இந்த வங்கத்து சிங்கத்திடம் சிலருக்கு / ஏன் பலருக்கு பிடிக்காத குணம் அவரது பிடிவாதம்... க்ரெக் சேப்பலை மதிக்கவில்லை, ப்ராக்டீஸுக்கு வரவில்லை, டாஸ்போட வரவில்லை என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் ஒருவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமனம் செய்ய...அணியின் பர்பாமென்ஸ் சரியில்லை என்றால் சரி, ஒருவரின் தனிப்பட்ட பார்மை காரணம் காட்டி அவரை அணியில் இருந்தே தூக்குவது (நிரந்தரமாக) - மிகவும் வருந்தத்தக்கது...ஏன் டெண்டுல்கர் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் பார்ம் அவுட் ஆக இல்லையா ? அவரை நிரந்தரமாக நீக்கினீங்களா நீங்க...ஏன் கங்குலிக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை ? அணி சிறப்பாக தானே செயல்பட்டுவந்தது..(ஆங்காங்கே / அவ்வப்போது சில தோல்விகள் இருந்தாலும்...)
இந்தியாவின் சிறப்பான டெஸ்ட் கேப்டன் (உள்நாட்டிலும் / வெளிநாட்டிலும்) என்கிற சாதனை அவ்வளவு விரைவாக அடைந்துவிடக்கூடியதா ? உலகக்கோப்பை இறுதிவரை கொண்டுசென்றவராயிற்றே ? ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தான் தோல்வியடைந்தோம் கடந்த உலகக்கோப்பையில் நாம்...!!!
யாருய்யா இந்த சேப்பல் ? இந்தியாவின் தொடர் வெற்றிகளை பொறுக்க முடியாமல் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லகுட பாண்டி....பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்திய அணியில் குழப்பம் விளைவித்து, அதன் மூலம் குளிர்காய நினைத்த கூட்டத்தின் பிரதிநிதி..
அரசியலை கிரிக்கெட்டில் கலந்து கலவடையாக்கிட்டானுங்க...அணி ஜெயிச்சா எகிறி எகிறி குதிக்கறதும், தோத்துட்டா வீட்டாண்ட போய் சாணியடிக்கறது, என்ன கேவலமான காட்டுமிராட்டி கூட்டம் செய்யுற வேலை ?

ஒரு சில நேரம் பர்மார்மென்ஸ் சரியில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்...ஆனால் அதுக்காக இக்னோர் செய்வதும், கன்னாபின்னாவென தூற்றுவது ஓவர்...வலியில் அதிக வலி, மறக்கப்படும்போது....

மின்னல் வேகத்தில் பவுண்டரிக்கு போகும் இந்த கவர் ஷாட்டை உலகத்தில் சிறப்பாக ஆடக்கூடிய வேற ஆள காட்டுங்க !!!

தலையோட பர்மார்மென்ஸ் சரியில்லைன்னதும் எவ்வளவு நக்கல் அடிச்சானுங்க இந்த கூட்டம்...இப்போ வெஸ்ட் இண்டீஸ்கிட்ட 5-0 தோல்வி, சவுத் ஆப்ரிக்காவோட 4-0 தோல்வி...இப்போ எழுதுங்களேன் புக்கு...

லேய் ட்ராவிடு...கங்குலி இருந்தவரைக்கும் ஐஸ் வெச்சு ஆயில் போட்டு (நீ போடுற பயங்கர கட்டைய கூட எங்க தலைவர் பொறுத்திக்கிட்டு உன்னை ஆட்டையில வெச்சிருந்தாரு) பிறகு சேப்பல் கூட சேந்துக்கிட்டு தலைக்கே ஆப்பு வெச்சிட்டியே....இப்போ எங்கே கொண்டுபோய் வெச்சுக்குவ மூஞ்சிய...நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய...
கங்குலி க்ரீஸை விட்டு இரண்டு ஸ்டெப் வந்து பந்தை தாளிக்கும் லாப்டட் ஷாட்டை ரசித்ததில்லை என்று நெஞ்சை தொட்டு சொல்லுமா இன்று கங்குலிக்கு எதிராக வரிந்து கட்டும் கூட்டம் ? பவுலர்களின் நெஞ்சில் கிலியை கிளப்பும் இந்த ஷாட்டை காண கண்கோடி வேண்டுமே !!!!
அதே லாப்டட் ஷாட்...இன்றைக்கு டெண்டுல்கர் லாப்டட் ஷாட்டையே செலக்டட் அம்னீஷியாவில் மறந்ததுபோல் காட்சியளிக்கிறார்....தொண்ணூறு பந்துக்கு 50 ரன் எடுத்துவிட்டு ஆட்டையை குளோஸ் செய்துகொண்டு கிளம்புகிறார்...அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தை அது ப்ராக்டீஸ் மேட்சில் யாருக்கோ போடப்படுவதுபோல ஒரு லுக்கு விடுகிறார்...
யாராவது சொல்லுங்கப்பா...எங்க தலை கங்குலி ஆட்டம் ஆரம்பிக்கலாமா ?
இந்த பதிவு கடந்த வாரம் எழுதிவைத்தது...கங்குலி நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஆட்டத்தில் இறங்கிவிட்டார்...இருந்தாலும் ஒரு பூஸ்டராக இந்த பதிவு...

செல்லக்குட்டி வந்து பொளந்து கட்டினதோட இல்லாமே மேன் ஆப் த சீரிஸ் விருதையும் தட்டிக்கிட்டு போயிருச்சு..அதனால இந்த மீள் பதிவு.
120 comments:
சில படங்களை பிறகு ஏற்றுகிறேன்...:))
///(நீ போடுற பயங்கர கட்டைய கூட எங்க தலைவர் பொறுத்திக்கிட்டு உன்னை ஆட்டையில வெச்சிருந்தாரு)///
என்னங்க இது! திராவிட்ட ரொம்ப ஓவரா கலாய்க்கிறீங்க!
பின்னாடி ர.க.ச தொடங்க இது காரணமாகிவிடும் என எச்சரிக்கிறேன்.
