பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

Jeyamohan.jpg Jeyamohan image by ramnrom

பார்ப்பணீயம் பார் டம்மீஸ் இரண்டாவது வெர்ஷன் எழுதவேண்டும் என்று ரொம்பநாளாகவே தொண்டைக்குள் இருக்கிறது, ஆனால் நேரம் அல்லது சூழல் அமையவில்லை. முதல் பதிவு எழுதியபோது இருந்த கண்ணோட்டங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அதுபற்றி அதிகம் தொடப்போவதில்லை. இருப்பினும், பார்ப்பணரும் பறையரும் ஒரே தளத்தில் வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிறார் ஜெயமோகன்.

அதில் எத்தனை வீதம் உண்மை ? எத்தனை வீதம் பொய் ? ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதன் முன் சமீபகாலங்களில் ஊடகங்களில் என் பார்வையில் பட்டவைகளை பற்றி சொல்கிறேன்.

பார்வையில் பட்டது 1

ஹனிமூன் ஜோடிகள் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் பிரசன்னா என்ற நடிகர் ஒரு கேள்வி கேட்கிறார். கேட்பது, 40 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த அய்யங்கார் ஜோடி ஒன்றிடம் ( ஒரு அய்யர் ஜோடியும், ஒரு ஆதிக்க சாதி சோடியும் கூட அந்த நிகழ்ச்சியில்)

இ.வே.ராமசாமி நாயக்கர் கண்டறிந்த இயக்கம் எந்த இயக்கம் ? ஆப்சன் ஏ : வெள்ளையனே வெளியேறு இயக்கம். ஆப்சன் பி: தீண்டாமை இயக்கம் ஆப்சன் சி : ஏதோ ஒரு ஆப்சன்

பதில் சொல்கிறார் பாட்டி : தீண்டாமை இயக்கம்.

பிரசன்னா : ராமசாமி நாயக்கர் கண்டறிந்தது தீண்டாமை இயக்கம். லெட்ஸ் ஸீ. கரெக்டான்னு பார்ப்போம்.

BANG !!!!! GREEN LIGHT !!!!

தீண்டாமை இயக்கம். சரியான விடை !!! பாட்டியின் வாயெல்லாம் பல்.

பார்வையில் பட்டது 2

கண்ட கண்ட புள்ளைங்களோட ஆட்டோவுல ஈஷிண்டு போறல்ல. அதான் என்கிறது ஹமாம் என்ற நேர்மையான சோப்பின் விளம்பரம். கேரம் போர்டை அழுத்தி அடிக்கும் கிழவர் எல்லா விளம்பரங்களிலும் வருபவர்.

பார்வையில் பட்டது 3

ஏதோ ஒரு தமிழ் ஊடகத்தில் வரும் விளம்பரத்தில் பேசுபவரின் பெயர் இடது ஓரம் வெள்ளை எழுத்துக்களில். ஆனந்தி அய்யர்.

ஊடகங்களை ஆக்ரமித்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கும் பிராமணர் பறையர் அளவுக்கு வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களாம். என்ன கொடுமை சரவணன்.

ஜெயமோகனார் சொல்வது போல சாதி பெயர்களை பொது வெளியில் புழங்குவது தமிழகத்தில் உளச்சிக்கலாக இருந்தால் ஜாதி பெயர்களை புழங்கினால் ஜோட்டாலப்போம் என்று பெரியாரால் இனிஷியேட் செய்யப்பட்ட இயக்கத்தை ஸ்கிப் செய்து எப்படி ஒரு திராபை விளம்பரத்தில் ஆனந்தி அய்யர் என்று அவரது பெயரை குறிக்கிறார்கள்.

பார்ப்பனர்களும் பறையர்களும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள் என்கிறார். ஆமாம் பறையர்கள் சேரிகளில். பார்ப்பணர்கள் அக்கிரகாரத்தில். பறையர்கள் குடிசைகளில். பார்ப்பணர் அப்பாட்ர்மெண்டுகளில்.

