடும்
சராமாரியா பத்துக்கும் மேற்பட்ட அடியாட்கள் சுட நாயகன் ஓடியே கடுக்காய் கொடுப்பார். ஆனால் இவர் சுட்டா மட்டும் எல்லோரும் மடமடன்னு அவுட் ஆகிடுவாங்க
நாயகன் உடல் முழுக்க ரத்தம் வடிய வடிய குப்பை தொட்டியில் தூக்கி எறியப்பட்டிருப்பார். அந்த நேரம் ஊடில ஒரு டூயட் கனவு அவருக்கு வரும் (கலர் கனவுகள் படத்துல கரண் காணும் கனவு)
எவ்வளவு ஸ்பீடா போற வண்டியையும் இவர் ஓடியே பிடிப்பார் (அன்றைய எம்ஜியார் படதுல இருந்து இன்றைய காதல் தேசம் படம் வரைக்கும்)
வில்லனை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் அவர் யாரையாவது சித்ரவதை செய்து கொண்டிருப்பார்..இல்லைனா கொன்றுகிட்டு இருப்பார்..
நம்ம ஹீரோயினுக்கு நம்ம ஹீரோ 'அனாதை'ன்னு தெரிஞ்சவுடனே காதல் பிச்சிக்கிட்டு வந்துடுமே!
நானெல்லாம் எத்தனை முறை அனாதையா பொறக்கலையேன்னு கவல பட்டுருக்கேன் தெரியுமா?!! ;-) அட சின்ன வயசுலதாங்க!
அபத்தங்கள் எதுவுமே இல்லாத சினிமா வெற்றி பெறுவது இல்லை என்பதுதான் அபத்தங்களிலும் பெரிய அபத்தம்
காலேஜ்னா பசங்க படிக்கவே மாட்டாங்க... எப்போதும் வெளிலேயே உக்காந்திருப்பாங்க
க்ளாஸ் இருந்தாக்கூட ஒண்ணு ப்ரொஃபசர் லூசா இருப்பார். இல்லைன்னா பசங்க கலாட்டா பண்ணுவாங்க. இல்லைன்னா ஹீரோ -ஹீரோயின் லுக் உட்டுட்டிருப்பாங்க
க்ளாஸ் ஒழுங்காவே நடக்காது
எல்லா ஹீரோ-ஹீரோயினுமே பாடுவாங்க- பேசும்போது குரல் எவ்வளவு கொடூரமா இருந்தாலும் பாடும்போது இனிமையா மாறிடும்
யாராவது கோமாவுல விழுந்திட்டா ஹீரோவோ ஹீரோயினோ வந்து கூப்பிட்டா கண்டிப்பா எழுந்திருச்சிருவாங்க
கிறிஸ்டியன்ஸ் எல்லாருமே கவுண் போட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க
மக்களே செட்டிங்கை மறந்துட்டீங்களா?
நிலாவுக்கு பதிலா பெரிய பல்பு மாட்டி வைக்கறது, கனவுன்னா மேக மேகமா அட்டையில ஜோடிக்கறது... அப்புறம் நம்ம டி.ஆர் படம்னா பெரிய பெரிய இதயமா அங்கங்க தொங்குறது...
ஹீரோவோ ஹீரோயினோ ஜெயிக்கணும்கறதுக்காகவே கூட ஓடுறவங்க எல்லாம் மெதுவா ஓடுவாங்க. பேஸ்கட்பாலோ ஃபுட்பாலோ விளையாண்டாங்கன்னா காமெடியா இருக்கும்
எவ்வளவு கோடூரமானவரா இருந்தாலும் ஒரு நொடில தப்பை உணர்ந்திருவாங்க... அதுவும் எம்ஜியார் அறிவுரை சொன்னால் திருந்தறது கன்ஃப்ர்ம்ட்
கதாநாயகனுடன் மோதலில் இருக்கும்போது 'மிடி' அணிந்திருக்கும் திமிர் பிடித்த கதாநாயகி , மனம் திருந்தியவுடன் சேலை அணிந்து கொள்வது .
கல்லூரியில் படிக்கும் கதாநாயகி குஷ்பு தன் நெஞ்சோடு அனைத்திருக்கும் புத்தகம் '7 ஆம் வகுப்பு தமிழ்' . (படம் பெயர் தெரியவில்லை)
விஜயகாந்தின் உலகமகா கண்டுபிடிப்பான 'சிலம்பாட்ட வாத்தியாருக்கு எழுதப்படிக்கத்தெரியாது' என்பதை வைத்து தீர்ப்பு சொன்னவுடன், அங்கு காரில் இருக்கும் நீதிபதி சொல்லும் வசனம் 'இந்த *பையன்* நல்லா தீர்ப்பு சொல்றார் '. (சின்னக்கவுணடர்)
கையில் பைபிளுடனும், கழுத்தில் ஜெபமாலையுடனும் வரும் கிறித்துவ பாதிரியார் சொல்லும் ஒரே வசனம் 'God bless you my child' (பல படங்கள்)
மூதாட்டிகூட கிறித்துவர் என்றால் மிடி அணிந்திருக்க வேண்டும் இங்கிலிஷ் பேச வேண்டும், மற்றும் ஒயின் குடிக்கவும் வேண்டும் .