ஏனுங்க இப்பவாவது அந்த திவ்யா கதைய எழுத வேண்டியதுதான.
ரவி,
டைமிங்கான பதிவு. எழுச்சியும் வீழ்ச்சியும் தான் வாழ்க்கை. கங்குலி, கொஞ்சம் அசந்த போது தன்னை வீரனாக காட்டிக்கொண்டார், இப்போது தலையில துண்டு.
இப்போது, உங்களின் அனுமதியோடு கொஞ்சம் விளம்பரம்.
இது சம்பந்தபட்ட என்னுடைய பதிவு:
http://hariinvalaipoo.blogspot.com/2006/11/blog-post_28.html
அய்யா நட்சத்திரம்!
நீயும் நம்மாளா! மகராசன். சரியான நேரத்துல வந்து நம்ம தாதாக்கு ஓ போட்டுருக்கீங்க. நல்ல இருக்கனும் நீங்க. என் மனசுல நாம் பொருமிக்கிட்டு இருந்ததை அப்படியே ஸ்கேன் பண்ன மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டீக நீங்க.
//இந்த வங்கத்து சிங்கத்திடம் சிலருக்கு / ஏன் பலருக்கு பிடிக்காத குணம் அவரது பிடிவாதம்... க்ரெக் சேப்பலை மதிக்கவில்லை, ப்ராக்டீஸுக்கு வரவில்லை, டாஸ்போட வரவில்லை என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் ஒருவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமனம் செய்ய...அணியின் பர்பாமென்ஸ் சரியில்லை என்றால் சரி, ஒருவரின் தனிப்பட்ட பார்மை காரணம் காட்டி அவரை அணியில் இருந்தே தூக்குவது (நிரந்தரமாக) - மிகவும் வருந்தத்தக்கது...ஏன் டெண்டுல்கர் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் பார்ம் அவுட் ஆக இல்லையா ? அவரை நிரந்தரமாக நீக்கினீங்களா நீங்க...ஏன் கங்குலிக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை ? அணி சிறப்பாக தானே செயல்பட்டுவந்தது..(ஆங்காங்கே / அவ்வப்போது சில தோல்விகள் இருந்தாலும்...)//
தாதாவோட கவர் ட்ரைவுக்கு இணையானது இந்த வரிகள்.
//இந்தியாவின் சிறப்பான டெஸ்ட் கேப்டன் (உள்நாட்டிலும் / வெளிநாட்டிலும்) என்கிற சாதனை அவ்வளவு விரைவாக அடைந்துவிடக்கூடியதா ? உலகக்கோப்பை இறுதிவரை கொண்டுசென்றவராயிற்றே ? ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தான் தோல்வியடைந்தோம் கடந்த உலகக்கோப்பையில் நாம்...!!!//
இது ஸ்கொயர் கட்.
//யாருய்யா இந்த சேப்பல் ? இந்தியாவின் தொடர் வெற்றிகளை பொறுக்க முடியாமல் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லகுட பாண்டி....பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்திய அணியில் குழப்பம் விளைவித்து, அதன் மூலம் குளிர்காய நினைத்த கூட்டத்தின் பிரதிநிதி..//
யப்பூ! இதுதான் தாதாவோட அந்த லாஃப்டட் ஸிக்சர். ஆப்பு.
//லேய் ட்ராவிடு...கங்குலி இருந்தவரைக்கும் ஐஸ் வெச்சு ஆயில் போட்டு (நீ போடுற பயங்கர கட்டைய கூட எங்க தலைவர் பொறுத்திக்கிட்டு உன்னை ஆட்டையில வெச்சிருந்தாரு) பிறகு சேப்பல் கூட சேந்துக்கிட்டு தலைக்கே ஆப்பு வெச்சிட்டியே....இப்போ எங்கே கொண்டுபோய் வெச்சுக்குவ மூஞ்சிய...நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய...//
தாதா சட்டையை களட்டி சுத்துன மாதிரி இருந்துச்சுங்க அதை படிக்கும் போது.
//அதே லாப்டட் ஷாட்...இன்றைக்கு டெண்டுல்கர் லாப்டட் ஷாட்டையே செலக்டட் அம்னீஷியாவில் மறந்ததுபோல் காட்சியளிக்கிறார்....தொண்ணூறு பந்துக்கு 50 ரன் எடுத்துவிட்டு ஆட்டையை குளோஸ் செய்துகொண்டு கிளம்புகிறார்...அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தை அது ப்ராக்டீஸ் மேட்சில் யாருக்கோ போடப்படுவதுபோல ஒரு லுக்கு விடுகிறார்...//
இவனெல்லாம்(சச்சின்) ஒரு ப்ளேயர் அவனை உங்க பதிவுல போயி.....
அய்யா! அப்படியே என்னோட கடைசி பதிவுல உள்ள படத்தையும் பாத்துட்டு வாங்க. :)
//யாராவது சொல்லுங்கப்பா...எங்க தலை கங்குலி ஆட்டம் ஆரம்பிக்கலாமா ? //
இது என்ன கேள்வி?
கங்குலி ரசிகர்களே புறப்பட்டு வாருங்கள். தல புகழ் பாடும் இப்பதிவை நூறடிக்க வையுங்கள்.
திரும்பி வரமாட்டான்னு நினைச்சேன். சே வந்துட்டானே. சரி வழக்கம்போல கால்ல விழுந்துட வேண்டியது தான்.
வாங்க கார்மேகராஜா !!!! திராவிட் எனக்கு பிடிக்கும், மேலும் திராவிட் காலுக்கருகில் போடப்படும் பந்தை மின்னல் வேகத்தில் பவுண்டரிக்கு அனுப்ப்க்கூடியவர்...
ஆனால் கங்குலியை ஓரவஞ்சனை செய்வதை தாங்கமுடியவில்லை...
திவ்யா கதையா...எழுதிறவேண்டியதுதான்...
///பின்னாடி ர.க.ச தொடங்க இது காரணமாகிவிடும் என எச்சரிக்கிறேன். ///
ஏற்க்கனவே கொலைவெறி மன்றம் பன்ற அளும்பு தாங்கலை !!!!
