No more தசாவதாரம் ப்ளீஸ் !!!!!!

மக்களே ஏன் இந்த கொலைவெறி ? தசாவதாரம் படத்தை டார் டாரா கிழிக்கிறீங்களே ?

தசாவதாரம் பற்றி பதிவு போடலைன்னா ப்ளாகர் அக்கவுண்டை முடக்கிடுவோமுன்னு கூகிள்ல இருந்து மெயில் வந்திரும் போலிருக்கே...

விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனப்பார்வை...

லக்கிலூக் விமர்சனம் ஒரு கமர்ஷியல் காக்டெயில்....அந்த படத்துல வொர்க் பண்ணமாதிரி எழுதியிருக்கார்...

ஜி.ரா, தேவ் விமர்சனம் படிக்கல...

வி.எஸ்.கே விமர்சனத்தில் பல விஷயங்கள் சூப்பரா டச் பண்ணி எக்ஸலண்ட்டா கொண்டு போயிருக்கார்...அசினுக்கு அவர் கொடுத்திருக்க கமெண்ட் சூப்பர்...மிஸ் பண்ணிடாதீங்க...

நானும் போடறேன் விமர்சனம்னு நிறைய பேர் போட்டிருக்காங்க...

ஓவர்த வீக் எண்ட் டைப்படிச்சு மண்டே ஒரு ட்வெண்டி வந்திரும் போலிருக்கு...

பைத்தியக்காரன் விமர்சனம் டாப் !!!!! அம்பத்தோரு பதிவு எழுதிட்டாராமே...இன்னோரு பின்னவீனத்துவ பிசாசு இவரு...

மிதக்கும் வெளி விமர்சனம் வருமா ?*******************************************

சைக்கிள்ல போனா பெஸ்ட்டுன்னு ஞானி சொல்லியிருக்காராமே ? நல்ல ஐடியா...எல்லோரும் சைக்கிள்ல போவோம் வாங்க...அதுக்கப்புறம் உருக்கு விலை உயருது, எல்லாரும் சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கனும்னு சொல்லிடப்போறார்...விக்கி, ஜ்யோராம் சுந்தர் மாதிரி இருக்கவங்கள எப்படி உக்கார வெச்சு இழுத்துட்டு போறது ?

*********************************************

வால் பையன் செய்த ஒரு வால் மேட்டரை சொல்லிடறேன்...பெங்களூர்ல மீட் பண்ணோம்...வழக்கமா மீட் பண்ற இடம்...ஒரு க்வாட்டர்...அதுலயே மசமசன்னு ஆயிட்டது கண்ணு அவருக்கு...

"ஒரிஜினல் சரக்கு போலிருக்கு...எனக்கு ஒரிஜினல் சரக்கு உடம்புக்கு ஆவாது...டூப்ளிகேட் கிடைக்க்குமான்னார்...அப்புறம் ஒரு குவாட்டர்...சர்ருன்னு தூக்கிருச்சு தலைவர..

பில் கொடுக்க போனோம்...அது ஒரு ரெஸ்ட்டாரண்டும் பாரும் இணைந்த கடை...அங்கே ஒரு நாலு பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க...

இந்தாளு, ஒரு நிமிஷம் இரு ரவி, அவன் ஆம்ப்லேட் திங்குறான், கொஞ்சம் பீஸ் பிச்சிக்கிட்டு வந்துடறேன் அப்படீங்குறார்..

யோவ் என்ன விளையாடுறியா, பொது மாத்து போட்டுருவான் வாய்யா என்றேன்...

அட நீவேற, நான் ஈரோட்லயே இப்படித்தான் பார்ல எல்லார் ஆம்லேட்டையும் எடுத்து தின்னுவேன் அப்ப்டீன்னுக்கிட்டு திமிறி திமிறி போறாரு...

புடிச்சு இழுத்துட்டு வர்ரதுக்குள்ள தாவு தீந்திருச்சு...!!!

இந்தாள் உன்மையிலேயே வால் பையன் தான்...

***********************************************

சுகுணா திவாகர் கல்யாணத்துக்கு போயிருந்தேன்...அ.மார்க்ஸ் தலைமையில அட்டகாசமா உறுதிமொழி எடுத்தார்...அதைவிட தங்கச்சி எவ்வளவு அழுத்தமான குரல்ல அட்டகாசமா உறுதிமொழி எடுத்தாங்க...படங்கள் வலையேற்ற முடியாத அளவுக்கு பெரிய சைஸ்...சுகுணா அனுமதியோட போடறேன்...

************************************************

எனக்கு தெரிந்த நன்பர் ஒருத்தர் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறார். கொஞ்சம் கஷ்டப்பட்டு இப்பத்தான் லைப்ல செட்டில் ஆகியிருக்கார். சாதி எதுவாகயிருந்தாலும் பரவாயில்லையாம்...ஆனா மதம் இந்துவாகத்தான் இருக்கனும்னு சொல்றார்...சென்னையில இருக்கார்...அவருக்கு பிடித்த முருகனுக்கே ரெண்டு வொய்ப்..இவருக்கு இன்னும் செட்டாகலை பாருங்க.....தெரிந்த இடத்துல பொண்ணு இருந்தா பாருங்க...!!!

************************************************

Comments

தம்பி said…
முடியாது, நிறுத்த முடியாது.
பல மேட்டரையும் டச் பண்ணியிருப்பதால், இது ஒரு "காக்டெயில்" பதிவு :)

அப்பறம், இந்த தசாவதார விமர்சன மேட்டர் பத்தி: நம்ம மக்கள் எல்லா விஷயங்களிலும் "அதி" (அதாவது ஓவர்!) தான், எதையும் மாடரேட்டா பண்ண மாட்டாங்க, சாரே ;-)

எ.அ.பாலா
அதிஷா said…
ஓகே நாளைக்கு நிறுத்திறோம்
SurveySan said…
very sorry.

already did. :)
/// இந்தாளு, ஒரு நிமிஷம் இரு ரவி, அவன் ஆம்ப்லேட் திங்குறான், கொஞ்சம் பீஸ் பிச்சிக்கிட்டு வந்துடறேன் அப்படீங்குறார்..///


ஒரிஜினல் சரக்கு ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்த நீங்க. அவருக்கு ஒரு ஆம்ப்லெட் வாங்கி கொடுத்தா கொறைஞ்ச போயிடுவீங்க? மிஸ்டர் ரவி.
எல்லோரும் ஒரு கொலைவெறியோட தான் கிளம்பிருப்பிங்க போலிருக்கு!
இளையகவி மப்புல இருக்கிற போட்டோ எடுத்து போட்டுட்டான்.
நீங்க ஆம்லெட் கதை.
பதிவுலகத்துல இனி யாரும் என்னை சும்மகாச்சும் கூட சாப்பிடலாமா வாலுன்னு கேக்க மாட்டாங்க.
நடத்துங்க நடத்துங்க குழந்தை புரந்தவுடனே போன் பண்ணுங்க,
அந்த ட்ரீட்டுல பாத்துகிறேன் உங்கள

வால்பையன்
இது பின்தொடர

வால்பையன்

Popular Posts