ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். நாங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி கொஞ்சம் கடினமானது என்றபடியால் அதிக பணிசுமை ஆகிவிடும் நாட்களில் பல்கலைகழக ஆய்வகத்திலேயே உறங்குவதுண்டு. இன்றும் அப்படித்தான். பல முறை தோல்விகளில் முடிந்த எங்களது ஆராய்ச்சி பணியில் ஒரு முறை கூட நான் சலிப்படைந்ததில்லை.
 
அதில் என் சுயநலனும் உண்டு. அல்லும் பகலும் பாடுபட்டு இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடம் இருந்து நிதி உதவி மற்றும் பணி வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தங்கை திருமணம், அம்மாவுக்கு உடல் நலன் சிகிச்சை, காதலியுடன் திருமணம் என்று என் ஆயிரம் கன‌வுகள் நிறைவேறும்.
 
ஆய்வகத்தில் எங்கள் இயந்திரத்திலேயே நான் உறங்கும் நாட்களில் சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். அங்கே குளிக்கும் வசதியில்லை. அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் ஒரு தேநீரும், முகம் அலம்ப கொஞ்சம் தண்ணீரும் மீண்டும் பணியை துவக்க போதுமானது. சாலையில் இறங்கி நடந்தேன். இன்றைக்கு எல்லாமே புதிய‌தாயிருக்கிற‌து.
 
தேநீர் க‌டையில் பெரிதாக கூட்டமில்லை.வ‌ழ‌க்க‌மான‌ தேநீர் போடும் ஆசாமி மாறியிருந்தார். ச‌ட்டைபையை தொட்டுப்பார்த்தேன். கொஞ்ச‌ம் சில்ல‌றை இருந்த‌து.
 
நான் கேட்ப‌த‌ற்கு முன்பே ? டீயா என்றார். கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மாக‌ த‌லையாட்டினேன்.பையில் இருந்து சில்ல‌றையை எடுத்து கொடுத்தேன்.
 
சார் இன்னா காமெடி ப‌ண்றியா, இந்த‌ பொத்த‌ கால‌ணா எல்லாம் இப்ப‌ வாங்குற‌தில்லை, அஞ்சு ரூபா கொடு சார் என்றார் நீர்க‌டைக்கார‌ர். விதிர்த்து நின்றேன் நான்.
 
ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு புத்த‌க‌ம் மூன்று கார்த்திகை மாத‌ம் ஏழாம் நாள் ஆங்கில‌ வ‌ருட‌ம் 1933.

Comments

Time travel? Interesting...
Shiva said…
ரவி, பதிவுகள் போடும்போது நீங்கள் இருக்கும் நாட்டின் பலவிதமான புகைப்படங்களையும் போடுங்கள். அப்போதுதான் நாங்களும் அந்த நாட்டை பார்த்த மாதிரி இருக்கும்.

Popular Posts