மாம்ஸ். சோஷா ஷ்ரட்டன் போறேன். சரக்கு போட..
இன்னைக்காவது நீ வரியா ?
இன்னைக்காவது நீ வரியா ?
இல்லைடா. இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு. வீக் எண்ட் எப்பவும் கொஞ்சம் அவுட் பேஷண்ட்ஸ் அதிகம்டா. உனக்கு தெரியாதா ?
ஓக்கே. நான் தனியா போறேன்...வைக்கிறேன்..
தனியா போ. ஆனா நான் போனவாரம் டெல்லி கான்ப்ரன்ஸ் போனப்போ அப்பார்ட்மெண்ட்டை பொண்ணுங்களை கூட்டிவந்து நாஸ்தி பண்ணியே ? அதை மட்டும் செய்யாதே..
ஹி ஹி. நீ ஊர்ல இருக்கும்போது நான் ரொம்ப்ப நல்லவண்டா..
டொக்...
இளம் மருத்துவர் அருணை பணி செய்ய விடாமல் தடுத்து அழைக்கும் விஷால் உயர அல்லது ஆந்திர சாக்லேட் நிற சுந்தர், ஹைதராபாத் ஒயின்ஷாப் ஓனர் ஒருவரின் மகன். இருவரும் இணையும் புள்ளி அவர்கள் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ராமச்சந்திரா மருத்துவமனை.சுந்தரைப்போல வகைதொகையின்றி புரளும் பணம் கிடையாது என்றாலும், அருணுடைய அப்பாவும் கொஞ்சம்கூட கஞ்சம் பிடிக்காத கோவையைச் சேர்ந்த இண்டஸ்ட்ரியலிஸ்ட் தான். அண்ணா நகரின் உயர்தர அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருவரும் அறை எடுத்து வாசம்..
![[newrule.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf-Mludv7egWu24wxPwbiWeHMSo0-cT0JpmjmXIjSTdgfnyKpW1ZhDkfQ8D6T5IPbZUFE2vpY9LPELdQOW83Xj_pA11f6BLlS1W-1LaB4gYQF24ei-8aUF8JcMKeniPgvfrBgDAA/s320/newrule.gif)

சோழா ஷெரட்டன் மேப்ளவர் பார்.. கழுத்தில் தேவை இல்லாமல் சதைவளர்ந்த புள்ளிகள், ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்து பொண்ணிற திரவத்தையும் விழுங்கிக்கொண்டும் முந்திரியையை கொறித்துக்கொண்டும்.
பார்மேன் பாட்டில்களை வைத்து ஏதோ வித்தை காட்டிக்கொண்டிருக்க, சுந்தர் ஆஜர்.
என்ன சுரேஷ். நல்லாருக்கியா ?
சூப்பரா இருக்கேன் சார். டாக்டர் சார் வரலையா சார் ? அளவுக்கதிகமாகவே குழைந்தான் நீலநிற கழுத்து பட்டியணிந்த சுரேஷ்.
இல்லடா... அவன் பிஸி.
இன்னைக்கு என்ன சார் சாப்பிடறீங்க ?
காக்டெயில்ல காபி கலந்து கொண்டா..
ஹி ஹி, சார் விளையாடாதீங்க.
ஓக்கே ஒரு வோட்கா மொதல்ல கொண்டா. அப்புறம் மீதிய பார்த்துக்கலாம். அப்படியே ஒரு ப்ரான் ப்ரை சொல்லிடு..
சரி சார்..பவ்யமாக குழைந்து, குனிந்து விலகினான் சுரேஷ்..
சென்றவாரம் முகர்ந்த பச்சை நோட்டு வாசனை செய்யும் மாயம்...
![[newrule.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf-Mludv7egWu24wxPwbiWeHMSo0-cT0JpmjmXIjSTdgfnyKpW1ZhDkfQ8D6T5IPbZUFE2vpY9LPELdQOW83Xj_pA11f6BLlS1W-1LaB4gYQF24ei-8aUF8JcMKeniPgvfrBgDAA/s320/newrule.gif)

