ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவேண்டும்.
அதற்கு முன் ஒரு சம்பவம்.
நார்வே வந்த புதிதில், இங்கே மெக்டொனால்ட்ஸில் சந்தித்த ஒரு 65 வயது நார்வேஜியன் பெண்மணி, ஜூலி, இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா ? எனக்கு முப்பது வயதில் இந்திய மகள் இருக்கிறார் என்று என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.
திருமதி ஜூலி
அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் பூனே சென்றபோது, அங்கிருந்த சூழ்நிலையில், ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்துவந்துள்ளார்.
அவருக்கு இருந்த முன்று ஆண் பிள்ளைகளுடன் இந்த குழந்தையும் சேர்ந்து வளர்ந்து, இன்றைக்கு நார்வே ஓஸ்லோவில் வாழ்கிறார் இவர். நார்வே அரசியலில் குறிப்பிடத்தகுந்த இடத்திலும் இருக்கிறார்.
அவரிடம் கேட்டேன். உங்கள் மற்ற மூன்று பிள்ளைகள் திடீரென வந்து சேர்ந்த இந்த குழந்தையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று.
ஆரம்பத்தில் இந்த குழந்தை தத்தி நடப்பதை, தங்கள் அறைக்குள் வருவதை, தங்கள் பொருட்களை தொடுவதை மற்ற பிள்ளைகள் விரும்பவில்லையாம். அதன் பிறகு படிப்படியாக தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களாம்.
இன்றைக்கும் தன்னுடைய தாயை, மற்ற பிள்ளைகளை விட நுணுக்கமாக, அழகாக, வாரம் ஒருமுறை வந்து சந்திப்பதும், வேண்டிய அனைத்தையும் செய்வதும், அற்புதமானதாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் உள்ள ஒரு படத்தில் முழுகுடும்பமும் மகிழ்ச்சியோடு நிற்கும் ஒரு படம். ஆஹா. அற்புதம்.
கம்மிங் பேக் டு த பாய்ண்ட்.
கவிதா ஒரு பதிவு எழுதியிருந்தார். ஒரு குழந்தையை தத்தெடுப்பதை பற்றி எழுதியிருந்தார். தத்தெடுக்கப்பட்ட குழந்தை, மன ரீதியில் பின்னடைவை சந்தித்த கதை ஒன்றையும், பொருளாதார ரீதியில் குழந்தையை தத்தெடுத்த குடும்பம் கஷ்டப்படுவதையும் பற்றி. சுட்டி தாருங்களேன்.
அவர் அதில் தீர்வாக சொல்லியிருந்தது, ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட்டுவிட்டு, ஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு சப்போர்ட் செய்யுங்காள் என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் இல்லை ? தத்தெடுத்தல் என்பது, குடும்பம் இல்லாத ஒரு குழந்தைக்கு ஒரு குடும்பத்தை தருவதேயாகும். அதற்காகத்தான் அந்த பிள்ளைகள் ஏங்கும். பள்ளியில் படிக்க அல்ல. ஒரு தாயையும் தந்தையையும், ஒரு இல்லம் தந்துவிடமுடியாது.
இப்போது ஈழத்திலே ஏராளமான குழந்தைகள் தாய், தகப்பன் இரண்டு பேரையும் இழந்து நிற்கின்றனர். சுனாமி சமயத்தில் தத்தெடுப்பது குறித்து படித்த பெயரிலியின் இந்த பதிவை இந்த சூழ்நிலையோடு கண்டிப்பாக பொறுத்தி பார்க்கலாம்.
வேறு ஒரு பதிவில், தத்து எடுக்க விரும்பும் தம்பதியினர், திருமணம் ஆகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கழிந்திருக்கவேண்டும், மேலும் தாசில்தார், மணியகாரர், முக்கு தெரு டீக்கடைக்காரர் என்று எல்லோரிடமும் சர்ட்டிபிக்கேட் வாங்கிவரவேண்டும் என்று ஆயிரத்தெட்டு விதிமுறைகளை சொல்லியிருந்தார்கள். இந்த சான்றிதழ்களை எல்லாம் வாங்கிவருவதற்குள், நான் தத்தெடுக்க நினைக்கும் குழந்தை வளர்ந்து பெரியவளா(னா)கி, தானே இன்னும் ரெண்டு குழந்தைகளை தத்தெடுக்க விண்ணப்பித்திருக்கும்.
