அறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1என்னுடைய நன்பன் அல்ப்போன்ஸு பார்வைக்கு டொங்கன் மாதிரி இருந்தாலும் அறிவாளி.

பள்ளிக்காலத்தில் நான் படித்த பள்ளியில் கணிப்பொறியின் உபயோகம் பற்றி ஒரு பாடம் இருந்தது.

அந்த பாடத்துக்கு செய்முறை வகுப்பும் உண்டு.

மைய கணினி (Server) ஒன்று உண்டு. ஓவ்வொரு மாணவருக்கும் அவரின் பெயரில் ஒரு கோப்புகள் சேமிக்கும் இடம் (File Folder) , அதனுள் ஒவ்வொரு வாரத்துக்கான செய்முறைகளை கோப்புகளாக சேமிக்கவேண்டும்.

கணிப்பொறி ஆசிறியரோடு அல்ப்போன்ஸுக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம்..

செய்முறை வகுப்பு நேரத்தில் ப்ரின்ஸ் (Prince Of Persia / DOS Game) என்ற விளையாட்டை விளையாடியதை பார்த்துவிட்டு அவனுடைய பின்புறத்தை பிரம்பை உகயோகப்படுத்தி பழுக்கவைத்துவிட்டது கூட காரணமாக இருக்கலாம்...

தமிழ் கம்ப்யூட்டர் என்ற கணினி தொடர்பான புத்தகம் ஒன்று அல்ப்போன்ஸு பத்து ரூபாய் கொடுத்து வாங்கியதில் இருந்து ஒரே ஏழரை.

அதில் வந்த ஒரு கட்டுரையில் கணிப்பொறியில் அழித்தல் வேலைகளை செய்யும் அதி புத்திசாலிகளான ஹேக்கர்களை பற்றி படித்துவிட்டு, தானும் ஒரு ஹேக்கராகனும் என்று சதா சர்வகாலமும் புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தான்...

கணிப்பொறி தேர்வு நெருங்கும் சமயம்...

ஒரு அதிர்ச்சியான செய்தியை முந்தின நாள் செய்முறை வகுப்புக்கு சென்ற D பிரிவு மாணவர்கள் சொன்னார்கள்...

சர்வரில் இருந்த எல்லா கோப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தது...

எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி...

யார் யாரையோ சந்தேகப்பட்டு மாணவர்கள் தங்களுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்...

தேர்வு தள்ளிப்போகுமா ? மீண்டும் எல்லாவற்றையும் உள்ளீடு செய்யவேண்டுமா என்று ஒரே பேச்சு..

எனக்கு அல்ப்போன்ஸு மீது துளியும் சந்தேகமில்லை...

இந்த மடப்பய மருமகன் அந்த அளவுக்கு இறங்கமாட்டான் என்பதல்ல, இவனுக்கு அந்த அளவுக்கு மண்டையில் மசாலா கிடையாது...

ஆனால் அதை செய்தது அல்ப்போன்ஸு தான் என்று ஆசிறியர் கண்டறிந்து, அவனை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் என்ற தகவல் பேஸ்கட்பால் கோர்ட்டில் இருந்த வேளையில் வந்துசேர்ந்தது...

நூற்றைம்பது பேர் உபயோகப்படுத்தும் கணிணி செய்முறை பட்டறையில் எப்படி அல்ப்போன்ஸை மட்டும் சரியாக கண்டுபிடித்தார் என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது...

அப்புறம் உண்மை தெரிந்து ரூம் போட்டு சிரித்தேன்...

உண்மை என்னவா ?

முண்ட கலப்பை...எல்லோர் கோப்புகளையும் அழித்துவிட்டு அல்போன்ஸு என்ற பெயருள்ள தன்னுடைய கோப்பை மட்டும் அழிக்காமல் விட்டிருந்தது..

*********
*******
*****
****
***
**
*

ஓட்டு போடுங்க ~~~ ஓட்டு போடுங்க ~~~ ( கவிதா மன்னிச்சுருங்க )
..

Comments

இப்ப அந்த அல்போன்ஸூ எந்த நாட்ல ஆணிபிடுங்கி கொண்டிருக்கிறார்..?
அல்ப்போன்சுக்கு அலுப்பு மருந்து கொடுங்க
நீங்க பதிவை இணைச்சதுக்கு அப்புறம் வாரேன், ஒட்டு போட
Unknown said…
அரவிந்தன் இது புனைவு.