மாதா கோவிலில், வெள்ளை கவுண் அணிந்து , மோதிரம் மாற்றும் திருமணம் .. கண்டிப்பாக பாதிரியார் , பல கோணங்களில்,,தவறாக பிதா சுதன் என்று அடையாளமிடுவது .
பழைய தமிழ் படத்தில் விவசாயி தூய இலக்கண தமிழ்
பேசுவார். வாசலில் கண்டிப்பா ஒரு ஏர் இருக்கும்.
ஒரு படத்தில் சிவாஜியிடமிருந்து அவர் நண்பருக்கு டாக்டர்
வீட்டிலேயே directAஆ பblood transfusion
பண்ணுவார். சிவாஜிக்கு மயக்கமாக வரும். எந்த டாக்டரும் இப்படி
செய்வார்களா?
பல கதைகளின் மெயின் முடிச்சே டாக்டர் போட்டதாக இருக்கும். இவங்களுக்கு
அதிர்ச்சியான செய்தி கேட்டா ஹார்ட் அட்டாக் வருமென்று சொல்வார். கடைசி
வரை அந்த கேரக்டர் உயிருடந்தான் இருக்கும். (இப்படி ஒரு diagnosis
மருத்துவ கல்லூரியில் இருக்கா?)
ஐ.ஏ.எஸ் படிக்கும் அளவு புத்திசாலி பெண்டாட்டியை திருவிழாவில் குழந்தையை
தொலைப்பது போல ஜெமினி தொலைத்துவிடுவார்.
முக்காவாசி குழந்தைகள் திருவிழாவில்தான் தொலைந்து போவார்கள்.
வில்லன் பேர் மாயாண்டி, மைக்கேல், டேவிட். வில்லி - ரீட்டா, லில்லி.
கிருத்துவ பேர்கள் மேல் அபடி ஒரு அன்பு.(கடந்த பத்து வருடங்களாக
எனக்கு அலுவலகத்தில் பாஸாக வாய்த்தவர்கள் பேர் மைக்கேல் அல்லது
டேவிட் :( )
அடிபட்டதும் அம்னீசியா, புத்தி பேதலிப்பு சரியாகிவிடும்.டாக்டரே வேண்டாம்.
மலையிலிருந்து தள்ளி விட்டாலே போதும்.
மறக்க முடியாதது. துர்கா படத்தில் மூன்று வயது துர்காவின் டயரியை படித்து
இன்னொரு குழந்தையை தயார் செய்வார்கள். 3 வயசு குக்ஷந்தை டயரி
எழுதுமா?
உலகம் சுற்றும் வாலிபந் எம் ஜி ஆருக்கு எதிராக வேலை செய்யும் வில்லன்
தலையில் சிகாகோ டான் மதிரி ஹேட், கன்னத்தில் கருப்பு மச்சம் , குறுந்தாடியுடன்
அசொகன் ரவுடி மாதிரி இருப்பார். அவர் ஒரு scientist!
121 பின்னூட்டங்கள்ளே லக்கிலுக்
மட்டுமே 26(இதுவரை);
சந்தனமுல்லையும் சளைக்காமல்
தொடர்கின்றார்.....
இருவரையும் தவிர மற்றவர்க்கும்
வாய்ப்பு கொடுக்கலாமே
(ஒரு வாசகரின் தடாலடிச் சிந்தனை)
வணக்கம் ரவி,
அபத்தங்களை லிஸ்ட் போடப்போட நீண்டு கொண்டே போனதால் அதை ஒரு தனி பதிவாகவே போட்டுவிட்டேன்.
http://naanengiranaan.blogspot.com/2006/12/to.html
ஹீரோ வெளிநாட்டுக்குப் போவார் (உதாரணத்துக்கு ஜப்பான்) வயிற்றுப் பசிக்கு என்ன ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முட்டை/egg என்றால் என்ன என்று கூட ஆங்கிலம் தெரியாத ஓட்டல் சர்வருக்கு விளக்க முற்படும்போது "ஜங்" என்று விண்ணிலிருந்து குதித்தாற்போல் ஒரு தமிழ்க் கதாநாயகி அக்கணமே அதே ஓட்டலின் சர்வராகத் தோன்றி ஹீரோவின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பார்.
காஷ்மீர், சிம்லா, சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் அரைக்கை சட்டை, கையில்லாத ஸ்லீவ்லெஸ் டிரஸ் அணிந்துகொண்டு பாடிக்கொண்டிருப்பார்கள் நம் ஹீரோ & ஹீரோயின். இந்த அபத்தத்துக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரே வழி: வட அமெரிக்காவில் வந்து ஒரு winter முழுவதும் வசிக்க வைக்க வேண்டும் அவர்களை.
சிந்து பைரவி படத்தில் இறுதியில் குழந்தையைக் காண்பித்துப் படத்தைக் கெடுத்தது மாபெரும் அபத்தம்.
கார் ஓடவேண்டிய காட்சியில் ஓடாமல் ஸ்டூடியோவில் நின்றுகொண்டிருக்கும் அபத்தம்.