பறையர் என்ற வார்த்தையே உறுத்தலாக இருப்பதால் தலித் என்று உபயோகப்படுத்தும் இக்காலத்தில் கூச்ச நாச்சமின்றி அந்த பதத்தை உபயோகிக்கிறார். பறையர் என்று திட்டுவது வன்கொடுமை என்றும் பத்தாயிரம் அபராதம் என்றும் இருக்கிறது இல்லையா ? அதனால் இண்டலிஜெண்டலியாக சொல்கிறார். பறையர் என்பவர் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களாம். ஆதாரம் இருக்கிறதாம். இருந்துவிட்டு போகட்டும். இன்றைய நிலை என்ன ? பறையர் என்ற பதம் உவப்பானதாக இருக்கிறதா ? தான் ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்தவன் என்பதையும் ஒரு மலையாள அப்பா கதை மூலம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றி வாசிப்பவரின் உள்ளே இறக்குகிறார்.

ஜெயமோகன் சொல்கிறார் : பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.

அனைந்து ஊடகங்களிலும் அவமதிக்கபடுவதாக நினைத்தால் பார்ப்பணர்கள் மட்டுமே சோப்பு போட்டு குளிப்பதாகவும் மற்றவர்கள் செங்கல் போட்டு குளிப்பதாகவும் காட்டும் விளம்பரம் எப்படி வரும் ? ஈவேராமசாமி நாயக்கர் என்று பெரியாரின் பெயரை வன்மத்தோடு சன் டிவியில் காட்டும் பார்ப்பணீயப்பாம்பு எப்படி ஊடகத்தின் உள்ளே நுழையும் ?

என்னைப்பொறுத்தவரை பார்ப்பணரையும் கூட அவர்களது சாதிப்பெயரை சொல்லி திட்டுவதை ஏற்கமாட்டேன். அதுவும் ஒரு வன்கொடுமையே என்பதில் இப்போது உறுதியாக நிற்கிறேன். ஆனால் என்னுடைய சாதி உயர்ந்தது, I feel Blessed என்று விஜய் டிவியில் சொன்ன ஐய்யங்கார் லாவண்யாவை செருப்பை கழட்டி அடிக்கவேண்டும் என்றும் சொல்கிறேன். பிரம்மனின் மண்டையிலிருந்து வந்தவர்கள் நாம் என்று குழந்தைகளுக்கு சுலோகம் சொல்லிக்கொடுத்து, உயர்சாதி பாசத்தை அவர்களுக்கு ஏற்றுவதையும் கண்டிக்கிறேன்.

சுகுணா திவாகர் சொன்னார். தான் ஆதிக்க சாதியில் பிறந்ததனால் குற்ற உணர்வில் இருப்பதாக. தேவை இல்லை. எந்த சாதியில், மதத்தில், உட்பிரிவில் பிறக்கும் பிறப்பை தீர்மாணிக்கும் நிலையில் குழந்தை இல்லை. ஆகவே அதனால் குற்ற உணர்ச்சியை கொள்ள தேவையில்லை. அப்படி பார்த்தால், ரொட்டி துண்டுக்காகவும், அழகிய வெள்ளைக்கார பிகர்களுக்காகவும், அரசியல் ஆட்சி அதிகாரம், கவர்னர் சர் பதவி, இங்கிலாந்து படிப்பு என்றெல்லாம் ஆசை காட்டி கிறித்தவ மதத்துக்கு மாறிய, மாற்றப்பட்ட என் பாட்டன் பூட்டனுங்களுக்காக நான் எந்த மசிருக்கு வருந்தவேண்டும் ? இயேசுவே ஒரு டம்மி பீசு...

பார்ப்பணரை சாதி பெயரை சொல்லி திட்டுவதன் மூலமாக சமூக நீதி போராளிகள் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அதைவிட சமூக நீதிக்கு செய்யவேண்டிய பல வேலைகள் காத்திருக்கின்றன. பெரியார் காலத்தில் இருந்த அளவுக்கு பார்ப்பண ஆதிக்கம் இன்றைக்கு இருக்கிறதா ? பாம்பை பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி என்ற அளவுக்கு மனித உரிமைக்கு மாறாக செயல்படவேண்டுமா என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

பார்ப்பணரை வெறுமனே நீ பார்ப்பான் அதனால் நீ இழிவு செய்யத்தக்கவன் என்று சொல்லி இழிவு படுத்துவதன் மூலம் சமூக நீதி போராளிகள் சமூக நீதி போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள். முக்கியமான பிரச்சினைகளில் எக்கேடோ கெட்டுப்போ என்று அவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.

