Friday, May 01, 2009

மயிலாடுதுறையை துபாயாக மாற்றிய மணிசங்கர அய்யர்




கடந்த தேர்தலில் மயிலாடுதுறையை துபாய் ஆக மாற்றுவேன் என்ற வாக்குறுதியோடு ஓட்டு வாங்கி, பெட்ரோலியத்துறை அமைச்சராக கடைசிவரை இருந்து, கடைசியில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்து ரிட்டையர் ஆகி, இப்போது மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளார் மணிசங்கர அய்யர்...

மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டதா ? எங்கே தோண்டினாலும் பெட்ரோல் வருகிறதா ? அல்லது துபாயில் விற்கும் விலைக்கே பெட்ரோல் விற்கிறதா ?

ஷெல் பெட்ரோல் நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே முடிவு கசிந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தான்...

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், நீங்கள் வாகனம் வைத்திருப்பவர் என்றால் தெரியும். ஒரு பெட்ரோல் பங்கில் போட்டால் 60 கி.மீ தரும் வாகனம், இன்னொரு பெட்ரோல் பங்கில் போட்டால் 50 தரும். ஷெல் பங்கில் போட்டால் 70 கி.மீ தரும். ஆனால் ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்கு உரிமையாளரும் விரைவில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். அல்லது கோடீஸ்வர்கள் மட்டுமே பெட்ரோல் பங்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இராணுவத்தில் இறந்தவர்களின் மனைவிக்கு லைசென்ஸ் என்பார்கள். அதை இப்படி கொடுத்து அப்படி பணம் கொடுத்து பிடுங்கிவிடுவார்கள்.

எத்தனை எத்தனை மோசடிகளடா !!!

கடைசியாக, மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டிருந்தால் - இந்த ஐந்து ஆண்டுகளில், துபாயில் வசிக்கும் உடன்பிறப்புகளும் கதர் சட்டைகளும் இங்கேயே வந்து குழாய் அடைத்து ஆணி பிடுங்கவேண்டியது தானே ? ஏன் இன்னும் துபாயிலேயே இருக்கிறார்கள் ?

அடுத்து பஞ்சாயத்து ராஜ் மேட்டர். எத்தனை பஞ்சாயத்துக்களுக்கு மத்திய அரசின் நேரடி உதவி பணம் வந்துள்ளது தமிழகத்தில் ? ஆனால் காங்கிரஸ் அரசாளும் ஆந்திராவில் ? டெல்லியில் ? அய்யா சொல்லுங்கப்பா...தெரியாமத்தான் கேக்குறேன்...

அடுத்து வடகிழக்கு மாநிலங்கள்...

வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராம். அங்கே ஒரு இளம்பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறாராமே ? குழாய் மூலம் வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்படுகிறதாமே ? அது இவருக்கு தெரியுமா ?

அங்கே நிற்கும் ராணுவத்தை வெளியேற சொல்லி இளம் பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்களே ? அது இவருக்கு தெரியுமா ?

நாகா இன பழங்குடியினரோடு நடந்த பேச்சுவார்த்தை வெற்றியா ? அதை பற்றி எந்த தகவலாவது இவருக்கு தெரியுமா ? ஏன் அதுபற்றி மீடியாக்களில் மூச்சு விடுவதில்லை ?

நாடு சுகந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை வசதி, இருப்பிட வசதியின்றி வாழும் பெரும்பான்மை வடகிழக்கு மாநில மக்களுக்கு என்றுதான் விடிவு ?

நாடு சுகந்திரம் அடைந்து பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் அடகு வைத்தது தான் காங்கிரஸ் கட்சி கடைசீ..சீ..சீ..யாக செய்த சாதனை..

தானே எந்த முடிவும் எடுக்க முடியாமல் பத்து ஜன்பத் இல்லத்தை நோக்கியே காலத்தை கழித்துவிட்ட கொஞ்சம் கூட த்ராணியே இல்லாத பிரதமர்...

பிரதமரும் ப.சிதம்பரமும் நாட்டின் இணையில்லா பொருளாதார நிபுணர்களாம். இரண்டு லட்சம் விவசாயிகளை மட்டும் தான் தற்கொலை செய்துகொள்ளவிட்டோம், மற்றவர்களை காப்பாற்றிவிட்டோம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்..

