தேடுங்க !

Friday, July 23, 2010

சவுக்கு சங்கர் கைது : அராஜக காவல்துறைவளைத்து பிடித்து ஒரு பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பத்திரிக்கையாளர், வலைப்பதிவர். அவர் சவுக்கு என்னும் வலைப்பதிவை நடத்தும் திரு சங்கர்.நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் இது நடந்தேறியிருக்கிறது.

இது குறித்து, பிரபல பத்திரிக்கைகளில் குப்பை கொட்டும் சக வலைப்பதிவர்களோ, பத்திரிக்கையாளர்களோ, மூச்சு விடக்காணோம். அதிகாரத்தில் இரு அல்லது அதிகார மையத்துக்கு அல்லக்கையாக இரு என்பது போன்றதொரு ஸ்டேட்டர்ஜியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பதிவர் சவுக்கு சங்கர் செய்த குற்றம் என்ன ? அவரது சமீபத்திய பதிவில் மிக முக்கியமான இரு காவல் அதிகாரிகளை பற்றி ஆதாரங்களோடு சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு பொது நல வழக்காக தொடர்ந்திருப்பாராயின் இது சட்ட ரீதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தமே இல்லாத, ஜாமீன் இல்லாத ஒரு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டு பொய் எனில் சவுக்கு சங்கர் மீது மானநஷ்ட வழக்கு தொடரலாம். அல்லது பொது மக்கள், இந்த குற்றச்சாட்டு பற்றி மேல் விவரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரம் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டறியலாம். இப்படியான சட்ட ரீதியான செயல்கள் இருக்கும்போது சவுக்கு சங்கர் சம்பந்தபடாத ஒரு பொய் வழக்கின் மூலம் அவரை கைது செய்வது அநீதியாகும்.

இது குறித்து, மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்கவேண்டும். மாநில அரசுக்கும், எதிர் கட்சிக்கும், மற்ற அமைப்புகளுக்கும் இது குறித்து தகவல் அளித்து, சவுக்கு சங்கரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையுமே தவிர அதிகரிக்காது !! வலைப்பதிவர்கள் தங்களால் ஆன வகையில் இதனை பதிவு செய்யவேண்டும்.

15 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கண்டனங்கள்!
விமர்சனத்தை கருத்தால் எதிர் கொண்டிருக்க வேண்டும்!

உடன்பிறப்பு said...

சவுக்குக்கு ஆதரவாக எந்த எதிரிக்கட்சியும் வராது அதற்கான காரணம் ஒன்றும் பெரிய ரகசியமில்லை

குழலி / Kuzhali said...

சவுக்கு சங்கர் மீது பொய்வழக்கு போட்டு கொடுமைபடுத்துவதற்க்கு எனது கண்டனங்கள்...

உடன்பிறப்பு said...

சவுக்கு தளத்தில் ராமதாஸ் பற்றிய தொடரை வாசித்து மகிழுங்கள்

சுரேஷ் said...

யார் வேண்டுமானாலும், யார் மேலும் பொய் வழக்கு போட முடியும், ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

செந்தழல் ரவி said...

உடன்பிறப்பு, நீங்கள் இந்த பொய் வழக்கு கைதை நியாயப்படுத்துகிறீர்களா ?

rouse said...

வன்மையாக -கண்டிகீரன்

-த சேகர்

rouse said...

இப்போது பதிவர் சங்கம் இல்லாததால் யார் என்ன செய்வது? என்று தெரியவில்லை
பதிவர்களுக்கு என்று சங்கம் -ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது !!

எல்லா பதிவர்களும் இதை பற்றி எழுதினாலே -இதற்கு முடிவு வந்துவிடும் -சவுக்கு கைதை அணைத்து பதிவர்களும் கண்டித்து எழுத வேண்டும்

-த சேகர்

அ.வெற்றிவேல் said...

பதிவுக்கு வாழ்த்துககளும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றிகளும்..
சங்கர் ஜாமீனில் வெளிவந்து விட்டதாக செய்தி வந்துள்ளது

அன்பின் வெற்றி

சின்னக்குட்டி said...

கண்டணங்கள்

ரோஸ்விக் said...

// உடன்பிறப்பு said...
சவுக்குக்கு ஆதரவாக எந்த எதிரிக்கட்சியும் வராது அதற்கான காரணம் ஒன்றும் பெரிய ரகசியமில்லை
///

அவர் ஒரு சாராரை மட்டும் தாக்கி எழுதுவதில்லை. அவரின் கட்டுரைகள் பல சில ஆதாரங்களுடனே வெளிப்பட்டிருக்கின்றன.
அது உண்மையில்லை என்றால் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாமே!
பெரும்பாலான அனைத்துக் கட்சியனரும், அதிகாரிகளும் கொள்ளைக்கூட்டம் எனும்போது எப்படி அவர்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்க இயலும்... அதுவும் பத்திரிக்கையாலர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாத போது...

ரோஸ்விக் said...

கோழைத்தன நடவடிக்கைகளுக்கு எனது கண்டனங்களும்....

Anonymous said...

Good. First time i am reading an useful post in your blog. Keep it up.
Sign of some positive changes from your side.

Bloggers, join together and fight with unity.

செந்தழல் ரவி said...

தொடர்புகொண்ட, ஆதரவளித்த, வாக்களித்த, பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

sweatha said...

"நடிகனாக பிறந்தவன் ஏன் ஆளக்கூடாது அவனும் ஒரு குடிமகன்தனே?" என்று ஒரு அரசியல் நடிகர் கேட்டார். உண்மைதான் தமிழகத்தில் பிறந்த , பிறவாத எலிகளுக்கும் கொசுக்களுக்கும் கூட தமிழகத்தை ஆள்வதற்கு உரிமையிருக்கிறது. என்றைக்கு தமிழன் நாடக கொட்டகைகளிலும் , திரைப்பட அரங்கினுள்ளும் நடந்த கதையை பார்த்து கை தட்டி சிலாகித்தனோ அன்றே அவன் தன் உரிமைகளையும் , உடமைகளையும், உடல் உழைப்புகளையும் உடல் நரம்புகளால் கட்டி நடிக சமுதாயத்துக்கு தலையணை செய்து கொடுத்துவிட்டான்.

http://www.jeejix.com/