நேற்று தெ.ஆ. பந்து வீச்சாளர்கள் எனக்கு பயந்து எல்லாத்தையும் அவுட் ஆப் சைட் வீசினார்கள். நேரே மட்டும் வீசி இருந்தானுங்க......
லொடுக்கு, அருமையான பின்னூட்டம், கலக்கிட்டீங்க...
நேரே மட்டும் வீசுனா என்னவாம். ஆப் ஸ்டம்ப் பறந்து இருக்கும். ஹி ஹி.
நன்றி சச்சின் மற்றும் த்ராவிட்...எப்போல்லருந்து பின்னூட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சீங்க ? டி.வி விளம்பரத்தில சம்பாதிச்சது பத்தாதுன்னு வலையில வேற கூகுள் அட்வர்டைஸ்மண்ட்ல சம்பாதிக்க வந்துட்டீங்களாஅ ? நேத்து என்னா பிரச்சினை ? ஒன்னும் ரன்னக்கானோம் ? சாப்பாடு சரியில்லையா ? ப்ரோசன் பரோட்டாவோ, சப்ஜியோ திங்க வேண்டியது தானே ? ஏன் பிஸ்சா பர்கர் ட்ரை செய்தீங்க ? அதான் ஆட முடியலை...
//செந்தழல் ரவி said...
வாங்க கார்மேகராஜா !!!! திராவிட் எனக்கு பிடிக்கும், மேலும் திராவிட் காலுக்கருகில் போடப்படும் பந்தை மின்னல் வேகத்தில் பவுண்டரிக்கு அனுப்ப்க்கூடியவர்...
ஆனால் கங்குலியை ஓரவஞ்சனை செய்வதை தாங்கமுடியவில்லை...
//
கரெக்டா சொன்னீங்க ரவி.
லொடுக்கு, நம்மாளு ஆட்டத்துல அடிச்சா போதுமே !!!!
மேலும் எனக்கு சச்சின் மேல எந்த வெறுப்பும் கிடையாது...அவரும் சிறந்த ப்ளேயர்...!!!
//செந்தழல் ரவி said...
நன்றி சச்சின் மற்றும் த்ராவிட்...எப்போல்லருந்து பின்னூட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சீங்க ? டி.வி விளம்பரத்தில சம்பாதிச்சது பத்தாதுன்னு வலையில வேற கூகுள் அட்வர்டைஸ்மண்ட்ல சம்பாதிக்க வந்துட்டீங்களாஅ ? நேத்து என்னா பிரச்சினை ? ஒன்னும் ரன்னக்கானோம் ? சாப்பாடு சரியில்லையா ? ப்ரோசன் பரோட்டாவோ, சப்ஜியோ திங்க வேண்டியது தானே ? ஏன் பிஸ்சா பர்கர் ட்ரை செய்தீங்க ? அதான் ஆட முடியலை...
//
அதையாவது ஒழுங்கா செஞ்சா சரிதான்.
//செந்தழல் ரவி said...
லொடுக்கு, அருமையான பின்னூட்டம், கலக்கிட்டீங்க...
//
எல்லாம் நம்ம தாதா பற்றிய செய்தியை படிச்சிட்ட கிடைச்ச பூஸ்ட் தான்.
//மேலும் எனக்கு சச்சின் மேல எந்த வெறுப்பும் கிடையாது...அவரும் சிறந்த ப்ளேயர்...!!! //
சும்மாதானெ சொன்னீங்க? ஹி ஹி.
ஆஹா! நான் சாப்பல் கூட செய்து வந்த பிஸ்னஸ் பாதிக்கும் போல இருக்கே.
என்னமோ! கங்குலி வரவால் இந்திய அணி மீண்டால் சரிதான்.
ஆனால் என்ன! கடைசியாக அவர் ஆடிய போட்டிதான் ஞாபகம் வரவில்லை.
அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் அரசியல்.
ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நமது அணியை அரசியல் செய்து பாழாக்கிவிட்டார்கள்.
When Ganguly was removed from the team, some other players were also not in form.It is all bloody politics.Thanks for your post about the "Bengal Tiger"
மத்தபடி இன்னைக்கு சச்சின் மாதிரி சென்சுரி தானா?
சாரி சாரி...
இது கங்குலி பற்றிய பதிவானதால் கங்குலி மாதிரி அதிரடி சென்சுரிதானா?
எப்படியோ சிறிது சிறிதாக நல்ல முடிவெடுத்து வரும் வெங்க்சர்க்கார் அணியை சீர் படுத்துவார் என நம்புவோம்.
தற்போதய அணியின் உடனடி தேவை: நிலை குலையா ஒற்றுமை.
தீர்வு: சாப்பல் நீக்கம், ட்ராவிட் கேப்டன் பதவி நீக்கம்.
சரியா?
//கார்மேகராஜா said...
மத்தபடி இன்னைக்கு சச்சின் மாதிரி சென்சுரி தானா?
சாரி சாரி...
இது கங்குலி பற்றிய பதிவானதால் கங்குலி மாதிரி அதிரடி சென்சுரிதானா? //
அது!!!!!!!!!!!!1
Ravi anna
Ganguly is my fav also...thanks and nice for writing about him....
Avanthika
லொடுக்கு...கலக்கல் போங்க...
// Avanthika said...
Ravi anna
Ganguly is my fav also...thanks and nice for writing about him....
Avanthika //
இப்போதான் நம்ம ஆளுங்க கொஞ்சம் கொஞ்சமா தல காட்டுற மாதிரி இருக்கு.
நூடுல்ஸ் செய்முறை
1. தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
2. கங்குலி பேட் செய்யப் போகும்போது பாக்கெட்டில் உள்ள நூடுல்ஸை கொதிநீரில் போடவும்.
3. கங்குலி அவுட்டானதும் பாத்திரத்தை இறக்கவும்.
சுவையான நூடுல்ஸ் தயார். ( இரண்டே நிமிடத்தில் )
சிரிக்க மட்டும் :))))))))
அவந்திகா, வருக...தமிழ் படிக்க நல்லாருக்கா ? கேம்ஸ் விளையாடாமல் படிக்கவும்...கங்குலி ரசிகர் மன்றத்தில் இளைஞரணியில் உங்களை நியமிக்கிறேன்...டெல்லியில் இருந்து மன்ற விஷயங்களை கவனிக்கவும்...