இவர்களின் விவசாய கடன் உதவி திட்டத்தால் பயன் அடைந்தது சிறு, குறு விவசாயிகள் அல்ல..பெரு முதலாளிகளே...என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது கோடி ரூபாய் சொத்து உடைய ஒரு விவசாயிக்கு மூன்று லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பார்த்துக்கொள்ளுங்கள் இந்த கடன் தள்ளுபடியின் லட்சணத்தை ?

கடைசியாக தொடங்கிய இடத்துக்கு வருகிறேன், ஒருவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தான் அந்த பொறுப்பில் இருந்து அவரை மாற்றுவோம் ?

ஏன் கடைசி நேரத்தில் இவரது பெட்ரோலிய துறை பிடுங்கப்பட்டு முரளி தியோரா அந்த இடத்துக்கு வந்தார் ?

ஈழத்துக்கு, ஈழ தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்த காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுபோட தமிழர்கள் யாரும் தயாரில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் ஈழம் மட்டுமல்ல, இந்த ஐ.மு கூட்டணி அரசு எல்லா விதங்களிலும் தோல்வி அடைந்த ஒரு அரசு.

நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரத நிறைவு நாள் அன்று, இனி காங்கிரஸ் கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி என்பதே இல்லை என்று முழங்கிய (??) திருமா, அதே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு நிற்கிறார்.

மணிசங்கர் அய்யர் மட்டுமல்ல, ப.சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு மற்றும் தி.மு.க கூட்டணியில் உள்ள அனைவரும் தோற்கவேண்டும்.

கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருபவர்களின் மூஞ்சில் பீச்சாங்கையை வைக்கவேண்டும்..

13 comments:

வால்பையன் said...

அபிஅப்பா சொல்ரதை பார்த்தா மயிலாடுதுறை தங்கம் மாதிரி ஜொலிக்கனுமே!
நீங்க வேற மாதிரி சொல்றீங்க!

ஒருவேளை மயிலையில் பெட்ரோல் கிணறு இல்லையென்பதால் துபாயாக மாற்ற முடியவில்லையோ!

இனி அபிஅப்பா வந்து அய்யர் ஊரில் புடிங்கி கத்தை கட்டியதை புட்டு புட்டு வைப்பார்!

sundarmeenakshi said...

even பெட்ரோல் கிணறு vidunga water battle anna villai Rs.10

milk litre anna villai Rs 20
ithai kada iryanmaipanuga .
namma nadula palarum thenarum odum sonnanuga .
parunga oru river oduvadhillai.

congrass markavum madom manikkavum madom ithudhan indha elction vasagam

அன்பு said...

துபாயே போண்டியாகிவிட்டது, அது மாதிரி ஆகனும் என்றால் அம்மாவுக்கு வாக்களிக்க வேண்டியதை தவிர வேறு வழியே இல்லை

அன்பு said...

மற்ற தொகுதிகள் எல்லாம் முன்னேறிவிட்டது இன்னும் மயிலை தொகுதி மட்டும் தான் பின் தங்கி இருக்கிறது என்று இந்த வலைப்பதிவரே சொல்லிவிட்டார் எல்லாரும் கேட்டுக்கோங்க

Maraicoir said...

மயிலாடுதுறை நாடாறுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மேலும் படிக்க இந்த இடுக்கைகளை படிக்கவும்

http://maraicoir.blogspot.com/2009/04/blog-post_27.html



http://maraicoir.blogspot.com/2009/04/blog-post_6498.html

ரவி said...

புலிகேசி அண்ணே

பதிவர் சஞ்ஜெய் எழுதிய பதிவுக்கு எதிர் பதிவு இது. மற்ற தொகுதிகள் பற்றி சொல்லவேண்டும் என்றால் அதையும் எழுதிவிடுகிறேன்.

ரவி said...

மரைக்காயரே

அஸ்லாமு அலைக்கும்.

அவரால் வாக்குகளை பிரிக்க மட்டுமே முடியும்.

சென்ஷி said...

என்ன ரவி! யார் சொன்னா நாங்க துபாய்ல இருக்கோமுன்னு நான் இங்க கும்பகோணத்துல இருக்கேன். அபி அப்பா மாயவரத்துல இருக்காரு. குசும்பன் அவரோட ஊர்ல இருக்காரு அட நாகை தொகுதிதான் துபாயா மாறிடுச்சுன்னா ஏன் துபாய் நாகை தொகுதியா மாறியிருக்காதா!

எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச

சதுக்க பூதம் said...