ஹீரோ மெக்கானிக்காக இருப்பார். முக்கியமான சில கட்டங்களில் ஹீரோவுக்கு பதில் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் அரை ஆழாக்கு சைஸில் இருக்கும் பொடியனே ஹீரோயினுக்கு பதில் சொல்லி அனுப்பிவிடுவான்.
பிரசவ அபத்தங்கள்:
1. வலி திடீரென்று வரும் (சரி அதையாவது ஒத்துக்கொள்ளலாம்)
2. மருத்துவர்கள் சொல்வது போல் சில நிமிடங்கள் இடைவெளி விட்டு விட்டு வராது. அதற்கு பதில், வரும்போதே ஒரேயடியாக உயிர் போகும் அளவுக்கு வீஈஈஈஈல் என்று கத்தும் அளவுக்கு வரும்
3. ஹீரோயின் ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் கதவின் நிலையைப் பிடித்துக்கொண்டே மெதுவாகக் கீழே சரிந்து வந்து தரையில் "பொத்" என்று உட்கார்வார்.
4. மகப்பேறின் போது அவர் கட்டிய சேலை கூட அப்படியே இருக்கும்.
5. மகப்பேறின் போது அவர் கையையும் காலையும் rigid-ஆக வைத்துக்கொண்டு வலி தாங்காமல் தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேகவேகமாக ஆட்டுவார்.
சண்டைக்காட்சிகளில் ஹீரோ பறந்து பறந்து ஃபைட் காட்டுவது.
தண்ணீர்/காபி தம்ளர் காலியாக இருக்கும். ஒரே மடக் என்று டம்ளரைக் குப்புறக் கவுத்துக் குடிப்பது போல் பாவ்லா செய்வார்கள். உண்மையில் அதில் தண்ணீர்/காபி ஏதும் இருந்தால் இப்படி ஒரேயடியாகக் குப்புறக் கவுத்தால் அத்தனையும் முகத்தில் தான் வழியும் என்பது வேறு விசயம்.
ஹீரோவும் அவர் twin சகோதரரும் படத்தின் இறுதியில் தான் சந்திப்பார்கள். அவர்கள் பிறந்ததிலிருந்தே பிரிந்து வாழ்ந்தவர்கள். ஒருவரையொருவர் தெரியாது. ஆனால் சந்தித்தவுடன்
"அண்ண்ண்ணாஆஆஆ"
"தம்ம்ம்ம்பீஈஈஈஈ"
என்று ஒரேயடியாக உருகுவார்கள்.
1.சின்னிஜெயந்த் இன்னமும் கல்லூரி மாணவனாய் வருவது.
2. மூனு அடி வாங்கியப் பிறகு ரோசம் வருவது
3. வில்லன் எப்போ ஹீரோவ அடிச்சாலும், ஹீரோக்கு உதட்டுல மட்டும் ரத்தம் வருவது.
4. ஹீரோ எப்பவுமே ஹீரோவா இருப்பது. வில்லன் மட்டும் எப்போதுமே வில்லனா இருப்பது.
5. அப்புறம் ரவி, டாக்டர்ஸோட வடிக்கையான வரிகளை மறந்திட்டீங்களே!
'இட் இஸ் எ மெடிக்கல் மிராக்குள்'
ஹி ஹி ஹி ஹி!!
பதில்களை வாசித்து..சிரித்து...வலியே வந்துவிட்டது...போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள் :)
அடப் போங்கப்பா... இப்பதான் பார்த்தேன்... முக்கியமான அபத்தத்தை எல்லாம் மக்கள் சொல்லிட்டாங்க... என்னத்தை சொல்றது இப்போ?
இருந்தாலும் ரொம்ப நாளா உறுத்திக்கிட்டிருக்கற சில அபத்தங்கள்:
1.காஃபியோ தண்ணியோ கொடுக்கறதா சீன் இருக்கும். ஆனால் வெறும் டம்ப்ளரைத்தான் தருவாங்க... அப்பட்டமா தெரியும். ஒரு சின்ன விஷயம்... இதைக்கூட ஒழுங்கா பண்ணக்கூடாதான்னு எரிச்சல் வரும்
2. அதே போல ஊருக்குப் போக பெரிய சூட்கேஸோ பையோ எடுத்துட்டுப் போவாங்க...ஆனா காத்தாடும் உள்ள...
3. ஊருக்குப் பேக் பண்றதா இருந்தா அநேகமா கையில கிடைச்சதையெல்லாம் சுருட்டி சுருட்டிதான் பையில வைப்பாங்க.
4. கிஸ்ஸிங் ஸீன்னா -
(பழைய படத்திலே) ஹீரோ உதட்டைத் துடைச்சிக்கிடே செடி பின்னாலிருந்து வருவாங்க
அல்லது ரெண்டு பூ ஒண்ணோடு ஓண்ணு உரசிக்கும்
அல்லது ரெண்டு கிளி மூக்கோடு உரசிக்கும்
5. யப்பா...செட்டிங்கை விட்டுட்டீங்க போலிருக்கே... பழைய படத்தில நிலாவுக்கு பதிலா ஒரு பெரிய பல்பு மட்டிவச்சிருப்பாங்களே, மறந்துட்டீங்களா? அப்புறம் கனவுக்காட்சின்னா மேகம் மேகமா அட்டையில செஞ்சி வச்சிருப்பாங்க...