அருட்பெருங்கோ, இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மக்கள் மனதில் விதைத்தது சேப்பல் பங்குபெற்ற ஆஸ்திரேலிய ஒற்றர் குழு !!!
//செந்தழல் ரவி said...
அருட்பெருங்கோ, இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மக்கள் மனதில் விதைத்தது சேப்பல் பங்குபெற்ற ஆஸ்திரேலிய ஒற்றர் குழு !!! //
ரவி,
இதை கண்கானிக்க அவுஸ்திரேலியாவில் உள்ள தலைமை கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்கவும்.
Don't talk about games.... :-((((
என்னை வைச்சு 'காக்க காக்க' ஆட்டம் ஆடிய கங்குலி ஒழிக.
பவுன்ஸி தெ.ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் ஆட வாய்பளித்து கங்குலி கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்திய தேர்வுக் குழு அவரை அணியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஸ்டீவ் வாகை காக்க வைத்தது எங்கள் சிங்கத்தின் தங்கமான திட்டம்...
ஆட்டம் ஆரம்பிக்கறது ரெண்டு நாளைக்கு முன்னாலியே, டெண்டுல்கரை கிழிச்சிருவோம், கங்குலியை காலிபண்ணிருவோம் என்று மொக்கையன் மெக்ராத்தை வைச்சி ஸ்டேட்மண்ட் கொடுக்கவைத்து டெண்ஷனை ஏத்தினா ?
அதான் நாங்க ஒரு 10 நிமிசம் உன்னை நிக்க வெச்சு கடுப்படிச்சோம்...
இது இந்தியாவுக்காக செய்ததுடா ஸ்டீவ்..
// Avanthika said...
Don't talk about games.... :-(((( //
இது என்ன சின்னபுள்ள தனமா இருக்கு.
கங்குலி பற்றிய மற்றுமொரு செய்தி:-
கங்குலி தனது சொந்த செலவில் கல்கத்தாவில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் அகாடமி ஒன்று நிருவி இலவச பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறாராம்.
--------
//ஆட்டம் ஆரம்பிக்கறது ரெண்டு நாளைக்கு முன்னாலியே, டெண்டுல்கரை கிழிச்சிருவோம், கங்குலியை காலிபண்ணிருவோம் என்று மொக்கையன் மெக்ராத்தை வைச்சி ஸ்டேட்மண்ட் கொடுக்கவைத்து டெண்ஷனை ஏத்தினா ?
அதான் நாங்க ஒரு 10 நிமிசம் உன்னை நிக்க வெச்சு கடுப்படிச்சோம்...
இது இந்தியாவுக்காக செய்ததுடா ஸ்டீவ்..//
அந்த தொடரில் காக்க வைத்தது மட்டுமில்லாமல் ஹர்பஜன் கையிலும், லக்சுமன் கையிலும் 'மணிக்கட்டு சுழல வைக்கும்' கருவியை பொறுத்திய கங்குலி ஒழிக. இருந்தாலும் எந்த இந்தியனுக்கும் இல்லாத தில்லுதான் இந்த கங்குலிக்கு.
//அருட்பெருங்கோ, இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை மக்கள் மனதில் விதைத்தது சேப்பல் பங்குபெற்ற ஆஸ்திரேலிய ஒற்றர் குழு !!! //
அப்படியா??? ச்சொல்லவேயில்ல...
//ரவி,
இதை கண்கானிக்க அவுஸ்திரேலியாவில் உள்ள தலைமை கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்கவும். //
லொடுக்கு, ரவியோட கொலவெறிப்படை அங்கேயுமா?? ம்ஹும்..
எதுக்கும் மெல்போர்னுக்கு மெல்ல ஒரு போன் போடுங்க ;))
ஸ்டீவ் என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஸ்ட்டீவின் கடைசி டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுடந்தான். இந்த தொடரை கங்குலி தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதுவும் அவர்கள் மண்ணில் வைத்து.
இதனால் ஸ்டீவ் மிகவும் வருத்தத்துடன் ஓய்வு பெற்றார்.
//ஸ்டீவ் வாகை காக்க வைத்தது எங்கள் சிங்கத்தின் தங்கமான திட்டம்...//
ஆமா, நம்ம தல சிங்கமா? புலியா?
//இது இந்தியாவுக்காக செய்ததுடா ஸ்டீவ்..//
அப்போ. அதுக்கு பழிக்கு பழிதான் இந்த சாப்பலா?
கடைசில, எனக்கு ஆப்பு வைச்சான்யா இந்த கங்குலி (சட்டை மேட்டர்). ஆள் தெரியாம மோதிட்டேனோ?
ரொனால்டின்ஹோ போன்ற திறமை வாய்ந்த புட் பால் வீரரை கிரிக்கெட்டால் இழந்து தவிக்கிறோம்.(தாதாவின் புட் பால் திறமை குறித்து).
//ஆள் தெரியாம மோதிட்டேனோ?//
எங்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா... வம்புக்கு இழுக்காதே...
வருங்கால கேப்டன் கங்குலி வாழ்க!
//தற்போதய அணியின் உடனடி தேவை: நிலை குலையா ஒற்றுமை.
தீர்வு: சாப்பல் நீக்கம், ட்ராவிட் கேப்டன் பதவி நீக்கம்.
சரியா?//
மேலும் நம் தல க்கு கேப்டன் பதவி அவசியம்
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தாண்டா சச்சின் புகழ் பாடுவீங்க.
ஏதோ அவர்தான் அதிகமா செஞ்சுரி அடிச்சாருன்னு இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஜல்லியடிச்சுக்கிட்டிருப்பீங்க?
நான் இன்னும் ரெண்டு செஞ்சுரி அடிச்சா சச்சின் கதை காலி.
இந்த ஆஸிஸ் தொடர் முடியிறதுக்குள்ள சச்சின் கதை அம்போதான்.
ஆனா என்ன பண்றது?