ஹிந்து தத்தெடுப்பு சட்டம் பற்றிய ஓட்டு எடுப்பும் மென் புத்தகமும் பற்றிய தரவுகளும் இணையத்தில் பார்த்தேன்.
இது இந்தியாவில் பிறந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா, அல்லது என்னைப்போன்ற கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்துமா ? அப்படி ஹிந்துக்களுக்கு பொருந்தும் எனில் என்னைப்போல மத கலப்பு மணம் செய்தவர்களுக்கு பொருந்துமா ? என்னுடைய மனைவி பெயரில் எடுக்கமுடியுமா ?
என்னை பொறுத்தவரை, சட்டரீதியான உரிமைகளுடன் தத்தெடுக்கவே விரும்புகிறேன். அதாவது என்னுடைய தத்து பிள்ளைகளுக்கும், என்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் முழு உரிமையை தர விரும்புகிறேன். (என்னுடைய மகள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கமாட்டாள் என்று நம்புகிறேன், அவளுக்கு ஆரஞ்சு பழம்தான் பிடிக்கும்)
என்னுடைய மனைவி இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், அது முழுமையான சம்மதமாக இருக்குமா, அல்லது ஒரு பெண்ணாக அவள் சந்திக்கப்போகும் உளவியல் பிரச்சினைகள் என்ன என்று எதுவும் புரியவில்லை.
விவாதிக்கலாமா ?
37 comments:
அடங்கொக்காமக்கா எழவு.காம்
அது என்னது ஆரஞ்சு?
ரவி,
தத்தெடுப்பது என்பது ஒரு நல்ல விஷயம் தான் இருவரும் மனமொத்து ஈடுபடும் பொழுது..
இந்த எழவு.காம் ஏன் உங்களையே கரணம் வெச்சி ஆப்படிக்கிறாங்க.. ஏதாவது குடுக்கல் வாங்கல் பிரச்சனையா?
// மாயவரத்தான்.... said...
அது என்னது ஆரஞ்சு?//
6 * 5 = ஆரஞ்சு..
என்னத்த சொல்ல எழவு டாட் காம் ? இங்கயும் வந்துட்டீங்களா ?
மாயவரத்தான், எதாவது சீரியஸாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். இரவு ரெண்டு மணிக்கு எழுப்பி ஆரஞ்சை கொடுத்தால் சாப்பிடுது. அவ்வளவு பிடிக்கும். இப்போது தான் நடக்க பழகுது. ஆனாலும் அந்த ஆரஞ்சை கையில் வைத்துக்கொண்டே நடப்பது, கையில் வைத்துக்கொண்டே தூங்குவது. அய்யோ ஆரஞ்சு.
உலவு. ஏன் நீங்களே என்னுடைய வலைப்பதிவை இணைத்துக்கொண்டு ஆதரவை தரக்கூடாது ? இந்த கமெண்ட் போடும் நேரத்தில் அதை செய்யலாமே ?
நன்றி சந்தோஷ்.
ரா.பார்த்திபன் செய்திருக்கிறார்.ஆனால் மிகுந்த பக்குவம் வேண்டும்.பிள்ளை பாக்கியம் வாய்க்காதவர்களுக்கு பொருந்தும்..
வறட்டுச் சமூகங்களின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஒரு குழந்தையை விடுவிக்கப்போகிறீர்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
தாராளமாக நீங்கள் தத்து எடுக்கலாம். பொதுவாக, இந்திய சட்டம், தத்தெடுப்பவரால் அந்த குழந்தையை தன் குழந்தை போல் வளர்க்கமுடியுமா ? (மன நிலை) அக்குழந்தையை காப்பாற்ற தகுதிவாய்ந்தவரா ? (அவரின் பொருளாதார நிலை) போன்ற சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக்கொள்ளுவதற்க்காக, சில formalities வைத்து இருக்கின்றார்கள். இந்த formalities கலால் வெறுப்படையாமல், ஒரு குழந்தையை தத்து எடுங்கள். உங்களைப் போன்றவர்களே அந்த குழந்தைகளுக்கு தேவை.