சனி கிரகத்தில கூட போய் பாட்டுப்பாடுவாங்கப்பா...
//காசு கொடுத்து படம் பார்க்க வருகிறவர்களுக்கு ....
படத்தில் நடிகரின் எண்டிரி சீனில் shoe
போட்ட காலை தூக்கி காட்டுவது அபத்தம் மட்டும் தானா ? அவமானப் படுத்துவதும் தான். உங்களுக்கு முன் ஒருவர் காலைத்தூக்கி காட்டினால பொருத்துகுவிங்களா ?
நான் சந்திரமுகியை சொல்லலிங்க ...//
கோவி. கண்ணன், நான் நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க! (நானும் சந்திரமுகியை சொல்லலீங்க :-D)
ராமராஜன் உதட்டுச்சாயம் போட்டுக்கொண்டிருக்கும் அபத்தம்.
ரஜினியும் உதட்டுச்சாயம் போடுவாரோ? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
தாலி கட்டப் போறப்ப "நிறுத்துங்க" அப்படின்னுக்கிட்டு யாராவது ஒருத்தர் வந்துருவார்.
ஹீரோவை ஒரு படத்தில் அங்கிள் அங்கிள்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த குட்டிப் பொண்ணு சில வருசங்களுக்கப்புறம் இன்னொரு படத்தில் அந்த ஹீரோ (அங்கிள்) அவரையே லவ் பண்ணுவா.
ஹீரோவா நடிக்கிறவங்களுக்கு வயசே ஆகாது. அவருடைய பொண்ணை விடச் சின்னப் பொண்ணா இருக்கும் ஹீரோயின். (நான் சிவாஜி படத்தைச் சொல்லலீங்க :-))
அமெரிக்காவுக்குக் கொண்டுவர்ற பெட்டியை (32 கிலோ!) ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்கமுடியாமத் தூக்குவோம். ஜீன்ஸ் படத்துல ஐஸ்வரியா காலிப் பெட்டியைத் தூக்கற மாதிரித் தூக்கிட்டிருப்பார். காலிப் பெட்டி தான்னாலும் கொஞ்சம் பாவ்லா காட்டணும்ல?
கன்னுங்களா...
சின்ன வயசுல வூட்டவுட்டு ஓடும் ஓடுகாலி நாயகர்கள் அவர்கள் நல்ல நிலைமையை அடைந்தவுடன் அவனுங்க அப்பாவையோ இல்ல அம்மாவையோ பாக்கும் போது காட்டர பீலிங்ஸ் பத்தி யார்னா அவுத்து வுடுங்கப்பா..
தமிழ் சினிமா என்பதே அபத்தம்;
அதைக் கூறு போட முயல்வது மகா அபத்தம்..
//தமிழ் சினிமா என்பதே அபத்தம்;
அதைக் கூறு போட முயல்வது மகா அபத்தம்..//
இதுக்கு 159(வது) காமென்ட் அதவிட அபத்தம்....
:)) தமாசா எடுத்துக்கங்க சிவஞானம்சி
நாயகியின் சிவப்புநிற ஆடையைக் கண்டு துரத்தி வரும் காங்கேயம் காளை நமது சுல்லான் மாதிரியான நாயகனின் பார்வையைக் கண்டு அவர் கிழிக்கும் கோட்டில் ஃபுல் ப்ரேக் அடித்து நிற்கும்.
மிருகங்களுக்கு நிறங்களை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
ரிசல்ட் எப்போ?
அமுகவினருக்கு அதிரடி பரிசுகள் உண்டா?
செந்தழலார் பேரவை, மடிப்பாக்கம், சென்னை.
(அமுகவுடன் இணைக்கப்பட்டது. பதிவு எண் : 98880597061)
ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்கோ, பதிவு என்ற வார்த்தையோ, பின்னூட்டம் என்ற வார்த்தையோ தெரியாத இருவர் ஆராய்கிறார்கள்...
கொல்லென சிரிப்பு வரும் பின்னூட்டத்துக்கு பரிசாம்..
பரிசு என்ன என்று மட்டும் சொல்வேன்..
9900 ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி (டைனமைட் KG300) மொபைல் மற்றும் சார்ஜிங் யூனிட்...!!!!
//1.காஃபியோ தண்ணியோ கொடுக்கறதா சீன் இருக்கும். ஆனால் வெறும் டம்ப்ளரைத்தான் தருவாங்க... அப்பட்டமா தெரியும். ஒரு சின்ன விஷயம்... இதைக்கூட ஒழுங்கா பண்ணக்கூடாதான்னு எரிச்சல் வரும்//
குடிக்குறவரும் டம்ளர சாய்க்காமலேயே ஒரே தடவ உறிஞ்சிட்டு 'அப்ப நான் வர்றேன்' -னு போயிடுவார்.