நான் எப்போ புனைவு எதுனாலும் அதுல என்னை சம்பந்தப்படுத்தறது வாடிக்கையா போச்சு..

சாரு நிவேதிதா மாதிரி ஆயிட்டேன் நான்..
//சாரு நிவேதிதா மாதிரி ஆயிட்டேன் நான்..//

பூஜ்யப் பட்டம் படிச்சீங்களா?
Unknown said…
நசரேயன் தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி...
Unknown said…
அரடிக்கெட்டு, பதிவுக்கு ஒரு கமெண்டு போடவும்...
இந்த மடப்பய மருமகன் அந்த அளவுக்கு இறங்கமாட்டான் என்பதல்ல, இவனுக்கு அந்த அளவுக்கு மண்டையில் மசாலா கிடையாது...

Super :)
கத நல்லாகீது! ஐ ஆல்வேஸ் யுவர் ஸ்டோரி ரைட்டிங் ஃபேன்!
சுஜாதா போட்டி முடிவு என்னாச்சு?
சரி இப்ப டெல்லுங்க

//சாரு நிவேதிதா மாதிரி ஆயிட்டேன் நான்..//

பூஜ்யப் பட்டம் படிச்சீங்களா?
Unknown said…
சுஜாதா போட்டி முடிவு பிப்ரவரி கடைசியிலாம்.

அதான் ஏற்கனவே நீங்க பரிசு தரதா சொல்லிட்டீங்களே ?
அதி புத்திசாலி அல்போன்ஸ்.

படிக்கும் போதே நினைத்தேன்... இதைத்தான் முடிவாக இருக்கும் என்று...
Unknown said…
நன்றி சிரீதர் கண்ணன்...
அஃப கோர்ஸ்,
எப்ப மறுபடியும் இந்தியாவுக்கு?
Unknown said…
ஒரு உண்மைய சொல்லிடலாம்னு நினைக்கிறேன்...

ஜெமோ, எஸ்.ரா, சாரு உடபட எந்த முற்போக்கு எழுத்தாளர்களின் புத்தகங்களையோ, அல்லது பாலகுமாரன், சுஜாதா என்பவர்கள் போன்ற கமர்ஷியல் ரைட்டர்களின் புத்தகங்களையோ படிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு...
Unknown said…
ஒருமுறை ஜே.ஜே சில குறிப்புகள் ஒசியில கெடச்சது...

ஆனால் அதில் எந்த கந்தாயமும் புரியவில்லை...
Unknown said…
கருத்துக்கு நன்றி ராகவன். கடைசி முடிவு வரைக்குமா யூகிச்சிட்டீங்க ?
Unknown said…
2010 தமிழ் நியூ இயர் எங்க ஊர்ல கொண்டாடலாம்னு இருக்கேன்...
2010ல கலைஞர் ஆட்சி நடந்தா ஜனவரி 15 இல்லேன்ன எப்பவோ?
//ஜெமோ, எஸ்.ரா, சாரு உடபட எந்த முற்போக்கு எழுத்தாளர்களின் //

சத்தியமா இவங்கெல்லாம் முற்போக்கு எழுத்தாளர்களே இல்லை, இல்லை, இல்லவே இல்லை....!!!!!
கண்ணா..

இந்த அல்போன்ஸ் பேரை கடைசி எபிஸோட் வரைக்கும் மாத்த மாட்டியே..?

நீ மாட்டேன்னு சொன்னாத்தான் நான் பதிவு பத்தி கமெண்ட் போடுவேன்..
Unknown said…
மாத்தலை - ஓக்கே ?
இந்த முற்போக்கு எழுத்தாளர்களை பத்தி முழுசா தெறியனுமின்னா இங்க போய் பாருங்க
http://tinyurl.com/7fdnrr
இதில் ஜெ மட்டுமல்ல மொத்த சிறு பத்திரிக்கை, இலக்கிய சூழல் பற்றி உங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும்.
இந்த சுட்டியில் உள்ள தலைப்புகள் 9-20 படியுங்கள் அதையும் ரிவர்ஸ் ஆர்டரில் (20-9) படியுங்கள்.