நான் எத்தின செஞ்சுரு அதிகமா அடிச்சாலும் இந்தியாவில எப்பவுமே சச்சின்தான் றெக்காட் பிறேக்கருன்னு சாகும்வரை சொல்லிக்கிட்டிருப்பாங்க.
லொடுக்கு அது சின்னப்புள்ளைதான்...விட்டுறலாம்...
பாருய்யா, எங்க தலைய...சொந்தக்காசுல வெச்சு நடத்திருக்கார்...
To lodukku anna....
i meant computer games....ravi anna is always advising me not play computer games..thats why said.. :-)))..i am a great fan of Ganguly.
லொடுக்கார் வந்து விரைவில் உங்கள் விளக்கத்தை கேட்டுக்கொள்வான் என்கிறேன்...
தல சூப்பர். முதலில் குங்குமத்தில் வந்தமைக்கும் நட்சத்திரமானமைக்கும் வாழ்த்துக்கள்.நானும் கங்கூலி ரசிகன் ஆயிட்டேன், சாப்பல் மேட்டருக்கு அப்புறம். சென்சுரிக்கு வாழ்த்துக்கள். நேரமிரிந்த்டால் சில ரன் வந்து எடுக்கிறேன்.(ஹிஹிஹி)
லகுட பாண்டியாரே பாருங்கள் உங்களுக்கும், எனக்கும் உள்ள கருத்து ஒற்றுமையை.
Adangokkamakka....Ganguly ivlo supporta? Nan mattum thaniya...en friendskitta dada kku support panni oynchipoyirunkkumpothu ipdi oru posta pottu nammala thala nimira vacha THALAIkki orui "OOOOO"
நானும் கங்குலி ரசிகன் தான்.
கங்குலி கொலைவெறி மன்றம்
ஹைதராபாத்
நான் சொன்னது தப்பு என்னை மன்னிச்சுடுங்க
ரவி,
வாழ்த்துக்கள்..
உங்கள் இந்தப் பதிவில் ஏதோ HTML tag மிஸ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.
எல்லாமே ஹைபர் லிங் போல் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
அதுவும், tvpravi.blogspot.com என்ற முகவரிக்குச் சென்றால் அப்படி வருகின்றது.
வாழ்த்துக்கள் ரவி இந்த வார நட்சத்திரத்திற்கு..
கங்குலிக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா..பலே பலே
வஜ்ரா, இப்போது சரியாக தெரிகிறதா ? என்று சொல்லவும்...ஒரு டேகை அதிகப்படி போட்டிருந்தேன்...இப்போது நீக்கிவிட்டேன்....
//யாருய்யா இந்த சேப்பல் ? இந்தியாவின் தொடர் வெற்றிகளை பொறுக்க முடியாமல் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லகுட பாண்டி....பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்திய அணியில் குழப்பம் விளைவித்து, அதன் மூலம் குளிர்காய நினைத்த கூட்டத்தின் பிரதிநிதி..//
மற்றுமொரு பிரித்தானிய சூழ்ச்சியா !
:)))
// லகுட பாண்டியாரே பாருங்கள் உங்களுக்கும், எனக்கும் உள்ள கருத்து ஒற்றுமையை. //
ஆம்...ராஜதந்திரத்தில் நீர் என்னை மிஞ்சிவிட்டீர் நாடோடி மங்குனி அவர்களே !!!
வினையூக்கி அவர்களே...ஏதோ பிரித்தானிய - பிரித்தானிய கூஜாதூக்கி அவுஸ்திரேலிய சூழ்ச்சியை முறியடித்து உண்மையை உங்கள் உள்ளத்தில் உறையவைத்த பெருமை என்னையே சாரும்..ஹி ஹி
//ஸ்ட்டீவின் கடைசி டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுடந்தான். இந்த தொடரை கங்குலி தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதுவும் அவர்கள் மண்ணில் வைத்து.//
இல்லை இல்லை. அந்த தொடர் சமன் ஆனது. அதுவே பெரிய மேட்டர் தான். தொடர் வெற்றி பறிபோனது சச்சினின் தன்னல (சிட்னி) ஆட்டத்தால் மட்டுமே.
//கங்குலி பற்றிய மற்றுமொரு செய்தி:-
கங்குலி தனது சொந்த செலவில் கல்கத்தாவில் சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் அகாடமி ஒன்று நிருவி இலவச பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறாராம்.//
ஆஹா! தல எங்கேயோ போயிகிட்டு இருக்காருப்பா.
//
லொடுக்கு, ரவியோட கொலவெறிப்படை அங்கேயுமா?? ம்ஹும்..
எதுக்கும் மெல்போர்னுக்கு மெல்ல ஒரு போன் போடுங்க ;))
By அருட்பெருங்கோ,//
அவர் நட்சத்திரம், எங்கும் ஜொலித்திருப்பார்.
//
வருங்கால கேப்டன் கங்குலி வாழ்க!
By Anonymous,//
ஆஹா! இது ரொம்ப ஓவரா தெரியுதே!!
//
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தாண்டா சச்சின் புகழ் பாடுவீங்க.
ஏதோ அவர்தான் அதிகமா செஞ்சுரி அடிச்சாருன்னு இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஜல்லியடிச்சுக்கிட்டிருப்பீங்க?
நான் இன்னும் ரெண்டு செஞ்சுரி அடிச்சா சச்சின் கதை காலி.
இந்த ஆஸிஸ் தொடர் முடியிறதுக்குள்ள சச்சின் கதை அம்போதான்.
ஆனா என்ன பண்றது?
நான் எத்தின செஞ்சுரு அதிகமா அடிச்சாலும் இந்தியாவில எப்பவுமே சச்சின்தான் றெக்காட் பிறேக்கருன்னு சாகும்வரை சொல்லிக்கிட்டிருப்பாங்க.
By ரிக்கி பாண்டிங்,//
நெத்தியடிப்பூ.
//
லொடுக்கு அது சின்னப்புள்ளைதான்...விட்டுறலாம்...
By செந்தழல் ரவி,//
அப்படியா! பொழச்சி போகட்டும்.