அந்த குழந்தையின் வயதைப் பொருத்து, அதனுடன் பழகி அதன் விருப்பத்தினை, அதன் பழக்க வழக்கத்தினை முதலில் தெரிந்துக்கொள்ளவும். அதன் பிறகு மற்ற சட்டரீதியான முயற்ச்சியில் இறங்கவும். வாழ்த்துக்கள்.
இல்லீங்க அண்ணாத்தே. நம்ம நாட்டிலே (அதான் நீங்க முன்னாடி இருந்த 'தாய்' நாட்டிலே) பழ ஜோசியம்ன்னு ஒண்ணுக்கீது தெரியும் தானே? குழந்தையை உட்கார வெச்சு முன்னாடி நிறைய பழத்தை வெச்சு, அது முதல்ல எதை தொடுதோ அதை வெச்சு குணாதிசியம் சொல்லுவாங்க, கேள்விப் பட்டிருக்கீங்களா?
நமக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர் ஒரு பழ (பழைய இல்ல) ஜோசியக்காரிகிட்ட தன்னோட பையனை கொண்டு போனாரு. அந்த ஜோசியக்காரியும் ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூஸ், துரியன், ரம்பூட்டான், அது இதுன்னு எல்லா பழத்தையும் எடுத்து வெச்சு உட்காந்துச்சு. பய எந்த பழத்தை தொடுவான்னு எல்லாரும் பாத்துகிட்டு இருந்தப்ப, அவன் தொட்ட பழம் எதுன்னு இங்கே எழுத முடியாது... சென்ஸார். ஹிஹி
உங்கள் குணத்திற்கு கண்டிப்பாக தத்து எடுப்பது ஒத்துப் போகும்..செய்ய நினைத்தால்..காலம் கடத்தாமல் உடன் செய்யவும்.உங்கள் இல்லத்தரசிக்கும் வாழ்த்துக்கள்.நீங்கள் தத்தெடுக்கும் குழந்தைக்கு வாழைப்பழம் பிடிக்கட்டும்.
நன்றி டிவீஆர். வாழைப்பழமும் மஞ்சள். ஆப்பிள் ஓக்கேவா ?
கேள்விப்பட்டிருக்கிறேன்...பழத்தில் என்ன சென்ஸார் மாயூ ? வாழை ?
ரா பார்த்தியின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?
நன்றி ஆரூரன் ராஜன்.
க்ரேட் ரவி.
என் அக்கா தத்தெடுத்திருக்கிறார். விதிமுறைகள் கொஞ்சம் கடுமையானவை தான். ஆனால் தத்தெடுக்கப்படும் குழந்தை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்சினைகள் அடிப்படையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை நம்முடையது என்று குடும்பத்தினர் பாவித்து , அன்பு செலுத்தினால், கட்டாயம் வெற்றி தான். நாம் கொடுக்கும் குடும்ப அரவணைப்பு, பாதுகாப்பு மிக சக்தி வாய்ந்தது.
இரண்டு குழந்தைகள், எனக்கு தெரிந்து, அருமையாக வளர்கிரார்கள்.(வெவ்வேறு வயது, குடும்பங்கள்).
மாயவரத்தான்.... said...
அடங்கொக்காமக்கா எழவு.காம்
Thursday, September 10, 2009
Blogger மாயவரத்தான்.... said...
அது என்னது ஆரஞ்சு?
ரவி.,
பதிவையே தூக்கி சாப்பிட்டுவிவார் போலருக்கு பின்னூட்ட வாயிலாக.
சிரித்தப்பின் என்ன படித்தோம் என திரும்ப படிக்க வேண்டியதாகிவிட்டது.
சரி ஆரஞ்சை விடுங்க.