//9900 ரூபாய் மதிப்புள்ள எல்.ஜி (டைனமைட் KG300) மொபைல் மற்றும் சார்ஜிங் யூனிட்...!!!!//
வெளிநாட்டுககாரர்கள் சிலருக்கு இது உதவாதே?
//ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரத்தில்...ப்ளாகர் கணக்கோ, பதிவு என்ற வார்த்தையோ, பின்னூட்டம் என்ற வார்த்தையோ தெரியாத இருவர் ஆராய்கிறார்கள்...//
அட மூதேவிங்களா...சம்பளம் குடுத்து கோடிங் எழுத சொன்னா பின்னூட்ட ஆராச்சி பன்னுரீங்களா. ஆபிஸ் வெளங்கனா மாதிரி தான்.
ரொம்ப முக்கியமான ஒன்னு..
ஹீரோ ஹீரோயின்ட்ட பொண்ணுன்னா இப்படி ட்ரெஸ் பண்ணனும்னு 10 நிமிஷம் பேசுவார்.
15 வது நிமிஷம் அதைவிட கேவலமான் ட்ரெஸ்ல டூயட் ஆடுவாரு
அடப்போங்கப்பா
சென்ஷி
வணக்கம் தோழா,
உன்னுடைய இந்தப் பதிவுக்கான என்னுடைய பங்கு இதோ…
தமிழ்ச் சினிமா அபத்தங்கள் என்பது கடல். அதில் என் உள்ளங்கைத் தண்ணீர் இது. சற்று விரிவாகத்தான். ஏற்கனவே சொன்னபடி சுருக்கமான, அவசரமான விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எம்.ஜி.ஆர் :-
உலகம் சுற்றும் வாலிபனில் ஆரம்பக்காட்சி.
உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் எம்.ஜி. ஆர் பேசுவார். உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் தமிழில் பேசுவார்.
‘போன முறை மின்னலின் சக்தியைச் சேமிக்க முடியும்னு சொன்னேன். யாரும் நம்பலை. இந்த முறை அந்த முயற்சியில் வெற்றியே அடைஞ்சிட்டேன்’
மற்ற விஞ்ஞானிகள் யார் தெரியுமா… ?
ஜஸ்டின், அசோகன், என்னெத்த கண்ணையா.
இதேபோல்தான் ஜப்பானில் புத்த பிட்சுவிடம் பேசும்போதும் தமிழிலேயே பேசுவார்.
சிவாஜி :-
கிட்டத்தட்ட சிவாஜியின் எல்லா பிற்காலப் படங்களுமே… திரிசூலம் படத்தில் இறுதிக்காட்சி.
வில்லனின் அடியாட்களை இரண்டு சிவாஜிகளும் அடிப்பார்கள். ஆளுக்கு சுமார் 20 பேர்களை அடித்தாலும், கடைசியில் முக்கிய வில்லனை மட்டும் இரண்டு பேரும் சேர்ந்துதான் அடிப்பார்கள்.
அனேகமாக இது எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் வரும்.
ஜெய்சங்கர் :-
துணிவே தோழன் படத்தில் ஒரு காட்சி. ஆவி வடிவத்தில் ஒரு பெண் பாடிக்கொண்டே முன்னால் செல்வார். ஜெய்சங்கர் பின்னாலேயே துரத்துவார்.
இது எல்லா ஆவிக் காட்சிகளிலும் உண்டு. பாடலின் நடுவிலேயே ஏன் பின்னால் வரும் நாயகன் ஆவியின் முன்னால் போய் நிற்பதில்லை. பாடல் முடியும்வரை காத்திருக்கத்தான் வேண்டுமா… ?
ஜெமினி :-
ராமு படத்தில் இப்படி ஒரு லாஜிக் வைத்திருப்பார்கள்.
அதிர்ச்சியில் ஊமையாகிப் போன அந்தச் சிறுவன் மறுபடியும் அதிர்ச்சியிலேயே பேசும் திறன் பெறுகிறான். எனக்குத் தெரிந்து பழைய படங்களில் மூன்றாம்பிறை தவிர மற்றவைகளில் இப்படித் தற்செயலாகத்தான் நோயாளிகள் குணமடைகிறார்கள்.
அப்போ மருந்துகளும், மருத்துவமும் எதற்கு ?
ரஜினி :-
தன்னுடைய எல்லாப் படங்களிலுமே இதை இவர் செய்கிறார்.
கேமராவைப் பார்த்துப் பேசுவது.
‘என்னோடது அன்பு சாம்ராஜ்யம்’
‘ஒரு தடவதான் தவறும்’
‘நான் என் வழியில போய்க்கிட்டிருக்கேன், என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க…’
நடிப்புக் கலையில் முதல் அடிப்படைப் பாடமே… ‘Don’t Look at the Lens’
எப்படித்தான் அப்படியெல்லாம் பேசுகிறார்களோ… உண்மையில் பார்த்தால் அவ்வளவு ஆக்ரோஷமாகப் பேசும்போது எதிரில் Light Man-ம், Director-ம் தான் இருப்பார்கள்.
கமல் :-
கமலின் படங்களில் இரண்டே சாத்தியங்கள்தான் உண்டு.