ராஜ பக்ஸெவுக்கு விருந்து கொடுத்தது போன்ற செயல்கள் மிகவும் கண்டிப்புக்கு உரியது. தொகுதிக்கு அவரால் மிகவும் அதிக அளவு நன்மை செய்திருக்க முடியும். அவர் செய்ய வில்லை அது உண்மை. ஆனால் உங்கள் கருத்தில் இருந்து சிலவற்ரில் மாறு படுகிறேன்

//இவர்களின் விவசாய கடன் உதவி திட்டத்தால் பயன் அடைந்தது சிறு, குறு விவசாயிகள் அல்ல..பெரு முதலாளிகளே...என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது கோடி ரூபாய் சொத்து உடைய ஒரு விவசாயிக்கு மூன்று லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பார்த்துக்கொள்ளுங்கள் இந்த கடன் தள்ளுபடியின் லட்சணத்தை ?//

இது தவறான கருத்து. பணக்கார விவசாயிகளும் பயன் அடைந்தார்கள்.ஆனால் பல்லாயிர கணக்கான ஏழை விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். எங்கள் கிராமத்திலேயே பல பேரை பார்த்துள்ளேன். ஆனால் கடனை கஷ்ட பட்டு திருப்பி கட்டியவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுத்திருக்க வேண்டும். இனி எப்போதும் விவசாயிகள் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து திருப்பி கட்ட யோசிப்பார்கள்.

//ஏன் கடைசி நேரத்தில் இவரது பெட்ரோலிய துறை பிடுங்கப்பட்டு முரளி தியோரா அந்த இடத்துக்கு வந்தார் ?
//
உண்மையில் சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் மற்றும் மத்திய ஆசிய மற்ரும் ஆப்ரிக்க நாடுகளில் பெட்ரோலியத்தை இந்திய அரசின் கூட்டு முயற்சி யோடு, நிதி உதவி கொடுத்து எடுத்து இந்தியாவின் பிற்கால பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய தொலை நோக்கு பர்வையுடன் அவர் செயல் படுத்தியது உண்மை. இந்த செயல் மேலை நாடுகலுக்கு பிடிக்காமல் அவற்ரின் நிர்பந்தத்தில் தான் அவரது பதவி தூக்கபட்டது என்ற பேச்சும் உள்ளது,

மயிலாடுதுறையை பொருத்த வரையில் அவருக்கு ஓட்டு போட்டால் எதவது நடக்கும் என்ற நம்பிக்கையிலாவது மக்கள் இருப்பர். அவரை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க வேட்பாலருக்கு ஓட்டு போட்டால்() எதுவுமே நடக்க போவது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஜவாஹிருல்லாஹ் ஓட்டு போட்டால் எதாவது நடக்க வாய்ப்புள்ளது

vasu balaji said...

கிழிச்சி ஒட்டிட்டீங்க போங்க. அருமை. ஆனா பீச்சாங்கை வைக்க கூட தகுதி இல்லாத பரதேசிங்க.

மணிகண்டன் said...

ரவி, இன்று rediff ல் வந்த ஈழ அகதி / முகாம் குறித்த கட்டுரை. எனக்கு தமிழ்ல மொழியாக்கம் செய்ய வரலை. அப்படியே போடலாம்ன்னு இருக்கேன். உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.

http://news.rediff.com/special/2009/may/01/tamil-refugees-speak-about-events-in-sri-lanka.htm

சதுக்கபூதம்,

இவர் மயிலாடுதுறை தொகுதிக்கு ஒண்ணுமே பண்ணலைங்க. அதுனால அதிமுக வந்தா எதுவும் நடக்காட்டியும் இதே status-quo தான். அதுனாலே ஒரு பிரச்னையும் கிடையாது. மக்கள் கிட்ட கொஞ்சம் கூட பிரபலம் ஆகாத / தொடர்பு இல்லாத இவர் ஒவ்வொருமுறையும் மந்திரி ஆகிகிட்டு இருக்காரு.

ரவி said...

மக்கள் கிட்ட கொஞ்சம் கூட பிரபலம் ஆகாத / தொடர்பு இல்லாத இவர் ஒவ்வொருமுறையும் மந்திரி ஆகிகிட்டு இருக்காரு.

Saturday, May 02, 2009

hehehe. but he have good relations with 10 janpath.

Pot"tea" kadai said...

I lived in h2/8 thiruvalluvar nagar for 4 yrs.

So, I can tell O.S is Clear winner.

;)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....