//
To lodukku anna....
i meant computer games....ravi anna is always advising me not play computer games..thats why said.. :-)))..i am a great fan of Ganguly.
By Avanthika,//
அவந்திகா,
நீ ஆடுமா. அவர் கிடக்காரு ரவி. வயசானாலே இப்படித்தான் அட்வைஸ் பண்ணுவாங்க.
//
Adangokkamakka....Ganguly ivlo supporta? Nan mattum thaniya...en friendskitta dada kku support panni oynchipoyirunkkumpothu ipdi oru posta pottu nammala thala nimira vacha THALAIkki orui "OOOOO"
By Anonymous,//
இப்படித்தான் நிறைய பேரு ஒதுங்கி ஒதுங்கி போறாங்க. தாதாவின் ரசிக சிகாமணிகளே ஒன்று சேருங்கள்.
//
நானும் கங்குலி ரசிகன் தான்.
கங்குலி கொலைவெறி மன்றம்
ஹைதராபாத்
By அசாருதீன்,//
ஆஹா, நம்ம பழய தல தலையை காட்டிருச்சுப்பூ. சல்யூட் தல.
//
நான் சொன்னது தப்பு என்னை மன்னிச்சுடுங்க
By கிரன் மோரு//
சரி சரி, எங்கேயாவது ஓடி ஒளிஞ்சுக்கோ.
யோவ் லொடுக்கு...நான் ரசிகன்...நீ வெறியன்...!!!!!
சரி தலையை இன்னைக்கு ஒரு செஞ்சுரி அடிக்கவெச்சுட்டு தான் ஓயுவ போலிருக்கே !!!
//
யோவ் லொடுக்கு...நான் ரசிகன்...நீ வெறியன்...!!!!!
சரி தலையை இன்னைக்கு ஒரு செஞ்சுரி அடிக்கவெச்சுட்டு தான் ஓயுவ போலிருக்கே !!!
By செந்தழல் ரவி, //
இது என்னமோ உண்மை மாதிரி தெரியுது.
ஆமா ஆமா. 100 தான்.
கங்குலிக்கு நாங்கள் அவ்ளோ சீக்கிரம் விசா தர மாட்டோம். அவர் மெதுவா வரட்டும்.
ஏன்யா என்னை இப்பாடி நார் நாரா கிழிக்கிரீங்க?
தாதா வந்தா நமக்கு தனி மஜா தான். இந்த கூஜா தூக்கி ட்ராவிட் ஒரு வேஸ்ட். வெத்து வேட்டு. ஸ்லிப்ல தூங்கி வழியுறான்.
ஸ்கூலுக்கு ஒழுங்கா போயிகிட்டு இருந்தேன். இந்த சாப்பல் கெடுத்துட்டாரு. எனக்கு ஆட தெரியாது எவ்ளோ சொன்னேன். கேட்டாரா மனுசன்?
Ganguly and Laxman can lift India.
17 மோர் ரன்ஸ் நீடட். :)
கொஞ்சம் 'உணர்ச்சிப்' பூர்வமான கட்டுரை. ஒரு விசயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது அதன் சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்லலாம். இல்லை மற்றொன்றை 'நொட்டை' சொல்லி, ஒப்பிட்டு சொல்லாம். கட்டுரையில் இரண்டு யுக்திகளும் கலந்தே இருக்கின்றன, இரண்டாவதை தவிர்த்து இருக்கலாம்.
//ஸ்ட்டீவின் கடைசி டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுடந்தான். இந்த தொடரை கங்குலி தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதுவும் அவர்கள் மண்ணில் வைத்து.//
இல்லை இல்லை. அந்த தொடர் சமன் ஆனது. அதுவே பெரிய மேட்டர் தான். .///
ஆனால் கோப்பை இந்தியாவுக்குதான் வழங்கப்பட்டது.
அதெப்படி கோப்பை இந்தியாவுக்கு வழங்கப்படும் ? நம்ம தாதா மிரட்டி புடுங்கிக்கினாரா ? ஒன்னுமே பிரியலியேப்பா ?
////ஸ்ட்டீவின் கடைசி டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுடந்தான். இந்த தொடரை கங்குலி தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதுவும் அவர்கள் மண்ணில் வைத்து.//
இல்லை இல்லை. அந்த தொடர் சமன் ஆனது. அதுவே பெரிய மேட்டர் தான். .///
ஆனால் கோப்பை இந்தியாவுக்குதான் வழங்கப்பட்டது.//
அதற்கு காரணம்: இப்போது ஆஸ் - இந்தியா டெஸ்ட் தொடர்கள் பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி என்ற பெயரில் நடைபெற்று வருகின்றன் இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை. முதல் முறை இந்தியாவில் நடந்தபோது இந்தியா 2-1 என்ற கணக்கில் முதல் தொடரை வென்றது. இரண்டாவது தொடர் (நீங்கள் குறிப்பிட்டது) ஆஸ்திரேலியாவில் சமன் ஆனது. அதனால் இந்தியா அதை தக்க வைத்து கொண்டது. (இப்போது அது ஆஸியின் கையில்).
இதான் மேட்டர்.
//செந்தழல் ரவி said...
அதெப்படி கோப்பை இந்தியாவுக்கு வழங்கப்படும் ? நம்ம தாதா மிரட்டி புடுங்கிக்கினாரா ? ஒன்னுமே பிரியலியேப்பா ? //
தாதா அப்படிப்பட்ட சின்னபுத்தி ஆளில்லை. :)
//இன்பா said...
கொஞ்சம் 'உணர்ச்சிப்' பூர்வமான கட்டுரை. ஒரு விசயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது அதன் சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்லலாம். இல்லை மற்றொன்றை 'நொட்டை' சொல்லி, ஒப்பிட்டு சொல்லாம். கட்டுரையில் இரண்டு யுக்திகளும் கலந்தே இருக்கின்றன, இரண்டாவதை தவிர்த்து இருக்கலாம். //
இரண்டாவதை தவிர்ப்பதில் பிரச்சனை என்னவென்றால், அவர்களெல்லாம் (சச்சின் & ட்ராவிட்) ஏதோ நல்லவர்கள் போல் ஊடகங்களில் காட்டப்படுகிறார்கள். அதை ரவி உடைத்துள்ளார். அது தவறா?
