இரும்பு பாத்திரத்தில் சமையல். அல்லது சமையலில் இரும்பு மீன்...


கம்போடிய மக்கள் இரும்பு சத்து குறைபாடு மற்றும் அனீமியாவில் தவித்தபோது கனடாவை சேர்ந்த ஹெல்த் ஒர்க்கர்கள் / Guelph பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் சார்லஸ் குறிப்பாக - அந்த ரத்த மாதிரிகளை சோதித்து இரும்பு பாத்திரம் / கேஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமையல் செய்தால் அவர்களுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கும் என பரிந்துரைத்தார்.
ஆனால் இந்த முயற்சி செயல் வடிவம் பெற தடையாக இருந்தது அனைவருக்கும் பாத்திரம் கொடுப்பதற்கான பட்ஜெட். காரணம் சுமார் 60 சதவீத கம்போடிய பெண்களுக்கு பாத்திரங்கள் கொடுக்க எவ்வளவு செலவாகும் ?
டாக்டர் சார்லஸ் முதலில் தாமரை வடிவத்திலான இரும்பு செய்து அதனை உணவு சமைக்கும் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் போதும் என கிராமத்தினரிடம் தாமரையை வழங்கினார். ஆனால் அது போதுமான வரவேற்பை பெறவில்லை. அதன் பின் கிராம பெரியவர்களிடம் உரையாடி - மீன் வடிவத்தை மக்கள் அதிஷ்டமாக கருதுவார்கள் என கண்டறிந்தார்..
அதன்பின் செப்டம்பர் 2008 முதல் பிப்ரவரி 2009 வரை சோதனை முறையில் இரும்பு மீன் கொடுக்கப்பட்டு அது சமையல் பாத்திரத்தில் போட்டு சமைக்கும்படி வலியுறுத்தப்பட்டது..அதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மேலும் ஒரு ஆண்டுகள் வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
12 மாதங்களில் இரும்பு சத்து குறைபாடு / அனீமியா 43% குறைந்தது கண்டறியப்பட்டது !!!! ஆச்சர்யம்தானே !!!
நான் பரிசோதித்து பார்க்கும் பெரும்பாலான மருத்துவ சோதனை முடிவுகளில் இரும்பு சத்து குறைபாடு உள்ளது. பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. இது அனீமியா, உடல் சோர்வு, பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சனை போன்றவை வரலாம்..
தீர்வுகள்:
இரும்பு பாத்திரத்தில் சமைக்கவும்.
காஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமைக்கவும்.
கம்போடியாவுக்கு டூர் போய் வருபவர்களிடம் லக்கி பிஷ் வாங்கி வர சொல்லவும்.
உள்ளுறுப்பு மாமிசம், ரத்த பொரியல் சாப்பிடவும்.
மேற்சொன்ன எதுவும் முடியவில்லை என்றால் அயர்ன் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவும் !
மற்றபடி ஒரு பாப்புலரான வதந்தி : பேரிச்சம் பழத்தில் நிறைய இரும்பு சத்து உள்ளது என்பது. பேரிச்சம்பழம் பழைய இரும்பு வியாபாரிகள் வாங்குவார்கள் என்பதை தவிர இரும்புக்கும் பேரிச்சம்பழத்துக்கும் சம்பந்தமில்லை.

இரும்பு பாத்திரம் உங்க ஊர் பாத்திர கடையில் கிடைக்கும்.

Comments

AAB College said…
Thank you for sharing
https://aab-edu.net/

Popular Posts