தனிப்பட்ட முறையிலான அவர்களது அடையாளங்கள், மொழி போன்றவற்றை கடிப்பதை விட்டுவிட்டு, சமூகநீதி போராட்டம் குவியும் மையம் அதுவல்ல என்று உணரவேண்டும். உண்மையில் திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போனதால் சமூகநீதியை பொறுத்தவரை நாம் எவ்வாறானான முன்னேற்றங்களையும் அடையாமல் இன்னும் ஊருக்கு வெளியே சேரியும், இரட்டை குவளை முறையும் இருப்பதே இதன் சாட்சி. தி.கவில் வாரிசு அரசியல், வெறும் ஆசிரியர் புகழ்மாலையாக விடுதலை, பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியை துரோகி என்று வசைபாடுதல், சன் டிவியிலேயே பெரியாரை இழிவு செய்ய அணுமதித்தல், ஒரு குடும்பம் தமிழகத்தை பங்கு போட்டு பாகம் பிரித்தல் என்று பல பிரச்சினைகள் உண்டு (கலைஞர், ஜெ என்று இருவரையும் இங்கே பொருத்தலாம்).

இருந்தும் தி.மு.க அரசு ஒரு சில நல்ல காரியங்களை முடிந்த அளவு நிறைவேற்றுவதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சமூக நீதியை பொறுத்தவரை, அமைதியாக ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள பழகிவிட்டார்கள். அல்லது இப்போதைக்கு முடிந்தவரை சுருட்டுவது தான் முக்கியம் என்று பிஸியாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதனால் இந்த அறிவுஜீவி கும்பல், தான் கக்குவதை அப்படியே நம் வாயின் உள்ளே தள்ள முனைவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா ?

க்ரீமி லேயர் என்று ஒரு விஷமமான பிரச்சாரம். க்ரீமி லேயரில் முதல் தலைமுறையில் தாசில்தார் ஆன ஒருவனின் சுற்றம் நட்பு குடும்பம் எத்தனை பேர் அவர்களும் மணியக்காரராக அரசு ஊழியராக இருக்கிறார்கள் ? ஆனால் வங்கிப்பணியை இழக்கும் ஒரு உயர்சாதி பார்ப்பணரின் மச்சான் அமெரிக்காவில். மாமா ஐரோப்பாவில். அத்திம்பேர் ஆப்ரிக்காவில். சட்டகர் ஐ.ஐடியில் என்று அனைவரும் கல்லா கட்டும் சூழலில் க்ரீமி லேயர் காரன் படித்துவிடகூடாது, உயர் பதவி அடையக்கூடாது என்று எவ்வளவு வன்மம் தெறிக்க பார்ப்பணீய ஆங்கில ஊடகங்கள் / இந்து ராம் போன்ற கும்பல் கச்சை கட்டுகிறது ?

ஜெயமோகன் கூற்றுப்படி, பறையரும் பார்ப்பணரும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் இல்லையா ? ஏன் தலித் மற்றும் பழங்குடியினரை FC என்று சொல்லிவிடக்கூடாது ? ஜெயமோகன் கடைசீயாக எந்த சேரியில் எந்த குடிசையில் ஒரு ரூபாய் அரிசியும் கொஞ்சமே கொஞ்சம் பருப்பும் போட்ட சாம்பார் சாதம் சாப்பிட்டார் ?

சாதி பேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாக பேசாமல் இருப்பது மட்டுமே என்கிறார். ஆக அவர் சொல்வது, எல்லோரும் அவன் அவன் சாதியை பேசுங்கள். தலித் என்பவர்களை இன்னும் சாதியை சொல்லி இழிவு படுத்துங்கள் என்பதே ! இது போன்ற முட்டாள்தன இந்துத்துவ புரட்டுகளை கண்டிக்க சாரு சொல்வதைபோல விஷ்ணுபுரம் படிக்கவேண்டும் என்றில்லை. படிக்காமலேயே துப்பலாம்.

Comments

Anonymous said…
என்னையே டம்மி பீஸ் என்ற பிறகு ஜெயமோகன் எம்மாத்திரம்? உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்கிறேன் உன்னிடம் செந்தழல் அதிகமானால் வானத்திலிருக்கும் பரமபிதாவிற்கு சூடு வந்து உன்னை உண்டு இல்லை என்றாக்கிவிடக்கடவாராக.
இவனுங்கெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள்னு சொல்லுறதுக்கே அவமானமா இருக்கு?