கங்குலின்ற வங்க நாட்டு சிங்கம் தலயா வந்தப்புறம்தேன் நம்ம பயபுள்ளங்க ஒரு பைட் குடுக்கவே ஆரம்பிச்சாய்ங்க. இந்த சச்சின் பயலப்பாரு, 50 ஓவர்ல 50 அடிச்சு இந்தியா தோத்தாலும் நான் அவுட் ஆகமாட்டேன்னு நின்னு கெடுத்துப்புட்டான் அன்னிக்கு.
இதெல்லாம் கூட பரவாயில்லீங்க, அஜித் அகர்கர்னு ஒரு நாதாரியை இவ்வளவு நாளா டீம்ல ஏன் வெச்சிருக்க்காய்ங்கன்னு எவனாவது சொன்னா, ஆயிரம் பொற்காசுங்க! அவன் பந்த போடுறதுல பாதி அவன் காலுக்கு கீழதான் போடுறான், 5 ஓவர் போட்டு தோள்பட்டய புடிச்சிகிட்டு போயிட்டு, கூலிங் க்ளாஸ் போட்டு பவுண்ட்ரில கோட்ட விடுவான் பாருங்க...
நெஞ்சு பொருக்குதில்லயே இந்த நிலைகெட்ட மானிடரை... ன்னு பாரதியார் அன்னீக்கே சொல்லிபோட்டாரு!
//இதெல்லாம் கூட பரவாயில்லீங்க, அஜித் அகர்கர்னு ஒரு நாதாரியை இவ்வளவு நாளா டீம்ல ஏன் வெச்சிருக்க்காய்ங்கன்னு எவனாவது சொன்னா, ஆயிரம் பொற்காசுங்க! அவன் பந்த போடுறதுல பாதி அவன் காலுக்கு கீழதான் போடுறான், 5 ஓவர் போட்டு தோள்பட்டய புடிச்சிகிட்டு போயிட்டு, கூலிங் க்ளாஸ் போட்டு பவுண்ட்ரில கோட்ட விடுவான் பாருங்க...//
ஆஹா. அனானி அன்னாச்சி சரத்பவார் மடியிலேயே கையை வச்சிட்டாரு.
அனானி, நீ யாரோ எவுரோ யாருபெத்த புள்ளையோ...ஆனா நீ சொன்ன வார்த்தை 100 சதவீதம் உண்மை...மேச்ல இந்த அகார்க்கர் இருந்தாலே இந்தியாவுல 10 பேரு, எதிர்த்து ஆடுற டீம்ல 12 பேரு அப்படீன்னு சொல்லுவேன் நான்...
இந்த நாய் விக்கெட் எடுக்கறதுக்காக பந்தை லட்டுமாதிரி போடுறது...சச்சினை காக்கா புடிச்சே வாழ்க்கையை ஓட்டிருச்சி...
நம்ம தலை கங்குலி இருந்திருந்தா இந்த நாய் இந்நேரம் கமெண்ட்ரி பாக்ஸ்ல டீ வித்துக்கிட்டு இருந்திருக்கும்...
கடைசி ஓவர்கள்ள வந்து ரன்னை அள்ளிக்கொடுத்துட்டு எதுவுமே செய்யாததுமாதிரி எலிமூஞ்சை வெச்சிக்கிட்டு ஒரு குழந்தை லுக்கு விடும்..
அட போங்க...வயத்தெரிச்சலை கிளப்பிட்டீங்க...நான் போய் ஒரு தம் போட்டுட்டு வந்திடறேன்..
என்ன ரவி கங்குலிய பத்தி நீங்க முதல் பத்தியில சொன்னது சரிதான்னாலும்..
என் மனசுல அவரப்பத்தி இருக்கறத எழுதுனா எல்லாருமா சேர்ந்து தர்ம அடி அடிச்சிருவீங்க போலருக்கே..
சரி.. நீங்க டெண்டுல்கர பத்தி சொல்றதும் சரிதான். அவருக்கு ஒரு வருசம் குடுக்கலாம்னா இவருக்கு ஆறு மாசமாவது குடுத்துருக்கலாம்.
அதே மாதிரி நீங்க சாப்பல பத்தி சொன்னதுலயும் தப்பு இல்ல. பெரிய ஆஸ்திரேலியா கில்லர் உணர்வு இருக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தவர் இப்பல்லாம் இந்திய அணி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துலருந்து குடுக்கற போஸ்ச பார்த்தா பத்திக்கிட்டு வருது. இவரே இப்படி டல்லா ஒக்காந்துருந்தா மத்த வீரர்களுக்கு எப்படி உற்சாகம் வரும்.. பார்லி மெம்பர்லருந்து சாதாரண ரசிகன் வரைக்கும் இவர கன்னாபின்னான்னு திட்டியும் ராஜிநாமா பண்ண மனசு வரல பாருங்க.. எல்லாம் காசு பண்ற வேலை..
கிரிக்கெட்ட பத்த சரியான நாட்டு தமிழ்ல கலாய்ச்சது நீங்க ஒருத்தராத்தான் இருக்கும்:))
//நம்ம தலை கங்குலி இருந்திருந்தா இந்த நாய் இந்நேரம் கமெண்ட்ரி பாக்ஸ்ல டீ வித்துக்கிட்டு இருந்திருக்கும்...//
சார் சாய்! சார் சாய்! சார் சாய்!
டிபிஆர் அய்யா...நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...நாங்க எதிர்கருத்துக்கு அதை சொல்லுறவங்க மனம் புண்படாமல் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்...
என்னது இது? என்னை மாதிரியே நீங்களும் மெதுவா 100 அடிப்பீங்க போலிரிக்கே!!
சேப்பல்: யோவ் தோனி நேத்து ஏன்யா பயிற்சி ஆட்டத்துக்கு வரல?
ம்ம் உங்கூட பயிற்சி செய்யறதுக்கு ரெண்டு பைக் விளம்பரத்துல நடிச்சா கூட சக்கையா பிழிவானுங்க. ஏண்டா ஓடிப்பிடிச்சி விளையாடறதே பயிற்சியா போயிடுச்சா உனக்கு?
