உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!

ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...

பல்ப் நெம்பர் 1:

சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...

ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..

அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..

உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..

கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..

அவ்வ்வ்..

அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...
பெண்ணியம் !!

ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...

விஷயம் அதுவல்ல..

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senthazalravi)

ஒரு பெண் தன்னை பெண்ணாக உணராமல் இருந்தாலே பெண் சுகந்திரம் !

 ஒரு தோழரிடம் இது பற்றி விரிவாக சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்..

 அலுவலகத்தின் பின்புறம் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள்..

 பெண்ணுக்கு கணுக்காலுக்கு மேலே ஏதோ அலர்ஜி போலிருக்கிறது..பேண்டை உயர்த்தி ஆண் அலுவலக தோழர்களிடம் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார்..

 இந்தியாவை நினைத்துக்கொண்டேன். இந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ள முடியுமா ? உடனே அயிட்டம் என்றல்லவா பெயரை சூட்டியிருப்பார்கள் நமது ஹிப்போக்கிரட்ஸ்..

 இது தான் பெண் சுகந்திரம்..பெண் என்பதால் இயல்பாக நடந்துகொள்ள முடியாத இந்தியா போன்ற நாட்டுக்கும், ஒரு வளர்ந்த நாட்டுக்கும் இடையேயான வித்யாசம்..

 பேஸ்புக் திமுக

 கலைஞரை அடுத்து, ஸ்டாலினும் சமூக ஊடகங்கள் பக்கம் ஒதுங்கியதால் இப்போதெல்லாம் பேஸ்புக்கில் தீவிர திமுகவினர் கும்பல் அதிகமாயிட்டது..

 சும்மாங்காச்சுக்கும் எல்லாத்துக்கும் கலைஞர்தான் காரணம் என்று சொல்லும் 2009 கும்பல் மரண அடி வாங்க ஆரம்பித்துள்ளது...

 வரலாறு புவியியல் எதுவும் தெரியாமல் வைகோ / சீமான் போன்ற டம்மி பீசுகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கி பேசுபவர்கள் குமுறி எடுக்கிறார்கள் திமுகவினர்...

 ஸ்ப்பா..பாவம் குழந்தைகள்...திருந்தினால் சரி..

சரி மற்ற பத்திகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Comments

Popular Posts