இதுல இவனுக தமிழில் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லைனு பொலம்பல் வேற...
க்கும். அவர் சூட்டையே மக்தலேன் மரியாளிடம் தணித்தவர் !!
சொம்பு said…
சாருதான் விளக்கு புடிச்சிகளோ....
ஈசு தமிழ் said…
//இவனுங்கெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள்னு சொல்லுறதுக்கே அவமானமா இருக்கு?//

மொதல்ல அவர் என்ன எழுதிருக்காருன்னு படிச்சிங்களாப்பா ?

சாதி பேசலாமா?
http://www.jeyamohan.in/?p=7305

சாதியுடன் புழங்குதல்…

http://www.jeyamohan.in/?p=7317

சும்மா வெட்டி பேச்சு பேசாம படிச்சிட்டு வாங்க,

//ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களாக உணராத சாதிகளே இல்லை என்பதுதான். தலித் சாதிகள் அப்படி உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது.//

//தமிழ்நாட்டின் மொத்த அரசியல்-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே சொல்வார்கள்.//

//பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.//

//பிள்ளைமாரும் முதலியாரும் தங்களை அரசியலதிகாரமும் நில உரிமையும் பறிக்கப்பட்டவர்களாக நினைக்கிறார்கள். அத்தனை சிறிய சாதிகளும் ‘சிறுபான்மை உளச்சிக்க’லில் இருக்கிறார்கள். முஸ்லீம்களோ இந்தியாவில் ‘வாழ்வுரிமை’ கோரி மாநாடுகள் நடத்துகிறார்கள்.//

பிளாக்கில் எவன் என்ன சாதி என கண்டுபிடிப்பையே முழுநேர வேலையாக கொண்டுள்ளவர்கள் எல்லாம் சாதி , ஜெயமோகன் என கொளம்பி விடுவதன் கொடுமை ?
ராஜன் said…
ஜெயமோகன் அவ்வப்போது, இதுமாதிரி எழுதி அதற்கு வரும் எதிரிவினைகளை வைத்து தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்வார் போலும். எதிர்வினைகள் இல்லை எனில் வாசகன் சொரணையற்று போய்விட்டான் என்று அப்படியே இந்துத்துவ வேலைகளை ஆரம்பித்து விடுவார். இதெல்லாம் போர் தொடுக்க நேரம் பார்க்கும் வேலைதான்.
Anonymous said…
இந்த அந்தோனிச்சாமியோட கொசுக்கடி தாங்க முடியல ராசா...
இவன பதிஉலகத்துல இருந்து துரத்துனா ஆயிரம் பொற்காசு இலவசம்...
Anonymous said…
ரவி பாய், நீ என்னைக்காவது ஒரு பார்ப்பானப் பத்தி யாராவது தப்பா எழுதுனா அப்ப வந்து ஒரு வார்த்த கேளு...

டேய் அவனா நீயி...
Jawahar said…
59ரவி,

இரண்டொரு ரியாக்‌ஷன்கள்;

நாடே மஹாத்மா என்று அழைத்தவரை காந்தியார் என்று அழைத்தவர்கள் உண்டு. அதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப்போலவே ஈவேரா என்கிற விளிப்பில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜனாதிபதியையும், பிரதமரையும், முதல்வர்களையும் கூடப் பத்திரிகைகளும் ஊடகங்களும் பேர் சொல்லித்தான் குறிப்பிடுகின்றன.

அடுத்தது ஹமாம் சோப். சுத்தக் குறைவை சுட்டிக்காட்டத்தான் கண்ட கண்ட குழந்தைகள் என்று சொல்கிறார்கள். சுத்தக் குறைவால்தான் சொறி வரும் என்பதை வலியுறுத்துகிறார்கள். அதை வலுக்கட்டாயமாகத் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

நன்றி,
Jawahar said…
ரவி,

இரண்டொரு ரியாக்‌ஷன்கள்;

நாடே மஹாத்மா என்று அழைத்தவரை காந்தியார் என்று அழைத்தவர்கள் உண்டு. அதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப்போலவே ஈவேரா என்கிற விளிப்பில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜனாதிபதியையும், பிரதமரையும், முதல்வர்களையும் கூடப் பத்திரிகைகளும் ஊடகங்களும் பேர் சொல்லித்தான் குறிப்பிடுகின்றன.