சேப்பல்; அங்க என்ன தோனி முணு முணுப்பு.
ஒண்ணும் இல்லிங்க எசமான்
ரஸ்னா விளம்பரத்தில் நடிப்பதற்கு போயிருந்தேன் அதான் லேட். என் கூடதான் சாகிரு,ஹர்பஜனு, குமுளிகூட வந்தாரே. அவுங்கள கேக்க வேண்டியதுதான என்னையே புடிச்சி நோண்டுவே.
நான் தான் 100.
நான் தான் நூறு.
இட்ஸ் மீ 100.
இங்கு ஆப்புகள் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். தற்சமயம் கற்கள் பதித்த எளிதில் நுழைக்க முடியாத ஒரு ஆப்பு இருந்தது. அதை இப்போதுதான் வங்கச்சிங்கம் வாங்கி சென்றது. அனேகமா சேப்பலுக்கு அது பொருத்தப்படலாம் என்று நினைக்கிறேன்.
நம்ம தம்பி வரும்போதே சாப்பலை களாய்ச்சதால் அவருக்கு ஒரு ஓ போடலாம். ஓஓஓஓஓஓஓஓ
ரவி,
நட்சத்திர வாரத்தில் உங்களை செவ்வனே பணி செய்ய விடாமல் தொல்லை தந்தமைக்கு மன்னிக்கவும்(ஓயாது பின்னூட்டமிட்டு). நீங்கள் மற்ற பதிவுகளின் மீதும் கவனம் செலுத்தி ஜொலிக்க வாழ்த்துக்கள். :)
// ஆப்பு விற்பவர். said...
இங்கு ஆப்புகள் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். தற்சமயம் கற்கள் பதித்த எளிதில் நுழைக்க முடியாத ஒரு ஆப்பு இருந்தது. அதை இப்போதுதான் வங்கச்சிங்கம் வாங்கி சென்றது. அனேகமா சேப்பலுக்கு அது பொருத்தப்படலாம் என்று நினைக்கிறேன். //
ஹி ஹி.
இது அந்த பாப்புலர் ~ஆப்பு இல்லையே?
இங்க எந்த ஓட்டல்லயாச்சும் ஆந்திரா புல் மீல்ஸ் கிடைக்குமா?
இப்பிடி அஜித் அகர்கரால் தம் போட்டு போட்டே நாம அழியறோம்! எவ்வளவு கிங்ஸ் வாங்கியிருப்பேன் நானும்!இந்த நாதாரிக்கு புது பந்து போட்டா கை வழுக்குமாம், சிவப்பு பந்தை போடத்தெரிந்தால் வெள்ளைப்பந்தை போட வராதாம்! என்னயா, எங்கூர் பால்காரன் பாண்டி எங்க டீம்ல பாஸ்ட் பவுலரா இருந்தான் - அவன்கூட இந்த நாதாரியவிட நல்லா போடுவான்.
அனானி ஒருங்கிணைப்பாளர். அவுஸ்திரேலியா கிளை. has left a new comment on your post "செல்லக்குட்டி கங்குலி...":
அதான் நூறு போட்டாச்சுல்ல அவனவன் வேலைய பாருங்க போங்க.
இனிமேல் சிங்கம் 100 போட்டதுக்கு அப்புறந்தான் கொண்டாட்டம் எல்லாம்.
அதுவரைக்கும் மூச்ச்ச்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
அந்த பின்னூட்டம் பப்ளிஷ் ஆக மறுக்கிறது நன்பரே
100 அட்ச்ச தலக்கு 200 அடிக்க வாழ்த்துப்பபா
200 க்கு ஏதோ என்னால முடிஞ்ச ஒன்னு
//அந்த பின்னூட்டம் பப்ளிஷ் ஆக மறுக்கிறது நன்பரே //
உங்களின் இந்த முயற்சி அவுஸ்திரேலியா
கிளையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது நட்சத்திரமே!
ஹைய்யா!!!!!!!!!
இந்திய அணிக்கு போட்டாச்சு 111.
kalakkura machhi.
கங்குலி தல பட்டைய கிளப்பிக்குனு வாங்க...
யாருப்பா அங்க, கங்குலி தலய ஒன் டே மேட்சிலயும் கொண்டாங்கப்பா..
நம்ப டீமுக்கு இப்பத்திக்கி முதுகெலும்பு தேவப்படுது
ரவி
எப்படி இப்படி கலக்கி எடுக்கரீங்க.
Gஅஙுல்ய் வந்தா தான் கொஞ்சம் Tஎஅம் தேறும் போல தெரியுது. நிக்க வெச்சி
நிமுற வெச்சி இல்ல குத்துராங்க நம்பள. இந்த அழகுல ஆடினா உலக கோப்பை சூப்பை தான்டோவ்.
தலை கங்குலி, ஆட்டத்துல இன்னிக்கு கலக்கிட்டாரு போல இருக்கு .
அட்ராசக்கை அட்ராசக்கை !!!!
கங்குலி மொத மேச்சுலேயே 83 ரன்னு....தலை 17 ரன்னுல செஞ்சுரிய உட்ருச்சு..இன்னைக்கு தலை மட்டும் இல்லாமே போயிருந்தா இந்தியாவை ஆண்டவனாலும் காப்பாத்தியிருக்கமுடியாது !!!!
நன்றி பரணி....!!!!!!
Hiiii Anna...
Ganguly has taken 83 runs.... he is surely going to shine in this tour and also in World cup....
ravi.. good post..
seekaram namma thala, vangathu singam
kodi katta poraru parunga..
nane itha pathi ezuthanum appadinu irunthen...
but thalaiyoda sixer pakkaramathiri irunthuchu unga post...
again ..thnks to u..
CricInfo :- Ganguly and Pathan revive India
RedIff :- Ganguly, Pathan rescue India
இவன்:-
வருது வருது..
விலகு விலகு
வேங்கை வெளியே வருது...
singam kilattu singam ayiduchchi... idaththa kaali panna vendiyathuthaan..
Post a Comment