தேர்ந்த வழக்குரைஞரை கலந்தாலோசிப்பது மிக்க நலம்.
கொஞ்சமல்ல நிறையவே சட்டபூர்வ கடமைகள் உள்ளன்.எல்லாமே பின்னாட்களில் பிரச்னைகள் வரக்கூடாது என்பதால் கூடுதல் கவனமுடன் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள்தான்.
முதலில் குடும்பத்தில் தீர முடிவு செய்து பின்னர் தொடரலாம்.
இந்த யோசனையை 100சதவீதம் ஆதரிக்கிறேன்.வாய்ப்புள்ளவர்கள் இது போன்ற வழிமுறைகளில் இரண்டாவது குழந்தைக்கேனும் முயற்ச்சி செய்தால் நல்ல மாற்றங்கள் பிறக்கும்.
நன்றி.
காரா வை அனுகவும்.
http://www.adoptionindia.nic.in/
Adoption is easy but the procedure is heartbreaking and time consuming. Be ready for both. Think long before you go there and do it only if you are sure. I am not discouraging you. I am talking from my personal experience.
All the best, Ravi!
It's really nice of you to have thought abt it and I wish & pray that you adopt a baby soon.
வாழ்த்துக்கள் ரவி ..
பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு
http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_7175.html
எப்போ அறிவிக்கிறீங்க
ரவி பதிவிற்கு சம்பந்தம் இல்லா பின்னூட்டம் மன்னிக்கவும்
உங்களுக்கும் இந்த உலவு.காம் க்கும் என்ன பிரச்சனை.. :-)))
பதிவை சீரியஸ் ஆக படித்து விட்டு பின்னூட்டம் படித்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை ஹா ஹா ஹா
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/05/blog-post_9891.html
ரவி, தத்து எடுக்கலாம்... பாப்பாக்கு சொல்லனும்னே இல்ல.. உங்க குழந்தையாவே அவளுக்கு நினைவு தெரியும் முன்ன எடுத்துடுங்க..
//என்னுடைய மனைவி இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், அது முழுமையான சம்மதமாக இருக்குமா, அல்லது ஒரு பெண்ணாக அவள் சந்திக்கப்போகும் உளவியல் பிரச்சினைகள் என்ன என்று எதுவும் புரியவில்லை.
விவாதிக்கலாமா ?//
ரவி, இதை நீங்க தான் புரிந்துக்கொள்ளவேண்டும். அவங்களை பற்றி உங்களுக்கு நான் நன்றாக தெரியும் என்பதால் எங்களின் கருத்து அதற்கு சரியாக இருக்காது.. தவறாவும் இருக்கலாம். எனக்கு எல்லாம் என் வீட்டுக்காரர் நேரடியாகவே பர்மிஷன் கொடுக்கல. அதனால் ஆசை இருந்தும் விட்டுவிட்டேன்.. :(
தத்து எடுக்கும் குழந்தைக்கும் அது உங்களளின் குழந்தை என்றே நம்பும்படி விபரம் தெரியும் முன் எடுக்கவும்.
தீர பேசி முடிவுசெய்து சீக்கிரம் ஒரு குழந்தையை தத்து எடுங்கள்..!! இருவருக்கும் வாழ்த்துக்கள்!!
useful post. :)
//பதிவை சீரியஸ் ஆக படித்து விட்டு பின்னூட்டம் படித்து என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை ஹா ஹா ஹா// மையாலுமே.........:):):)
நல்ல விசையம்.....காலம் கடத்தாமல் செய்யவும்....
தத்தெடுக்க வேண்டும் என்று தோன்றுவதற்கான காரணம் என்ன ரவி ?
உண்மையிலயே உங்களுக்கு இரண்டாவது குழந்தை மேல் உள்ள ஆசையால் தோன்றியது என்றால் செயல்படுத்துங்கள். அதே சமயம், சேவை, அநாதை குழந்தைகளுக்கு செய்யும் உதவி போன்ற எண்ணங்களால் வந்திருந்தால் மறுபடியும் சிந்தித்து பார்த்து தேவையுணர்ந்து செயல்படுங்கள்.
//ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவேண்டும்.//
எனக்கும் இந்த ஆசை உண்டு ரொம்ப நாளா...
நன்றி எல்லோருக்கும். நேரம் இருக்கும்போது தனித்தனியாக பதில் சொல்கிறேன்.
ரவி, எனக்கும் இதே விருப்பம் உண்டு. மனைவிக்கும் ஒப்புதலே. ஆனால், எங்கள் குழந்தைக்கு இப்பொழுது ஒரு வயது ஆவதால் கொஞ்சம் வளர்ந்த பிறகு தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். தத்தெடுக்கும்போது சட்டரீதியாக தத்தெடுப்பதே நல்லது. சென்னையில் தத்தெடுப்பவர்களுக்கு சட்டரீதியாக உதவவும், நமது விருப்பத்திற்கு குழந்தையை தெரிவு செய்யவும் சில தன்னார்வ நிறுவனங்கள் உதவுகின்றன. குறிப்பாக வெளிநாட்டில் வாழ்பவர்கள் இது போன்ற நிறுவனங்கள் மூலமாக அனுகும்போது சட்டரீதியான பிரச்சனைகள் இல்லாமல் தத்தெடுக்க இயலும். ஆனால் ஒவ்வொரு படியாக முடித்து சட்டப்படி தத்தெடுத்த குழந்தை உங்கள் குழந்தையாக மாற இரண்டு வருடங்களாவது ஆகிவிடும்.
"வேறு ஒரு பதிவில், தத்து எடுக்க விரும்பும் தம்பதியினர், திருமணம் ஆகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கழிந்திருக்கவேண்டும், மேலும் தாசில்தார், மணியகாரர், முக்கு தெரு டீக்கடைக்காரர் என்று எல்லோரிடமும் சர்ட்டிபிக்கேட் வாங்கிவரவேண்டும் என்று ஆயிரத்தெட்டு விதிமுறைகளை சொல்லியிருந்தார்கள்"
இரண்டுமே தவறு...
"இது இந்தியாவில் பிறந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா, அல்லது என்னைப்போன்ற கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்துமா ? அப்படி ஹிந்துக்களுக்கு பொருந்தும் எனில் என்னைப்போல மத கலப்பு மணம் செய்தவர்களுக்கு பொருந்துமா ? என்னுடைய மனைவி பெயரில் எடுக்கமுடியுமா ?"
நீங்கள் இந்துவாக இல்லாத பட்சத்தில் பொருந்தாது...எனவே நீங்கள் ஒரு குழந்தையை தத்து எடுக்க Guardian and Wards Act" படி உங்களை குழ்ந்தையின் பாதுகாவலர் மற்றும் வளர்ப்பு பெற்றோராக (Guardian/ Foster Parents) சட்டபூர்வமாக நியமித்துக் கொள்ள வேண்டும்)
சொத்து உரிமைக்காக தனியே உயில் எழுதி வைக்க வேண்டும்.
சமீபத்திய சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறாக வளர்ப்பு பிள்ளைகளுக்கான உரிமைகள் குறித்தான தீர்ப்பு படித்தீர்களா?
ராஜா,
பெற்றோர் யாருமில்லாத குழந்தைகளை ஏற்கனவே உங்களுக்கு குழந்தை இருக்கையில் தத்து எடுக்க விரும்பினால், உங்களது இருவரின் பெற்றோர்களின் உள்ளார்ந்த சம்மதத்தினை பெறுவது, சட்ட ரீதியில் தேவையில்லை எனினும் அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லது.
இல்லை, உங்களுக்கு தெரிந்த ஏழைக்குழந்தை ஒன்றின் பராமரிப்பு செலவை நேரடியாக ஏற்றுக் கொள்ளலாம்.
தங்களது தகவலுக்கு,
இந்தி நடிகைகள் ரவீணா டாண்டன், சுஷ்மிதா சென் போன்றவர்கள் தனியராக இருக்கையிலேயே பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தவர்கள்...
Post a Comment