அடுத்தது ஹமாம் சோப். சுத்தக் குறைவை சுட்டிக்காட்டத்தான் கண்ட கண்ட குழந்தைகள் என்று சொல்கிறார்கள். சுத்தக் குறைவால்தான் சொறி வரும் என்பதை வலியுறுத்துகிறார்கள். அதை வலுக்கட்டாயமாகத் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

நன்றி,
சில இடங்களில் மாறுபடுகிறேன்.சாதிகள் அவ்வளவு எளிதில் அழியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை, ஆனால் இந்த சாதியின் பிறந்ததால் உயர்வானவன் என்ற எண்ணம் லாவண்யா
பறைச்சியாருக்கு எப்படி உண்டாக்கப்போறார் என்பது பற்றி ஜெயமோகன் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் கூறலாம்.

இட ஒதுக்கீடு 69 சதவீதத்திற்குள் கிரிமீ லேயர் தேவை என்பது என்கருத்து, 69 சதமும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பலனனையாதவர்களுக்கு முன்னுறிமை கொடுக்கப்படவேண்டும், இது சாத்தியமானதே,ஆனால் அப்போது முதல்முறை பலனாளிகளை பார்த்து நம்மைப்போன்ற அறிவு ஜீவிகள் அவர்களுக்கு என்னைவிட அறிவுக்குறைவு என்று வெட்கமில்லாமல் தகுதி பற்றி பேசுவோம்
rk guru said…
இவர்கள் எல்லாம் தமிழுக்கே கொடுமை
Anonymous said…
BULLSHIT...

"Attraction seeking"
ஈசு தமிழ் said…
//ஆனால் இந்த சாதியின் பிறந்ததால் உயர்வானவன் என்ற எண்ணம் லாவண்யா
பறைச்சியாருக்கு எப்படி உண்டாக்கப்போறார் என்பது பற்றி ஜெயமோகன் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் கூறலாம்.//

திரு குடுகுடுப்பை ,


ஜெயமோகன் தன் கட்டுரையில் எங்கே அப்படி சொல்லியுள்ளார் என பார்த்து சொல்லவும் .
Anonymous said…
// செந்தழல் ரவி said...

க்கும். அவர் சூட்டையே மக்தலேன் மரியாளிடம் தணித்தவர் !!//

அந்தோனிச்சாமி, நீ பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறிய ஒருவன் என்பதை நிரூபித்து விட்டாய்.

பகுத்தறிவு வாதம் பேசுமுன் முதலில் உன் பெயரை மாற்று.

நீ சொல்லும் சைபர் க்ரைம் உன் மீதும் பாயும் நாள் வெகு தூரமில்லை.
Anonymous Anonymous said...

// செந்தழல் ரவி said...

க்கும். அவர் சூட்டையே மக்தலேன் மரியாளிடம் தணித்தவர் !!//

அந்தோனிச்சாமி, நீ பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறிய ஒருவன் என்பதை நிரூபித்து விட்டாய்.

பகுத்தறிவு வாதம் பேசுமுன் முதலில் உன் பெயரை மாற்று.

நீ சொல்லும் சைபர் க்ரைம் உன் மீதும் பாயும் நாள் வெகு தூரமில்லை.
//

வார்த்தைக்கு வார்த்தை, ஸ்மார்ட்டா இருக்கே ரவி...

என்ன நடக்குது?
பட்டா.