ஒன்று… அதிபுத்திசாலியாக இருப்பார் (இந்தியன்)
இல்லையென்றால் அடிமுட்டாளாக இருப்பார் (காதலா… காதலா…)
இதுவும் கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் உண்டு.
Where is the average Hero… ?
அஜித் :-
முகவரி படத்தில் ஒரு காட்சியில்… ஒரு திமிர் பிடித்த இசையமைப்பாளர் முன் அஜித் பாடுவார். அப்போது அந்த இசையமைப்பாளரும் போகாமல் நின்றுகொண்டு கேட்பார். ஏன் ? அவர் பாட்டுக்குப் போக வேண்டியதுதானே…
இதுவும் ஒரு அபத்தம்தான்… ஹீரோ தன்னை நிரூபிக்கும் காட்சியில் எதிரி நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்.
விஜய் :-
திருப்பாச்சி…
ஹீரோ எத்தனை தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் போலீஸிடம் சொல்லிவிட்டேக்கூட செய்யலாம். ஆனால் கடைசியில் அவருக்கு மிகக் குறைந்த தண்டனையோ, அல்லது அதுகூட இல்லாமலோ விடுதலை கிடைக்கும்.
இந்த இம்சை சிட்டிசன் உட்பட நிறைய படங்களில் உண்டு.
விக்ரம் :-
வின்ணுக்கும் மன்ணுக்கும்…
ஹீரோ, ஹீரோயினை முதன்முதலில் பார்க்கும்போது ஒரு இரண்டு நிமிடம் BGMக்கு நேரம் கொடுப்பார். அந்த இசை முடிந்தவுடன்தான் அடுத்த டயலாக் பேசுவார்.
இது இயக்குனர் விக்ரமன் படங்களில் எப்போதுமே உண்டு.
சூர்யவம்சம் படத்தின் வரும் ‘ரோசாப்பூ…’ பாடலில் ஹம்மிங் படம் முழுக்க வரும்.
எல்லாம் நேரம்… !
சூர்யா :-
நல்ல படமான காக்க… காக்க… படத்தில் ஒரு காட்சி…
முடிவில்… வில்லன் இருக்கும் இடத்திற்கு ஹீரோ எப்படியோ வந்துவிடுவார். எப்படித் தெரியும் ? யார் சொன்னார்கள் ? என்பதெல்லாம் கிடையாது… எப்படியோ வந்துவிடுவார்… அவ்வளவுதான்.
சத்யராஜ் :-
ஹீரோ கோபப்படும்போது கண்கள் சிவந்தே ஆகவேண்டும். அமைதிப்படை படத்தில் S.S. சந்திரன் Flash Back சொல்லி முடித்தவுடன் சத்யராஜுக்குக் கோபத்தில் கண்கள் சிவக்கும்.
இது ஒரு Cliché.
விஜயகாந்த் :-
பாகிஸ்தான் தீவிரவாதியோ, தாலிபான் தீவிரவாதியோ யாராக இருந்தாலும் அவர்களிடம் கேப்டன் தமிழில்தான் பேசுவார். அதுவும் பக்கம் பக்கமாக. கிளைமாக்ஸில் வில்லனை அடிக்கும்போது, தனக்கு வில்லன் செய்த கொடுமைகள் நினைவுக்கு வந்து ஹீரோ வில்லனைப் புரட்டி எடுப்பார்.
Remember வல்லரசு… கேப்டன் பிரபாகரன்…
சரத்குமார் :-
சாமுண்டி… என்ற திரைப்படத்தில் ஒரு சோகக் காட்சி…
ஹீரோவுக்கு சோகம் என்றால் மழை பெய்ய வேண்டும்.
ஹீரோயினுக்கு விரகம் என்றால் மூடிய அறைக்குள் நீலம், சந்தனம் அல்லது ரோஸ் நிறத்தில் ஆடை அணிந்து பாட்டுப்பாடி நடனம் ஆடுவார்.
ராஜ்கிரன் :-
எல்லாமே என் ராசாதான்… படத்தின் சண்டைக் காட்சி
சண்டைக்காட்சிகளில் ஹீரோ அடிக்கும்போது அடியாட்களின் எலும்பு முறியும் சப்தம் கேட்கும், வாயில் பக்கெட் ரத்தம் தெறிக்கும் இன்னும் பல ரணகளங்கள் நடக்கும். ஹீரோ அடி வாங்கும்போது மிஞ்சிப்போனால் சட்டையில் லேசாக மனல் ஒட்டியிருக்கும். அவ்வளவுதான்.
ராமராஜன் :-
வெளிநாடுகளில் நடனக் காட்சிகள் எடுக்கும்போது, அந்தந்த நாட்டவர் ஆச்சர்யாகப் பார்ப்பார்கள். யார்றா இந்த லூசுங்க என்று…
உ.ம். ஊரு விட்டு ஊரு வந்து…
சிம்பு :-
மன்மதன் படத்தில் ஒரு வசனம்…
இந்தப் பொண்ணுங்களுக்குக் காதல் ஒரு Time Pass… ஆனால் ஆண்களுக்கு அதுதான் Life…
ஹீரோ, அதுவும் இளம் ஹீரோ தன் படத்தில் ஒரு தடவையாவது காதலைப் பற்றியோ, காதலில் ஈடுபடும் பெண்களைப் பற்றியோ பொதுவாகப் பேசி கலாய்ப்பார்… அதுவும் ரசிகர்களைப் பார்த்து. அதற்குக் காலேஜ் வட்டார ரசிகர்களிடம் இருந்து விசில் பறக்கும்.
