சொன்னோம்ல...!!! கூட்டாஞ்சோறு...!!!

கருநாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று ஏற்கனவே எழுதியிருந்தேனே....!!! இப்ப பாத்தீயளா ????

கலைஞரின் பிறந்தநாள் விழா பெரிய அளவுல நடக்கப்போகுதாமே ? ? லக்கி - கவர் பண்ணுங்க...படங்களோட வரனும் வலைப்பதிவுகள்ல...

பழனி பஞ்சாமிர்தம் இன்னும் என்னோட டேபிள் மேலேயே இருக்கு...நான் வரவணை, லக்கி எல்லாம் போட்ட அந்த ட்ரிப்புல உண்மைத்தமிழனும் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்...அவருடைய 'பழனி' பதிவைக்கூட நினைச்சுக்கிட்டேன்...

சிவஞானம்ஜி கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பியிருந்தார்...சென்னையில இல்லாததால போகமுடியல...இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமா தெரிவிச்சுக்கறேன்...

சிந்தாநதி, மஞ்சூர் ராசா, பி.கே.எஸ் கூட பிங் செய்து வாழ்த்துக்கள் சொன்னாங்க...(தெரியுமுல்ல...கூடிய விரைவில் டாடியாகப்போறேனாக்கும்...)

எல்லோருக்கும் நன்றி...!!!

Comments

Anonymous said…
வாழ்த்துக்கள் ரவி!

அன்புடன்
அபிஅப்பா
'கூட்டாஞ்சோறு'ன்னு சொல்லிப்புட்டு இப்படி பத்து லைன்ல பத்து மேட்டரை எழுதி வைச்சா நான் எப்படி 25 கமெண்ட்டு போடுறது..?

அதுனால ஒண்ணே ஒண்ணுதான்.. பஞ்சாமிர்தத்தை சீக்கிரமா சாப்பிட்டிரு.. பெங்களூரு கிளைமேட்டுக்கு கெட்டுப் போயிரப் போகுது.. ஏற்கெனவே பஞ்சாமிர்தத்துலேயே கமிஷன் தேனா ஓடுதுன்னு சொல்றாங்க.. கலிகாலமாக்கும்..

டாடி.. என்னாங்கடா பெரிய டாடி.. வெங்காயம்.. 'ப்பா..' 'ப்பா..' 'ப்பா..'ன்னு இழுத்து இழுத்துச் சொல்லும்பாரு உம்புள்ளை.. அதைக் கேக்கும்போது தெரியும்டி இந்த 'டாடி'யெல்லாம் என்ன பெரிய வார்த்தைன்னு..?

சிவஞானம்ஜி எனக்கும் பத்திரிகை அனுப்பியிருந்தாரு.. ஆனா திறந்து பார்த்தா எழுத்தெல்லாம் லட்டு லட்டா தெரிஞ்சது.. ஒண்ணுமே புரியல.. ஆனாலும் நான் இதையே சாக்கா வைச்சு வாழ்த்திர்றேன்.. அவரோட வாரிசுக்கு எனது அப்பன் முருகன் நிம்மதியையும், நல்ல ஆரோக்கியத்தையும், இனிமையான வாழ்க்கையையும் தரட்டும்..
எங்கேங்க போய்டிங்க இத்தன நாளா
அப்புறம் வாழ்த்துக்கள்
ட்ரீட் ரெடியா இருக்கட்டும்

வால்பையன்
SP.VR. SUBBIAH said…
////சிந்தாநதி, மஞ்சூர் ராசா, பி.கே.எஸ் கூட பிங் செய்து வாழ்த்துக்கள் சொன்னாங்க...(தெரியுமுல்ல...கூடிய விரைவில் டாடியாகப்போறேனாக்கும்...)////

வாழ்த்துக்கள் செந்தழலாரே!
வாழ்த்துகள் நண்பரே!
வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி.. :))

அடிக்கடி பதிவு போடுங்கண்ணே..
வாழ்த்துக்கள் ரவி
வாழ்த்துக்கள் ரவி
இம்சை said…
வாழ்த்துக்கள்... டாடிஸ் கிளப்புக்கு அடுத்த உறுப்பினர் ரெடி
Boston Bala said…
:) வாழ்த்துகள்
Amudhasurabhi said…
வாழ்த்துக்கள் ரவி!


அன்புடன்
அரவிந்தன்
ILA said…
வாழ்த்துக்கள்!
Anonymous said…
அப்பாவாகப் போகும் ரவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெல்கம் டு டாடீஸ் கிளப்..
நன்றி அபி அப்பா...!!!
நன்றி உண்மைத்தமிழன். நானும் அப்படியே நினைக்கிறேன்...!!!
நன்றி வால் பையன். மீட் பண்ண முடியாததுக்கு ஸாரி. பயங்கர பிஸி.......!!!!
நன்றி வாத்தியார் ஸார் !!!!!!
நன்றி முபாரக்...நீங்க ஆருன்னே தெரியலியே...இருந்தாலும் நன்றி...!!!!
நன்றி சென்ஷி...நல்லாருக்கீங்களா ?
நன்றி முரளி...சென்னை வரேன், மீட் பண்ணலாம்...!!!
நன்றி பிரபா...!!! சுகம்தானே ???
வாழ்த்துக்கு நன்றி பாபா...
நன்றி அரவிந்தன்...
நன்றி இளா மாமூ...
நன்றி லீனா ரோய்...!!!!! தங்களது ஜெண்டர் என்னவோ ?
நன்றி மாயூ..!!!
Anonymous said…
////நன்றி லீனா ரோய்...!!!!! தங்களது ஜெண்டர் என்னவோ ?
/////

நீங்க நினைப்பதுதான் ரவி.

Popular Posts