உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100

முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100
எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100
அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

Comments

SUBBU said…
எனக்கு ஒன்னும் தெரியில :((
radha said…
Ravi, I would like you to review my short story in my blog
"http://en-sindhanaigal.blogspot.com/".

this is my first writings hence this request.
//என்னைப்பார் சிரிக்காதே//

இதை பார்த்தவுடன் தான் சிரிப்பு சிரிப்பா வருது... :)))))))))

Popular Posts