தனுஷ் :-
வயசுப் பையன் என்றால் பெற்றோர்களுக்கு அடங்காமல்தான் இருக்க வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ் அப்பா அம்மா சொல்வதைக் கேட்காமல் வால்தனம் செய்வார். அதுவும் ஊரே பார்க்கும் வகையில் ‘வண்டார்குழலி’ என்றெல்லாம் பாட்டுப் பாடுவார். வீட்டில் தட்டிக் கேட்கவே மாட்டார்கள்.
இப்படி அபத்தங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இப்போதைக்கு இது போதும். மீண்டும் வருவேன்…
இந்த மாதிரி ஒரு அலசலுக்கு வாய்ப்பு தந்த ரவிக்கு நன்றிகள் கோடி.
Thanks a lot…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…
ரிசல்ட் எங்கே?
- எக்சாம் எழுதியவன்
பாடல்வரிகளுக்கும் நடனத்துக்கும் சம்பந்தமே இருக்காது.
ஒரு உதாரணம்:
பழைய பாடல் 'தொட்டால் பூ மலரும்'
இதே பாடலை புதுமெட்டில் ஏ.ஆர். ரகுமான் போட்டிருந்தார். இந்தப் பாட்டுக்கு சூர்யா,சிம்ரன் ஆடுவார்கள்.
'சுட்டால் பொன் சிவக்கும்' வரிக்கு கையில் துப்பாக்கி வைத்து சுடுவதுபோல் சூர்யா காட்டுவார்.
படம் பார்க்கலைங்க. பாடல் அகஸ்மாத்தா பார்க்கப்போய் நொந்து போயாச்சு. பாடலின் இனிமையே போச்சு.
நாட்டாமை படத்தில குடுமி வெச்சிகிட்டு, இடுப்புல துண்டோட பய்வயமா ஒரு கணக்கு புள்ள இருக்கறது!
ஹீரோ கிராமத்துல இருந்து டவுனுக்கு போவாரு அப்போ ஹீரோயின் வரப்புல ஓடி வருவாங்க ஓடிட்டு இருக்குற பஸ்ஸ பார்த்து தாவணில வாய் பொத்தி அழுவறது.
ஹீரோவுக்கு அடிபட்டுச்சின்னா ஹீரோயின் பட்டுப்புடவையா இருந்தாலும் சடார்னு கிழிச்சி வெயிட்டா ஒரு கட்டு போடுவாங்க, (டைலரு கத்திரிக்கோலால கிழிக்கறதுக்கே கஸ்டப்படுவாரு இவங்க ஈசியா கிழிச்சிடுவாங்களாம்.)
ஹீரோயின் கொலுசு கரெக்டா ஹீரோ கைக்குதான் கிடைக்குமாம்.
ரவியண்ணே போட்டி முடிஞ்சிதா?
இப்பத்தான் பாத்தேன்.
சண்டை நடக்கும்போது / அநியாயம் நடக்கும்போது ஊர் மக்கள் அட்டேன்சனில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
-நெட்டை மரங்களென நின்று புலம்புவது (நன்றி பாரதி) கூடக் கிடயாது.
ஒல்லிக்குச்சி ஹீரோ பத்துப் பேரை அடித்து வெற்றி வாகை சூடுவது. அதுவும் ஒரு தடவை அடி வாங்கி விழுந்த வில்லனின் ஆட்கள் திரும்ப எழுந் து சண்டை போட மாட்டார்கள்.
வில்லனின் ஆட்கள் ஒவ்வொருவராகத்தான் வந்து கதாநாயகனுடன் மோதுவார்கள். மொத்தமாக அல்ல.
//வில்லன் எப்போ ஹீரோவ அடிச்சாலும், ஹீரோக்கு உதட்டுல மட்டும் ரத்தம் வருவது// - ஜி
அதுவும் அந்த ரத்தத்தை ரெண்டு விரலால தொட்டு அதை ரெண்டு நோடி தீவிரமா analyze பண்ணுவாரு நம்ம ஹீரோ. (இல்லன்னா ரத்தம் வந்தது அவருக்குத் தெரியாதாம்.) அதுவரைக்கும் வில்லன் தலையை சொறிஞ்சிட்டு சும்மா நின்னுட்டிருப்பான்.
எல்லாவறையும் விட பெரிய அபத்தம் அதுவும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் வருவது -
ஒரு பெண் மயங்கி விழுவதும் ஒரு டாக்டரோ அல்லது மற்ற ஒரு பெணோ அப் பெண்ணின் நாடியைப் பிடித்துப் பார்து விட்டு இந்த பெண் கர்ப்பிணி என்று கூறுவது.