அதுலையும் நம்பர் 20&19 வெரி வெரி இம்பார்டன்ட்
ஐரோப்பிய நேரம் அதான் இங்கே.மற்றபடி நீங்கதான் அல்போன்சா?
Unknown said…
ஓக்கே படிக்கறேன்...
Unknown said…
குடுகுடுப்பை சார். இது புனைவு.
Unknown said…
உங்க கதையில் வரும் அல்போன்சுக்கும் (சட்ட) சபையில் இன்னைக்கு காமெடி பண்ண அல்போன்சுக்கும் எதாவது தொடர்பு இருக்கா?
அதாவது நான் என்ன கேக்கிறேன்னா? உங்க அல்போன்சு வெறும் அல்போன்சா அல்லது பீட்டர் அல்போன்சா?
Unknown said…
அண்ணே காமெடி பதிவுலயும் அரசியல (பு)குத்திட்டீங்க
இங்கு கும்மி அலவ்டா..?

அன்புடன்
அரவிந்தன்
அல்போன்ஸுக்கும் நடிகை அல்போன்ஸா-வுக்கும் எதாவது லிங்க் இருக்கா
Ilan said…
எங்கள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை உங்கள் டுபாகூர் அல்போன்ஸ் உடன் இணைத்து பேசும் பெரியசாமியை வன்மையாக கண்டிக்கிறேன்.
பீ அல்போன்ஸ் (சுருக்கமாக) அண்ட் கோ விற்கு எதையும் அழிக்க எல்லாம் தெரியாது.
யாராவது எந்த இனத்தை அழித்தால் கூட அதை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.
எனவே, அவதூறு சொல்ல வேண்டாம்.

தமிழக காங்கிரஸ் (கோஷ்டி எண்: 38)
உட்பிரிவு 18

BTW, Ravi did u consult mail? Ilangovan. Paris
நடிகை மாயா ,நடிகை ஜெயபாரதி,தீபா போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை தூண்கள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்க
ரெட் பயர்,

பெரிய ஆளு தான் நீங்க... இஸ்கூலிலே படிக்கிறப்போ கம்பியிட்டரு ஊசு பண்ணிருக்கீங்க.... :))
//சாரு நிவேதிதா மாதிரி ஆயிட்டேன் நான்..//

ஓசியிலே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலே சரக்கு கெடக்குதா என்ன?? இல்ல முன்னாடி லக்கெஜ் தள்ள ஆரம்பிச்சிருச்சா...??

டெய்லி உடற்பயற்சி செய்யுங்க... சிக்ஸ் பேக் வராட்டியும் சிங்கிள் பேக்'வாது குறையும்... :))
//அரவிந்தன் said...
நடிகை மாயா ,நடிகை ஜெயபாரதி,தீபா போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை தூண்கள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்க
//


இதை படிச்சதும் எங்கூரு திருமலை நாயக்கர் மகால் தூண் ஞாபகம் வந்திருச்சி... ஒரே சிப்பு சிப்பா வருது எனக்கு.... :)))

அரவிந்தண்ணே,

கலக்கீட்டிங்க... :) நம்ம பெங்களூரூ சென்னாகீதா?
Unknown said…
///நடிகை மாயா ,நடிகை ஜெயபாரதி,தீபா போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை தூண்கள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்க///

துரும்பா !!!
Unknown said…
////

பெரிய ஆளு தான் நீங்க... இஸ்கூலிலே படிக்கிறப்போ கம்பியிட்டரு ஊசு பண்ணிருக்கீங்க.... :))///

எட்டாப்புலே ஜி டபள்யூ பேசிக்ல கோடிங் அடிச்ச ஆளு நானு...
Raj said…
//அரவிந்தன் இது புனைவு.
குடுகுடுப்பை சார். இது புனைவு//

திரும்ப திரும்ப சொல்லி...நீங்களே, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்ற மாதிரி..உண்மைய ஒத்துக்கறீங்களே


/////நடிகை மாயா ,நடிகை ஜெயபாரதி,தீபா போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை தூண்கள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்க///

துரும்பா !!!//

பரவாயில்லயே...இவங்கள பத்தின தகவலெல்லாம் உங்ககிட்ட இருக்கா!
Unknown said…
நெசமாலுமே இது புனைவு தானுங்களா? இல்ல எட்டாப்புலேயே கம்பிகூட்டர் கோடிங்கெல்லாம் பண்ணவரு வேலையா?

Popular Posts