
சிவப்பு கொடியுடன் ஓடிவரும் இரண்டு இளைஞர்களை பார்த்து அதிர்ந்த நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
தண்டவாளம் உடைஞ்சு கெடக்குதுங்க !!!
அடுத்த நாள் நாளிதழ் செய்தி. நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரெயிலை சாதுர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த வாலிபர்கள். ரயில்வேயில் வேலை வாய்ப்பு. அமைச்சர் அறிவிப்பு.
அடுத்த நாள் இரவு டீக்கடையில்.
தப்பில்ல. எதுவும் தப்பில்ல என்றான் சுகுமார்.
என்ன தோழா சினிமா டயலாக் பேசுற ?
இது சரவணன். இப்போதைய அரசு ஊழியர். ரயிலை நிறுத்திய இளைஞர்களில் ஒருவன்..
புன்னகைத்தான் தோழன் சுகுமார்.
ஆமாம், நாற்பது ஆண்டுகள் லைன் மேனாக இருந்த உன்னோட அப்பாவை தொழில்நுட்ப காரணங்களுக்காக நடந்த விபத்துக்காக பணியை விட்டு டிஸ்மிஸ் செய்தாங்க இல்லையா ? அதனால் உன்னுடைய வாரிசுரிமை பணியும் கிடைக்காம போச்சு. தண்டவாளத்தை தண்டவாளத்தால தானே அடிக்கனும் ?
இருவரும் சேர்ந்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்...!!
7 comments:
நல்லா இருக்கு
அழகான சின்னஞ்சிறிய கதை
நல்லாயிருக்கு குட்டிக் கதை..!
வெல்கம் பேக், நீண்ட நாட்களுக்கு பிறகு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் நட்பு வட்டாரத்திற்கும் என்னுடைய உளம் கனிந்த மனமுவர்ந்த இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தல, பை தி வே,
கதையின் நாட் சமீப காலமாக நடப்பதுதான். தெரியாதவர்களுக்கு நீங்களே இப்படி ஒரு யோசனையை கொடுக்கிறீர்கள்.
அழகான சின்னஞ்சிறிய கதை .
Post a Comment