அனானி கமெண்டில் வருபவரை ஆபாசம் பேசுபவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே அவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தண்டனை.
Anonymous said…
Ravi domaru,
paradesi baadu sommbu payale koovagathula iruka vendiya nayda neeye
aduthavanga samiya pathi eluthanye atha un veetla irukara ladiesta poye kammi, athuvum un pinnotatha poi kamida pottai avanga serupa kalati adipagnada unnai.
Anonymous said…
>>>>>க்ரீமி லேயர் என்று ஒரு விஷமமான பிரச்சாரம். க்ரீமி லேயரில் முதல் தலைமுறையில் தாசில்தார் ஆன ஒருவனின் சுற்றம் நட்பு குடும்பம் எத்தனை பேர் அவர்களும் மணியக்காரராக அரசு ஊழியராக இருக்கிறார்கள் ? ஆனால் வங்கிப்பணியை இழக்கும் ஒரு உயர்சாதி பார்ப்பணரின் மச்சான் அமெரிக்காவில். மாமா ஐரோப்பாவில். அத்திம்பேர் ஆப்ரிக்காவில். சட்டகர் ஐ.ஐடியில் என்று அனைவரும் கல்லா கட்டும் சூழலில் க்ரீமி லேயர் காரன் படித்துவிடகூடாது, உயர் பதவி அடையக்கூடாது என்று எவ்வளவு வன்மம் தெறிக்க பார்ப்பணீய ஆங்கில ஊடகங்கள் / இந்து ராம் போன்ற கும்பல் கச்சை கட்டுகிறது ?


தாசில்தாரோட மொத்த குடும்பமும் தாசில்தார் ஆகணும். ஆனால் பீ வழிக்கிறவன் வழிச்சிட்டே இருக்கணும். ஒருத்தனை படிக்க போட்டால் மொத்த குடும்பத்தை மேலேத்துவோம் என்கிற எண்ணம் இல்லை.

எக்கேடோ கெட்டு தொலையுங்க. உங்களுக்கு கொடுக்கிற ஒதுக்கீடு கொடுத்தாச்சு. அதை நீங்க ஒரு குடும்பமே அனுபவிச்சால் அனுபவி, இல்லை உன் சாதியில் ஏழைக்கு கொடுத்தாலும் சரி. எங்களுக்கு என்ன அக்கறை?.

இராசேந்திரன்
sweatha said…
"நடிகனாக பிறந்தவன் ஏன் ஆளக்கூடாது அவனும் ஒரு குடிமகன்தனே?" என்று ஒரு அரசியல் நடிகர் கேட்டார். உண்மைதான் தமிழகத்தில் பிறந்த , பிறவாத எலிகளுக்கும் கொசுக்களுக்கும் கூட தமிழகத்தை ஆள்வதற்கு உரிமையிருக்கிறது. என்றைக்கு தமிழன் நாடக கொட்டகைகளிலும் , திரைப்பட அரங்கினுள்ளும் நடந்த கதையை பார்த்து கை தட்டி சிலாகித்தனோ அன்றே அவன் தன் உரிமைகளையும் , உடமைகளையும், உடல் உழைப்புகளையும் உடல் நரம்புகளால் கட்டி நடிக சமுதாயத்துக்கு தலையணை செய்து கொடுத்துவிட்டான்....

http://www.jeejix.com/
Ananth said…
Ravi,

First abt me. I am not a brahmin. Next I never differentiate anyone by caste. I always treat human by his character not his caste certificate.

now on your comments:

This is very sensitive issue. Just don't see thru cast. See it as a social issue. I am not against the 69%. It is a must to give to bring up and make every one common. But how to implement? I am sure the current way on implementation is not correct. If the govt release any statistics on who got the benefits from SC/ST(sorry only for comment purpose).Only a selected families would have got the benefits by generation after generation. Instead they can stop the benefits for max of 2 person per generation. Else this will take another 500 years to complete and by then this may need to repeat for FC/BCs. You restrict the beneficiaries by family and let the benefits spread to more. Our politicians won't do this as they want those people to be like this. Else why it is taking so many years for Karu and JJ to eradicate human cleaning of shit holes.

Ignore a few like Jayamohan, K.Veeramani etc. Only normal man only can bring the change. not the govt. As a individual, treat other human with passion. never ask some one what is his caste.... All men and woman have the similar body and parts. nothing xtra if you are FC or nothing lower if you are not.