மெல்லிய மினி ஸ்கர்ட் , வெள்ளைநிற, கிட்டத்தட்ட சீ த்ரூ டாப்ஸ் போன்ற அதாவது ஆடை ஒன்றை பெயருக்கு அணிந்தபடி உள்ளே நுழைத்தாள் அவள்..
அவள் சுமா.
அவளை பல வகையில் வர்ணிப்பதற்கு பதில். ஒற்றை வார்த்தையில். போர்னோ..பிரம்மன் தனியாக இரண்டு பேரை வேலைக்கமர்த்தி அவர்கள் ஓவர்டைம் பார்த்து செய்தது போல இருந்தாள்.
அதிகம் கூட்டமில்லாவிட்டாலும், இரண்டு மூன்று பேர்களாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருக்கும் டேபிள்களை தவிர்த்து, தனியாக இருந்த சுந்தரின் டேபிள் மேல் ஒரு கணம் பார்வையை நிறுத்தி அப்புறம் விலக்க.
எழுந்தேவிட்டான் சுந்தர்..
பேசியேவிட்டான் சுந்தர்..
ஹாய். ஹாவ் எ சீட்...
ஷ்யூர்..
இவ்வளவு சீக்கிரம் பிகர் மடிந்தது பற்றி எதாவது கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏற்றவேண்டும்...
ட்ரிங்க் ?
யெப்.
வோட்கா ?
யெப் யெப்...
கோவைப்பழத்தில் லிப்ஸ்டிக் தடவிய உதடுகள்.
சுரேஷ்...
இங்கே வா..தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒரு அதிகாரக்குரல்..
எஸ் ஸார்...
இன்னொரு வோட்கா ஸ்மால் எடுத்துவந்திடு..
லார்ஜ் ப்ளீஸ்...
வலம்புரி சங்கை வெளிச்சத்தில் பார்த்தது போல் கழுத்து...
சுரேஷ். அப்படியே, வழக்கமா எடுக்கற பதினைந்தாம் நம்பர் சூட் சொல்லிடு...மேனேஜர் கிட்ட நான் சொல்லிடுறேன்...நீ கீ மட்டும் கொண்டுவந்திரு...
பழம் நழுவி பாலில். இல்லை இல்லை. பாலும் பழமும் சேர்ந்து வாயில்..
![[newrule.gif]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf-Mludv7egWu24wxPwbiWeHMSo0-cT0JpmjmXIjSTdgfnyKpW1ZhDkfQ8D6T5IPbZUFE2vpY9LPELdQOW83Xj_pA11f6BLlS1W-1LaB4gYQF24ei-8aUF8JcMKeniPgvfrBgDAA/s320/newrule.gif)

சுந்தர் விழித்தபோது அவன் இருந்தது பாத்டப்பில். பாத்டப் முழுவதும் ஐஸ். ஐஸ். ஐஸ்.
கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்ன டேபிளில் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில்...
ஆன் செய்து அருணை லைனில் பிடித்தான்...
டேய் எங்கடா போன ? நைட்டு வீட்டுக்கு வரலைன்னு பார்த்தா, ஈவ்னிங் வரைக்கும் மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணிவெச்சுட்டு ?
நான்..நான்...நான் சோழால ஒரு சூட் எடுத்தேண்டா...அங்கே தான் இருக்கேன்...நைட்டு..நைட்டு..அவ பேரு ?
என்னடா திணறல் ? என்ன ஆச்சு ? யாரோட தங்கினே ??
என்னை பாத்டப்ல படுக்க வெச்சுட்டுட்டு அவ எங்கியோ கம்பி நீட்டிட்டாடா..ஆனா என்னோட பர்ஸ், மொபைல் எல்லாமே இங்கேயே இருக்கு...ட்ரஸ் தாண்டா எதுவும் இல்லை..அதுவும் இல்லாம பாத்டப்ல புல்லா ஐஸ். எங்கிருந்து அவ்ளோ ஐஸ் வந்ததுன்னு தெரியலை. அவ்ளோ ஐஸ்ல நான் எப்படி மயங்கி கிடந்தேன் அப்படீன்னும் தெரியல. எனக்கு ஒன்னுமே புரியலைடா...
டேய் என்னடா ஹேங்கோவர் படம் மாதிரி சொல்லிக்கிட்டிருக்க ? எதுவும் காமெடி பண்ணலியே ?
சத்தியமா இல்லை...உண்மையிலேயே முடியலடா. அடிச்சு போட்டமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது...
அருணுக்கு பொறிதட்டியது...
டேய்..ஹோல்ட்..ஒரு நிமிடம் இரு...
கொஞ்சம் விரைவாக, முப்பது வினாடியில் அருண் பேசினான்...
சுந்தர், நீ அந்த ஐஸ் பாத் டப்ல போய் படுத்துக்கோ...சோழா ஹோட்டலுக்கு நான் சீக்கிரமா வந்திடுறேன்...
டேய்..என்னன்னு சொல்லுடா ப்ளீஸ்..எனக்கு என்ன ஆச்சு...
சற்று மயான மவுனத்துக்கு பின் அருண்...
கொஞ்சம் இடுப்பு பக்கமா கை வெச்சு பாரேன்...ஸ்டிச் பண்ணியிருக்கா ?
ஸ்ஸ்...தொட்டதில் வந்த வலியோடு சொன்னான் சுந்தர்...ஆமாண்டா...லெப்ட் சைட்ல ஸ்டிச் பண்ணியிருக்கு...அப்படீன்னா...அப்படீன்னா...
ஆமாண்டா...போனவாரம் டெல்லி டைம்ஸ்ல இப்படி ஒரு இன்ஸிடெண்ட் வந்திருந்தது...உன்னோட கிட்னியை உருவிட்டாடா அவ..
உடம்பெல்லாம் வலியோடு சிலிர்த்தான் சுந்தர்...பேசிக்கொண்டிருந்த போனை தூக்கி எறிந்தான்...
ஷிட் ஷிட் ஷிட்....அய்யோ...
ஒரு சின்ன சந்தேகம் வர, வலது பக்கமும் கைவைத்து பார்த்தான் சுந்தர்...
அங்கேயும் ஸ்டிச் இருந்தது...
.
.
.
.
.
.