இந்த பதிவிற்கு அபத்தங்களை அதிகமாக அள்ளி தந்த நண்பர் லக்கி லுக் அவர்களுக்கு அபத்தக்களஞ்சிய ஆய்வாளர் என்னும் பட்டத்தையும். அதிக பின்னூட்டம் இட்டதற்கான முதல் பரிசையும் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.
பத்மகிஷோர், சந்தனமுல்லை, சேதுக்கரசி ஆகியோருக்கு ஆறுதல் பரிசு
நீண்ட பின்னூட்டம் எழுதிய ரங்கநாதனுக்கு சிறப்பு பரிசு
பதிவில் மட்டும் அல்லாது பின்னூட்டங்களிலும் அபத்தங்களை கண்டுப்பிடித்து எழுதிய செந்தழல் ரவிக்கு அபத்தப்பதிவு நாயகர் என்ற சிறப்பு பட்டத்தையும் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.
பரிசு போட்டிக்கான முதல் பரிசு விழிப்புக்கும்
இரண்டாம் பரிசு சுப்புவுக்கும்
மூன்றாம் பரிசு லக்கி லுக்க்குக்கும் கொடுக்கலாம்.
விழிப்பு! said...
நாயகனோட சண்டை போடுற ரவுடிகள் எல்லம் கும்பலா இருந்தாலும் நாயகன் ஒருத்தரை அடிச்சு முடிச்சப்புறம இன்னொருத்தர் வந்து அடி வாங்கிகிட்டு போய் விழுறது
1.ஹீரோ போலீசாக இருந்தால்,
* அவரது போலீஸ் வண்டி டாடா சியரா, அல்லது உயர்தர வண்டியாக இருக்கும்
* போலீஸ் உடையை ஒழுங்காக அணியமாட்டார். சில சமயம் முழூ coat அணிந்திருப்பார்.
* அவரிடம் மட்டும் powerful weapons இருக்கும்
* வேலையை உதரிவிட்டு (அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டு), வில்லன்களை ஒடுக்க செல்வார்)
* வில்லன்களை தனியாகவே எதிர்ப்பார்.
கணவன் வேலைக்குச்சென்று வரும்பொழுது கண்டிப்பாக கையில் ஒரு பெட்டி இருக்கும். அவன் வீட்டினுள் நுழைந்தவுடன் அவன் மனைவி அவன் அணிந்துள்ள கோட்டை கழற்றுவாள்.
சினிமாவில் இஸ்லாமிய கதாபாத்திரத்தை காட்டுபோது கைலி உடுத்திக்கொண்டு தலையில் ஒரு தொப்பி அணிந்து கொண்டு கழுத்தில் புலிப்பல் வடிவில் ஒரு தாயத்து அணிந்துகொண்டு அச்சாக்கே பச்சா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து கொண்டு இருப்பார்.
கதாநாயகன் செண்டிமென்டாக கழுத்திலோ அல்லது கையிலோ
786 என்ற எண் அணிந்த பட்டையை அணிந்திருப்பான். இந்தியாவில் எந்த முஸ்லிமும் அப்படி அணிந்திருப்பதாக நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதுமில்லை.
கோர்ட் சீனில் கதாநாயகனோ அல்லது கதாநாயகனின் வக்கீலோ நகைச்சுவையாக பேச உடனே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை கிளம்பும். உடனே நீதிபதி அந்த இத்துப்போன கட்டையால் ஆர்டர் ஆர்டர் என்று மேஜையைத் தட்டுவார்.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதநாயகன் கண்டிப்பாக ஒரு மஞ்சள் பையை கையில் வைத்துக்கொண்டு எல்ஐசி பில்டிங்கையோ அல்லது சென்டிரல் இரயில் நிலையத்தையோ கடந்து செல்வான்.
பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை வில்லன் புடுங்கும்போது கடலலைகள் எல்லாம் அப்படியே பாறைகளில் தெறித்து நிற்கும்,பறவைகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் பறந்த நிலையிலேயே நின்றுவிடும், பலமான சூறைக்காற்றில் தென்னை மரங்கள் ஆடும்.
ஏதாவது பெண் கெடுக்கப்படுகின்ற காட்சியில் அதனை நேரடியாக காட்டினால் ஆபாசமாக இருக்கும் என நினைத்து ஒரு புலி மானை துரத்துவது போன்று அல்லது கிளி ஒன்று கூண்டக்குள் அங்குமிங்கும் சிதறி ஓடி படபடப்பதுபோலவும் காட்டுவார்கள். பாருங்கனே; வித்தியாசமான சிந்தனையை ..உண்மையில் இந்தக்காட்சிதான் மிகவும் ஆபாசமாக இருப்பது போல தோன்றும்.
பின்னர் அந்தப் பெண் தலைமுடி கலைந்து ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு குங்குமங்கள் கலைந்து மூலையில் குத்த வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள்.
கிராமத்து முரட்டு பண்ணையாரின் எல்லா பையன்களும் பம்புசெட்டில் ஏழைப் பெண்ணை தூக்கிச்சென்று கெடுத்துவிடுவார்கள்.
Post a Comment