Thanks and Regards
Ananth Ramachandran
இளையதளபதி ஜோசப் விஜய் ஒரு பறையர் இனத்தை சார்ந்தவர் என்பதை மறந்து விடாதீர்கள்.
மனிதனாக பிறந்த அனைவரும் உயர்ந்தவர்களே Excuse SC/ST
எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணப்பனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள். பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற இனத்தில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", வள்ளுவப் பறையர்களின் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் SC to BC ஆக Convert ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக Convert ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை சான்று ta.wikipedia.org/wiki/பறையர், அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று ta.wikipedia.org/wiki/பறையர்
இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய் RC Christian, நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் RC Christian அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.
இந்து கோவில்களின் நாயன்மார்களின் ஒருவனார நந்தனார் சிலை இருக்கும் பொழுது அதை மட்டும் தொடாது மற்ற 62 நாயன்மார்களையும் வணங்கி விட்டு செல்லட்டும். அல்லது பறையனை பார்பானின் ஒரு உட்பிரிவாக கதை கட்டி விடட்டும். கதை கட்டுவது இவர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை, அதையும் 10 முட்டாள்கள் உண்மை என்று தான் கூறுவார்கள் ஒரு டொங்கு.முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும் பொழுது....................... இப்படி தான் பறையன் உருவானான்.
மாட்டுக்கறி தின்கின்ற ஜாதி எல்லாம் தீண்டத் தகாதவர்கள் என்றால் கேரளா வில் மாட்டுக்கறியும், எருமையும் தான் திங்கின்றார்கள்.
பறையர்களையும், பள்ளர்களையும் மட்டம் தட்டுவதே பிற இனத்தவர்களின் வேலைகளாக இருக்கின்றது. ஒதுங்கி போக தான் இவர்கள் கிறிஸ்துவத்தில் சேர்ந்து இருக்கின்றார்கள் ஆனாலும் அங்கும் பிற இனத்தவர்கள் நுழைந்து விட்டு அதிகமான dominate செய்து பல்லு பறையர்களை புறக்கநிகின்றார்கள். மறைமுகாக செய்தாலும் நேரடியாக செய்தாலும் தீண்டாமை என்பது குற்றம் தான். இந்த குற்றத்தின் கீழ் தண்டனை பெற தகுதியான இடம் முதலில் கிறிஸ்துவ தேவாலயங்கள் அதன் பின் தான் இந்துக்கள்.
பண்டைய காலத்தில் அடக்குமுறை ஜாதிகளுக்கு அஞ்சி தலித் திராவிடர்கள் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியரகவும் மதம் மாறி விட்டனர். கிறிஸ்துவத்தில் இருக்கின்ற வருமானம் மற்றும் சலுகைகளை பார்த்து தலித்துகளுக்கு இவை கிடைக்க கூடாது என்று பிற ஜாதியினர் தலித் மக்களை புறக்கணிக்க மதம் மாறினார்கள் இதுவரை அந்த காரியத்தை தான் செம்பட செய்து கொண்டு இருகின்றார்கள். தேவாலயங்களில் நடப்பது பூசை இல்லை அது மறைமுகமான ஜாதி கூட்டம் தான். கிறிஸ்துவ நாடார்கள் ஒரு கூட்டம் தொடக்கி ஜபம் செய்தால் "கிறிஸ்துவ நாடர்களின் விசுவாசிகள்" மட்டும் தான் போவார்கள் அவர்களுக்கு சிறந்த சலுகைகள் செய்து தரப்படும். பறையர்,பள்ளர் pastor கள் ஜபம் நடத்தினால் அங்கு கிறிஸ்துவ நாடார்கள், கிறிஸ்துவ பிள்ளைகள், கிறிஸ்துவ முதலியார்கள், etc., செல்ல மாட்டார்கள். "கடவுள் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் பூசை செய்பவன் ஒரு ஜாதியில் இருந்து பிறந்தவன் தானே". இதில் பெருமை மிக்க விஷயம் கேரளா கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இந்தியாவில் எங்கும் ஜாதி இல்லை அவர்கள் "கேரளா கிறிஸ்துவர்கள்" என்று பொதுவாக அழைக்கப் படுகின்றர்கள்.
இஸ்லாமியத்திற்கு மாறின தலித்திற்கு எந்த ஏற்ற தாழ்வுகளும் இன ரீதியாக இல்லை. அவர்கள் இஸ்லாமியர்களாக தான் வாழ்த்து வருகின்றார் தற்பொழுது புதிதாக தலித்-இஸ்லாமியர்கள் என்ற சொல் வர காரணம் என்ன ஏதாவது கல்வெட்டா??
Chan mos said…
Vazhga tamil...

Popular Posts